header photo
Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, August 4, 2013

மணல் கடிகை

முக்கியமான நாவல் என்று ”அவரே” சொல்லி விட்டதால், நேரே பாலா சாரிடம் சென்று “மணற் கடிகை” வேணும் என்று சொல்லி வருடம் ஒன்றிற்கு மேல்.  அது “மணற்” இல்லை “மணல்” என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடம் ஆகி விட்டதென்றார். எப்படியோ தேடிப் பிடித்து என்னுடைய இந்தப் பிறந்த நாளிற்குக் கிஃப்ட்டாக அனுப்பி வைத்தார். நன்றி சொல்வதற்கில்லை. 

நிற்க.. 

வாசிக்காது ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்களில் ஓரிரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தூண்டும். அதில் சில வாசிக்கத் தூண்டும். அதிலும் சிலதே வாசித்து முடிக்கத் தூண்டும். மணல் கடிகை மூன்றாவது ரகம். இதுதான் இந்த நாவலின் வெற்றி. என்ன செய்வது? எதற்கெடுத்தாலும் வெற்றி, வெற்றி என்று சொல்லியே பழகிவிட்டது. 

சாண்டில்யனின் கடல் புறா மூன்றையும் மூச்சு விடாது வாசித்து முடித்த காலம் உண்டு. வாசிப்பின் வேகத்திற்கு சாண்டில்யன் ஆங்காங்கு தூவியிருக்கும் காதல் தீண்டல்கள் உறுதுணையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. என் நேர்மை எனக்குப் பிடிக்கவில்லைதான். என்ன செய்வது? இலக்கிய உலகு. சாண்டில்யன் நாவல்களை நான் பள்ளிக் காலத்தில் படித்ததால், அவர் விவரிக்கும் தொடை தழுவல் காட்சிகள் “பகீர்” என்ற தாக்கத்தை உண்டாக்கி, ”இதை வாசிப்பது தவறோ?” என்ற ஒரு குற்ற உணர்ச்சியையும் உண்டாக்கியிருந்தது. பின்பு பளிச்சென்று விலகி விட்டது. எனக்குப் பிடித்த அனுராதா ரமணன், சாண்டில்யன் நாவல்களில் பிடித்தது “காதல்” என்று சொன்னது கூடக் காரணமாக இருக்கலாம். எனக்கு அவரின் நாவலில் பிடித்தது போர்த் தந்திரமும் அதை அவர் விவரிக்கும் பாணி... கப்பல் கட்டுமானத்தை, அதன் விவரங்களை சுவாரஸ்யமாக விளக்கும் பாணி. இத்யாதி இத்யாதி. 

கோபாலகிருஷ்ணன் நாவலில் சாண்டில்யன் எங்கு வந்தார் என்றால்: காரணம் இருக்கிறது. மணல் கடிகை படித்து முடிக்கத் தூண்டியதற்கு அதில் வரும் காதல், தவறு, கலவி சத்யமாகக் காரணமல்ல. ஆரம்பத்தில் அது ஒரு விதமான சலிப்பை உண்டாக்கி (ஆரம்ப கட்ட வாசகி), பின்பு ஒரு விதமான வெறுத்த மன நிலை உண்டாகியிருந்தது. 

”முரண்தொடை” டெல்டா சொன்னது போல் நானும் நாவல் வாசிப்பதற்கு முன், பின் அட்டையையும், முன்னுரையையும் கவனமாகப் படித்தேன். “ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன” என்று பின் அட்டையிலும், “இது திருப்பூர் பற்றிய நாவல் அல்ல, மனிதனைப் பற்றியது” என்று முன்னுரையிலும் குறிப்பிட்டிருந்தார். நாவல் படித்து முடித்த பிறகு, அக இயல்புகள் என்பது பின் அட்டையில் குறிப்பிட்ட வாசகத்துடன் நின்று விட்டது என்பதும்  (ஐயா நீங்கள் ஏன் ஐயா அவர் கூப்பிடுமிடத்திற்குப் போக மாட்டேன் என்கிறீர்கள்), “இது திருப்பூர் பற்றிய நாவல்தான், மனிதன் பற்றியதல்ல” (ராஜா அண்ணாமலை புரத்துக்குப் போறதுக்கு இது மூஞ்சி அல்ல, கண்ணம்மாப் பேட்டை போற மூஞ்சிதான் இது..) என்பதும் முடிந்த முடிபாகியது. 

இந்த நாவல் மூலம் நான் திருப்பூர் பற்றி அறிந்து கொண்டதே அதிகம். வியாபாரம், துரோகம், ஒருவன் தலையின் மேல் ஏறி மேலே போய் அதே வேகத்தில் கீழே வருவது, குழந்தைத் தொழிலாளர், சுற்றுப்புறம் மாசுபடுதல், மேலும் வட இந்தியாவிற்கு சரக்கு அனுப்பி, வசூல் செய்து விட்டு வரும்போது ஏற்படும் உயிர் அபாயங்கள் சிக்கல்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல், மிகச் சாதாரணமாக நிகழும் முறையற்ற கலவிகள். 

தெரிந்து கொண்டே எந்த விதமான மனக் கட்டுப்பாடுமின்றி தன் போக்கில் செல்லும் சிவா. அறம் என்பதற்கும் அந்த நபருக்கும் எந்த சம்மந்தமுமில்லை. கூட இருப்பவன் திறமைசாலி, எப்படியாவது நீக்கி விட வேண்டுமென்று நீக்கிவிட்டு மேலே வரும் ஒரு நபர். இவளை விட இவள் பரவாயில்லை, இவளை விட இவள் இன்னும் கொஞ்சம் பரவாயில்லை என்ற மேலோட்டமான உறவுகள். திருமணத்திற்குப் பின்பும் மிகச் சாதாரணமாக முன் உறவாடியவளிடம் சிரித்துக் கொண்டே போகக் கூடிய கதாபாத்திரம். எங்கும் ஒட்டவில்லை. விலகல் ஏன் வருகிறது என்று சிவா நினைப்பதாக ஒரு வரி வரும். அந்த மனப்பாங்கினால்தான் வருகிறது என்று ஆழமாக எதயும் கதாசிரியர் சொல்லவில்லை. அவர் சொல்ல வேண்டுமென்று நான் எதிர் பார்ப்பது அவர் மன ஆழங்கள் பற்றி, அக இயல்புகள் பற்றி முன்னுரையிலும், பின்னுரையிலும் குறிப்பிட்ட ஒரே காரணத்தினாலேயே. 

சண்முகம் ஒரு பாரடொக்ஸ். இன்றுடன் பட்சிகளின் எண்ணிக்கை 25 என்று கொண்டாடும் இவர், சிவாவின் மனச்சாட்சியை நேரடியாகக் கேள்வி கேட்கிறார். கோணங்கித் தனமாக கவிதை எழுதுகிறார். கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார். குழந்தை இவருடையதில்லை என்ற பேருண்மை உணர்ந்து, திடுக்கிட்டு விழித்து, விபூதி வைத்துக் கொள்கிறார்: என்னுடைய அறிவுக்கு மன ஆழங்கள் இங்கும் எட்டவில்லை. 

