header photo

Wednesday, November 24, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ஏழு...

பெத்தவங்க புள்ளைங்களப் பலி கொடுத்து அவங்க கௌரவத்தையும்... மரியாதையையும் கட்டிக் காப்பாத்தினது மனுநீதிச்சோழன் காலத்தில இருந்தே இருக்கு... அதுக்கு முன்னாடியும் யாராவது புண்ணியவான்கள் வழிகாட்டி இருப்பாங்க... எனக்குத் தெரியல.. 

மனுநீதிச் சோழன் நீதி... திருவாரூர் நீதி எல்லாம்.. கேட்டுப் பிரமிச்சுப் போய்... அடடா என்ன ஒரு நீதி... என்ன ஒரு நேர்மை... ஒரு பசுவுக்கு நீதி வழங்கணும்னு.. தன்னோட மகனையே தேர்ச் சக்கரத்தடில சக்கையா நொறுக்கிச் சாகடிச்சிருக்கானேய்யா... அவன் அரசன்.. அவன் மனுஷன்னு எல்லாம் நினைச்சுக்கிட்ட காலம் உண்டு... 

மனுச மண்டை... எனக்கு மட்டும் விதிவிலக்கா... அது எப்டி ஆகா, ஓகோன்னு சொல்லப் போச்சுன்னு எரிச்சல்ல... (நம்புங்க..) தாடையத் தடவி யோசிச்சா...
அடப்பாவி மனுஷா... பசுவுக்கு நீதி கொடுக்கறேன் பாருன்னு... ஊரையே கூப்ட்டு வித்தை காட்டி.. நம்மாளுங்க நீதிநூலுக்கு வழி பண்ணிப்புட்ட நீ... ஆனா அந்தப் புள்ளையப் பெத்த ஆத்தா மனசு எப்டி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தியா... அப்போ அந்த ஆத்தாவோட மனச ஆத்துறதுக்கு... உன்னை எவன் தேர்ச்சக்கரத்தில போட்டு... உன்னோட பெத்த ஆத்தாவோட வயித்தெரிச்சல கொடுக்கிறதுன்னு ஒரே கடுப்பு... 

அந்தப் பசு வாயில்லாப் பிராணி... அதனால பேச முடிஞ்சிருந்தா... தூ..ன்னு துப்பி... நல்ல வேளை மனுஷப்பயலா பொறக்கலைன்னு போயிருக்கும்...
தமிழ்ல.. அப்ப அப்ப இருந்துட்டு நல்ல படமும் ஒன்னு.. ரெண்டு எடுப்பாங்க.. "கண்ணாடிப் பூக்கள்" அப்டின்னு ஒரு படம் ... தவறுதலா ஒரு மாபெரும் தவறைச் செய்துவிட்ட குழந்தையை எப்படி அணுக வேண்டும்னு.. சொல்லி இருப்பாங்க... அருமையான விஷயத்த சொல்ற படம்... 

ஒரு வேளை... வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர்... ட்ரான்ஸ்லேஷன் ஜாப் மட்டும் பண்ணாம... திருத்தி எழுதிப்புட்டு... அதுக்கு விளக்கமும் கொடுத்த மாதிரி... நான் மனுநீதிச் சோழன் கதையச் சொன்னா... 
அந்தப் பசு அவ்ளோ குரூரமான உயிரல்ல... தாய்க்கு நிகரா மதிக்கிற ஒரு உயிர்.. ஒரு புள்ளை தற்செயலா போயிடுத்துங்கிறதுக்காக... இன்னொரு புள்ளையக் கொல்லச் சம்மதிச்சிருக்காது... ஓடிப் போய் அபாயமணி அடிச்சது... நீதி கேக்கறதுக்காகன்னு அவங்க அவங்க வசதிக்கு முடிவு பண்ணிடுறதா... அய்யோ பாவம் அந்தப் பையன்... ஒரு கன்னுக்குட்டியத் தெரியாத்தனமா கொன்னுட்டான்... இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம கையப் பிசைஞ்சுக்கிட்டுக் கெடக்கான்... குற்ற உணர்வு பிடுங்கித் தின்னுது... போய்ப் புள்ளையப் பாருமைய்யான்னு இருக்கலாம்ன்னுதான் தோணுது...
_____(போஸ்ட் நீளமாப் போச்சுன்னா இங்க ஸ்டாப் போட்டு... மீதிய நாளைக்குப் படிங்க... ஹிஹி..)_____

நம்மூர்ல ஒரு அக்கா ஒரு அண்ணாவ காதலிச்சுப்புட்டாங்க... கௌரவப் பிரச்சனையாகிப் போச்சு... அக்காவோட அப்பரு சொல்லிட்டாரு... அவரு உசிரோட இருக்கிற வரைக்கும் இது நடக்காதுன்னு... அக்கா பாலிடால் சாப்ட்டு டாட்டா காட்டிட்டுப் போயிட்டாங்க... ஊர்ல யாருக்கும் என்னாச்சுங்கிற விவரம் தெரியல... போய் மாரடிச்சு அழுதாங்க... வீட்ல பேசிக்கிட்டாங்க... அடடா அவ தங்கம்னா தங்கம்... ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டா... அப்பன் ஏதோ சினந்து சொல்லிப்புட்டான்... அது தாங்க முடியாம போயிட்டா.. அப்டின்னு அப்பவும் அவங்க கௌரவத்த விடலயே... 

