நத்தை போல் வீடு சுமந்து பிரபஞ்சம் சுற்றலாம்
பறக்கும் குதிரைகளில் மலைகள் தாவித் தாவி வானையளக்கலாம்
கனவுகளில் நத்தை வீடும், குதிரைச் சிறகும் முளைக்கலாம்
கனவுச் சிறகு மட்டுமே போதுமா...?!
வீட்டின் சுமை தாங்கும் முதுகும்..
முதுகு தாங்கும் பாரத்துடை வீடமைக்கும் திறனும்
கூரிய முனைகளில் ஊர்ந்து செல்லும் லாவகமும்
கிடுகிடு பள்ளத்தின் மேல் பாங்காய்ப் பறக்கும் உறுதியும்
உயரத்தின் விசையில் அதிராதிருக்கும் இதயமும்
எரி கற்களைச் சந்திக்கத் துணிந்த தலையும்
திசைகளில் ஒளிந்திருக்கும் தேனெடுக்கும் திண்ணமும்
வானில்ச் சுற்றும் கழுகின் மொழி பேசவும்
நட்சத்திரம் சுடுமென்ற உண்மையை ஏற்கவும்
முகட்டின் கூர்களில் பூத்திருக்கும் மூக்குத்திப் பூவை ரசிக்கவும்
பாறையிடுக்கில் ஒளிந்து கொள்ளும் டாண்டிலயனை முகரவும்
பறக்கும் குதிரை தறிகெடாது அடக்கும் வலிமையும்
சுமக்கும் வீடு சிதறாது காக்கும் கடமையும்
காலுடைந்தால் தலையால் நடக்கும் வித்தையும்
கழுத்தொடிந்தாலும் நிமிர்ந்திருக்கும் முதுகெலும்பும்
தலை குப்புற விழுந்து கணத்தில் சாகவும்..
தலை சிதறச் சிதறச் சிறிது சிறிதாக யுகமெடுத்துச் சாகவும்..
மூக்கால் நீரருந்தி முக்குளித்துச் சாகவும்..
மண்டை சிதறியும் துடிக்கும் மூளையை அலட்சியம் செய்யவும்
இதயம் நின்று அந்தரத்தில் சாகவும்
கூர் முனைகளில் உன் கூறுகளைக் கூறு போடவும்
தலை சிதறும்போதே பறக்கும் குதிரைக்கு ஏங்கும் மனமும்
நிற்கமுன் துடிக்கும் இதயத்தில் நத்தை வீட்டை நிரப்பவும்
பறந்தபடியே மூழ்கவும்... ஆழ்ந்தபடியே பறக்கவும்..
செத்தபடியே வாழவும்... வாழும்போதே சாகவும்..
போதுமா..?!

25 ஊக்கம்::
*போதவே போதாது. இப்படி நிறைய வேணும்*
ம்ம்ம். ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. ஏனோ படிக்கறப்போ ரொம்ப மென்மையா ஆரம்பிச்சி உச்சத்துல ஒரு நோட்ல தடக்குன்னு நின்ன வயலின் கச்சேரி மாதிரி..போதுமாக்கு அப்புறம் ஒரு பரந்த வெளி..இப்படி என்னல்லாம் தோணுதோ நிரப்பிக்க இப்படி அழகான்னு சவால் மாதிரி ...
தலை குப்புற விழுந்து கணத்தில் சாகவும்..
தலை சிதறச் சிதறச் சிறிது சிறிதாக யுகமெடுத்துச் சாகவும்..
மூக்கால் நீரருந்தி முக்குளித்துச் சாகவும்..
மண்டை சிதறியும் துடிக்கும் மூளையை அலட்சியம் செய்யவும்
இதயம் நின்று அந்தரத்தில் சாகவும்
கூர் முனைகளில் உன் கூறுகளைக் கூறு போடவும்//
அனல் பறக்கிறது வரிகளில். வித்தியாசமான கற்பனை...
mm ,ithu ellam orunngae amaiya petravanai/lai athirsatasali endrae alaiyungal
/வீட்டின் சுமை தாங்கும் முதுகும்.. முதுகு தாங்கும் பாரத்துடை வீடமைக்கும் திறனும் கூரிய முனைகளில் ஊர்ந்து செல்லும் லாவகமும்/
/எரி கற்களைச் சந்திக்கத் துணிந்த தலையும் திசைகளில் ஒளிந்திருக்கும் தேனெடுக்கும் திண்ணமும்
வானில்ச் சுற்றும் கழுகின் மொழி பேசவும் நட்சத்திரம் சுடுமென்ற உண்மையை ஏற்கவும் முகட்டின் கூர்களில் பூத்திருக்கும் மூக்குத்திப் பூவை ரசிக்கவும்/
முதல் விவரணை நத்தை மாதிரியே ஒரு அழகான நிதானமான ஒன்னுன்னா பறவை மாதிரியே மேலே கீழே கிழக்கே மேற்கேன்னு கட்டுத்தறித்த விவரணை.
ம்கும். இப்படியே வரிக்கு வரி சொல்லிண்டே போகலாம். கடைசியில் அந்த டெம்போ..மூச்சு முட்டுது..பிரமாதம்.
சிந்தனைக் கிளையை இன்னும் நீண்டு போ என தூண்டும் வரிகள்
"..சுமக்கும் வீடு சிதறாது காக்கும் கடமையும்
காலுடைந்தால் தலையால் நடக்கும் வித்தையும் ..."
எத்தனை கடமைகள்
அத்னையும் முடித்து
"....செத்தபடியே வாழவும்... வாழும்போதே சாகவும்.. "
ம்............. அருமை...........