சட்டென்று ஒருத்தியைப் பார்த்து அண்ணலும் நோக்க, அவளும் நோக்க காதலில்(?!) விழுந்து (அந்த ஊரிலிருக்கும் 99.99% பேர் போலவே) இரண்டு மாதங்களில் கல்யாணமென்று முடிவு செய்து, கல்யாணத்தின் போதே இது தப்பென்று தெரிந்தும் செய்து நொந்து கொள்வது பரந்தாமன் என்ற கதாபாத்திரம். மீண்டும் யாரையோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே என்றதன் உள், வெளி அழுத்தங்களினால் செய்து கொண்டு, அதையும் தொலைத்து விட்டு, சண்முகத்தின் அடல்ட்ரி அலட்டல்களைக் கேட்டு மனம் புழுங்கி, எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஒடுங்கிப் போவது: இதிலும் அக இயல்புகள்.. ஊஹூம் காணவே காணோம். 

திரு ஒரு நியாயமான சீட்டு வியாபாரி. நேர்மையான குடும்பஸ்தன். அந்த 0.01% இல் அடக்கக் கூடிய ஒரு சராசரி மனிதன். 

அன்பழகன் திருவின் இன்னொரு எமோஷனல் உருவம். முறையில்லாத பெண் தொடுகைக்கு பயப்படும், நேர்மையில்லாத வியாபாரத்திற்குத் துணியாத இன்னொரு 0.01%. 

நவாப், உமா, சிங்காரம், செட்டியார், செட்டியார் மனைவி, செட்டியார் மனைவியின் மகள்,  விமலா, சித்ரா, அருணா, கண்ணம்மா இத்யாதி இத்யாதி இத்யாதிக் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்வதற்கு சுவாரஸ்யமாக சமாச்சாரங்கள் இருக்கின்றன. 

முக்கியமாக சுப்பிரமணி, செட்டியாரையும், எல்லா நடப்புகளையும் பார்த்து “இது சரிதானா?” என்று கேள்வி எழுப்பி விட்டு அவர்களுடன், அவைகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு 0.01%. 

இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து ஒவ்வொரு அத்தியாயங்களாக நகர்த்தியபோது, சில பல சிறுகதைகளைச் சிதற வைத்து, jigsaw puzzle போன்று நேர்த்தியாகவும், சிலவற்றை வன்முறையுடனும் இணைத்து இழுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது. இதை இலக்கிய உலகிலிருந்து சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” போன்று எழுதி இருந்தால் சலிப்பு ஏற்படாது இருந்திருக்கலாம். ஆனால் கோபால கிருஷ்ணன் சொன்ன மன ஆழமும், அக இயல்பும் “மணல் கடிகை”யை விட ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில்” இருப்பதாகவே நான் கருதுகிறேன். 

ஆனால் நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்... "It's a good read; had a good time pass"

Friday, February 24, 2012

ச்ச்சும்மா... ரீஃப்ரெஷிங்கு...


குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...

இதில வேற ஊர்ல நாலு கழுதை வட்டை போட்டு... பின்னங்காலால உதைச்சுக்கிட்டே போகுது... இதுதான் வெளிநாட்டு யானை அப்டிங்கிறாங்க..  இப்போ லிவிங் டுகெதர்ன்னா என்னன்னு பாடம் எடுக்கணும்னா... நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க... 

எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்.. 

நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்...... உள்ளுக்குள்ள புழுங்கி வெந்து செத்து... அதச் சமாளிக்கிறதுக்கு மத்தவங்கள மட்டம் தட்டி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்... ஓ... அவனா... அந்தக் காலத்தில அவன் பாட்டன் என்ன பண்ணான் தெரியுமா...?!அவன் அப்பனோட மாமனோட மச்சினியோட தங்கச்சி பையன் இருக்கானே... அவன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு ஏதோ சொல்லிக்கிட்டே போவாங்க... இதெல்லாம் ஏன் சொல்றன்னு கேக்க நாதி இருக்காது... 

ஊர்ல ஒருத்தன் உழைச்சுச் சம்பாதிச்சு பங்களா.. கார்ன்னு செட்டில் ஆனான்னு வைங்க... அவனப் பார்க்கறப்போல்லாம்... இளக்காரமாப் பார்த்து... இவன் என்ன ஜாதி தெரியுமா... இவன் அப்பன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு... ஹூம்ன்னு வயித்தெரிச்சலத் தீர்த்துக்கும்.. 

இல்லையின்னா... ஹூம்.. அந்தக் காலத்தில என்னோட பாட்டன் முப்பாட்டன் எப்டி இருந்தான் தெரியுமா... அப்போ உன்னோட தாத்தன் எல்லாம் என்னோட தாத்தன் கிட்ட பிச்சை எடுத்துக்கிட்டிருந்தான்னு ஜம்பமாப் பீத்திக்கிட்டே பிச்சை எடுத்துக்கிட்டிருப்பாங்க.. 

அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது...

இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம்.. உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்... 

காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்...

கண்மணி அன்போடு காதலன் நான்னு... உருகி... உருக்கிட்டு... நான் வேற ஜாதியாம்... எனக்குப் புட்டிப்பால் கொடுத்த அம்மா இப்போதான் ஜாதிப்பால் கொடுத்தாங்க... நானு ஒன்னும் தெரியாத பாப்பா அப்டின்னு யாரும் சொல்லக் காணோம்.. 

ஆனாலும் நம்ம மக்கள் ஆக்ரோஷமாக் கேக்குறாங்க... அவங்க கலாச்சாரம் எல்லாம் நாம கத்துக்கிடணுமாவாம்...

(விதிவிலக்கும்... நல்லது கெட்டதும்... அவங்க கிட்டயும் இருக்கு... ஆனா அந்த 0.001% பிடிச்சு வச்சுக்கிட்டு உதாரணம் காட்டாதீங்கய்யா புண்ணியவான்ஸ்..)

இன்னொண்ணு சொல்றாய்ங்க வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... இத யாரோ ஒருத்தரு சொன்னா... மக்கள் என்னமா கை தட்டுறாங்க தெரியுமா... அமெரிக்காவில ஒரு வயசுக் குழந்தை கூட இங்கிலீசு பேசுதுப்பான்னு சொன்னாக் கை தட்டுற ரேஞ்சுக்கு... 

இங்க மனுஷன்... மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்துட்டு... முடியல... ரொம்ப ஜாஸ்தின்னா... ஓடிப் போய்... இப்டிக் கஷ்டமா இருக்குதுபா... என்ன பண்ண சொல்லுன்னு கேக்கறதுக்கும்... ஒரு குழந்தை இறந்து போச்சுன்னா... மனசு ஒடிஞ்சு செத்துப் போகாம போய்ச் சொல்லி அழுறதுக்கும்... வீட்டில பிக்கல் பிடுங்கல் ஜாஸ்தி ஆயிடிச்சின்னா அதப் பகிர்ந்துக்கிறதுக்கும் கூட... மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க.. நம்மாளுங்கதான் சைக்கியாரிஸ்ட்னு பேரு கேட்டாலே அலர்றாங்க... 

பைத்தியம்னா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு... சட்டையைக் கிழிச்சுக்கிட்டு இளிக்கறதயும்... அய்யோ ஆள விடுங்கடான்னு மத்த நார்மல்ன்னு சொல்லிக்கிட்டிருக்கிற லூசுங்க கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாய்ஞ்சுக்கிட்டு ஓடறதயுமே மனக்கண்ணில வச்சுக்கிட்டிருக்கிற... அறிவாளிங்களால அதுக்கு மேல என்ன பண்ண முடியும்.. 

