நீண்டு வெறிச்சோடியிருக்கும் தெருவின் குறுக்காலோடும் மின்சாரக் கம்பிகளில் ஒரு காகம் கழுத்தைச் சுளுக்கியபடி சோம்பலாக அமர்ந்திருக்க... தெருவோரம் கைகளை வீசியபடி... தனி வழி தொலைந்து போகுமென்று விடுவிடென்று நடக்கும் பெண்ணொருத்தி போல...
அடை மழைத் துளிகளின் அடர்ந்த சிதறல்கள் எங்கெங்கோ சங்கமித்து வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்க, முற்றத்தில் வெளேரென்றிருக்கும் மணலினூடு சிறு சிறு உலோகத் துருக்கள் கருமை நிறத்தில் ஒதுங்கியிருக்க, பம்பரமொன்றின் முனையொன்று விர்ரென்று சுழன்றபடியே கிடையாகப் பயணிப்பது போல், தெள்ளத் தெளிவாக ஒரு சிறு நீர்ச்சுழியொன்று எதையும் அடித்துச் செல்லாது, எதைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாது விரைந்து கொண்டிருக்கும்...
அதுவும் அந்தப் பெரு வெள்ளத்தில் கலந்து விடுமா? அல்லது பக்கத்துக் காணியிற் கைவிடப்பட்ட பாழுங்கிணற்றில் குதித்துவிடுமா?! புற்களின் வேரடியில் ஊறிச்சென்று மனிதர்களின் பார்வைக்கே எட்டாத ஆழமுள்ள வயற் கிணற்றில் சேர்ந்து விடுமா?! கையால் நீரளையும் தூரத்திலிருக்கும் கிணற்று நீரில் தவழ்ந்து கொண்டிருக்குமா?! அவையெல்லாம் தவிர்த்துக் கானகத்தின் நடுவில் வீற்றிருக்கும் தாமரைத் தடாகத்தின் பாசியடி நீரில் கலந்து விடுமா?!, தாமரையிலை மேல் பட்டும் படாமலிருக்கும் நீர்த் துளியாகப் படர்ந்திருக்குமா?! ஏரி, குளம் தாண்டி... சமுத்திர அலைகளுடன் முட்டி மோதிக் கொண்டிருக்குமா?! ஆழ் கடல் சென்று மீண்டும் அதன் பம்பர முனைச் சுளி வடிவில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்குமா?!
அது செல்லும் வழிகளில் சந்திக்கும் நாக்கிளிப்புழுக்களும், பேத்தைக் குட்டிகளும் அதன் வழியை நிர்ணயம் செய்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டவை போல் பக்கத்துக் குட்டையில் துடித்துக் கொண்டிருப்பது பார்த்துச் சிரித்தபடியே சென்று கொண்டிருக்குமா?!
பழக்களிப் போத்தலில் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளுடன் அந்நீரைப் பிடித்து அடைத்து மீனின் உயிருடன்.. அதன் சுவாசக் காற்றையும் பிடுங்கி விடுவார்களா. நூல் போலிருந்தாலும்... போத்தலில் அடைபடக் கூடிய அளவிலானதா அது?! போத்தலில் நீரெடுத்து நிமிர்ந்தால், அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாது அது மீண்டும் தன் வழியில் போய்க்கொண்டுதானிருக்கும்.
.............................. .............................. .............................. .............................. ............
தீயாக இருக்கலாம்... அது மயிர்க்கொட்டிப் புழுக்களைப் பொசுக்குவதற்காகவே என்று ஆகி விட்டால்... அது கொள்ளியென்றாகிவிடும்.... தீயாகவே இருக்கவும், இறக்கவும் விருப்பமாதலால்...
பாரதியைப் பற்றிக் கொண்டு.... செல்ல உத்தேசம்...
.............................. .............................. .............................. .............................. ............
தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ? - அதற்கு
பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
நிற்கொ ணாது போடா!
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணு தலொழித் தாயோ?
கப்ப லேறு வாயோ? - அடிமை
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
கொற்றத் தவிசு முண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
உடல்பில் வலிமை யுண்டோ?
வெற்று ரைபே சாதே! அடிமை!
வீரியம் அறி வாயோ?
சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத் தீரோ?
பண்டு கண்ட துண்டோ? - அதற்கு
பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
நிற்கொ ணாது போடா!
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணு தலொழித் தாயோ?
கப்ப லேறு வாயோ? - அடிமை
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
கொற்றத் தவிசு முண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
உடல்பில் வலிமை யுண்டோ?
வெற்று ரைபே சாதே! அடிமை!
வீரியம் அறி வாயோ?
சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத் தீரோ?
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித் தாயோ?
உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந் திடடா!
நாடு காப்ப தற்கே - உனக்கு
ஞானம் சிறது முண்டோ?
வீடு காக்கப் போடா! - அடிமை
வேலை செய்யப் போடா!
சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பு வாயோ?
ஈன மான தொழிலே - உங்களுக்கு
இசைவ தாகும் போடா!