அடுத்த நாளே... நாலு தெரு தள்ளி இருக்கிற பையன் பாலிடால் குடிச்சு செத்துப் போயிட்டான்... எளவு வீட்டுக்குப் போன சனங்க எல்லாம்... இந்த வயசில இப்டி நாசமாப் போயிட்டானே.. இதுக்கா பொறந்தான்னு அழுகலை... அடப்பாவி மவனே... நீ ரெண்டு மாசம் கழிச்சுச் செத்துப் போயிருக்கப்டாதா... இப்போவா செத்துத் தொலையணும்... பாவம் அந்தப் பொண்ணையில்ல தப்பாப் பேசுவாங்கன்னு ஓஓஓஓன்னு அழுதாங்க... 

அவளையும் கொன்னு போட்டாச்சு... இவனயும் கொன்னு போட்டாச்சு... இதில தப்பாப் பேசி என்ன புடுங்கறது... இனி மிச்சம் மீதி இருக்கிறதுக்கும் இப்டி ஆச்சின்னா... இது ஒரு பாடம்ன்னுட்டு திருந்துவாங்களா... ஊஹூம்... த ஸேம் ஊர் மருவாதி... த்த்..தாத்தெறிக்க..


உசிரக் கைல புடிச்சுக்கிட்டு வெளிநாட்டுக்குப் போறவங்க இருக்காங்களே... அது ஊர்லயாவது டிக்கிய தூக்கிக்கிட்டு அக்கம் பக்கம்ன்னு போய்... ஸ்ஸ்ஸபான்னு கால நீட்டி உக்காந்து... அவ இருக்காளே.. இவ இருக்காளேன்னு பேசியே சாவடிப்பாளுவ... அப்புறம் அதுங்க மண்டையப் போட்டுட்டா... ஐயோ ஐயோ ஐயோன்னு மண்டைல அடிச்சுக்கிட்டு முத மனுஷியா போய் அழுது துக்கத்த பிழிஞ்சு ஆறா ஓட விடுவாளுவ...

வெளிநாட்டில... எல்லாம் கையக் கால அசைக்கவே தேவையில்ல... ஊர்ல மணிக்கணக்கா சமைச்ச சமையல நிமிஷத்தில முடிச்சிட்டு... டெலிஃபோன தூக்கி வச்சுக்கிட்டு உக்காந்து... எவ கிடைப்பா வேலையில்லாமன்னு புடிச்சு வச்சுக்கிட்டு... இவ இருக்காளேன்னு சோஃபாவ தேய்ச்சுக்கிட்டே பேசுறது... 
பேசிப்புட்டு மறக்காம சொல்லுவாளுவ... இத நான் சொன்னேன்னு யாரு கிட்டயும் சொல்லிப்டாத அப்டின்னு... அதாவது மேட்டர் எப்டியாவது பாஸாயிடும்னு தெரியும்... யாரு பாஸ் பண்ணதுன்னு தெரியப்டாது... கொலைக்கேசாகும்னு அவ்ளோ நம்பிக்கை... கொலையில நமக்கும் பங்கிருக்குன்னு அவங்க அவங்களுக்குத் தெரிஞ்சாலும் மத்தவங்களுக்குத் தெரியப்டாதில்ல... சாவுக்கு டெலிஃபோன் மணி அடிச்சுட்டு... அப்புறம் டெலிஃபோன்லயே துக்கம் விசாரிப்பாளுவ... $%^&*(&^#$%^&*..

ரெண்டு குழந்தைங்க கூட ஒரு குடும்பம்... அந்தம்மா எல்லார்ட்டயும் ஸ்நேகமாப் பழகும்... ஆரம்பிச்சிட்டாளுவ... அவன் கூட.. இவன் கூடன்னு... எங்கயோ ஆயிரம் மைல் தள்ளி இருக்கிற உறவுக்காரங்களுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திடிச்சு... இது செரிப்பட்டு வராது ராஜா... நீ புள்ளைய இங்க அனுப்பு நாம பார்த்துக்கிடுறோம்னு... ஒத்தக்கால்ல நின்னு கலாச்சாரத்தக் கட்டிக் காப்பாத்த ட்ரை பண்ணி... அந்தம்மாவ அங்க கூப்ட்டு வச்சு... அது அங்க யார்ட்ட பேசினாலும்... அதயும் வீட்டுக்கார அய்யாவுக்கு இன்ஃபார்ம் பண்ணி சும்மா கன்னா பின்னான்னு சேவை செஞ்சாங்க... (இதுவே... யாராவது சாகக் கெடக்கறாங்க ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுன்னா பண்ண மாட்டானுவ..)