அட மனநல மருத்துவமனை மட்டுமாங்க இருக்கு இங்க..?! எங்க போனாலும் கை கால் முடியாம... சக்கர நாற்காலில இருக்கிறவங்களுக்கு... பார்க்கிங்க்ல அவங்களுக்கு வசதியா பார்க்கிங்க் இருக்கு.... பஸ்ல அவங்க ஏறி இறங்க வசதியா படிக்கு மேல சறுக்குற வழி இருக்கு... அத பஸ்ஸ விட்டு இறங்கி வந்து இழுத்து விடுற ட்ரைவர்... மனுஷன் இருக்கான்... ஹாஸ்பிட்டல்ல இருந்து... ரெஸ்ட்டாரண்ட் வரைக்கும்... அவங்களுக்கு டாய்லெட் இருக்கு... முக்கியமான இடங்கள்ல எல்லாம்... அவங்க ஏறி இறங்க வசதியா நிறைய வசதி இருக்கு... 

ஏன் அதுக்கும் சொல்றதுதானே..?! அங்க ஊனமுற்றவர்களுக்கான கக்கூஸ் ஜாஸ்தியா இருக்குய்யா.... அங்க இருக்கிறவங்க எல்லாம் ஊனமுற்றவங்கன்னு..?! 

திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க... 

இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!... 


Sunday, November 21, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ஆறு...

(பேக் டு த காஷுவல் மூட்... ம்ம்...)

நம்மாளுங்க புத்திசாலித்தனம் யாருக்கும் வராதுங்க... செண்டிமெண்ட சும்மா சக்கையாப் புழிஞ்சே காரியத்த சாதிப்பாங்க... 


ஒரு படம் காட்டணும்னாக்க... கரீக்ட்டா.. காலேஜ் டைம்ல ஆரம்பிச்சு... கல்யாண மேடைல மலர்கள் புடைசூழ ஏறி அமர்ந்து... தாலிய அப்டியே தூக்கி... டமடமடமன்னு மேளத்தக் கொட்டோ கொட்டுன்னு உச்சஸ்தாயில கொட்டி... சுபம் போட்டுடுவாங்க... 

மனுஷன் எப்டி எல்லாம் வாழணும்னுட்டு... எறும்புல இருந்து கழுதை வரைக்கும் ஏதோ ஒரு குணாதிசயத்த பச்சக்குன்னு புடிச்சு மேற்கோள் காட்டுவாங்க... சபைல கைதட்டல் காதைப் பொளக்கும்... 

கற்புநெறி பத்திப் பேசுறப்போ... மாடப்புறாவையும்... அன்றில் பறவையையும் உதாரணம் காட்டுவாங்க.... ஜோடிப் பறவை போயிட்டா... பச்சத் தண்ணி கூட முழுங்காம செத்துப் போகுமாம் அன்றில்... மாடப்புறா கல்லை முழுங்கிட்டுப் போய் மண்டையப் போடுமாம்.. (வழி காட்டல்... பண்பாடூஸ்..)

ஹூம்... நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே செத்துப் போயிட்டா... போர்க் கடவுள்கள் எல்லாம் பூமில பாரம் ஏறுதேப்பான்னு கவலைப்படாம... ராக்கெட்டயும்.. அணுகுண்டையும் கண்டுபுடிக்க வழியில்லாம செய்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்...  புள்ள குட்டிய யாரு பார்க்கறதுன்னு எல்லாம் கவலைப்படாம... அம்மா போயிட்டா அப்பாவும்... அப்பா போயிட்டா அம்மாவும்ன்னு மாத்தி மாத்திக் கல்ல முழுங்கிக்கலாம்.. 

எந்தப் பறவையும்... குஞ்சு பொரிச்சு... நம்மாளுங்க மாதிரியே பொத்திப் பொத்தி சாப்பாடு ஊட்டி வளர்க்கும்... சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... 

நம்மாளுங்க.. அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க... அங்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு பயம்... அங்க ஆரம்பிக்கும் அடக்குமுறை... அங்க குழந்தையும் கத்துக்கும்... முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்.. 

குழந்தைங்க ஆரம்பத்ல.. பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்க அழ ஆரம்பிச்சு... அப்புறம்.. அதுக்கு ஏதாவது தேவைன்னா அழ ஆரம்பிக்கும்...  உடனயே தூக்கி வச்சுக்கிட்டு ஓஓஓன்னு சீராட்டுவாங்க... அட விடுங்கம்மான்னா கொஞ்ச நேரம் அழட்டும்னா.. மூச்சடைச்சு செத்துப் போயிடும்பாங்க... அழுறப்போ எல்லாம் எதயாவது கைல திணிப்பாங்க... இது வேணுமாடா ராஜா... இங்க பாரு.. கீ... அச்சச்சோ... அது வேணாமா... இங்க பாரு.. இங்க பாருன்னு.. கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து நீட்டுவாங்க... 

எம் புள்ளைக்கு கீரைன்னா கண்ல காட்டப்டாது... நம்ம வீட்ல கீரையே சமைக்கறதில்லைம்பாங்க... அது என்ன வேணும்னு சொல்லுதோ அத செய்து கொடுப்பாங்க.. 

அவங்க வளர்ற வரைக்கும்.. புள்ளதான் ராஜா... அப்புறம் புள்ளய அடிமையாக்கிட்டு.. அப்பவும் ராஜான்னு கொஞ்சிக்கிட்டிருப்பாங்க.. புள்ளை சட்டை.. செருப்பு எல்லாம் தானாவே மாட்டச் சொல்லித் தர்றதில்ல.. அவங்களாவே மாட்டி விடுவாங்க... அப்போதானே அப்பாலிக்க செண்டிமெண்ட் டயலாக் விடலாம்... உன்னை நான் எப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் வளர்த்தேன்னு.. 

கலாச்சாரம் சீரழிஞ்சு... கால்வாயில வழிஞ்சு வழிஞ்சு கரைய உடைச்சுக்கிட்டு.. சந்து பொந்தெல்லாம் ஓடுதுப்பான்னு நம்மாளுங்க மூக்கப் பொத்திக்கிற நாட்டில.. குழந்தைங்கள எப்டின்னு வளர்க்கிறாங்கன்னு நானும் மூக்கில கைய வச்சுக்கிட்டுதான் பார்த்தேன்... ஆனா நாத்தம் தாங்காம இல்ல... ஆச்சரியமா...

அவங்க குழந்தைய குழந்தையா வளர்ப்பாங்க... நாம உன்னைப் பெத்தவங்க.. உனக்கு இப்போ நாமதான் ராஜா அண்ட் ராணி... அப்டின்னு வளர்த்து... அந்தப் புள்ள வளர்ந்ததும்... ஓக்கே... இனிமே நீ பார்த்துக்கோ ராஜான்னு விட்டுடுவாங்க.. .

அட என்னங்க... ஒரு புள்ள அழுறதுக்கு அதுக்கு உரிமை இல்லையா... அழ விடுவாங்க... விழுந்து கெடந்து அடம் புடிச்சா... கண்டுக்கவே மாட்டாங்க... புள்ள ஆட்டோமேட்டிக்கா பாடம் கத்துக்கும்... 

