எனக்கான கவிதைகளில்
உங்களுக்கான விடைகளையும்
உங்களுக்கான வரிகளில்
எனக்கான வினாக்களையும்
வடித்தெடுத்துக் கொள்கிறோமில்லையா?
எஞ்சிய வார்த்தைகள் - அல்லது
வெற்றிடத்திலிருந்து ஆரம்பிக்கின்றன
எங்களுக்கான தொடர் கேள்விகள்
கூடவே சிறு சிணுங்கலுடன் பிறக்கிறது
அழகான அடுத்த கவிதையொன்றும்..
மேலிருப்பது தனிப்பட்ட கவிதைதான்
உற்றுக் கவனித்தீர்களானால்
அதனிடையிலிருக்கும் குறிப்புகளில்
உங்களுக்கான கேள்வியொன்றும்
தொங்கிக் கொண்டிருக்கலாம்
_________________________________
________________________________
கடந்த சில மணி நேரங்களாக - அந்தக்
கூடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகப்பேற்றின் பின் களைத்திருக்கும் தாயினருகில்
வெண் துணிச் சுருளில் பொதிந்திருக்கிறது
குருதி இன்னும் காய்ந்திராத சேய்
இந்தக் காட்சியொன்றும் புதிதல்ல
முன் சென்ற என் கவிதையை வரைந்து பார்த்தால்
இப்படித்தான் தோற்றமளிக்கிறது
உங்களுக்கான விடைகளையும்
உங்களுக்கான வரிகளில்
எனக்கான வினாக்களையும்
வடித்தெடுத்துக் கொள்கிறோமில்லையா?
எஞ்சிய வார்த்தைகள் - அல்லது
வெற்றிடத்திலிருந்து ஆரம்பிக்கின்றன
எங்களுக்கான தொடர் கேள்விகள்
கூடவே சிறு சிணுங்கலுடன் பிறக்கிறது
அழகான அடுத்த கவிதையொன்றும்..
மேலிருப்பது தனிப்பட்ட கவிதைதான்
உற்றுக் கவனித்தீர்களானால்
அதனிடையிலிருக்கும் குறிப்புகளில்
உங்களுக்கான கேள்வியொன்றும்
தொங்கிக் கொண்டிருக்கலாம்
_________________________________
________________________________
கடந்த சில மணி நேரங்களாக - அந்தக்
கூடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகப்பேற்றின் பின் களைத்திருக்கும் தாயினருகில்
வெண் துணிச் சுருளில் பொதிந்திருக்கிறது
குருதி இன்னும் காய்ந்திராத சேய்
இந்தக் காட்சியொன்றும் புதிதல்ல
முன் சென்ற என் கவிதையை வரைந்து பார்த்தால்
இப்படித்தான் தோற்றமளிக்கிறது


4 ஊக்கம்::
/கூடவே சிறு சிணுங்கலுடன் பிறக்கிறது
அழகான அடுத்த கவிதையொன்றும்.. /
/மகப்பேற்றின் பின் களைத்திருக்கும் தாயினருகில்
வெண் துணிச் சுருளில் பொதிந்திருக்கிறது
குருதி இன்னும் காய்ந்திராத சேய்/
இந்த வரிகளுக்குப் பொருத்தமாக அந்தப் படம் கொள்ளை அழகு.
:-)
களித்த கலவிக்குப்பின், கழிந்த சோம்பலுக்கும், பின் சோம்பலின்றி சுமந்து பெற்ற மழலையும்,
களித்த, கணித்த, கழித்த, கலித்த பல கனங்களையும், கனவுகளையும் கலவி கனிந்த கவிதையும்!
நன்றி பாலா சார்
நன்றி தெக்கி.. இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்.. :p
வாசன்... ஐயோ!... =)))
Post a Comment