குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...
இதில வேற ஊர்ல நாலு கழுதை வட்டை போட்டு... பின்னங்காலால உதைச்சுக்கிட்டே போகுது... இதுதான் வெளிநாட்டு யானை அப்டிங்கிறாங்க.. இப்போ லிவிங் டுகெதர்ன்னா என்னன்னு பாடம் எடுக்கணும்னா... நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க...
எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்..
நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்...... உள்ளுக்குள்ள புழுங்கி வெந்து செத்து... அதச் சமாளிக்கிறதுக்கு மத்தவங்கள மட்டம் தட்டி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்... ஓ... அவனா... அந்தக் காலத்தில அவன் பாட்டன் என்ன பண்ணான் தெரியுமா...?!அவன் அப்பனோட மாமனோட மச்சினியோட தங்கச்சி பையன் இருக்கானே... அவன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு ஏதோ சொல்லிக்கிட்டே போவாங்க... இதெல்லாம் ஏன் சொல்றன்னு கேக்க நாதி இருக்காது...
ஊர்ல ஒருத்தன் உழைச்சுச் சம்பாதிச்சு பங்களா.. கார்ன்னு செட்டில் ஆனான்னு வைங்க... அவனப் பார்க்கறப்போல்லாம்... இளக்காரமாப் பார்த்து... இவன் என்ன ஜாதி தெரியுமா... இவன் அப்பன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு... ஹூம்ன்னு வயித்தெரிச்சலத் தீர்த்துக்கும்..
இல்லையின்னா... ஹூம்.. அந்தக் காலத்தில என்னோட பாட்டன் முப்பாட்டன் எப்டி இருந்தான் தெரியுமா... அப்போ உன்னோட தாத்தன் எல்லாம் என்னோட தாத்தன் கிட்ட பிச்சை எடுத்துக்கிட்டிருந்தான்னு ஜம்பமாப் பீத்திக்கிட்டே பிச்சை எடுத்துக்கிட்டிருப்பாங்க..
அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது...
இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம்.. உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்...
காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்...
கண்மணி அன்போடு காதலன் நான்னு... உருகி... உருக்கிட்டு... நான் வேற ஜாதியாம்... எனக்குப் புட்டிப்பால் கொடுத்த அம்மா இப்போதான் ஜாதிப்பால் கொடுத்தாங்க... நானு ஒன்னும் தெரியாத பாப்பா அப்டின்னு யாரும் சொல்லக் காணோம்..
ஆனாலும் நம்ம மக்கள் ஆக்ரோஷமாக் கேக்குறாங்க... அவங்க கலாச்சாரம் எல்லாம் நாம கத்துக்கிடணுமாவாம்...
(விதிவிலக்கும்... நல்லது கெட்டதும்... அவங்க கிட்டயும் இருக்கு... ஆனா அந்த 0.001% பிடிச்சு வச்சுக்கிட்டு உதாரணம் காட்டாதீங்கய்யா புண்ணியவான்ஸ்..)
இன்னொண்ணு சொல்றாய்ங்க வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... இத யாரோ ஒருத்தரு சொன்னா... மக்கள் என்னமா கை தட்டுறாங்க தெரியுமா... அமெரிக்காவில ஒரு வயசுக் குழந்தை கூட இங்கிலீசு பேசுதுப்பான்னு சொன்னாக் கை தட்டுற ரேஞ்சுக்கு...
இங்க மனுஷன்... மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்துட்டு... முடியல... ரொம்ப ஜாஸ்தின்னா... ஓடிப் போய்... இப்டிக் கஷ்டமா இருக்குதுபா... என்ன பண்ண சொல்லுன்னு கேக்கறதுக்கும்... ஒரு குழந்தை இறந்து போச்சுன்னா... மனசு ஒடிஞ்சு செத்துப் போகாம போய்ச் சொல்லி அழுறதுக்கும்... வீட்டில பிக்கல் பிடுங்கல் ஜாஸ்தி ஆயிடிச்சின்னா அதப் பகிர்ந்துக்கிறதுக்கும் கூட... மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க.. நம்மாளுங்கதான் சைக்கியாரிஸ்ட்னு பேரு கேட்டாலே அலர்றாங்க...