சாப்பாடு வீட்டில கொடுக்கிற சாப்பாடுதான்... விருப்பம்னா சாப்டலாம்... இல்லைன்னா விடலாம்.. இஷ்டமில்லைன்னா புள்ள ரெண்டு நாள் சாப்டாம இருக்கும்... இருக்கலாம்.. ஒண்ணும் ஆயிடாது.. மூணாவது நாள் வேற வழியில்லாம சாப்டும்.. நம்மாளுங்க அதையும் திணிப்பாங்க... செல்லம்ல... புஜ்ஜில்லன்னு... அது வாந்தி எடுக்க எடுக்கத் திணிப்பாங்க... இல்லைனா அடிச்சுத் திணிப்பாங்க.. (அத மட்டுமா..ஹூம்..)

அவங்க அழுதா கண்டதயும் எடுத்து நீட்டறதில்ல... கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க... 

மத்தப் பசங்க கூடப் ப்ரச்சனைன்னா... அம்மா வா.. அப்பா வா... மாமா வா... மச்சான் வான்னு ஊரைக் கூட்டக் கத்துக் கொடுக்கறதில்ல... ப்ரச்சனைன்னா அந்தப் புள்ளையே பார்த்துக்கணும்... அடிச்சா அடிக்கறதில்ல... ஆனா ஸ்டாப் இட்... அப்டின்னு உறுதியா சொல்லக் கத்துக் கொடுப்பாங்க... யார்ட்டயும் பிரச்சனையே பண்ணக் கூடாதுப்பா... உலகம் அன்பு மயமானது.. அன்பால் எதயும் வெல்லலாம்... அடிச்சா கேன மாதிரி மத்தக் கன்னத்தையும் காண்பின்னு சொல்லிக் கொடுக்கறதில்ல... பிரச்சன வரத்தான் செய்யும்.. அத எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக் கொடுப்பாங்க.. 

ஏய் மொக்கைன்னு யாராவது கூப்ட்டா... யெஸ் ஐயாம் த க்ரேட்டஸ்ட் மொக்கைன்னு நக்கலா சொல்லிட்டு நகரக் கத்துக் கொடுப்பாங்க... இல்லாம சீண்டினா... ஸ்டாப் இட்... அங்கேயே நில்... அதுக்கு மேல வராத... தேர் இஸ் அ லிமிட்..  என்னை எனக்குத் தெரியும்... என்னைப் பத்தி நீ சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்லைன்னு சொல்லக் கத்துக் கொடுப்பாங்க.. (:o))... 

குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ... அந்தக் குழந்தை ஆரம்ப பள்ளிக்குப் போறப்பவே வாழ்க்கையோட அடிப்படையக் கத்துக்கும்... அங்க போயும் கத்துக்கும்.. க்யூல நிக்கிறத கத்துக்கும்.. க்யூல நிக்கறப்போ ஒரு நாள் நான் முன்னாடி நிக்கலாம்... மறு நாள் நான் பின்னாடி நின்னு மத்தவன முன்னாடி போக வழி செய்யலாம்.. அதயும் கத்துக்கும்.. 

ஒரு புள்ளைக்கு இன்னொரு புள்ள ஹெல்ப் பண்ணக் கத்துக் கொடுப்பாங்க.. ஆனா ரொம்ப அவசியம்னாதான்.. கைல கத்தரிக்கோல வச்சுக்கிட்டு பேப்பர நேரா எப்டி வெட்டறதுன்னு தெரியலைன்னா... மத்தவங்க ஹெல்ப் பண்ணக் கூடாது... அந்தக் குழந்தைய கத்துக்க விடனும்... சுயமா.......

படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... என்னடா எந்த நேரமும் விளையாட்டு.. ஃப்ரண்ட்ஸு... அதுவும் கண்டகண்ட ஃப்ரண்ட்ஸுன்னு தலைல அடிச்சுக்கிட்டு அலர்றதில்லை.. 

படிம்மா.. படிப்பா.. உன்னால முடியும்.. உன்னால எவ்ளோ முடியுதோ.. மாக்ஸிமம் ட்ரை பண்ணு.. போதும்.. அதுக்கு மேல வேணாம்... வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..! விளையாட்டு ஒன்ன தேர்ந்து எடுத்துக்கோ... அது முக்கியம்... ஃப்ரண்ட்ஸ் யார் யாரெல்லாம் இருக்காங்க.. என்னது இல்லையா... ஏன் இல்ல... என்ன ப்ரச்சனன்னு உக்காந்து ஃப்ரண்ட்ஸ் கிடைக்க எந்த ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பலாம்னு யோசிப்பாங்க... 

குழந்தை ஒரு தப்பு செய்துட்டா... போச்சு... போச்சு... நான் செத்துப் போறேன்... உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... அடிச்சே சாவடிச்சிடுவேன்... குடும்பத்தோட செத்துடுவோம்னு சொல்லிச் சொல்லி.. தன் மார்ல தாம் தீம்னு குத்தி... குழந்தைய குற்ற உணர்வு பிடுங்கித் திங்கச் செய்யறதில்லை... குற்றவாளிக் கூண்டில நிக்க வச்சுக் கடிச்சுக் குதர்றதில்லை... (அது வயசுக்கு வந்து தன்னோட வாழ்க்கையத் தேடிக்கிறப்பவும் செய்யறதில்ல..).. 

நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு.. 

பரீட்சைல ஃபெயில் ஆயிட்டோம்ன்னு தற்கொலை பண்ணிக்கிற ரேஞ்சுக்கு ஒரு பையனோ... பொண்ணோ போறாங்கன்னா.. அது நம்ம கலாச்சாரத்திலதாங்க நடக்கும்... அதே குற்ற உணர்வுதான்... அய்யயோ... செய்யக் கூடாத தப்பு பண்ணிட்டோமே... இனிமே அம்மா அப்பா மூஞ்சில எப்டி முழிப்போம்... நம்ம நாசமாப் போன வீதில எப்டி மூஞ்சியக் காட்டுவோம்னு... 

இப்டி ஒரு மனநிலைல ஒரு புள்ளைய வளர்த்துட்டு... இப்டி ஒரு மனோபாவத்துக்கு அந்தப் புள்ளையத் தள்ளிட்டு... நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க... நம்ம புள்ளைங்க புனிதமானவங்க (சில பேரு.. corrupted mind ... மாசு மடிஞ்ச மனசுள்ளவங்களுக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க..)ன்னும் பெருமையா சொல்லிக்கிறாங்க... 

ஸோ... அந்தப் புள்ள காதலிச்சா என்னாகும்... வேற வழியில்ல ஆள விடுங்கப்பான்னு ஓடச் செய்யும்.. இல்லைன்னா.. அம்மா அப்பா சவத்துக்கு மேல எப்டி வாழ்றதுன்னு... உரோமபுரி அடிமைகளாயிடுவாங்க.. அதாவது உயிர்.. உணர்வு எல்லாம் இருக்கிற மனுஷங்களா இருக்காம... ஒரு பொருளா... கழுத்தில இவள் இவனின் அடிமை... அப்டின்னு தகடு மாட்ட விட்டு வலம் வர வைப்பாங்க... அது அந்தப் புள்ள நாண்டுக்கிட்டுச் செத்துப்போனா... மானம் காப்பாத்தியாச்சுன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே திரும்ப மார்ல அடிச்சுக்கிட்டு அழுது தீர்ப்பாங்க... சமூகம்... பாவம் அவங்க தலையெழுத்துன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரித் தலைல அடிச்சுக்கிட்டு போகும்... 