பலன் கிடைச்சிடுத்து... கொஞ்ச நாள்லயே அந்தம்மா கொலையா, தற்கொலையான்னு தெரியாம திடீர்னு செத்துப்போச்சு... அப்போ அதுக்கு முப்பது வயசு கூட ஆகலை... புருஷன கொண்டு போய் ஜெயில்ல வச்சாச்சு... பசங்கள அந்த நாட்டில உள்ளவங்க தத்து எடுத்துக்கிட்டாங்க...

கலாச்சாரக் காவலர்கள் எளவு வீட்டுக்குத் தவறாமப் போய் அழுதுட்டு... அப்புறம் காரியத்துக்கு சோறு எல்லாம் தின்னு கடமைய முடிச்சாங்க... ஒரு வார்த்த தப்பா சொல்லப்டாது மக்கா..!

அந்தய்யா சொல்லிச்சு அப்புறம் அழுதுக்கிட்டே... அய்யோ... ஊர் சொல்லக் கேட்டு நாசமாப் போச்சு... அவக்குப் புடிக்கலைன்னா விட்டுட்டு இருந்திருக்கலாம்... உசிரோடயாவது இருந்திருப்பா... நான் புள்ளகுட்டிய கண்ணால பார்த்துட்டிருந்திருக்கலாம்ன்னு...

இப்டி அவனவனுக்குன்னு வர்றப்போதான்... அய்யோ என்னைய வாழ விடுங்கடான்னு அழுவணும்... இல்லைன்னா லிவ்... லெட் லிவ்-ன்னு பீட்டர் விடணும்... நாம பண்ணிடப்டாது...

மத்தவங்க வாழ்க்கைல மூக்க நீட்டி... பாழாப்போற பண்பாட்ட இழுத்துப் புடிச்சு நிறுத்துறதெல்லாம்... இந்த எளவுக்குத்தானே..?!


(இன்னும் எளவெடுக்கலாம்...)

55 ஊக்கம்::

Sethu said...

சுட சுட செய்திகளா!

வானம்பாடிகள் said...

/(இன்னும் எளவெடுக்கலாம்...)/

இந்த எழவெல்லாம் எழவானா எடுத்துடலாம். ஆவணுமே.

/அதுக்கு முன்னாடியும் யாராவது புண்ணியவான்கள் வழிகாட்டி இருப்பாங்க.../

சாமிக்கேப் பிள்ளைக் கறியமுது படைச்சமே.

/அடடா என்ன ஒரு நீதி... என்ன ஒரு நேர்மை.../

அது அப்ப. இப்ப எவனாவது ஒரு சொங்கி மாட்டினா போய் சரண்டர் ஆய்க்கன்னு காச குடுத்து புள்ளைய ட்ராமால இருந்து மீண்டு வர வெளிநாட்டுக்கு அனுப்புவாய்ங்க. கலாச்சாரம் வளர்ந்து போச்.

/அந்தப் பசு அவ்ளோ குரூரமான உயிரல்ல... தாய்க்கு நிகரா மதிக்கிற ஒரு உயிர்.. ஒரு புள்ளை தற்செயலா போயிடுத்துங்கிறதுக்காக... இன்னொரு புள்ளையக் கொல்லச் சம்மதிச்சிருக்காது.../
/அய்யோ பாவம் அந்தப் பையன்... ஒரு கன்னுக்குட்டியத் தெரியாத்தனமா கொன்னுட்டான்... இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம கையப் பிசைஞ்சுக்கிட்டுக் கெடக்கான்... குற்ற உணர்வு பிடுங்கித் தின்னுது... போய்ப் புள்ளையப் பாருமைய்யான்னு இருக்கலாம்ன்னுதான் தோணுது.../

இது நல்லாருக்கு. இப்படித்தான் இருந்திருக்கமுடியும்னும் தோணுது.

வானம்பாடிகள் said...

/பாவம் அந்தப் பொண்ணையில்ல தப்பாப் பேசுவாங்கன்னு ஓஓஓஓன்னு அழுதாங்க... /

ஆரம்பிச்சி வச்சிடுவாய்ங்களே. அட ஆமாம்னு உண்மையா அழுததுகூட நம்ப ஆரம்பிச்சிடும்.

/கொலையில நமக்கும் பங்கிருக்குன்னு அவங்க அவங்களுக்குத் தெரிஞ்சாலும் மத்தவங்களுக்குத் தெரியப்டாதில்ல... சாவுக்கு டெலிஃபோன் மணி அடிச்சுட்டு... அப்புறம் டெலிஃபோன்லயே துக்கம் விசாரிப்பாளுவ.../

இது இது. காலம் காலமா கட்டிக்காப்பாத்துறதாச்சே.

