header photo

Tuesday, December 22, 2009

இன்றிங்கிப்போ...

 வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பருந்தொன்றமர்ந்து  பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!
 _____________________________________

140 ஊக்கம்::

vasu balaji said...

/"இன்றிங்கிப்போ..."/

ஆத்தாடியோ!

/பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்//

ம்ம். பலே!

/புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!/

ஹூம். வரிசையா வந்து நிக்குது வார்த்தை.

நமக்கு பாராட்டக்கூட வார்த்தை அடம் புடிக்குது.

தென்னவன். said...

/*செதுக்கிய சிறு கூட்டுவாசம் */

நல்லா இருக்குங்க‌..

பிரபாகர் said...

ரொம்ப அருமையா இருக்கு சகோதரி. (நிஜமா ஆறு தடவை படித்த பின்புதான் முழுதாய் புரிந்தது...)

//பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்//

சாதாரண வார்த்தைகளை அசாதாரணமாய் கையாளுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். அருமை.

பிரபாகர்.

Unknown said...

வேணா என்ன அருஞ்சொற்பொருள் எழுதத் தூண்டாதீக.. சொல்லிப்புட்டேன்

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு தோழி வாழ்த்துக்கள்..

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான வரிகள்.....வாழ்த்துக்கள்

Paleo God said...

"இன்றிங்கிப்போ..."
இது நன்றே என்பதன்றி வேறொன்றும் அறியேன்,,:))

சங்கர் said...

யக்கா, போன கவித மாதிரியே கீழ விளக்கமும் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்

balavasakan said...

அற்புதம் அக்கா....

புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!

;-)

புலவன் புலிகேசி said...

//பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //

இதுதாங்க ப்ரியா ரசனைங்கறது..என்னாமா எழுதுறீங்க..

U.P.Tharsan said...

wow... நானும் அறியேன்.

அன்புடன் நான் said...

படித்தேன்...முழு புரிதல் கிட்டவில்லை...பின்னூட்டங்கள் வரட்டும் பார்க்கலாம்......

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா...... அழகான வரிகள்...........

அண்ணாமலையான் said...

என்ன ஆச்சு? ஒரு கமெண்ட் கூட கானோம்?

அன்பேசிவம் said...

?

thiyaa said...

ஆகா அருமை

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு....
ஆனா இப்படி சுத்தி சுத்தி எழுதுனா எல்லோருக்கும் புரியாம போகுமே!. அப்புறம் கோனார் தமிழ் உரையில விளக்கம் தேட ஆரம்பிச்சுடுவாங்க. :-)

தப்ப எடுத்துக்காதீங்க. நன்றி.

குடுகுடுப்பை said...

இந்தக்கவிதைக்கு எதிர்கவுஜ கூட என்னால எழுதமுடியாதுங்க கலக்கல்பிரியா.

உண்மையாலுமே எதுனா அர்த்தம் இருக்கா இந்தக்கவிதைக்கு.

R.Gopi said...

எனக்கினி இது போன்ற எழுத்துக்களை படித்ததும், புரிய வை பராபரமே

திருச்சிற்றம்பலம்...

ப்ரியா....

வழக்கம் போல், தமிழ் விளையாடி இருக்கிறது உங்கள் எழுத்தில்...

பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை...

வாழ்த்துக்கள் லகலக....

//பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //

இது பிரமாதமா இருக்கு....

க.பாலாசி said...

//பிரபாகர் said...
ரொம்ப அருமையா இருக்கு சகோதரி. (நிஜமா ஆறு தடவை படித்த பின்புதான் முழுதாய் புரிந்தது...)//

ஆறு தடவையிலேயே புரிஞ்சிடுச்சா ??(என்னால பொய் சொல்ல முடியலையே...)

நல்ல கவிதை வரிகளை ரசித்தேன்...

Unknown said...