அதே மாதிரி... அது பையன்னா... பொண்ணைக் காதலிச்சிட்டோம்... கர்ப்பமாயிட்டா... மத்தவங்க மூஞ்சில முழிக்க முடியாதுன்னு ஓடத்தான் முடியும்.. வேற வழி... சொல்லிப் புரிய வைக்கற மாதிரியாய்யா வளர்ந்திருக்கோம்.. கலாச்சாரத்த இம்பூட்டு மொத்தக் கயிறாப் போட்டு இறுக்கக் கட்டியில்ல காப்பாத்துறோம்... மொன்னையாவே இருக்கட்டும்ன்னு... 
கலாச்சாரத்த அவுத்து விட்டிருக்கிறதா நம்மாளுங்க சொல்லிக்கிட்டிருக்கிற ஊர்ல... ஒருத்தன் ஒருத்தியோட சேர்ந்துட்டு.. புள்ள கிடைச்சதும் விட்டுட்டு கம்பிய நீட்ட முடியாது... 

அதே மாதிரி கல்யாணம் கட்டிட்டு... அப்புறம் சரியா வரலைன்னா பிரிஞ்சுட்டு... கட்டினவன் கிட்ட இருந்து ஒண்ணும் வேணாம்ன்னு ரோஷமா வேணா இருந்துக்கிடலாம்... ஆனா எம்புள்ளைக்கும் எதுவும் வேணாம்.. புள்ள மூஞ்சில முழிக்கப்டாதுன்னு எல்லாம்... வீட்டுக்கார அய்யாக்கு தண்டனைய கொடுக்கிற மாதிரிப் புள்ளைங்கள தண்டிச்சிட முடியாது...   Sole legal custody... Sole physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. அப்டின்னு ஒன்னு இருக்கு... (உடன எல்லாரும் புள்ளைய பெத்து அவங்க காலடில கொண்டு போய்ப் போட்டு முக்காடு போட்டுக்கிட்டுப் போற மாதிரிக் கற்பனை பண்ணிக்க வேணாம்..).. 

அவங்க அவங்களுக்கு... அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி... ஆலோசனை கொடுக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு மையம் இருக்கு... சட்டமும் சரி... மையமும் சரி..  தனி ஒரு மனிதனை... அவனோட அபிலாஷைகளை... அவமதிச்சிடக் கூடாது... அப்டின்னு ரொம்ப மரியாதை கொடுத்து.. அவனுக்கு எப்டி எப்டி எல்லாம் வழி காட்டலாம்ன்னு உருவாக்கி வச்சதுதான்...  

நம்மாளுங்க தூக்கில தொங்குவோம்ன்னு மிரட்றாப்ல... போடி போடி... மூஞ்சிலயே முழிக்காத... என்னளவில நீ செத்துப் போயிட்டா... தனியா நின்னு சாவுடின்னு... பண்பாட்டோடயும்.. நல்ல பண்போடயும் வாழ்த்தி வழியனுப்புவாங்க... அந்தப் பொண்ணும் ஏதாவதுன்னா... எங்க போறதுன்னு தெரியாம நட்ட நடு வீதில நின்னு... திக்குத் தெரியாத காட்டில்ன்னு செண்டியா பாட்டுப் பாட வேண்டியதுதான்... அப்புறம் என்ன... நான் சொன்னேன்ல... கேட்டியா.. கேட்டியா... இப்போ பார்த்தியா பார்த்தியா.. (வின் பண்ணிட்டாய்ங்களாம்..) அப்டின்னு குதிப்பாங்க... 

இங்க... சட்டப்படி கல்யாணமான... "ஆகாத"... அம்மா.. அப்பா.. யாரும் அப்டி தொரத்தி விட மாட்டாங்க.. (புள்ளைங்கள துரத்தி தண்ணி தெளிச்சு விடுறதெல்லாம் ஒரு கலாச்சாரமான்னு யாரோ கேட்ட ஞாபகம்..).. ஒரு வேளை பெத்தவங்க உதவ முடியலன்னா... நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு... 

நம்மாளுங்க இங்க வந்து.. ஒரு புள்ளய... அது கூடாது.. இது கூடாது... சாவோம்.. குடும்பத்தோட கொளுத்திட்டு நானும் சாவேன்.. இத்யாதி இத்யாதின்னு எல்லாம் மிரட்டி வச்சும்... அந்தப் புள்ள மூச்சடக்கி சாவற கட்டத்தில வெளில வந்திச்சின்னா... அதைக் கை நீட்டி அழைச்சு வழி காட்ட ஆள் இருக்காங்க... அதுக்கும் சொல்லிக்குவாங்க நம்மாளுங்க பெருமையா... என்ன ........ரு... என் புள்ளய நான் அடிக்கறேன்... என் புள்ளைய நான் கொல்றேன்.. (ராஜபக்சே ஃபார்முலா... நம் நாட்டு மக்களை நான் கொல்றேன் உனக்கென்னடா போச்சுன்னு..).. நீ யாருய்யா காப்பாத்த... நம்மூர்ல இப்டி எல்லாம் வழி காட்ட எந்த நா(தி)யும் இருக்காது... வேற வழி இல்ல புள்ள நம்ம கிட்டதான் வந்தாவணும்... இங்க இப்டிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிறீங்களேடான்னு.... பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க... 

(மீதி அப்பாலிக்கா..)

Friday, November 19, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் அஞ்சு...

பூச்செடி ஒன்றின் தண்டின் வளர்ச்சியில் ஆங்காங்கே தோன்றும் முட்கள் போன்று..  எண்ண ஓட்டத்தில் முட்டி மோதும் சொற்களை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை... தண்டின் முள்ளைத் தோன்றத் தோன்றச் சிராய்த்துக் கொண்டிருந்தால்... அந்தச் செடியின் சுயம் என்னவாகும்..?!... பூவின் ஆதாரம் என்னவாகும்..?! 

தளுக்கும்.. பாசாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை...  அவசியப்படவுமில்லை... 

என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... 

___________________________

நான் இங்கு பேசிக் கொண்டிருப்பது குறிப்பிட்ட ஒரு விடயம் மட்டுமல்ல... பொதுவான மனித உணர்வுகள் சம்மந்தப் பட்டது.... சுற்றிச் சுற்றி வரும் விடயங்களைப் பார்த்துத் துணுக்குறாது... கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்க முடிந்தால்... அதுதான் மனித இனத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம்.. 

பேச ஆரம்பித்த பின்... இதைப் பேசலாமா... இதை விடலாமா என்று யோசிக்க முடியாது... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.... 

சில விஷயங்கள் பேசினால்... திருமணம்... சேர்ந்து வாழ்தல் எல்லாம் மிக மிக அற்பமாக... மிக மிகச் சாதாராணமான விடயமாகத் தோன்றலாம்... 

