மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு மக்கா... புரட்சி செஞ்சு ரொம்ப ரொம்ப நாளாச்சு.... சரி இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்துடுவோம்...
முதல்ல நிவிஸ் படிங்க மக்கா.... (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)
போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...
நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________
முதல்ல நிவிஸ் படிங்க மக்கா.... (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)
போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...
நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________
கையப் பரபரன்னு தேய்ச்சுக்கிட்டு யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.
அவரு “ஆடி வெள்ளி”ன்னு ஒரு படம் எடுத்தாராமே... அதில ஒரு நாகப்பாம்பு நடிச்சுதே... அதுக்குப் பல்லே இல்லையாம்... அது எப்டி பல்லே இல்லாத பாம்பை நடிக்க வைக்கலாம்..?! பாம்புக்கான தகுதியே அந்தப் பல்லிலதானேய்யா இருக்கு... அந்தப் பாம்புக்கு என்ன பேருன்னு எனக்குத் தெரியல.. (எங்கைய்யா நான் படம் பார்த்தாதானே.. இந்த எளவெல்லாம் தெரியறதுக்கு... போராடவே நேரம் பத்தல..) பேரு.. நாகராணியா இருக்கலாம்.. ஒரு வாட்டி ஏதோ நடந்தது நடந்து போச்சு... அப்போ நாம மிளகுப் பொங்கல் கொஞ்சம் அதிகமா சாப்ட்டு அசந்து தூங்கிட்டோம்.. ஸோ போனாப் போறதுன்னு விட்டுடலாம்... ஆனா இனிமே “போடி கள்ளி”ன்னு ஏதாவது படம் கிடம் எடுக்கிறப்போ... நாகராணி அம்மாவ நடிகையாப் போட்டா உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்... நல்லா கோல்கேட் அட்-ல வர்ற மாதிரி.. பளிச்சுன்னு பல்லுள்ள பாம்பா பார்த்துப் போடனும்.... சும்மா பொட்டுன்னு ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்... ம்க்கும்.. எங்க இருக்கிறது... சாவனும்யா... பாம்புன்னா படம் எடுத்தா மட்டும் போதுமாய்யா..... நீங்களும்தான் எடுக்கறீங்க படம்... அதுக்காக நீங்க பாம்பா நடிச்சிட முடியுமா.... படமாய்யா எடுக்கிறீங்க படம்...
__________________________
அப்புறம்... சங்கர் சார ஒரு புடி புடிக்கலாம்...
என்னையா டைரக்டரு நீரு... சப்பான் நாட்ல தடுக்கி விழுந்தா ரோபோன்னு இருக்கிறப்போ.... வேலை மெனக்கெட்டு போயும் போயும் ஒரு மனுஷனுக்கு மேக்-அப் போட்டு ரோபோன்னு சொல்லி இருக்கீரே... யாரை அய்யா ஏமாத்துறீங்க.... நம்ம மூஞ்சில கேனன்னு எழுதி ஒட்டி இருக்கா என்ன... அட வீணாப் போனவைங்களே.... ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா... அறிவு வேணாம்... புடிங்கைய்யா கொடிய... தூக்குங்கைய்யா ரசினிய...
___________________________
நெக்ஸ்ட் யாருப்பா...
யோவ் மணி... எங்க ஒளியறீரு... முன்னாடி வாரும்யா.... அறிவிருக்காய்யா உமக்கு... இல்ல தெரியாம கேக்கறேன் அறிவிருக்காய்யா.... ஐசுவர்யா ராய் யாருய்யா..?! அபிசேக்கு பொஞ்சாதிதானே.... என்னா தெனாவெட்டுய்யா உமக்கு... தமிழ்ப் படத்தில அந்தம்மாவ எவனோ பிருத்வியோ... பருத்துவியோ அவனுக்கு பொண்டாட்டின்னு நடிக்க வச்சீரு... அத விட மோசமா.... ஹிந்திப் படத்தில... அபிசேக்க ராவணனாக்கி... விக்ரம ஐசுவரியாக்கு ஆம்படையான் ஆக்கினீரே... மன்னிக்கவே முடியாதுய்யா.... விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்...
___________________________
அப்புறம்.... ஆ... எல்லாரும் வரிசை கட்டி வர்றாய்ங்களே.... என்னங்கையா இது... எங்க பார்த்தாலும் இதே எழவாப் போச்சு... யோ... எல்லாரும் நல்லாக் கேட்டுக்கிடுங்க... இனிமே... ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது.... அந்தப் படத்தில அவன் அவனாவேதான் நடிக்கனும்... அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...
சுமங்கலிய விதவையா... விதவைய சுமங்கலியா.... நல்லவன கெட்டவனா.. கெட்டவன நல்லவனா... பொறுக்கிய புறம்போக்கா... புறம்போக்க பொறுக்கியா... பல்லிய ஆமையா... ஆமைய பல்லியா... எல்லாம் நடிக்க வச்சீங்க கையக் கால உடைச்சி அடுப்பில வச்சிடுவோம்....
அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்... ராமரு வேஷம் ராமர்தான் போடனும்.... லெட்சுமணன் வேடம் லெட்சுமணந்தேன் போடனும்... யேசு யேசுவாதான் இருக்கனும்...
நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...
___________________________