//வெண்பனியின் முன்னிரவில்//

பனி பெய்யக்கூடிய ஒரு மார்கழி மாதத்தின் முன்னிரவு நேரத்தில்

அதாவது பொழுது போகாமல் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த ஒரு முன்னிரவு நேரத்தில்

//பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்//

பருந்து ஒன்று வந்து கிளையில் அமர்ந்துவிட்டு பறந்ததால் ஏற்பட்ட அதிர்வினால்
அதாவது
நம் வலைபூவில் ஒரு பக்கத்தில் இருக்கும் வலைச்சரத்தில் வந்து படிந்த பெயரை (கலகலப்ரியா) பார்த்துவிட்டு
//மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை//

தன் வீடாகிய மரக்கூட்டினை விட்டு விலகி அருகில் இருந்த ஒரு கதகதப்பான குடிசையின் கதவிடுக்கில் நுழைய முற்பட்ட அந்தக் கிளிக் குஞ்சு
அதாவது
வேறு எங்கோ மேய்வதை விட்டு விட்டு நல்ல பதிவாக இருக்குமென்றெண்ணி அப் பதிவைப் பார்த்தால்

//பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!//

பின்னிரவில் வீசிய ஊதக் காற்றினால் கதவடைபடுகிறது என்று தெரியாமலே அந்தக் கதவினிடையில் அதன் தலை அழுந்தி இறக்கும்போது அது சொர்க்கம் போகும்போகுமோ இல்லை நரகம் போகுமோ நமக்குத் தெரியாது.
அதாவது
அந்தக் கவிதை நம் மண்டைக்குள் நுழைந்து கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் மூளையையும் மிரண்டு ஓடச் செய்த போது கவிதையைத் திட்டுபவர் நரகத்துக்கும் பாரட்டுபவர் சொர்க்கத்துக்கும் போவார் என்பதை யாமறியோம் என்று குறிப்பால் உணர்த்துகிறார் கவிஞர்

குடுகுடுப்பை said...

நீங்கள் எனக்கு எதிர்கவுஜ போட அனுமதி தருவீர்களா கலக்கல்பிரியா?

கவுஜ ரெடி:)

Unknown said...

தப்பா எடுத்துகாதிங்க..., நாலு தடவ படிச்சிட்டேன் புரியல... நம்ம அறிவு அவ்வளவு தாங்க...

குடுகுடுப்பை said...

யாமறியேன் பராபரமே

வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பாட்டி விற்ற சரக்கில்
பிறந்த போதையில் கிளைவிளைவாக
பீறிட்டெழும்பிய முடை நாற்றம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
வீட்டின் கதவடைபட காரணமாகியதும்
தெரியாமலே புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!

இதுதான் நான் எழுதுன எதிர்கவுஜ, ப்டைப்பை சிதைப்பது போன்ற குற்ற உணர்ச்சி எனக்கும் உள்ளது , ஆனாலும் எழுதியாச்சு.நீங்க மட்டும் படிச்சி நல்லா திட்டிங்கோங்க

ஈ ரா said...

"புறவிறகுகளில்" -- இந்த சொல்லாடல் இருமையில் அருமையாக உள்ளது..

Maheswaran Nallasamy said...

புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்..

ம்ம்ம் ........படமே சொல்லுது பாதி விடயம்

தமிழ் உதயம் said...

கலகலப்பிரியா... நீங்க அற்புதம்மா கவிதை எழுதறிங்க. ஆனா பாருங்க.. எம்மரமண்டைக்கு தான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு ப்ரியா

Unknown said...

very nice. makes me to read again, good one priya

Sanjai Gandhi said...

புரியலை

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது.......

சத்ரியன் said...

//சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!//

ப்ரியா,

தெரிஞ்சுமா பாக்காம விட்டீங்க..?

Unknown said...

//வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பாட்டி விற்ற சரக்கில்
பிறந்த போதையில் கிளைவிளைவாக
பீறிட்டெழும்பிய முடை நாற்றம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
வீட்டின் கதவடைபட காரணமாகியதும்
தெரியாமலே புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!
//

குடுகுடுப்பை, you can do better

ஈரோடு கதிர் said...

புரிஞ்சிடுச்சுபா....

அன்புடன் அருணா said...

கொஞ்சமா புரியுது!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கவிதையிந்தமிழ் மிகவுமருமை! இதுதானேவுங்கள் ’இன்றிங்கிப்போ’ டச்?

