அப்போதெல்லாம் அந்த வார்த்தை
அடிக்கடி எனை நாடி வரும்
ஆரத் தழுவி வரவேற்று
தேநீருடன் உறவாடிய உதட்டால்
தீராத முத்தமொன்று வைத்து
விடையளித்தனுப்புவேன்
பின்
எங்கெங்கோ சுற்றி
எப்போதாவது வரும்
வைத்த விழி எடுக்காது
நீரருந்த மறந்து நாட்கணக்கில்
பார்த்துக் கொண்டிருப்பேன்
ஆவி நீங்குவது போன்று
பிரிந்து செல்லும்
இன்றும்
இதமாகத்தான் கேட்டது தேநீர்
இப்போதெல்லாம் காணோமென்று
பதில் சொல்லாது விலகி வந்து - அந்த
வார்த்தை பற்றி ஒரு வார்த்தையின்றி
கடிதம் போல் எழுதுகிறேன் இதை
அனுப்பி வைப்பதற்கு
முத்தங்கள் தீர்ந்திருக்கும் ஒரு நாளில்
மீண்டும் வரக்கூடும்
அப்போதும் தேநீர் இன்னும் மிச்சமிருக்கும்

3 ஊக்கம்::
/அனுப்பி வைப்பதற்கு முத்தங்கள் தீர்ந்திருக்கும் ஒரு நாளில்மீண்டும் வரக்கூடும் அப்போதும் தேநீர் இன்னும் மிச்சமிருக்கும்/
வார்த்தைகளின் கனம் என்னமோ செய்யுது.ம்ம்ம்..நல்லாருக்கு
ம்ம்....இது கனமாத் தான் இருக்கு....
ம்ம்...
Post a Comment