/லிவ்... லெட் லிவ்-ன்னு பீட்டர் விடணும்... நாம பண்ணிடப்டாது...
மத்தவங்க வாழ்க்கைல மூக்க நீட்டி... பாழாப்போற பண்பாட்ட இழுத்துப் புடிச்சு நிறுத்துறதெல்லாம்... இந்த எளவுக்குத்தானே..?!/

அடங்கொன்னியா. நம்மால ஒன்னு போய் சேர்ந்துதேன்னு ஒரு பயபுள்ள யோசிக்குமா? உள்ளதச் சொன்னேன். குடும்பப் பேரு கெட்டுப் போகுமேன்னு சொன்னேன். குத்தமுள்ல நெஞ்சு. அதான் அப்புடி பண்ணிடுச்சுன்னு இன்னும் சலம்புவாங்க பாரு..எளவேஏஏஏஏஏஏஏஏதான்.. யூ கண்டின்யூ.

ரோகிணிசிவா said...

//
இப்டி அவனவனுக்குன்னு வர்றப்போதான்... அய்யோ என்னைய வாழ விடுங்கடான்னு அழுவணும்... இல்லைன்னா லிவ்... லெட் லிவ்-ன்னு பீட்டர் விடணும்//
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தெரியும் :)))

ரோகிணிசிவா said...

http://rohinisiva.blogspot.com/2010/04/blog-post_09.html,

this related to your part six ,
and to certain extent this too

கும்க்கி said...

ஒன்னியும் சொல்றத்துகில்ல...

ம்...நடத்துங்க.

கும்க்கி said...

ஒன்னியும் சொல்றத்துகில்ல...

ம்...நடத்துங்க.

Thekkikattan|தெகா said...

(இன்னும் எளவெடுக்கலாம்...//

ஹாஹாஹா... இதானே தினமும் செய்றாய்ங்களாம். காலையில ஆரம்பிச்சு ராத்திரி 11.30 மணி வரைக்கும் ட்டி.வி சீரியல் - எளவு :)

RMS Danaraj said...

//மத்தவங்க வாழ்க்கைல மூக்க நீட்டி... பாழாப்போற பண்பாட்ட இழுத்துப் புடிச்சு நிறுத்துறதெல்லாம்... இந்த எளவுக்குத்தானே..?!//

ம‌ற்றவர்களின் வழ்வில் அன்பு,பாசம்,காதல்,சொந்தம்,பந்ந்தம்,சாதி,மதம் என்ற பேரில் தலையிடுவதுதாங்க பண்பாடு.

பிறகு எப்படி பண்பாட்டை காப்பாற்றுவது?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அத்தனையும் யதார்த்தம் பிரியா. இந்த நடை அபாரம்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மூத்த குருசாமி பூனைய கட்டிப்போட்டு பூசை செய்ய சொன்னாருங்க.

அவரு போய்ச் சேர்ந்ததுக்கப்புறமும்
மடத்துல அப்படியே தொடர்றோமுங்க.

அம்புட்டுத்தானுங்க தெரியும்.

அது சம்ப்ரதாயமுங்க!

:))

ILA(@)இளா said...

//மூத்த குருசாமி பூனைய கட்டிப்போட்டு பூசை செய்ய சொன்னாருங்க.
//
:)

TERROR-PANDIYAN(VAS) said...

@கலகலப்ரியா

//ஆனா அந்தப் புள்ளையப் பெத்த ஆத்தா மனசு எப்டி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தியா... அப்போ அந்த ஆத்தாவோட மனச ஆத்துறதுக்கு... உன்னை எவன் தேர்ச்சக்கரத்தில போட்டு... உன்னோட பெத்த ஆத்தாவோட வயித்தெரிச்சல கொடுக்கிறதுன்னு ஒரே கடுப்பு...//

போங்க ப்ரியா... நான்கூட ஆரம்பத்துல சுடர்மிகு அறிவுடன் படைக்கபட்ட பாரதி கண்ட புதுமை பெண் நினைத்தேன். ஆனா நீங்க உலகத்த வித்தியாசமான கோனத்துல பாக்கறேன் சொல்லி தலைகீழா நின்னுட்டு. ஏன் இந்த மனுஷங்க எல்லாம் தலை கீழா நடக்கறாங்க கேக்கறிங்க. தப்பு பண்ணா தண்டனை கொடுக்கரது தப்பா? விட்டா நாளைக்கு கொலை பண்றவனை தூக்குல போட சொல்ர நீதிபதி, தூக்குல போடர வேலை செய்யரவன் எல்லாரையும் தூக்குல போட சொல்லுவிங்க போல... இங்க இருக்கவங்க யாருமே இதை கேக்க மாட்டராங்க... அய்யோ எனக்கு ஒரே அழுகாச்சியா வருது...அவ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

@கலகலப்ரியா

//_____(போஸ்ட் நீளமாப் போச்சுன்னா இங்க ஸ்டாப் போட்டு... மீதிய நாளைக்குப் படிங்க... ஹிஹி..)_____//

கோடு போட்டு இருக்கவரை படிச்சிட்டேன். மீதி நாளைக்கு படிச்சி கமெண்ட் போடறேன்... :))))

அது சரி(18185106603874041862) said...

//
பசுவுக்கு நீதி கொடுக்கறேன் பாருன்னு... ஊரையே கூப்ட்டு வித்தை காட்டி..
//

என்னா பண்றது? கூட்டத்தை கூட்டிட்டா எதுனா வித்தை காமிச்சா தான முடியும்?