முகிலன் சார் - ரொம்ப நன்றி - நீங்க கொடுத்த அருஞ்சொற்பொருட்களை பாத்து அதுக்கப்புறம் ரெண்டு மூணு வாட்டிப் படிச்சுப் புரிஞ்சிடுச்சு.

எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா அப்ப உங்க கவிதை அட்டெம்ப்ட் ஃபெய்லியர் ஆயிடுச்சு ப்ரியா :))

சுண்டெலி(காதல் கவி) said...

enakkum thaanga puriyala...paravaayilla...pulavan pulikesi kaappathittaar....

en puthiya valaippathivukkum varukai tharavum

http://www.elivalai.blogspot.com/

துபாய் ராஜா said...

அர்த்த ராத்திரியில் வீசப்படும்
அழி குண்டுகளுக்கு பயந்து
பதுங்கு குழியில்
சென்று படுத்திருந்தாலும்
அதிர்வில்லாமல் பறக்கும்
ஆகாய விமானம்
வீசும் குண்டுகள்
குறிதவறாமல்
குழிமேல் விழுந்து
காற்று வரும் வழி கூட
மண்மூடுவது தெரியாது
இருப்போமா
இறப்போமா
என்பதும் அறியாது
ஆழந்த உறக்கத்தில்
இருக்குதே எம்முயிர்....

துபாய் ராஜா said...

அர்த்த ராத்திரியில் வீசப்படும்
அழி குண்டுகளுக்கு பயந்து
பதுங்கு குழியில்
சென்று படுத்திருந்தாலும்
அதிர்வில்லாமல் பறக்கும்
ஆகாய விமானம்
வீசும் குண்டுகள்
குறிதவறாமல்
குழிமேல் விழுந்து
காற்று வரும் வழி கூட
மண்மூடுவது தெரியாது
இருப்போமா
இறப்போமா
என்பதும் அறியாது
ஆழந்த உறக்கத்தில்
இருக்குதே எம்முயிர்....

நேசமித்ரன் said...

கலகலப் பிரியா

உங்களின் புறவிறகு கவிதை அழகு

இராகவன் நைஜிரியா said...

கவிதை மிக அழகு.

தேர்ந்தெடுத்துப் போட்ட வார்த்தைகளில் அனுபவம் தெரிகின்றது.

வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

விதியோ
வேறெவர் சதியோ
இல்லை பேராசைப்பட்ட
எம்மதியோ
இழுத்துச் சென்ற
ஈழ மண்ணில்
இனப்பயங்கரவாதம்
தலைவிரித்தாடி
எம்மினம் அழிக்க
ஏதும் செய்யமுடியா
இழிநிலையில்
என்றிந்த உலகை
விட்டு நீங்குவோம்
என்பதறியாத
நிலையில்
எம்மனம்....

துபாய் ராஜா said...

வெளியே வந்தால்
வெளிச்சம் என
வெற்றுப்பயல்களை
கூறியதை நம்பி
முள்வேலி உள்ளே வந்து
உண்ண, உறங்க
இடமின்றி
உடுக்க உடையின்றி
கையேந்தி பிழைப்பதை
எண்ணி இருந்தும் இறந்து
எம்முயிர் துடிக்குதே...
புதுப்புது பாடம் படிக்குதே...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...
/"இன்றிங்கிப்போ..."/

ஆத்தாடியோ!

/பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்//

ம்ம். பலே!

/புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!/

ஹூம். வரிசையா வந்து நிக்குது வார்த்தை.

நமக்கு பாராட்டக்கூட வார்த்தை அடம் புடிக்குது//

நன்றி சார்...

கலகலப்ரியா said...

//தென்னவன். said...
/*செதுக்கிய சிறு கூட்டுவாசம் */

நல்லா இருக்குங்க‌..//

நன்றி தென்னவன்...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...
ரொம்ப அருமையா இருக்கு சகோதரி. (நிஜமா ஆறு தடவை படித்த பின்புதான் முழுதாய் புரிந்தது...)

//பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்//

சாதாரண வார்த்தைகளை அசாதாரணமாய் கையாளுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். அருமை.

பிரபாகர்.//

நன்றி அண்ணா...

கலகலப்ரியா said...