பைத்தியம்னா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு... சட்டையைக் கிழிச்சுக்கிட்டு இளிக்கறதயும்... அய்யோ ஆள விடுங்கடான்னு மத்த நார்மல்ன்னு சொல்லிக்கிட்டிருக்கிற லூசுங்க கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாய்ஞ்சுக்கிட்டு ஓடறதயுமே மனக்கண்ணில வச்சுக்கிட்டிருக்கிற... அறிவாளிங்களால அதுக்கு மேல என்ன பண்ண முடியும்..
அட மனநல மருத்துவமனை மட்டுமாங்க இருக்கு இங்க..?! எங்க போனாலும் கை கால் முடியாம... சக்கர நாற்காலில இருக்கிறவங்களுக்கு... பார்க்கிங்க்ல அவங்களுக்கு வசதியா பார்க்கிங்க் இருக்கு.... பஸ்ல அவங்க ஏறி இறங்க வசதியா படிக்கு மேல சறுக்குற வழி இருக்கு... அத பஸ்ஸ விட்டு இறங்கி வந்து இழுத்து விடுற ட்ரைவர்... மனுஷன் இருக்கான்... ஹாஸ்பிட்டல்ல இருந்து... ரெஸ்ட்டாரண்ட் வரைக்கும்... அவங்களுக்கு டாய்லெட் இருக்கு... முக்கியமான இடங்கள்ல எல்லாம்... அவங்க ஏறி இறங்க வசதியா நிறைய வசதி இருக்கு...
ஏன் அதுக்கும் சொல்றதுதானே..?! அங்க ஊனமுற்றவர்களுக்கான கக்கூஸ் ஜாஸ்தியா இருக்குய்யா.... அங்க இருக்கிறவங்க எல்லாம் ஊனமுற்றவங்கன்னு..?!
திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க...
இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!...
ஸாரிங்க... எனக்குத் தெரியல...
(இன்னும் எழுதிக் கிழிக்கலாம்தான்.... ஆனா... சில நண்பர்கள் சொல்ற மாதிரி... என்ன புண்ணியம்ன்னு தெரியல... சொன்ன மாதிரி "மனுஷங்களோட" பகிர்ந்துக்கறதுக்கு வேணா அப்ப அப்ப ஏதாவது எழுதலாம்..)

51 ஊக்கம்::
செம காட்டம். மிளகு குழம்பு காரம்தான். ஆனா உடம்புக்கு தேவை.
/அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது.../
அதெப்புடி. முடியாதப்ப மெச்சிகிட்டா ஏத்துக்கிடணுமே. சுகவாழ்க்கை பறி போயிடுமே.
/காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்.../
நாய் குறைக்கிறா மாதிரி ஒரு ஹாரன் வச்சிக்கிட்டு விதியேடான்னு போற போய்ட்டிருக்கிற பொண்ணுகிட்ட போய் அடிச்சி அத வண்டியிலிருந்து உருட்டி விட்டுப் போறது எந்தநாட்டு கலாச்சாரத்துல வந்திச்சோ தெரியல.
/வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... /
இங்கன பேயோட்றது, குறி சொல்றது, ஜாதகம் பார்க்கறது, அருள்வாக்குன்னு எம்புட்டு இருக்கு. அப்புறம் தோஷ பரிகாரம் இருக்கவே இருக்கு. ஆனா டாக்டர்கிட்ட போயிட்டா மெண்டலுன்னு தனி ஜாதி ஆக்கிறுவானுங்க.
//திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... //
சட்டத்துலயே இடமில்லாததுதான் கொடுமை. கேஸ் பத்திகிட்டு போனா ஆம்பிளை ஜெயிலா பொம்பிளை ஜெயிலான்னு குழப்பம்னு அடியும் அதிகம் விழும்.
சொன்னா மாதிரி இதே சூட்டோட ஒவ்வொருத்தரும் தன்னைக் கேட்டுக்க வேண்டிய நிலமைதான். பதில் என்னன்னு தெரியுமிங்கற இயலாமையும் சேர்ந்து கோவம்தான் வரும்.