ஆனா, ஆக்சுவலா அவரு பண்ணாரா இல்ல நம்மாளுங்க கதை கட்டி விட்டாங்களான்னு தெரியல. நம்மாளுங்க தான் எறும்பை எருமையாக்கிறதில பிஎச்டி ஆச்சே :))

கலகலப்ரியா said...

@Sethu

செய்தியா... அதும் செரிதான்..

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி சார்..

அது சரி(18185106603874041862) said...

//
அடடா அவ தங்கம்னா தங்கம்... ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டா... அப்பன் ஏதோ சினந்து சொல்லிப்புட்டான்... அது தாங்க முடியாம போயிட்டா.. அப்டின்னு அப்பவும் அவங்க கௌரவத்த விடலயே...
//

அதெப்படி விடுவாங்க? இதெல்லாம் சொல்லி சொல்லி பேசினா தான அன்னைக்கி பொழுது போகும்? இதுல எங்க குடும்பத்துல இப்பிடில்லாம் நடக்காதுன்னு கொஞ்சம் பேரு வேற அலட்டிப்பாங்களே.

கலகலப்ரியா said...

@ரோகிணிசிவா

ஆமாம் ரோகிணி... நன்றி... அந்த லின்க் பார்க்கறேன்..

கலகலப்ரியா said...

@கும்க்கி

ஏன் சொல்றதுக்கென்ன... :o)

அது சரி(18185106603874041862) said...

//
அடுத்த நாளே... நாலு தெரு தள்ளி இருக்கிற பையன் பாலிடால் குடிச்சு செத்துப் போயிட்டான்...
//

இது, இது,இதைத் தானய்யா எதிர்பார்த்தாங்க!

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

அது பொது அறிவை வளர்த்துக்கிறாய்ங்க... உங்களுக்கு என்ன நக்கலு.. =))

கலகலப்ரியா said...

@RMS Danaraj

அதானே... நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான்..

கலகலப்ரியா said...

@ஜெஸ்வந்தி - Jeswanthy

நன்றி ஜெஸ்வந்தி... :)..

அது சரி(18185106603874041862) said...

//
அவளையும் கொன்னு போட்டாச்சு... இவனயும் கொன்னு போட்டாச்சு... இதில தப்பாப் பேசி என்ன புடுங்கறது... இனி மிச்சம் மீதி இருக்கிறதுக்கும் இப்டி ஆச்சின்னா... இது ஒரு பாடம்ன்னுட்டு திருந்துவாங்களா... ஊஹூம்... த ஸேம் ஊர் மருவாதி... த்த்..தாத்தெறிக்க..
//

அப்படி போயிட்டா எப்படி பொழுது போகும்? கலாச்சாரத்த எப்பூடி காப்பாத்தறது? எவன் பொணமானாலும் எனக்கு பொழுது போகணும்னு காப்பாத்தறவங்களாச்சே.

கலகலப்ரியா said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

ஓ.. அந்தப் பூனையத்தான் மடில கட்டியிருக்காய்ங்களோ.. :o)

அது சரி(18185106603874041862) said...

//
அதாவது மேட்டர் எப்டியாவது பாஸாயிடும்னு தெரியும்... யாரு பாஸ் பண்ணதுன்னு தெரியப்டாது... கொலைக்கேசாகும்னு அவ்ளோ நம்பிக்கை... கொலையில நமக்கும் பங்கிருக்குன்னு அவங்க அவங்களுக்குத் தெரிஞ்சாலும் மத்தவங்களுக்குத் தெரியப்டாதில்ல...
//

ஹி ஹி..எல்லா கொலைகாரங்களும் அப்படித் தான். தனக்கு தெரிஞ்சது மத்தவங்களுக்கு தெரியப்படாது. தலைக்கு ஆபத்து. :)

அது சரி(18185106603874041862) said...

//
சாவுக்கு டெலிஃபோன் மணி அடிச்சுட்டு... அப்புறம் டெலிஃபோன்லயே துக்கம் விசாரிப்பாளுவ... $%^&*(&^#$%^&*..
//

கலாச்சார கடமைங்கோவ்.

அது சரி(18185106603874041862) said...

//

கலாச்சாரக் காவலர்கள் எளவு வீட்டுக்குத் தவறாமப் போய் அழுதுட்டு... அப்புறம் காரியத்துக்கு சோறு எல்லாம் தின்னு கடமைய முடிச்சாங்க... ஒரு வார்த்த தப்பா சொல்லப்டாது மக்கா..!
//

எப்பிடியோ அன்னைக்கு ஃப்ரீ லன்ச்ன்னு சந்தோஷப்பட்ருப்பாங்க.

அது சரி(18185106603874041862) said...

//
இப்டி அவனவனுக்குன்னு வர்றப்போதான்... அய்யோ என்னைய வாழ விடுங்கடான்னு அழுவணும்... இல்லைன்னா லிவ்... லெட் லிவ்-ன்னு பீட்டர் விடணும்... நாம பண்ணிடப்டாது...
//

பேசி பேசியே ஆட்சிய பிடிச்ச கல்ச்ச்ச்ச்ச்சாரம் ஆச்சே. இப்பிடி தான் பேசுவாங்க.