//முகிலன் said...
வேணா என்ன அருஞ்சொற்பொருள் எழுதத் தூண்டாதீக.. சொல்லிப்புட்டேன்//

இது ஒரு தொடர்கதை முகிலன்... கொடுத்த அஸைன்மென்ட் பண்ண முடியல... ம்ம்...

கலகலப்ரியா said...

//kamalesh said...
ரொம்ப நல்லா இருக்கு தோழி //

நன்றி கமலேஷ்...

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அழகான வரிகள்.....வாழ்த்துக்கள்//

நன்றி ஆரூர்...

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...
"இன்றிங்கிப்போ..."
இது நன்றே என்பதன்றி வேறொன்றும் அறியேன்,,:))
//

:).. நன்றி பலா..

கலகலப்ரியா said...

// சங்கர் said...
யக்கா, போன கவித மாதிரியே கீழ விளக்கமும் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்//

இன்றிங்கிப்போல 'போன' கவிதை பத்தி எல்லாம் பேசப்டாது சங்கர்... =))

கலகலப்ரியா said...

//Balavasakan said...
அற்புதம் அக்கா....

புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!

;-)//

:).. நன்றி வாசு...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...
//பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //

இதுதாங்க ப்ரியா ரசனைங்கறது..என்னாமா எழுதுறீங்க..//

ரொம்ப நன்றி புலிகேசி... புலவர் பெருமான் கவிதை எல்லாம் படிச்சு இப்டி ஆய்ட்டோம் போல...

கலகலப்ரியா said...

//U.P.Tharsan said...
wow... நானும் அறியேன்.//

நன்றி தர்ஷன்..

vasu balaji said...

இப்புடி மாடரேஷன் வெச்சி வசதிக்கு பின்னூட்டத்துக்கு பதில் போட்டா மீ த 50லாம் எப்டி போடுறது.

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு said...
படித்தேன்...முழு புரிதல் கிட்டவில்லை...பின்னூட்டங்கள் வரட்டும் பார்க்கலாம்......//

நன்றி கருணாகரசு... பாருங்க...

கலகலப்ரியா said...

//Sangkavi said...
ஆஹா...... அழகான வரிகள்...........//

நன்றி சங்கவி...

கலகலப்ரியா said...

//அண்ணாமலையான் said...
என்ன ஆச்சு? ஒரு கமெண்ட் கூட கானோம்?//

இப்டி ஒரு கமெண்டா... நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
?//

??? =))... நன்றி முரளி... =)))

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...
ஆகா அருமை//

நன்றி தியா...

கலகலப்ரியா said...

//ரோஸ்விக் said...
நல்லாயிருக்கு....
ஆனா இப்படி சுத்தி சுத்தி எழுதுனா எல்லோருக்கும் புரியாம போகுமே!. அப்புறம் கோனார் தமிழ் உரையில விளக்கம் தேட ஆரம்பிச்சுடுவாங்க. :-)

தப்ப எடுத்துக்காதீங்க. நன்றி.//

நன்றி ரோஸ்விக்.... அதெல்லாம் முகிலன் பார்த்துப்பாங்க...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...
இந்தக்கவிதைக்கு எதிர்கவுஜ கூட என்னால எழுதமுடியாதுங்க கலக்கல்பிரியா.

உண்மையாலுமே எதுனா அர்த்தம் இருக்கா இந்தக்கவிதைக்கு.//

இருக்கு... ஆனா... இல்லை... =))...

கலகலப்ரியா said...

//நான் ஆதவன்☀ said...
:)//

:)... நன்றி ஆதவன்..

கலகலப்ரியா said...

// R.Gopi said...
எனக்கினி இது போன்ற எழுத்துக்களை படித்ததும், புரிய வை பராபரமே

திருச்சிற்றம்பலம்...

ப்ரியா....

வழக்கம் போல், தமிழ் விளையாடி இருக்கிறது உங்கள் எழுத்தில்...

பாராட்ட என்னிடம் வார்த்தை இல்லை...

வாழ்த்துக்கள் லகலக....

//பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //

இது பிரமாதமா இருக்கு....//

வாங்க கோபி... அந்த திருச்சிற்றம்பலம் இன்னும் மறக்கலையா நீங்க... =))... ரொம்ப நன்றி...