சகோதரி,
உங்களின் கோபம், ஆதங்கம் புரிகிறது. சில நேரங்களில் சில விசயங்களை பொதுவில் வைக்கும்போது அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது, அவ்வாறு எதிர்ப்பார்ப்பவரும் தாங்கள் இல்லையென்பது தெரியும்.
தாங்கள் எழுதியதில் இருந்து தெரிந்து, தெளிந்த விஷயங்கள் நிறைய. மற்றொரு நாளில் திரும்பவும் இதை படிக்கும் சிலர் மனிதத்திற்கு வந்து வருந்துவார்கள் என்பது மட்டும் உறுதி...
குழந்தை வளர்ப்பு பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்... இன்னும் நீங்கள் எழுத, நாங்கள் படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறன. தொடருங்கள்.
பிரபாகர்...
cant resist.
ஃபாரின்ல உக்காந்துட்டு எல்லாம் பேசலாம்னு சொல்லுவாங்க. சொல்லியிருக்காங்க. கொட்டாம்பட்டியில வாய் முழுக்க வெத்தலை போட்டு குதப்பிக்கிட்டு கரகாட்டம் ஆடுறவரு கலைவிழான்னு வெளிநாடு போனா கண்ட இடத்துல துப்பறதில்லை. வரிசையில போறாரு வராரு.
ஃபாரின்ல ஆணி புடுங்கி அங்கயே தங்குற நம்மாளுவ ஊருக்கு வந்தா, கெடச்சுதுறா சுதந்திரம்னு டாய்லட் கேக்குற குழந்தைய தெருவோரம் போகச் சொல்றதும், ட்ரெயின்ல ஜன்னல் வழியே கை கழுவறதும் எப்படி?
அதெல்லாம் நம்மால முடியாதுன்னு ஒரு தீர்க்கமான முடிவு. போன முறை நீ இங்க வந்திருந்தப்ப வீட்டு வாசல்ல குப்பை கொட்டினா ரூ 100 அபராதம்னு பேப்பர்ல வந்திச்சு கவனமிருக்கா. அது பேப்பர்லயே இருக்கு. குப்பை தெருவுலயே இருக்கு:))
மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க...//
எல்லாம் தமிழ் சினுமா பார்த்து உலக பொது அறிவ வளர்த்துக்கிட்டா இந்த மாதிரி பொது அறீவாத்தான் பொங்கி வழியும்... தெரியுமா, தெரியுமா சங்கதி அமெரிக்காவில பொறந்து விழுந்தது கூட கூவா கூவான்னு இங்கிலீபீச்சிலதான் கத்துதாம் :P ...
""மனுஷங்களோட" பகிர்ந்துக்கறதுக்கு வேணா அப்ப அப்ப ஏதாவது எழுதலாம்"
நிறைய எழுதணும் பிரியா. ஆனால், எளிதில் மனம் துவண்டு போவதில் அர்த்தம் இல்லை.
நீங்கள் எழுதுவது மேலைநாட்டு கலாசாரத்தில் என்னன்னா நல்ல அம்சம் இருக்குங்கிறது. மேலை நாடுகள் போகமுடியாதவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமா இருக்கும். அதே சமயம் நம் கலாசாரத்தில் உள்ள குறைபாடுகளையும் நன்கு விமரிசனம் செய்யறீங்க. அதுவும் வேண்டும். ஆனா எது சரி தப்புங்கிற முடிவை மக்களிடும் வுட்டரனும்.
//இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம். உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்.//
கலக்கறீங்க .இன்னும் நிறைய சொல்லலாம்
பொண்ணு காலம் தாழ்த்தி வந்தால் அம்மா வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது,
பெண்ணுடன் எப்போதும் மெய்க் காவலர்கள் செல்வது.
ஒரு பெண்,ஆண் காதல் விவகாரம் சாதி மத பிரச்சினைன்யாக மாறுவது.
நல்லது கெட்டது எல்லா சமூகங்களிலும் இருக்கும் .நல்ல செயல்களை பாராட்டுவதும்,கெட்ட செயல்களை விமர்சித்து கொங்சம் கொஞ்சமாக மாற்றினால் சமூகம் முன்னேறும்னு சொல்லலாம்.