இல்லை... இல்லை... இது தப்பு... இது தப்பு... இது தப்பு...  நாங்கள் யோசிக்கவே மாட்டோம்.. கண்ணைத் திறக்க மாட்டோம்... காதைத் திறக்க மாட்டோம்... இப்படி ஒரு சொல்லை உச்சரிப்பதே பாவம்... வைகுண்டம் தூரம்.. கைலாசம் நாசம்..  என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள்... தயவு செய்து போய்... உங்கள் வலைமனையிலோ... அல்லது சுற்றாடலிலோ... உங்கள் சேவையைத் தொடரவும்... 

ஆமாம்... இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்னு தோன்றினா... ஆரோக்கியமா பேச முடியும்னா... அவங்க இங்க பேசுங்க...  
_____________________

சிலபல மனிதர்களின் மனப்போக்கை நினைத்தால்... கஞ்சி தண்ணியை வாயில் வைக்க முடியவில்லை... நம் கலாச்சாரம்.. நம் பண்பாடு... நல்ல குடும்பத்தில பிறந்தேன்... நல்ல அம்மா அப்பாவிடம் வளர்ந்தேன் என்றெல்லாம் ஏன் பீற்றிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை... அப்படிச் சொல்லிக் கொண்டே... அவர்களின் மனம் வெளிப்படுத்தும் வக்கிரம்... வார்த்தைகளில் வடிக்கத் தகுந்ததன்று... இதொன்றும் யாருக்கும் பெருமையான விடயமென்று எனக்குத் தோன்றவில்லை... 

தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.. என்ற ஒரு விடயத்தைக் கூறிச் சவர்க்காரம் விற்பதற்கு..  சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... தேகம் பளபளப்படையும்... ஆயுள் நீடிக்கும்... ஐஸ்வர்யம் கூடுமென்றெல்லாம் போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?! 

விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... அல்லது அவளிடம் படுத்து எழும்புபவன்... ஆண் ஆணுடனும்.. பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழ்வதை ஆதரித்தால்... அந்தந்தப் பாலுக்கு ஏற்றவாறு நீயும் அவ்வாறே... திருநங்கைகளுக்கு ஆதரவெனில் நீயும் திருநங்கை... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)

பதின்ம வயதில் நான் படித்த சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி (கற்பனைக் கதையொன்றுமல்ல..) ஏற்படுத்திய வெட்டுக்காயம்... மிக ஆழமாக.. இன்னும் ரணமாக அப்படியே இருக்கிறது... சுயம்புவின் சுயம் வெளிப்பட முடியாது... சுற்றிச் சுற்றியிறுக்கும் சமூகம்... கட்டுப்பாடு..  சுயம்புவை உணர்ந்தும்.. ஊர் உலகத்திற்கு மறைத்து... விழுங்கி விழுங்கி... சுயம்புவான "அவளை"... சுயம்புவிலுள்ள கொஞ்சமே கொஞ்சமான "அவனுக்குள்" உயிருடன் சமாதி கட்டிப் புதைக்கும் பெற்றவள்... பொறுத்துப் பொறுத்து... முடியாது... முடியாதென்று அலறியபடி சுயத்தைத் தேடி... ஓடி... திருநங்கைகளின் கூட்டத்தில் சேர்ந்து... தானாகி... மேகலாவாகிப் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் வரை... அதன் பின்னர் கூட எத்தனை எத்தனையோ சித்திரவதைகள் காத்திருப்பினும்... அதற்கு முன்னர் அவள்... அந்தத் திருநங்கை அனுபவிக்கும் வேதனையை... கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் புண்ணியவான்கள் ஒரு பாதி நாள் அனுபவிக்க முடியுமா... உமக்கு மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அருகதை இருக்கிறதா..?! 

காதல் என்றால்... கண்ணே மணியே... கண்ணாளனே... என்னை விட்டுப் போய் விட்டாய்... இருக்க முடியவில்லை... படுக்க முடியவில்லையென்று அலறுவதல்ல... அந்த அலறலில் எங்கோ ஒரு இடுக்கில் சிறு துளி காதல் இருக்கலாம்... 

அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...  மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்.. 

தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து... 

Annie Proulx இன் Brokeback Mountain.. (இதுவும் கற்பனையல்ல..) படித்தால்.. இரு ஆண்களுக்கிடையில் தோன்றும் காதலும்... சமூகத்தில் அதை வெளிப்படுத்த முடியாத அவலமும்... அவர்களின் முடிவும்... அய்யோ என்று அலறச் செய்யும்... அவர்களின் இயலாமை எம்மையும் தொற்றிக் கொண்டு... உருகி உருகி அழ வைக்கும்... 

நல்ல புள்ளைகளுக்கு அது மிக மிக அருவெறுப்பாகத் தோன்றலாம்... அதே நல்ல புள்ளைகள்... ஏதோ ஒரு படத்தில்.. யாராவது முன்னணித் தமிழ்க் கதாநாயகன்.. நாயகியிடம் உன்னிலுள்ள ஆணைக் கொஞ்சம்... என்னிலுள்ள பெண்ணைக் கொஞ்சம்.. என்று பாடினால்... அதைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாது... விசில் அடித்தபடி... கலாச்சாரக் காவலர்களுக்குப் பயந்து தலையைக் கழுத்தில் புதைத்தபடி செல்லும் பெண்ணைச் சுற்றி வரலாம்... 

அசோகர் மரம் நட்டார் அறிந்தோம்... கண்ணப்பநாயனார் மாமிசம் படைத்தார் அறிகிறோம்... புத்தர் ஞானம் பெற்றார் அறிவோம்..  X குரோமோசோம்... Y குரோமோசோம்... ஹரி ஓம்..  என்று எல்லாவற்றையும் கலந்து மனப்பாடம் செய்வார்கள்... ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது... அவர்கள் மனங்களின் கஷ்டம் தெரியாது... அதற்கு அவர்கள் அந்த நிலையில் இருந்தால்த்தான் புரிந்து கொள்வார்களாம்... 

(இதற்கும் யாராவது விழுந்தடிச்சு ஓடி வரலாம்... அப்போ இது சரிங்கிறியா... அப்போ இது தப்புங்கிறியா... ஒரு ஹோமோ... இன்னொரு பையனை ரேப் செய்தான்... அவன் தூக்கு மாட்டிச் செத்தான்... தெரியுமா உனக்கு... அப்டிம்பாங்க...)

அய்யா... அம்மா.. நீங்க புத்திசாலிதான்...  நீங்க சொல்றது சரிதான்..  ஒரு அல்சேஷன் அல்சேஷனைக் கடித்தாலும்... அல்சேஷன்... பொமரேனியனைக் கடித்தாலும்... பொமரேனியன் பூனையைக் கடித்தாலும்... அது வன்முறைதான்... நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்... 

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை... 

ஆனால்.. அவங்களுக்கு அப்படி வாழத்தான் விருப்பம்... மேற் கூறிய ஏதோ ஒரு முறையில்.. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழப் பிடித்திருக்கிறதென்று.. பரஸ்பரம் யாரோ ஒரு துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்... அல்லது தனியே இருக்கிறார்கள்... 

அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ... 