(எளியோர்... சிறியோர்... வலியோர்.. பெரியோர் எல்லாம் இன்புற்றிருக்கக் கடவ)
.............................. .............................. .............................. .............................. ............
இங்கு இது வரை கிடைத்த உண்மையான அன்புக்கும், நட்புக்கும் தாள் வணக்கம்~ (சென்று விட்டேன்..)

36 ஊக்கம்::
:((. இது முதலாவது கடைசியா? கடைசியாவது முதலா?
//இங்கு இது வரை கிடைத்த உண்மையான அன்புக்கும், நட்புக்கும் தாள் வணக்கம்~//
பெருமையாயிருக்கிறதும்மா.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
விடை பெறுதல்கள் என்றைக்கும் உவப்பானதல்ல. ஆனால், காற்றை கட்டி வைக்கும் திறன் எவனுக்குமில்லை. அதிலும் அக்னி குஞ்சுகளை பொத்தி வைக்கவோ அடக்கி வைக்கவோ நினைப்பவர்கள் முட்டாள்கள். காடு வெந்து தணியும் முன் விடை பெறுகிறீர்கள்.
இத்தனை நாள் எழுத்துக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.
/ஈன மான தொழிலே - உங்களுக்கு
இசைவ தாகும் போடா!/
நாசமாப்போங்கடே:((
//
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
நிற்கொ ணாது போடா!
//
காலத்திற்கும் நிற்கும் பாரதியின் வரிகள்.
//
போத்தலில் அடைபடக் கூடிய அளவிலானதா அது?! போத்தலில் நீரெடுத்து நிமிர்ந்தால், அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாது அது மீண்டும் தன் வழியில் போய்க்கொண்டுதானிருக்கும்.
//
கவிதை மொழியில் சொன்னாலும் வார்த்தைகளின் வலிமை அப்படியே இருக்கிறது. யுக வெள்ளத்தை போத்தலில் அடைக்க முயற்சிப்பவர்களின் சடலங்களையும் அதே வெள்ளம் அடித்து செல்லும்.
//
தீயாக இருக்கலாம்... அது மயிர்க்கொட்டிப் புழுக்களைப் பொசுக்குவதற்காகவே என்று ஆகி விட்டால்... அது கொள்ளியென்றாகிவிடும்.... தீயாகவே இருக்கவும், இறக்கவும் விருப்பமாதலால்...
//
புழுக்கள் நெளியும் இடத்தில் அக்னி குஞ்சுகள் இருந்தால் அது புழுக்களை பொசுக்குவதாகத் தான் அமையும். வேறு வழியில்லை.
Disci message is weird. Is everything ok?
//ஆழ் கடல் சென்று மீண்டும் அதன் பம்பர முனைச் சுளி வடிவில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்குமா?! //
பயணம் மட்டும் ஏதோ ஒன்றை நோக்கி,ஏதோ ஒரு திசையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.வாழ்த்துகள்.
என்னால் இங்கு எதுவும் எழுத இயலவில்லை சகோதரி, பதிலாய் என் இடுகையில்.
http://abiprabhu.blogspot.com/2010/12/blog-post_16.html
அண்ணன்.
:((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
என்ன ஆச்சு திடீர்ன்னு? எதிர்ப்புகள் புதிதல்லவே? ஏதோ வருத்தம்ன்னு புரியுது.. பிரச்சனை வந்தா சமாளிக்கத் தெரியனும்ன்னு சொல்லிட்டு, இதென்ன? ஒத்த கருத்துள்ளவர்களும் மாற்று கருத்தை மதிக்கத் தெரிந்தவர்களும் உடனிருப்பார்கள்..
ஒரேயடியாகச் செல்ல வேண்டாம்.. கொஞ்சம் நாள் விடுப்பு எடுத்து திரும்பி வாருங்கள்..
ப்ரியா திரும்பி வரனும்.. அதுவரைக்கும்.. குட்டி பை..
ப்ரியா ஏன் என்னவென்று கேட்கபோவதில்லை..கீப் இன் டச்..வாழ்த்துக்கள்...
எதிர்பார்க்கல!
((:
கட்டுரைக்குள் நீர்க் குமிழியாய் பயணித்த மனது அதன் இறுதியை தொட்ட போது சிதறி உடைந்தே விட்டது..........
வார்த்தைகள் தொலைந்து போய் ஒற்றை விண்ணப்பத்தில்.......நிற்கிறது மனது........
திங்க் எகெய்ன் சகோதரி........உங்கள் எழுத்தின் ஆளுமையும் வளமையும் நிறைய தேவைப்படுகிறது.
நெருப்புகள் அவ்வப்போது
அனல்கள் கக்கி சீறலாம்
சீற்றமும் தணிந்து கூடி தணியலாம்...
ஆனால்
அணைதலை ஏற்க முடியுயவில்லை....!
ப்ரியங்களுடன்
குரைக்கும் நாய்கள்
குரைத்தே இருக்கட்டும்..
கண்டுக் கொள்ளாமல்
தொடர்ந்தே சென்றிடுங்கள்..!!
சப்தம் தாளவில்லையெனில்
சற்று குனிந்தே
கல்லொன்றையும் எடுத்திடுங்கள்...!!