நானும் கூட இந்தியாவை விட்டு வரும் வரை என் பிற நாட்டு மக்களை பற்றிய் அபிப்ராயம் அவ்வளவு நல்லதாக இல்லை.
ஆனால் மனிதர்களை மதிப்பதும்,அவர்களின் வாழ்க்க்கையை அவர்களே உணர்ந்து சுதந்திரமாக,இயல்பாக வாழ்வதும் மிகவும் நல்ல விஷயம்.
நமமை நாமே மெச்சிக் கொள்(ல்)வதும் மற்றவர்கள் செய்யும் செயல்களை தவறு என கிண்டலடிப்பதும்.நமக்கு நாமே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுதான்.
போன வாரம் ஹஜ் பெருநாள் விடுமுறையில் பீச் போனேன்,
மூணு மணி நேரத்துக்கு மேல,
ரெண்டு பொண்ணுக தனியா, ஒருத்தன் வந்து ஏம்மா எந்த ஊரு,என்ன பேரு,அப்படின்னு பேட்டி காணல,ஒரு உரசல்,ஒரு ஆநாகரிக பார்வை இல்ல,
வரியா ,என்ன ரேட் இது போன்ற சீண்டல் இல்ல,
இதே நம்ப ஊரா இருந்தா நினைச்சு கூட போக முடியாது # life is beautiful,depends on the way u perceive things.
வாழ்த்துகள் மற்றும் வந்தனங்கள்,
இன்னும் நிறைய இருக்கு ப்ரியா . . .
அவசரம்னா ஒரு கடையில போயி உங்க கட டாய்லெட்ட பயன்படுத்திக்கலாமன்னு கூச்சமில்லாம கேக்க முடியும்,
நம்ப ஊருல, ஏதோ ஜந்தப் பாக்குற மாதிரி பாப்பாங்க . . .
ஆம்பளைகள விட்டுத் தள்ளுங்க,
கலாச்சாரத்த கட்டிக் காப்பாத்துற பரம்பரையில வந்தவங்க,
பொண்ணுங்கள படுத்துற பாடு
இருக்கே,
நானூறு பேருக்கு நாளு கக்கூஸ் கூட இருக்காது,
இதுல பொண்ணுகள பாத்து கேக்குற
கேள்வி,
இதெல்லாம் வீட்லயே முடிச்சிட்டு வரணும்,
அதாவது,
காலையில எட்டு மணிக்கு வீட்ட விட்டு பொறப்பட்டு, சாயந்தரம் அஞ்சு மணிக்கு ஒரு பொண்ணு / பொம்பள டாய் லேட் போகணும்னு சொன்னா . . .
மொத்ததுல மனிசன புரிஞ்சிக்கங்கடா மடையான்னு சொல்றீங்க . . .
நீங்க ஒன்னு மறந்துர்றீங்க,
கொரங்குக்கும் மனுசனுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் இருக்குன்னா அது நம்மாளுக தான் . . .
தொடருங்கள்
நட்புடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.com
//
குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...
//
இதயத்துடிப்பு வெங்காய துடிப்பு என்று அடைமொழியுடன் வரும் குப்பை ஊடகங்களால் கட்டியமைக்கப்படும் பிம்பங்களும் முக்கிய காரணம். வெளிநாட்டுப் பெண் இந்தியரை கல்யாணம் செய்தால் முதல் பக்கத்தில் செய்தியாக்கி அதே இந்தியப் பெண் ஒரு வெளிநாட்டு நபரை கல்யாணம் செய்தால் கலாச்சாரம் சீர்கெட்டது, பெற்றோர் நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், அய்யகோ இதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற ரீதியில் எழுதும் மஞ்சள் பத்திரிக்கைகளும் பெரிய காரணம்.
போலி அறிவிஜீவிகளும், சேரில் உக்கார்ந்து கொண்டே நடக்காததை நடந்ததாக எழுதும் துப்பறியும் பத்திரிகைகளும் காரணம்.
ஆனால், அவர்களை மட்டும் சொல்லி என்ன பயன்? என்ன விற்கிறதோ அதை அவர்கள் தயாரிக்கிறார்கள்.