கலகலப்ரியா said...

@TERROR-PANDIYAN(VAS)

||ஆனா நீங்க உலகத்த வித்தியாசமான கோனத்துல பாக்கறேன் சொல்லி தலைகீழா நின்னுட்டு||

என்னது நான் காரைக்கால் அம்மையாரா... சரி...

நீங்க கஷ்டப்பட்டுத் தலையால நடக்காதீங்கோ.. நிமிர்ந்து ஸ்டெடியா நடங்கோ... ரைட்டு.. நன்றிங்கோ..

அது சரி(18185106603874041862) said...

//

மத்தவங்க வாழ்க்கைல மூக்க நீட்டி... பாழாப்போற பண்பாட்ட இழுத்துப் புடிச்சு நிறுத்துறதெல்லாம்... இந்த எளவுக்குத்தானே..?!
//

அட. அதுக்குத்தேன். எம்பூட்டு பெனிஃபிட் இருக்கு...பைசா செலவில்லாம பொழுது போகுது. யார்னான் செத்துப் போய்ட்டா அதை பத்தி ஒரு வாரம் பத்து நாளு பேசலாம். அப்புறம் ஓசில சோறு வேற.

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

||நம்மாளுங்க தான் எறும்பை எருமையாக்கிறதில பிஎச்டி ஆச்சே :))||

இது எனக்குத் தெரியுமே.. :o)

||இதுல எங்க குடும்பத்துல இப்பிடில்லாம் நடக்காதுன்னு கொஞ்சம் பேரு வேற அலட்டிப்பாங்களே||

ஆமா... அவங்க வீட்ல நடக்கற வரைக்கும்..

நன்றிங்கோ..

Thekkikattan|தெகா said...

ப்ரியா, கீழே இருக்கிற பத்திகள் தெக்கி பதிவிற்கு வந்தது பல பொருள்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதால் இங்கும் அதனை பகிர்கிறேன்...

CorText said...

விலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்று இறந்து போனாலும் (ஆணோ, பெண்ணோ) மற்றது அடுத்த பறவையை நாடாது. எந்த கலாச்சாரம் அதை அதற்கு கற்று கொடுத்தது? விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது? நாம் எங்கிருந்து நம் அடிப்படை பண்புகளை பெற்றோம், அது எப்படி அன்றைய சூழலில் ஒருவகை கலாச்சாரமாக உருபெற்று, காலங்காலமாக மாறி கொண்டே வந்திருக்கின்றது; அதன் வரலாறு, அதன் காரண-காரியங்களை அறிவாயா? மேலும், ஒரு நல்ல மானிடம் காண, மனவியல், சமூகவியல், பொருளாதரம் பற்றிய பலவிசயங்களையும் அதன் சிக்கலான தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

இதற்கு சிறந்த விடையை கண்டறியும் அளவுக்கு மனித மூளை இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்றாலும், மிகக் குறைந்த அவசியமான சமூக கட்டுபாடே, நிலையான தொடர்ந்த நீடித்த ஒரு நல்ல மானிடம் காண உதவும் என அறியலாம். அதில் முக்கியமானவை: தனி மனித உரிமை மற்றும் சுதந்திரம் (இதுவே நம் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படை). இதனால் விளையும் சிலவினைகள் (உதாரணமாக, திருமணமின்றி சேர்ந்து வாழ்தல்) சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் மாற்று வழியின் எதிர்வினைகள் இன்னும் கேவலமாகத்தான் இருக்கும் என்பதை உணர வேண்டும் (அதற்கு தான் மேற்கண்ட கேள்விகள், மற்றும் தற்சார்புடன் இல்லாமல் வெளிசார்புடனான ஆராய்ச்சியின் அவசியம்).

தனிமனித நல்லது கெட்டதையெல்லாம் தாண்டி, சில விசயங்களை சமூகத்தில் எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருந்தது. நாமும் அப்படி கூட இருந்து பார்த்தோம். பிறகு நம் அரசே அதை எடுத்து நடத்தியதெல்லாம் அறிந்ததே. எனினும் சாராயம் (ஆல்கஹால்) மற்ற போதை பொருட்களை விட கெடுதல் என்கின்றார்கள் சில வல்லுனர்கள் (http://healthland.time.com/2010/11/01/the-most-dangerous-drugs-alcohol-heroin-and-crack%E2%80%94in-that-order/print/). நீல படங்கள் நம் ஊரில் சட்டபூர்வமாக அனுமதிக்க படவில்லையே தவிர, அது பல திரையரங்குகளில் ஒடி கொண்டுதான் உள்ளது. அதை இளவட்டங்களும், மற்ற வட்டங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிபட்ட விசயங்கள் அனைத்தும், அமெரிக்காவில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடும் இல்லை; நம்மூரில் அதற்கு இணையாக அவை இல்லாமலும் இல்லை.