தெரியவில்லையென்றால்.. நானே சொல்கிறேனே... அதுவும்... வன்முறைதான்... வன்புணர்வுக்காகக் கையையும் காலையும் கட்டிப் போடும் மூர்க்கத்தனம்தான்.... உயிருடன் தொங்க விட்டு... சுற்றவரத் தீயிட்டுக் கூடிக் கும்மாளமிட்டுப்.. பறை முழங்கி... மனித மாமிசம் உண்ணும்... காட்டு மிறாண்டித்தனம்தான்..... 

இதை உண்மையில்லையென்று சொல்பவன்... அதே மனித மாமிசத் தசையை ஏதோ ஒரு விதத்தில் பதப்படுத்தி உண்ணும்.. மிக மிக நாகரீகமானவன்தான்.. 

வளர்ப்பு முறை சரியில்லையென்று அலறும் புண்ணியாத்மாக்களுக்கு... வளர்ப்பு என்பது... முடிகிறதோ இல்லையோ... இவளைப் புணர்... இவனைச் சேர்... அழுகிச் சோர்.. செத்துப் போ... என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல... 

(இதைச் சொல்லும்போது... நான் இங்கு பாடம் நடத்துவதாகச் சில அறிவுஜீவிகள் கெக்கலித்தது கவனம் வருகிறது... எனக்குத் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... அதே எண்ண ஓட்டத்தில் சிந்திக்க முடிபவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்... மற்றவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலையல்ல..) 

அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)

அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்... 

அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்களெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது.. 

தான் திருடி பிறரை நம்பாள்... என்பது போல்... எதைப் பார்த்தாலும் பயம்.. யாரைப் பார்த்தாலும் பயம்...  (அட நான் பாம்பு... பல்லி பத்திச் சொல்லலைங்க...).. நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்... பக்கத்து வீட்டில் சமைத்து வந்தால் அதில் செய்வினை இருக்கும் என்பது போன்ற பயம்... நான் இதை ஆதரித்தால்.. என்னுடைய மகனும்... அதயே செய்வான்... என்னுடைய மகளும் அதயே செய்வாள்... என்பது போன்ற... தேவையே இல்லாத பயம்... 

ஏன் என்றால்... மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான்.. எம்முடைய தேவையை நாம் முடிவு செய்கிறோம்.. அப்படிப் பழகி வைத்திருக்கிறோம்... பழக்கி வைத்திருக்கிறோம்... தன்னைத் தானே பார்த்து... எனக்கு இது தேவையா... ஏற்புடையதா... இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. 

மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்... அந்த சமூகம் என்ன சாதித்து விட முடியும்... உனக்கு என்ன முடிகிறது என்று பார்... நீ எதைச் செய்தால் அது பூரணமாக மிளிரும் என்று பார் என்று யாரும் கற்றுக் கொடுப்பதாகக் காணோம்... 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறோம்... அவரவர் வாழ்க்கை உட்பட... வாழ்க்கை என்பது வாழப்படாமலே புதைக்கப்படுகிறது... அப்படி என்கிற உண்மையையும் புதைத்துக்கொண்டு... போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வதில்த்தான் எத்தனை எத்தனை (தற்)பெருமைகள்.... 

(இதுக்கு மேலயும் சொல்லுவேன்...)

Monday, November 15, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ரெண்டு...

இருங்க... நம்ம சித்தாந்தம் ஒரு பக்கம் கெடக்கு... அது எங்க போகுது கழுத.. இப்போ கௌசல்யா அவங்களோட போஸ்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமா பின்னூட்டிடுறேன்.... 

||அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும்||

இந்த பல ஜாதிக் கொடுமைய வச்சுக்கிட்டு, சக மனுஷன மனுஷனா நினைக்காம தூக்கி எறிஞ்சு பேசிக்கிட்டும் நாம நம்ம கலாச்சாரம் சிறந்ததுன்னு பேசுவோம்.. அது வாங்கொடுமைங்க... நம்ம கலாச்சாரம் பார்த்து பொறாமைப்படற(?) அதே வெளிநாட்டுக்காரன் என்ன கொடுமை இதுன்னு என் கிட்ட கேப்பானுவ... ஐய்யோ நான் இல்ல.. நான் இல்லன்னு அலறணும் போல வரும்.. 

என்னமோ... வெள்ளைக்காரன் கருப்பரயும் மாநிறக்காரனயும் புடிச்சுத் திங்கற மாதிரிப் பேசிட்டிருக்கியளே, இனத் துவேஷம்ன்னு பேரு வேற... நீங்க என்ன புடுங்கிட்டிருக்கீங்க அப்டின்னு கேப்பானுவ... 

அட இவ்ளோ ஏனுங்க... உங்க மாநிறம் எவ்ளோ அழகு... அதுக்காக இங்க இருக்கிற வெள்ளக்காரிங்க எல்லாம்... தேசம் விட்டு தேசம் போய்... வெயில்ல கெடந்து புரண்டு... அய்யோ... ப்ரவுன் ஆவுதில்ல... எல்லாம் ரெட் ஆகி அவிஞ்சு போகுதுன்னு அழாக்குறையா வந்து... சொலாரியத்தில போய்ப் படுத்துக்கிறாங்க.. பக்கத்து வீட்டில இருக்கிற உங்கூரு அம்ணி... வெயிலடிச்சா வெளில போகுதில்ல... புள்ள குட்டியையும் அனுப்புதில்ல... ஏன்னா கருத்துடுவாங்களாம்... ஏன்.. அது உங்களோட அடையாளம் இல்லையா?! என்ன கொடுமை இது..  விண்டருக்கும் வெளில போறதில்ல.. சறுக்கிடுவாங்களாம்... விழுந்துடுவாங்களாம்.. மத்த பசங்க கூடச் சேர்ந்தா.. கெட்டுடுவாங்களாம்... அந்தப் பசங்க வீட்டுக்குள்ளயே கெடந்து பைத்தியம் புடிச்சு சாவப் போறானுங்கன்னு ஏகத்துக்குக் கவலைப் படுவாங்க... 

எனக்கு என்னோட மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறதுன்னு தெரியாம... ஸ்ஸ்ஸபா.. அப்டின்னு என்னோட கவலையையும் தெரிவிச்சுக்குவேன்... 

ஆனா நம்மாளுங்களுக்கு அதில இருக்கிற பெருமை இருக்கே... ய்ய்யப்பா... என்னாங்கிறீங்க.. ச்சே ச்சே... எம்புள்ள வெளில எங்கயுமே போறதில்ல... அங்கன பக்கத்தில இருக்கிறவைங்க "வேற ஆளுங்க".. அப்டின்னு பெர்ர்ர்ருமையா சொல்லிக்குவாங்க... கிரகம்.. இந்தக் கண்றாவிய நான் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டி வரும்.. அப்போ நான் வெளிநாட்டுக் காரங்க கிட்ட வழியற வழிசல் இருக்கே... போதும்டா சாமீ... 

||அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?||

சம்பிரதாயங்கள்... கட்டுப்பாடுகள்... புனிதம்... ம்ம்.. ஆமா... மாப்ள தங்கக்கம்பி... நாப்பது ஏக்கர் நஞ்சை புஞ்சை... எஞ்சீனியருங்க... படிச்சதுன்னு பெருமை கிஞ்சித்தும் கிடையாது... ஜெமினி கணேஷனாட்டம் கிராப்பு... வேற என்ன வேணும்.. நம்ம சுமதிக்கு இத விட நல்ல மாப்ள அமெரிக்கா போனாலும் கிடைக்குமா.. எதுக்கும் சுமதிய ஒரே ஒரு வார்த்த கேட்டுடுவோம்... இன்னாம்மா சொல்றன்னா... பாவம் அந்தப் பொண்ணு... கிராப்பு நல்லாதான் இருக்குன்னு... இளிச்சு வைக்கும்.. ரெண்டுங்கெட்டான் வயசில... அப்புறம் என்ன... கொட்டிடுவாங்க.. மேளத்த... 