//
நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க.
//
விதவை பென்ஷன் கொடுக்க லஞ்சம் கேட்கும் கொடூரங்களும், அதையே திறமையாக நினைக்கும் அசிங்கங்களும் இருக்கும் இடத்தில் என்ன எழுதி என்ன புண்ணியம்?
//
எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்..
//
ஆமா அது வேற கதை. ஜெய்ஹிந்த். இந்தியா மாதிரி உண்டா. தமிழ்நாடு மாதிரி உண்டா....தேச பக்தில எங்களை அடிச்சிக்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டே நைட்டோட நைட்டா அமெரிக்கன் எம்பஸிலயும், ப்ரிட்டிஷ் கான்ஸுலேட்லயும் க்யூவில வேற நிப்பாங்க....ஹிப்போக்ரஸி...ஒன் வேர்ட். இனஃப்.
//
நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்......
//
அப்படி சொன்னா கலாச்சாரம் என்னாகறது? ஊரை விட்டு ஒதுக்கி வெச்சிடுவாய்ங்க.
சிறு குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுத்து கொண்டிருக்கின்றன. ரயில்வே நிலையத்திலும், சுரங்கப் பாதைகளிலும் பல குடும்பங்கள் குடித்தனம் இருக்கின்றன. குப்பை பொறுக்கியே வாழ வேண்டிய குழந்தைகள் பல லட்சம் இருக்க கூடும்.
இன்றைக்கும் ஏதோ ஒரு பெண் ஸ்டவ் வெடித்து இறந்து கொண்டு தான் இருக்கிறாள். கேட்பாரின்றி ஏதோ ஒரு பிணம் சாலையோரத்தில் அழுகிக் கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு குழந்தையை ஒரு சொறி நாய் சீரழித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த நாய் முன்னாள் டிஜிபியாகவே அரசு அதிகாரியாகவோ இருக்கும். முப்பது ஆண்டு கழித்து கைது செய்தால் அந்த நாய்க்கு நெஞ்சு வலி வரும். ஏஸி ரூம் ஹாஸ்பிடல்.
நாட்டின் ஒட்டு மொத்த சொத்தையும் எவனோ ஒருவன் கொள்ளையடித்து ப்ரைவேட் ஜெட்டும், ப்ரைவேட் ஐலண்டும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறான். கேட்டால் அவன் மக்கள் தொண்டன். அவனுக்கும் ஓட்டுப் போட ஒரு கும்பல்.
வாழ்க கலாச்சாரம்.
//
காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்...
//
இப்படி ஒரு பெண்ணை சில வருடங்களுக்கு முன் ஈவ் டீஸிங் செய்து அந்த பெண் இறந்தே போய்விட்டார் :(
கல் தோன்றி மண் தோன்றா காலத்து கலாச்சாரம் அப்படியே அழுகிப் போய் நிற்கிறது.
இந்த பார்ட்...செம சூடு :)
//
இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!...
//
சில கலாச்சாரங்களில் மனிதர்களாக இருப்பது முக்கியமல்ல. கலாச்சார காவலர்களாகவும், வக்கிரங்களாகவும் இருப்பது தான் முக்கியம். அப்பொழுது தான் கைதட்டல் வாங்க முடியும்.
உண்மையில் இந்திய குடும்ப பெண்களுக்கு ஒரு ஸ்டடி செய்தால் தெரியும் எங்கு மன நலம் பாதிக்க பட்டவர்கள் அதிகம் என்று .மன நல மருத்துவரிடம் வருபவர்கள் எல்லாம் மன நோயாளிகள் அல்ல ,மன நோயாளிகள் எல்லாம் மன நல மருத்துவரை காண வருவதும் இல்லை .
நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் ,எந்த ஒரு கலாசாரமுமே பூரணமானது அல்ல ,நம் சமூகத்தில் உள்ள மிக பெரிய பிரச்சினை ,சமூகம்,அல்லது கலாச்சாரம் எனும் அமைப்பு தனி மனிதரை நசுக்குவது தான் .மனிதர்கலாலான ஒரு அமைப்பு மனிதனுக்கு எதிராக செயல் படுகிறது .அதே மாறி பல நல்ல விஷயங்கள் இங்கு உள்ளது அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் .