விலகி நடத்தலும்
விட்டு விடுதலும்
அமைதியாய் போதலும்
அங்கிருந்து அகல்வதும்
பாரதியின் பெண்ணல்லவே - அது
ப்ரியாவிற்கு அழகல்லவே..!!
ellaam nalla irukku.
//இங்கு இது வரை கிடைத்த உண்மையான அன்புக்கும், நட்புக்கும் தாள் வணக்கம்~ (சென்று விட்டேன்..)//
Amaa itharkku enna arththam.?
இன்னும் கொஞ்சம்.. உங்களுக்கான ஒரு கவிதைக் கடிதம்.. http://other-side-of-silence.blogspot.com/2010/12/blog-post_16.html
//தீயாகவே இருக்கவும், இறக்கவும் விருப்பமாதலால்...//
அழகு ,
வழிகாட்டும் பந்தங்கள் கொள்ளிக்கு வழிவிட்டு விலகினால், வழி வந்தவர்கள் :((,
theriyala nan sollavanthathu sariya solirkanannu, just will be missing if u keep away just paving for these nonsense
நோஓஓஓஓஓஓஓ
இது எதிர்பார்க்காததொரு முடிவு.
ஆனாலுன் அதுசரி சொல்வதுபோல காற்றைக்கட்டி வைக்க யாரால் முடியும். மீண்டும் வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்க மட்டுமே இயலும்.
சட்டென எடுத்த முடிவல்ல இது என்பதையும் உணர முடிகிறது
பாரதியின் ஆத்மார்த்த நண்பி என்று சொல்றீங்க, ஆனா அவர் சொன்ன இத மறந்துட்டு,
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
......"
மத்தத மட்டும் சொல்லி காமிக்கறீங்க!
உங்க குட் பய் எல்லாம் ஏற்க முடியாதுங்க. எங்கள மாதிரி ஒழுங்கா குப்பை கொட்டுங்க இங்க.
சகோ. தனிப்பட்ட சூழ்நிலை எனில் வாழ்த்துகள். ஆனால் பதிவுலகம் சார்ந்த நிகழ்வு இதற்கு காரணமாக இருப்பின் புறந்தள்ளி வாருங்கள்.
ப்ரியா வரணும்..போக அனுமதி இல்லை.இது அன்புக்கட்டளை
நாம எல்லாம் ஓவரா சீன் வுடரமானு கொஞ்சம் எல்லாம் யோசிங்க அப்பு.
இவங்க பின்னாடி வந்து, நீங்களே அப்படி ஒரு முடிவ எடுத்து என்ன அனுப்ப பார்கறீங்கலான்னுட்டா!
இந்தம்மா விளையாடுதோ!
பாசிடிவா யோசிக்க நினைக்கறீங்க சேது... :) இதெல்லாமே ஒரு விளையாட்டா கனவா இருந்திடப்படாதான்னு...
சந்தனா!
இவங்க நம்மள நல்லா விளையாட்டு தான் காமிகிராங்கன்னு எனக்கு தோணுது.
இது ஏப்ரல் பூல் மாதம் இல்ல. ஸ்விஸ் ல ஓவரா பனி கொட்டி, நாம மூக்கு சிந்துவோமான்னு நினைக்கிறாங்க. தப்புங்கோய்!!
You fool
நான் வலை உலகின் வாசகன். எதில் உடன்பாடு இல்லையோ அதற்கு மட்டும் பின்னுட்டம் இடுவேன். உன்னுடய தளத்தில் இது தான் first அண்ட் last . உன்னுடய எழுத்தில் நல்ல வார்த்தைகளில் உடன்பாடு உண்டு சிலவற்றில் பெரும்பாலும் வசைகளில் இல்லை ( but அதுவும் சில நேரங்களில் தேவை என்றும் தெரியும் ). இப்படி திடீரெண்டு சென்றால் sorry you degrade yourself and prove worthless .To prove this you wasted
your time and energy. Finally you also prove as an ordinary emotional girl. Here after what ever you wrote in the past becomes preach for others not for me.
Sorry friend
Sankar
?
DEAR PRIYA,
IS EVERY THING OKAY OVER THERE.
L BOARD SAYS BYE AND VANAMBAADI SIR SAYS THAT HE IS PROUD OF YOU.
I M A MORON .I DONT UNDERSTAND ANYTHING.
PLS EXPLAIN.IF U R TAKING A BREAK ITS OKAY .RELAX AND COME BACK AS A EAGLE.
WAITING FOR YOUR REPLY.....
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ப்ரியா!
Happy New Year priya.
Happy Pongal Priya.
வெறிச்சோடிய வெற்றிடமாக உள்ளது
இணையம்.
உங்கள் படைப்புகள் இல்லாததால்.
உங்கள் பதிவு அருமை.
நிறைய எழுதுங்கள்!!
கிட்டத்தட்ட ஒரு வருடம்...
எல்லாருக்கும் நன்றி..
மீண்டும் எழுதலாமென்று நினைக்கிறேன்..
வாங்க சகோதரி,
Post a Comment