அப்புறம் தலையை நிமித்தப்டாது.. அகலிகை நிமிர்ந்து பார்த்துதான் கல்லானா... ஆனா இவங்க கல்லாவே ஆயிடுவாங்க அப்புறம்... சாபவிமோச்சனம் கொடுக்கறதுக்கு எந்த ராமரும் வர மாட்டாரு.. கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கில்ல மக்கா... 

விதவை ஆனா அப்டியே பொட்டு எல்லாம் அழிச்சுட்டு... மூஞ்சூறு மாதிரி சுத்தி வரணும்... அங்கன யாராவது சோக்கு கீக்கு சொன்னாச் சிரிச்சிடப்டாது... அப்புறம் அவங்களோட மூணு தலைமுறைப் பெண்டுகளுக்கு கல்யாணமே மறந்துடணும்... துப்புக்கெட்ட குடும்பம்ல.. 

என்னோட அம்மா இருந்தாங்க... அவங்க வாழ்ந்த வாழ்க்கைய என்னால ஒரு வாரம் கூட வாழ்ந்திருக்க முடியாது... ஆனா அவங்க வாழ்ந்தாங்க... அறுபத்தைஞ்சு மைனஸ் பதினெட்டு = நாப்பத்தியேழு வருஷம்.. நான் அப்பவே சொல்லிட்டேன்.. என்ன எழவு.. இப்டி வாழ்ந்து என்னத்த கிழிக்கப் போறீங்க... வாங்க தனிக்குடித்தனம் போயிடலாம்ன்னு... கேக்கலயே..  அடி உதைன்னு கிடைக்காத நாள் இருந்தா அன்னிக்குதான் அவங்க கொஞ்சம் மூச்சு விடுவாங்க... அவங்க புருஷன் ரொம்ப நல்லவருங்க... ஆனா அந்த பாழாப்போன குடிதான்... என்ன பண்ண... கட்டியாச்சு... 

அந்தாளு போனதும்... கழுத்தில ஒரு செயினுக்கு மேல இருந்தா.. அய்யய்யோ அக்கம் பக்கம் என்ன சொல்லும்ன்னு கழத்தி வச்சிடும்.. ஏன்மா... உங்க ஆசைக்கு நீங்க போட்டுக்கிறீங்க... மத்தவங்களப் பத்தி ஏன் கவலைப்படறீங்க..?! நாளைக்கு நீங்க மேல போறப்போ இவங்க எல்லாம் துணைக்கா வரப்போறாங்க?! அப்டின்னு கேட்டா... என் செல்லம்.. அப்டின்னு கொஞ்சும்.. ஆனா தன் விருப்பத்துக்கு எதுவும் பண்ண முடியல... அதுதான் கட்டுப்பாடு... கலாச்சாரம்... எல்லாம் இருக்கே... அதுவும் நல்ல்ல்ல்ல முறைல.. இப்போ போயிட்டாங்க... வேற எந்தச் சிறுக்கியும் அவ கூட சேர்ந்து போகலை... தனியாத்தான் போயிருக்கா..

யாரோ ஒருத்தரு சொல்லி இருந்தாரு... வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க.. இருப்பாங்கன்னு... அப்டின்னா இப்டி ஒரு அம்மா வளர்த்த நான் எப்டி இருக்கணும்... என்னோட வளர்ப்பு சரியில்லன்னு சொன்னா... உங்க வழக்கப்படி உங்க குலசாமியே உங்க கண்ணைக் குத்தாதோ..?! 

(இருங்க... சாப்பாட்டுக்கு உழைக்கணும்ல... மீதிய அப்புறமா வச்சுக்கறேன்.. ஒரு பத்து பார்ட் தேறும் போலருக்கே..)

Tuesday, October 26, 2010

புன்னகை எதற்கு...

ஏழு வருடங்கள் முன் என் தலை மேல் கன்னம் பதித்து விம்மிய என் தாத்தன் இன்றில்லை. தேங்காய்ப்பூவுடன் மசித்த கீரைக்கு நான் ஏங்கிக் கொண்டிருந்த போது "அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை. இவற்றில் எவற்றுக்கும் வழியற்று அவசரமாக நீங்கி விட்ட அப்பாவும், பாட்டியும் இல்லை. 


கதிர் இலங்கை செல்கிறேன் என்றபோது எனக்குப் பேச்சு வரவில்லை. அங்கே யார் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூடப் பிடிக்காது மனம் அழுத்தியது. நேற்று கதிரின் இடுகையைப் படித்தபோது, ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது. 

பார்த்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு சிரிப்பானை விட்டு வந்தேன். ஏழு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், டெம்ப்ளேட் கூட இல்லை, ஒரு சிரிப்பான் மட்டுமா என்ற கேள்வியுடன் கதிர் வந்த போது, மீண்டும் கரித்தது. 

படித்து முடிக்க முடியவில்லை, பிறகு சொல்கிறேன் என்று விட்டுப் பேசாதிருந்தேன். "நானெல்லாம் அங்கே சென்று என்ன கிழித்து விட்டேன், இப்படி ஒரு இடுகை, அதற்கு நாலு பின்னூட்டம்.. ஒரு சக மனிதனா என்ன செய்ய முடிந்தது..".. என்று அங்கலாய்த்தார். "உணர்விருக்கே... அது போதும்" என்றேன். 

இன்று புதுவை சிவா என்ற பதிவர் என்னுடைய சிரிப்பானைக் குறிப்பிட்டு, அலட்சியப் புன்னகையென்று அடிக்கோடிட்டிருந்தார். 

உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அவசியம் ஏதுமில்லை. அரசியல், ஆராய்ச்சி எல்லாம் தாண்டி சீமான், தாமரை போன்றவர்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அளித்த ஆறுதலை யாரும் எப்பவும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.   

வேறு நாட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் இருந்தும், அடிபட்ட புறாக்களாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து விட வேண்டுமென்று ஓடிச் சென்ற அந்த உணர்வுக்கு வந்தனம். 
_______________________________________

Sunday, October 10, 2010

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லையே... ஸோ...

மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 

நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)

அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 

அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம். 

அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.


||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||

இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.  செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது. 

அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. 

||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||

அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை.  அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். 

அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள்.  சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும். 

ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்.. 

||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||

இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம். 

||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||

இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை.. 

||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||

||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||

ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன். 

இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம். 

உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)

நிற்க... 

அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?! 

இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!! 

||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||

அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம். 

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது. 

யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். 

அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..! 

தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..! 
_________________________________________________________

தொடர்புடைய சுட்டிகள்: 

(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன். 

இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது. 

ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?! 

சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)

__________________________________________________________