:))
நல்லா சொல்லியிருக்கீங்க.... இன்னும் நிறைய சொல்லலாம்...
ஒரு பத்து நாள் வரல! அதுக்குள பாகம் 8-ஆ? முதல்ல எல்லாத்தையும் படிக்கிறேன்!!!
சூப்பர்! இந்தப் போடு போடுறீங்க!! எல்லாப் பாகமும் படிச்சுப்போட்டு வரேன். ஏற்கனவே தெகா வேற இதைப்பத்தி எழுதச்சொன்னாரு!!
:)
hmmmmmmm.i finished all the missed 7 parts.rowthram pazhagum penne!
unnai sudar migum arivudan pettra unadhu thayarukku en vanakkangal'
stop not till the goal is reached.
@வானம்பாடிகள்
||இங்கன பேயோட்றது, குறி சொல்றது, ஜாதகம் பார்க்கறது, அருள்வாக்குன்னு எம்புட்டு இருக்கு. அப்புறம் தோஷ பரிகாரம் இருக்கவே இருக்கு. ஆனா டாக்டர்கிட்ட போயிட்டா மெண்டலுன்னு தனி ஜாதி ஆக்கிறுவானுங்க.||
அதே சாரே... அதாக்கும் பார்-அன்பரியம்.... அதாக்கும் சம்ஸ்காரம்.. அதாக்கும் ஜீவிதம்...
@வானம்பாடிகள்
||சட்டத்துலயே இடமில்லாததுதான் கொடுமை. கேஸ் பத்திகிட்டு போனா ஆம்பிளை ஜெயிலா பொம்பிளை ஜெயிலான்னு குழப்பம்னு அடியும் அதிகம் விழும்.
சொன்னா மாதிரி இதே சூட்டோட ஒவ்வொருத்தரும் தன்னைக் கேட்டுக்க வேண்டிய நிலமைதான். பதில் என்னன்னு தெரியுமிங்கற இயலாமையும் சேர்ந்து கோவம்தான் வரும்.||
ஹூம்...
@பிரபாகர்
நன்றிண்ணா... எழுதலாம்... பார்க்கலாம்...
@வானம்பாடிகள்
||அதெல்லாம் நம்மால முடியாதுன்னு ஒரு தீர்க்கமான முடிவு. போன முறை நீ இங்க வந்திருந்தப்ப வீட்டு வாசல்ல குப்பை கொட்டினா ரூ 100 அபராதம்னு பேப்பர்ல வந்திச்சு கவனமிருக்கா. அது பேப்பர்லயே இருக்கு. குப்பை தெருவுலயே இருக்கு:))||
சேமிக்கணும் சாரே... வேற இடத்தில.. :o)
@Thekkikattan|தெகா
||தெரியுமா, தெரியுமா சங்கதி அமெரிக்காவில பொறந்து விழுந்தது கூட கூவா கூவான்னு இங்கிலீபீச்சிலதான் கத்துதாம் :P ...||
கூவான்னா இன்லீஸ்பீஸ்ல என்ன அர்த்தம் தெகா... கூவ நதிக்கும் அதுக்கும் சம்மந்தமிருக்கா... :o)
@Sethu
||நிறைய எழுதணும் பிரியா. ஆனால், எளிதில் மனம் துவண்டு போவதில் அர்த்தம் இல்லை. ||
என்னது மனம் துவளுதா... நீங்க வேற சேது... ச்சைன்னு ஆயிடுது... அம்புட்டுதேன்..
||நீங்கள் எழுதுவது மேலைநாட்டு கலாசாரத்தில் என்னன்னா நல்ல அம்சம் இருக்குங்கிறது. மேலை நாடுகள் போகமுடியாதவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமா இருக்கும். அதே சமயம் நம் கலாசாரத்தில் உள்ள குறைபாடுகளையும் நன்கு விமரிசனம் செய்யறீங்க. அதுவும் வேண்டும்.||
அப்டிங்கிறீங்க... அது சரி.. உங்களுக்குக் கேக்கறதுக்கு பக்குவம் இருக்கு... கேக்கறீங்க..
||ஆனா எது சரி தப்புங்கிற முடிவை மக்களிடும் வுட்டரனும்.||
நான் என்ன அரட்டை அரங்கமா நடத்தறேன்... தப்பு... சரின்னு எல்லாம் சொல்லிட்டிருக்கறதுக்கு.. நீங்க வேற...
