பூக்கள் சொரிந்திருக்கும் பாதை
என்னைத் தேர்ந்தெடுத்து
பாதம் நோகாது அழைத்து வந்தது
நீண்ட தூரம் கடந்த ’பின்னோர்’ ஞாபகத்தில்
நின்று சற்றே சிரம் திருப்பிப் பார்த்தேன்
ஆசுவாசத்தில் நாசி உணர்த்திய நறுமணமும்
பூக்கள் விரித்திருந்த கம்பளமும் அப்படியேதான் இருந்தன
மறப்பதற்கு முன் சட்டென்று வேறோர் திசையில் திரும்பி
முட்கள் மீதேறி முன்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்
நான் தவற விட்டிருந்த என் சுவடுகள்
என்னைத் தொடர ஆரம்பித்தன
எனக்குப் பின்னால் ஒரு வீதி ஆரம்பித்திருந்தது

7 ஊக்கம்::
/முட்கள் மீதேறி முன்னோக்கி நடக்க ஆரம்பித்தேன் நான் தவற விட்டிருந்த என் சுவடுகள் என்னைத் தொடர ஆரம்பித்தன எனக்குப் பின்னால் ஒரு வீதி ஆரம்பித்திருந்தது /
WOW! வேறே வார்த்தை இல்லை.
வாவ்! உரு போட்டு நடக்கலையோ!
அருமை.
வாழ்த்துகள்.
முட்கள் மீதேறி முன்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்
வலி படிக்கும் எங்களுக்கும் உணரும் படி உள்ளது அருமை
பாலா சார், ஓலை, ரத்னவேல் & சசிகலா... நன்றி :)
மிக அருமை.
நன்றி ராமலக்ஷ்மி.. :)
Post a Comment