Thekkikattan|தெகா said...

அதற்கு முதல் உரையாடலாக நான் கூறியது...
_______________________
Thekkikattan|தெகா said...

CorText,

// மற்றும் தற்சார்புடன் இல்லாமல் வெளிசார்புடனான ஆராய்ச்சியின் அவசியம்//

இதுக்கு மட்டும் பொருள் புரிஞ்சிச்சின்னா இத்தனை எதிர்பதிவுகள் வந்திருக்காது. இங்க பிரச்சினையே ஒரு சமூக மாற்றத்தினையொட்டி ‘வெளிச்சார்புடன்’ நின்று ஓர் ஆராய்ச்சியாளன் பார்வையில் கேள்விகளை எழுப்பி உரையாடலுக்கான தளத்தை ஈட்டித்தருவோமென்றால், அதனைத் தவிர்த்து தனக்கானதாக sensationalize பண்ணிக்கொண்டதே இத்தனை தகிப்பிற்கும் காரணமாகிப் போனது. இது யார் பிழை?

Thekkikattan|தெகா said...

||இதுல எங்க குடும்பத்துல இப்பிடில்லாம் நடக்காதுன்னு கொஞ்சம் பேரு வேற அலட்டிப்பாங்களே||

ஆமா... அவங்க வீட்ல நடக்கற வரைக்கும்.. ///

இங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க, மன வளக் கலை பதிஞ்சு வைச்சிறீக்கீங்க - An art of living? நம்மை மீறி நடந்தா ‘நாண்டுகிட்டு’ செத்துப் போகாமல் எப்படி மூச்சு விட்டுகிட்டு இன்னும் நடந்து திரியறதுன்னு; அவனவன் உசிரு அவனவன் கையில :)) ... அம்புட்டுத்தேய்ன். ஆட்டம் காலி படுதா காலி.

விடுங்கோ! :)

Thekkikattan|தெகா said...

மற்றுமொரு நல்ல வாசிக்கத் தக்க கட்டுரை பரந்த பார்வையுடன்...

http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_25.html?utm_source=BP_recent

அது சரி(18185106603874041862) said...

@Thekkikattan|தெகா

//
Thekkikattan|தெகா said...
||இதுல எங்க குடும்பத்துல இப்பிடில்லாம் நடக்காதுன்னு கொஞ்சம் பேரு வேற அலட்டிப்பாங்களே||

ஆமா... அவங்க வீட்ல நடக்கற வரைக்கும்.. ///

இங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க, மன வளக் கலை பதிஞ்சு வைச்சிறீக்கீங்க - An art of living? நம்மை மீறி நடந்தா ‘நாண்டுகிட்டு’ செத்துப் போகாமல் எப்படி மூச்சு விட்டுகிட்டு இன்னும் நடந்து திரியறதுன்னு; அவனவன் உசிரு அவனவன் கையில :)) ... அம்புட்டுத்தேய்ன். ஆட்டம் காலி படுதா காலி.

விடுங்கோ! :)
November 25, 2010 12:36 AM
//

eh?
மன வளக் கலை?? What's that mean? மன வளம்+கலை? Sorry, but the phrase sounds gibberish. If some thing is a resource, how it fits with the word "kalai"?

So goes the word "Art of Living". Living is just living and can never be an art. Living is just living. Any and every art got boundaries and rules to go by, where as life should be lived as it is, as it suits the individual. No culture enforced boundaries. The phrases like "Art of living" are scandalous by their own right, as you cannot and should not teach some one on how to live.

Also, I dont think anybody is telling here "how to live". This about the behaviour of individuals in the name of so called culture and the underlying psychology behind it.

கலகலப்ரியா said...

||அதனைத் தவிர்த்து தனக்கானதாக sensationalize பண்ணிக்கொண்டதே இத்தனை தகிப்பிற்கும் காரணமாகிப் போனது. இது யார் பிழை?||

நன்றி தெகா...

இப்டி இருந்துக்கிட்டு...மத்தவங்க சுயநலமா இருக்காங்கன்னு சொல்லுவாங்க... தலைல அடிச்சுக்க வேண்டியதுதான்...

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

||அவனவன் உசிரு அவனவன் கையில :))||

அது செரி... உசிரப் புடிச்சு வச்சுக்கிட்டு என்ன பண்றது... :o)... நிறைய இப்டித்தான் ஏதோ உசிரக் கைல புடிச்சுக்கிட்டிருக்கேன்னு... தேமேன்னு கெடக்காய்ங்க..

Thekkikattan|தெகா said...

Art of living" are scandalous by their own right//

அது சரி! இங்கே நான் சொல்லுற ஆர்ட் - அப்படியே ஓட்டத்தோடு ஓடுப்பா... ஜஸ்ட் like you said, as it is - அதான் என்னோட டட்டுவம் ஆர்ட் ஆஃப் லிவிங் :)

உங்க தட்டுவம்தேய்ன் நம்முதும்... :) I've nothing to lose in this game(life).

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

கீதாச்சாரமா..

அது சரி(18185106603874041862) said...