இது இப்டி இருக்குன்னுதான் சொல்லிட்டிருக்கேன்... என்னோட பார்வைல இது என்னோட அபிப்ராயம்னுட்டு...
@RMS Danaraj
நல்லா சொல்றீங்க தனராஜ்..
||நானும் கூட இந்தியாவை விட்டு வரும் வரை என் பிற நாட்டு மக்களை பற்றிய் அபிப்ராயம் அவ்வளவு நல்லதாக இல்லை. ||
உங்களுக்கு அவ்ளோ நல்லதா இல்லை... எனக்கு கொஞ்சம் கூட நல்லதா இல்லீங்க... ஊர்ல உக்காந்துட்டு நம்மாளுங்க சொல்றதக் கேட்டுக்கிட்டு மேற்குத் திசைய செத்துப்போன கரப்பான் பூச்சி மாதிரில்ல பார்த்துட்டிருந்தேன்...
ஹூம்... ஆமா.. இதெல்லாம் பாவமா... நான் பாவ மன்னிப்பு ஏதாவது கேக்கணுமா... இல்ல யாராவது சோஸ்யரு பரிகாரம் ஏதாவது சொல்லுவாரா... அவ்வ்வ்வ்.....
@ரோகிணிசிவா
ரோகிணி என்ன இப்டிச் சொல்லிட்டீங்க... நம்ம ஊருன்னா நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதுன்னு.. அது எவ்ளோ அழுகிப் போய் நாறினாலும்... இப்டிப் பப்ளிக்ல போட்டு உடைக்கக் கூடாது... செரியா... =))))
@மார்கண்டேயன்
நன்றி மார்க்கண்டேயன்.. நீங்க சொல்றது நெசமுங்க..
||கொரங்குக்கும் மனுசனுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் இருக்குன்னா அது நம்மாளுக தான் . . .||
ஹிஹி... இது நல்லாருக்கு...
ஆனாலும்.. கொரங்க இன்சல்ட் பண்ணறமேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு... :o)
@அது சரி(18185106603874041862)
=))
||போலி அறிவிஜீவிகளும், சேரில் உக்கார்ந்து கொண்டே நடக்காததை நடந்ததாக எழுதும் துப்பறியும் பத்திரிகைகளும் காரணம்.||
அத ஏன் கேக்கறீங்க... ஹாங்காங்ல கரண்டுக் கம்பில வவ்வால் தலைகீழாத் தொங்குதாம்னு இன்லீஸ்பீஸ்ல நியூஸ்(?) வந்தா... டெண்டுல்கர் ஸாம்பியாவில தூக்கு மாட்டிக்கிட்டார்ன்னு மொழிபெயர்த்துச் சொல்லுவாய்ங்க...
@அது சரி(18185106603874041862)
||விதவை பென்ஷன் கொடுக்க லஞ்சம் கேட்கும் கொடூரங்களும், அதையே திறமையாக நினைக்கும் அசிங்கங்களும் இருக்கும் இடத்தில் என்ன எழுதி என்ன புண்ணியம்?||
புண்ணியம் கிடைக்கலன்னா பரவால்ல... பாவம் ஏதாவது கிடைச்சுடுமோன்னுதான் பயம்மாருக்கு...:o)
@அது சரி(18185106603874041862)
ஆ.... அருமையான ஒரு இடுகை இங்க காமெண்டா வீணாப் போகுதே...
@அது சரி(18185106603874041862)
|| அப்பொழுது தான் கைதட்டல் வாங்க முடியும்||
நானும் கைதட்டல் வாங்கற மாதிரி ஏதாவது எழுத ட்ரை பண்றேன்...
