header photo

Monday, December 7, 2009

நுனிக்கரும்பு...

_________________________________
நகல் 

பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
_________________________________
அசல் 

பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!
_________________________________

Tuesday, December 1, 2009

சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

(இது ஔவையிடமிருந்து முதல் காப்பி.. எனக்கு எனக்கு.. எனக்கே எனக்கு அறிவுரையாக..)

யார் யாரோ... எப்டி எல்லாமோ காப்பி அடிக்கிறாங்க.. நானும்.. ஒரு காப்பி இடுகை... அல்லது இடுகை மொழியில் சொன்னால் மொக்கை..! மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சில்ல... (யாரது... அங்க.. ம்க்கும் எல்லாம் அதுதான்னு நொடிக்கிறது... இருடி ஆட்டோ அனுப்பறேன்..)

தம்பி வசந்து... நீ கேட்டுக் கொண்டதுக்கிணங்க...பு(ப)டிச்சவிக மாஆஆதிரி... எழுதுறேன்..! பார்த்துக்க..! அப்புறம் உன்னை யாரும் கண்டுக்கலை.. காதுக்கலைன்னு எல்லாம் சொல்லப்டாது..!

படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!
_____________________________________________________________
வசந்து கவிதை:

அரை அடி கூட இல்லை..
நமக்கிடையில் இடைவெளி..
இடையில் ஒரு இதயம்..
எங்கோ துடிக்கிறது..
ஓருடலில் தங்கி..
ஒன்றாய் சுவாசித்து..
ஆனாலும் கைக்கெட்டிய நீ..
வாய்க்கெட்டவில்லை பார்..
இதுதான் வாழ்க்கை...!

டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)

பின்னூட்டம்

ப்ரியா: //இடையில் ஒரு இதயம்.. // போட்டேன்னா... இதயம் இடையிலயாடா துடிக்குது..? முதல்ல டாக்டர் கிட்ட போ நீயி..!


____________________________________________________________
வானம்பாடிகள்:

நறுக்: 345.2 v.56

"ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா"

அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!

பின்னூட்டம்

ப்ரியா: ஜெனரல் பதவி போனாலும் பாரியார் அம்மணி சோதிடம் சொல்லி குடும்பத்த காப்பாத்திடும்பா..!

வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!

பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..!


____________________________________________________________
அது சரி:

கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)


____________________________________________________________
கதிர்:

கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!


____________________________________________________________
(அண்ணா) பிரபாகர்:

சரளா கிட்ட வடிவேலு அடி வாங்கிப் பார்த்திருப்பீங்க.. அண்ணன் அண்ணிகிட்ட அடி வாங்கிப் பார்த்ததில்லையே..

ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல நின்னு தபூ சங்கர் கவிதை படிச்சுக்கிட்டிருந்தேன்.. பக்கத்தில பக்கத்து வீட்டு ரங்கமணி, எங்க வீட்டு தோட்டக்காரன் மாரியப்பனோட மகன் கிட்டா கிட்ட வெத்தல வாங்க வந்திருந்தான். எதிர் வீட்டுக் கிணத்தடில ஒரு பாட்டி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கு.. எனக்கு சத்தியமா அதப் பத்தி ஒண்ணும் தெரியாது...

கவிதை ரொம்ப இண்டரஸ்டிங்கா போச்சு "கர்ப்பக் கிரகம் தன்னைத் தானே அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?" என்று உரத்துப் படித்துவிட்டு மீண்டும் மௌனமாகத் தொடர்ந்தேன்.

முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க. ஒன்றும் புரியாம கேட்டதுக்கு பதில் சொல்லணும்னு "கோபித்துக் கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே என்றேன்" அதுவும் கவிதைதான்.

மீண்டும் கண் மூடித் திறப்பதற்குள் இருபது முப்பது அடிகள் விழுந்தன. அப்புறம் ஒன்றும் பேசாமல் போயி அடுப்பங்கரைல உக்காந்துட்டாங்க. அப்புறம் நாலு நாள் கழித்து ரங்கமணி சொன்னப்போதான் விஷயம் தெரிஞ்சது. உடனேயே ஒரு கவிதை கிறுக்கிக் கொண்டு போய் என் மனைவியிடம் நீட்டினேன்.

"இந்தா என் இதயம்
அதை நீ விளையாடும் வரை
விளையாடி விட்டு
தூக்கிப் போட்டு விடு

அதற்குத்தான் இது
படைக்கப்பட்டது"

அதுவும் தபூ சங்கர் கவிதைதான். அப்புறம் சமாதானமாயிட்டாங்க. பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

பிடிச்சிருந்தா சொல்லுங்க.. இல்லைனா முடிவு மாத்தி எழுதிடலாம்.

பின்னூட்டம்

ப்ரியா: அண்ணி அடி பின்னிட்டாங்க..! (ஏற்கனவே பாசமலர், டி ஆர் ன்னு நக்கல் ஜாஸ்தி ஆய்டுத்து..! இதுக்கு என்ன சொல்லுவாய்ங்களோ...)


____________________________________________________________
நேசமித்ரன்:

ஆண்ட்ரோஜன் அடுக்குகளின் இடுக்கில்
மோனலிசாக்களின் மோனப்புன்னகையில்
சைட்டோ டாக்சிக் ஏறிய செல்களுடன்
பிகாசஸ் வரையும் பிக்காசோ பாப்லோக்கள்

பின்னூட்டம்:

ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!


____________________________________________________________


மக்கா... இங்க திட்டுறது சரி... நோ ப்ரோப்ளம்... அது திட்டின கையோட.. இன்னைக்கு போட்ட இன்னொரு இடுகை (கவிதைன்னு பேரு வச்சிருக்கேன் அதுக்கு..) அங்கன கிடக்கு.. அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு போங்க.. சொல்லிப்புட்டேன்..! (இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்... அதான் ஒரு நாள்ல ரெண்டு இடுகை... ஹிஹி..) நோ பாட் வோர்ட்ஸ் ப்ளீஸ்..! (இன்னும் கொஞ்ச பேரு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டாங்க.. அப்புறம் பார்த்துக்கறேன்..)
____________________________________________________________