தென்றலாக வருடி பின்பு அனல் தகிக்கிம் வெப்பத்தை உமிழ்ந்ததாக உள்ளது இந்த பீஸ்... :)
//
கழுகின் மொழி பேசவும்
நட்சத்திரம் சுடுமென்ற உண்மையை ஏற்கவும்
முகட்டின் கூர்களில் பூத்திருக்கும் மூக்குத்திப் பூவை ரசிக்கவும்
பாறையிடுக்கில் ஒளிந்து கொள்ளும் டாண்டிலயனை முகரவும்
//
ம்ம்ம்ம்..ரியாலிட்டி.
//
பறக்கும் குதிரை தறிகெடாது அடக்கும் வலிமையும்
சுமக்கும் வீடு சிதறாது காக்கும் கடமையும்
காலுடைந்தால் தலையால் நடக்கும் வித்தையும்
கழுத்தொடிந்தாலும் நிமிர்ந்திருக்கும் முதுகெலும்பும்
//
இதெல்லாம் இருந்தா நல்லாத் தான் இருக்கும்.
கிடுகிடு பள்ளத்தின் மேல் பாங்காய்ப் பறக்கும் உறுதியும்
உயரத்தின் விசையில் அதிராதிருக்கும் இதயமும்
எரி கற்களைச் சந்திக்கத் துணிந்த தலையும்
திசைகளில் ஒளிந்திருக்கும் தேனெடுக்கும் திண்ணமும்
அருமை ப்ரியா.....ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வேறூன்ற வேண்டும். தன்னம்பிக்கையின் உச்சம்.......
செத்தபடியே வாழவும்... வாழும்போதே சாகவும்..
போதுமா..? சித்தர் பாடலை நினைவிற்கு கொண்டுவந்துவிட்டீர்கள் ப்ரியா.
ரசித்து படித்தேன்
இன்னும் நீண்டு கொண்டே போகலாமே என்ற எண்ணத்தை வரிக்கு வரி அதிகமாக்கும் கவிதை.... அருமை.
ரொம்பவும் யோசிக்க வைத்த கவிதை!!!
செத்தபடியே வாழவும்... வாழும்போதே சாகவும்..
போதுமா..?!
::)))
ஒரு நாள் போதுமா.. இன்றொரு நாள் போதுமா? :)
கவிதை மேல ஏறி எதோ மாயலோகத்துல சுத்தி வந்த மாதிரி இருக்கு :)
//தலை குப்புற விழுந்து கணத்தில் சாகவும்.. தலை சிதறச் சிதறச் சிறிது சிறிதாக யுகமெடுத்துச் சாகவும்.. மூக்கால் நீரருந்தி முக்குளித்துச் சாகவும்.. மண்டை சிதறியும் துடிக்கும் மூளையை அலட்சியம் செய்யவும்இதயம் நின்று அந்தரத்தில் சாகவும்கூர் முனைகளில் உன் கூறுகளைக் கூறு போடவும்//
விதம் விதமா சாகணுமா? :) வித்தியாசமான ஆசை தான்..
படிச்சிகிட்டு வரும் போதே அற்புதம்னு இருந்திச்சி.1 ,2 ,3 ஆஹான்னு ஆச்சரியமா பார்த்துக்கிட்டே வந்தேன்.
கடைசியல ரெண்டு பாராவிலே வச்சீங்களே ஆப்பு! நம்ம எதிரிக்கு கூட கனவில கூட இப்பிடி வரக்கூடாதுங்க!
தயவு செஞ்சு யாராவது அந்த ரெண்டுக்கு மட்டும் எதிர் கவுஜ எழுப்புங்க அப்பனே! தளபதி பக்கத்தில எங்கேயாவது இருக்கீங்களா?
வித விதமா சாவறதுக்கு வழி சொல்லிபுட்டு, கடைசியல கேள்வி வேற 'போதுமா..?! ' ன்னு!!
ஏனுங்க! எங்களப் பார்த்து இப்பிடியெல்லாம் சொல்லலாமா! என்னாங்க இது!
@Sethu
அய்யோ புலம்பாதீங்க சேது... அப்டி சாகறதுக்கெல்லாம் துணிஞ்சிருக்கணும்னுதான் சொன்னேன்... சாகச் சொல்லலை.. ஸ்ஸ்ஸபா...
வித விதமா சாவறதுக்கு வழி சொல்றீங்க! இத வானம்பாடி ஐய்யா என்னமா அருமை அருமைங்கிறாரு! ஐயா! ஏனுங்க ஐயா! இந்த கொலை வெறி.
//Sethu said...
வித விதமா சாவறதுக்கு வழி சொல்றீங்க! இத வானம்பாடி ஐய்யா என்னமா அருமை அருமைங்கிறாரு! ஐயா! ஏனுங்க ஐயா! இந்த கொலை வெறி.//
அதெப்படி வித விதமா சாக முடியும். இது பழைய விஷயம்தான். சாவுக்கு அஞ்சாமலிருத்தல். :))
நன்றி பாலா சார்...
நன்றி Kana Varo..
நன்றி ரோகிணி..
நன்றி கதிர்..
நன்றி டாக்டர்..
நன்றி யோகேஷ்..
நன்றி தெகா..
நன்றி அது சரி..
நன்றி நித்திம்மா..? நீங்களா..?!
நன்றி பார்வையாளன்...
நன்றி குமார்..
நன்றி சக்தி..
நன்றி சந்தனா..
நன்றி சேது..
இதுதான் பொட்டுக்காரனின்,
'விண்ணையும், மண்ணயும்' சாடுவோமென்ற ஆக்ரோஷ்மா?
இத்தனையும் கிடைச்சா நல்லா தான் இருக்கும் ,கண் முன் காட்ச்சியாக விரிகிறது .நல்லா இருக்கு .
Post a Comment