@dr suneel krishnan
நன்றி சுனில்...
||நம் சமூகத்தில் உள்ள மிக பெரிய பிரச்சினை ,சமூகம்,அல்லது கலாச்சாரம் எனும் அமைப்பு தனி மனிதரை நசுக்குவது தான் .மனிதர்கலாலான ஒரு அமைப்பு மனிதனுக்கு எதிராக செயல் படுகிறது||
அதேதான்..
||அதே மாறி பல நல்ல விஷயங்கள் இங்கு உள்ளது அதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்||
மறுக்க முடியாது...
@கும்க்கி
நன்றி கும்க்கி... உங்களுக்கு எஸ்கேப்ஸ்க்கின்னு பேரு வச்சிருக்கணும்..
@சே.குமார்
நன்றி குமார்..
@சிவா என்கிற சிவராம்குமார்
நீங்க பெயர மாத்திட்டீங்களா...
@சுரேகா..
நன்றி சுரேகா... எழுதுங்க எழுதுங்க... எப்டியாவது நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்க ஒரு தளம் கிடைச்சாப் போதும்.. :o)
@anna
அவ்வ்வ்... நன்றிங்க... நான் அவ்ளோ வேர்த் இல்ல...
parattugal
polurdhayanithi
நான் நினைப்பதை நீங்கள் சரியாக சொல்லி வருகிறீர்கள். எனக்கு பெண்கள் மீது எப்பொழுதுமே ஒரு மரியாதையை உண்டு.
கல்யாணம். அந்த காலத்தில் இந்த மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி எல்லாம் என்பது கிடையாது. ஆதாரம் கேட்பவர்கள் சென்று புராதன கோயில்களை சென்று பார்க்கட்டும். நானும் பல கோவில் களை பார்த்து இருக்கிறேன். அங்க தூண்களில் இருக்கும் சிலைகளை உற்று நோக்கி இருக்கிறேன். அது போக எனக்கு kamasutra வந்த புராணமும் தெரியும்.
எனது அறிவுக்கு எட்டியவரை இதை மனிதனின் ஆரோக்கியத்தை உயர்த்த வகுக்க பட்டவை. Eugenics and Euthenics. ஆம் ஹிட்லர் செய்த அதே வேலை தான். அதற்காக சில விதிகள். ஒரே குலத்தில் கல்யாணம் செய்ய கூடாது. என் என்றால் மரபணு சம்பந்த பட்ட வியாதிகள் வரும். அவ்வளவு தான். இன்றைய மருத்துவத்தில் முன்னேறிய உலகத்தில் அந்த விதிகள் எல்லாம் சும்மா. அது போக அது எல்லாம் மூன்றாவது மற்றும் அதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் வரும். இது தான் கல்யாணத்தில் பாக்க வேண்டிய சில விதிகளாக செய்து வைத்தனர் நாம் பெரியோர்கள்.
ஆனால் இதற்கு பின்னாடி உள்ள உண்மையான சயின்ஸ்ஐ இப்பொழுது உள்ளவர்கள் மறந்துவிட்டனர்/மழுங்கிவிட்டனர். தேவை இல்லாமல் அடுத்தவர்களின் அந்தரத்தை எட்டி பார்க்க நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை உணர்ந்தால் போதும்.
தாங்கள் மேல் எனக்கு மரியாதையை கூடி கொண்டே செல்கிறது. நான் நினைக்கும் ஒரு பெண்ணாகவே
நீங்கள் இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
இன்ரஸ்டிங்கா போய்க்கிட்டு இருக்கு...!!!
@polurdhayanithi
நன்றிங்க..
@deeps
ம்ம்... நன்றிங்க..
@Cool Boy கிருத்திகன்.
நன்றி...
சான்சே இல்லைங்க.. பிச்சு உதறீட்டீங்க போங்க..!! பிரிச்சு மேஞ்சிட்டீங்க.. ரொம்ப நல்ல பதிவு.. நான் மிகவும் ரசித்து படித்த பதிவுகளில் இதுவும் ஒன்று..!! இன்று தான் முதன் முறை உங்கள் பதிவுகளை பார்வையிடுகிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..!! இது போன்ற பதிவுகள் அவசியம் தேவை..!!
@பால் [Paul]
ty paul..
Post a Comment