header photo

Thursday, January 19, 2012

இவ்விதமாக...

காட்சி ஒன்று விரிகிறது 
உதிர்ந்திருந்த மலரொன்றை
மிருதுவான விரல்களினால் சேகரித்து
மலராக இணைக்கிறது ஒரு குழந்தை
இந்த இதழ்கள் இந்தப் பூவினுடையதல்ல
என்று மென்மையாகத் திருத்துகிறாள் தாய்
இந்தப் பூ இந்த இதழ்களாலானதுதான்
என்று உறுதியாக மறுதலிக்கிறது அது 
திரையொன்று விழுகிறது 
பின்னால் அழுது கொண்டிருக்கிறாள் தாய்
சற்று முன் செய்த பூவைப் பறவையாக்கி விட்டு
முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது குழந்தை

10 ஊக்கம்::

ஓலை said...

Wow!

க ரா said...

அட்டகாசம் :)

வானம்பாடிகள் said...

/மலரொன்றைமிருதுவான விரல்களினால் சேகரித்துமலராக இணைக்கிறது /

/பூவைப் பறவையாக்கி விட்டுமுன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது குழந்தை/

ப்யூட்டிஃபுல்.

வானம்பாடிகள் said...

to follow

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

sasikala said...

அருமை

Muruganandan M.K. said...

இதழ், பூ, பறவை, எனக்
குழந்தையின் கற்பனைகள்
எல்லை தாண்டிப் பறக்கும்.

தாயின் மனமோ?
அருமையான கவிதை.

பத்மா said...

NICE ....

கலகலப்ரியா said...

ஓலை, க ரா, பாலா சார், ராஜா, சசிகலா, டாக்டர் & பத்மா.. எல்லாருக்கும் நன்றி.. :)