@Thekkikattan|தெகா
//
Thekkikattan|தெகா said...
Art of living" are scandalous by their own right//

அது சரி! இங்கே நான் சொல்லுற ஆர்ட் - அப்படியே ஓட்டத்தோடு ஓடுப்பா... ஜஸ்ட் like you said, as it is - அதான் என்னோட டட்டுவம் ஆர்ட் ஆஃப் லிவிங் :)

உங்க தட்டுவம்தேய்ன் நம்முதும்... :) I've nothing to lose in this game(life).
November 25, 2010 8:03 PM
//

Then its not an art. As art got rules, where as life don't. Neither you can go by any rules as it flows like a wild river.

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

மனவளக் கலை குழப்புதோ..?!..

அவரவர் வாழ்க்கையை அவரவர் விரும்பியபடி வாழ்வது வாழ்வியல்...

கலகலப்ரியா said...

தெகா... மனவளக்கலைய கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணிச் சொல்லுங்களேன்... இன்லீஸ்பீஸில... புரிஞ்சுக்க லேசாருக்கும்...

Thekkikattan|தெகா said...

//as it flows like a wild river.//

எனக்கு கன்னாபின்னானு காட்டாறா இருக்கணும். இது வரைக்கும் அப்படித்தான் ஓடியிருக்கு. I am addicted to it, so wanting to be that way :D

//மனவளக்கலைய கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணிச் சொல்லுங்களேன்...//

ஆஹா, ஏதாவது பெரிய இடத்தில கைய வைச்சிட்டேனா ;). What I am trying to say is very simple, I handle this phrase 'an art of living' in a collective way of how one takes his own way of living without any outside pressure (just go with your flow, that could be his way of living); just however he raised himself- (bloomed interiorly).

Make sense!

*Did you guys get to see my last reply comment to our dearly friend's at Thekki site?

** Getting ready my thanksgiving day turkey meal ;-)

Thekkikattan|தெகா said...

:::::::** Getting ready my thanksgiving day turkey meal ;-) :::::::::

எந்தவொரு இங்கிலீபீச்சு :) plz. re-read it as---

**My thanksgiving day turkey meal is getting ready... ;-)

அது சரி(18185106603874041862) said...

@Thekkikattan|தெகா
//

Thekkikattan|தெகா said...
//as it flows like a wild river.//

எனக்கு கன்னாபின்னானு காட்டாறா இருக்கணும். இது வரைக்கும் அப்படித்தான் ஓடியிருக்கு. I am addicted to it, so wanting to be that way :D
//

Thats fine. I just dont agree with the phrase "art of living" because of the context its being used. That would imply, either intentionally or unintentionally, you are talking up your way of life.

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

நன்றி தெகா...

நானும் சிம்பிளாதான் புரிஞ்சுக்கிட்டேன்...

ஆனா... அது சரி எல்லாத்தயும் analyze பண்ணி ஒரு வழி பண்ணிடுவாய்ங்க...

ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு மாத்தி மாத்தி ரெண்டு சைட்லயும் அதயே சொல்லிட்டிருந்தாலும்.. ஆர்க்யூ பண்ற அளவுக்கு analyze பண்ணுவாங்க..

இதனால வெட்டுக்குத்து வரைக்கும் போயிருக்குன்னா பார்த்துக்கோங்க...

அது சரி(18185106603874041862) said...

@Thekkikattan|தெகா


ஆஹா, ஏதாவது பெரிய இடத்தில கைய வைச்சிட்டேனா ;). What I am trying to say is very simple, I handle this phrase 'an art of living' in a collective way of how one takes his own way of living without any outside pressure (just go with your flow, that could be his way of living); just however he raised himself- (bloomed interiorly).
//

Is this Mana Vala Kalai? :(

Sorry, but I still dont get it. How that phrase applies to the description you are giving?

கலகலப்ரியா said...

தாங்க்ஸ் கிவிங்... அந்த turkey க்கு யார் கொடுப்பா... அவ்வ்வ்

Thekkikattan|தெகா said...

தாங்க்ஸ் கிவிங்... அந்த turkey க்கு யார் கொடுப்பா... அவ்வ்வ்//

ஹாஹாஹா - my warm tummy once it gets filled will thank the bird; poor turkeys around the nation today alone 200 million might be on the dinner table... கொன்னா பாவம் திண்ணா போச்சாம் :D

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

ஆமாம்... இப்போ நீங்க turkeyய கொன்ன பாவம்... அது உங்கள சாப்டறப்போ போயிடும்.. :o) ...

Thekkikattan|தெகா said...

Is this Mana Vala Kalai? :(//

hahaha, Adhu Sari! அது என்னோட மனச வளம் பண்ணிக்கிற கலை ;) at time I am so pathetic! a lunat -hehehe :D

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கடைப்பக்கம் வருகின்றேன், எப்படி இருக்கீங்க. அங்கு நைவரும் நலமா?
நல்ல பதிவு. ஊர்வம்புன்னு ஒரு படம் போடலாம் போல அம்புட்டு சங்கதி இருக்கு.