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...
//பிரபாகர் said...
ரொம்ப அருமையா இருக்கு சகோதரி. (நிஜமா ஆறு தடவை படித்த பின்புதான் முழுதாய் புரிந்தது...)//

ஆறு தடவையிலேயே புரிஞ்சிடுச்சா ??(என்னால பொய் சொல்ல முடியலையே...)

நல்ல கவிதை வரிகளை ரசித்தேன்...//

நன்றி பாலாசி... ம்ம்... அண்ணாவ கலாய்க்கலைன்னா ஈரோட்டுக்கே தூக்கம் வராது போலயே...

கலகலப்ரியா said...

//முகிலன் said...//

ம்ம்... உங்க நிலைல இருந்து சொல்லி இருக்கீங்க முகிலன்... =))... இவ்ளோ கொடுமையா அனுபவிக்கிறீங்க தினமும்..?... எப்டி இப்டி எல்லாம்... ம்ம்.. முடியல? ம்ம்... அந்த அசைன்மெண்டு....?... சரி விடுங்க... ஆனா...கடைசில கவிஞர்ன்னு சொன்னீங்க பாருங்க... நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவிங்க... அவ்வ்வ்வ் (ஓ.. இந்த அவ்வ்வ்வு நீங்க சொல்ல வேண்டியது.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..) ... =))

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...
நீங்கள் எனக்கு எதிர்கவுஜ போட அனுமதி தருவீர்களா கலக்கல்பிரியா?

கவுஜ ரெடி:)//

அட எதுக்கு அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு... சும்மா அடிச்சு விடுங்க... சென்சார் போர்ட் தாண்டி வந்திச்சின்னா ஹிட்டுதான்...

கலகலப்ரியா said...

//பேநா மூடி said...
தப்பா எடுத்துகாதிங்க..., நாலு தடவ படிச்சிட்டேன் புரியல... நம்ம அறிவு அவ்வளவு தாங்க...//

புரிஞ்சா படிக்கிறது... இல்லைனா வேற சப்ஜெக்டுதான்... =))... ரொம்ப நன்றிங்க..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...
யாமறியேன் பராபரமே

வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பாட்டி விற்ற சரக்கில்
பிறந்த போதையில் கிளைவிளைவாக
பீறிட்டெழும்பிய முடை நாற்றம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
வீட்டின் கதவடைபட காரணமாகியதும்
தெரியாமலே புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!

இதுதான் நான் எழுதுன எதிர்கவுஜ, ப்டைப்பை சிதைப்பது போன்ற குற்ற உணர்ச்சி எனக்கும் உள்ளது , ஆனாலும் எழுதியாச்சு.நீங்க மட்டும் படிச்சி நல்லா திட்டிங்கோங்க//

ச்சே ச்சே... அதெல்லாம் ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க... ஆமாம்... என் கவிதை இடைல என்னமோ எழுதி இருக்கீங்களே அது என்ன..? =))

கலகலப்ரியா said...

// ஈ ரா said...
"புறவிறகுகளில்" -- இந்த சொல்லாடல் இருமையில் அருமையாக உள்ளது..//

நன்றி ஈ.ரா..

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்..

ம்ம்ம் ........படமே சொல்லுது பாதி விடயம்//

பாதி புரியுது.. மீதி புரியலன்னா உங்க ஊர்ல இப்டிதான் சொல்லுவாய்ங்க போல... நன்றிங்...

கலகலப்ரியா said...

//tamiluthayam said...
கலகலப்பிரியா... நீங்க அற்புதம்மா கவிதை எழுதறிங்க. ஆனா பாருங்க.. எம்மரமண்டைக்கு தான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.//

ஏன் அதைக் குறை சொல்லுறீங்க... அதுக்குதான் கவிதை நல்லா இருக்குன்னு புரியுதில்ல... =))

கலகலப்ரியா said...

//செ.சரவணக்குமார் said...
ரொம்ப நல்லாயிருக்கு ப்ரியா//

நன்றி சரவணக்குமார்..

கலகலப்ரியா said...

// sridhar said...
very nice. makes me to read again, good one priya//

thank you sridhar...

கலகலப்ரியா said...

//SanjaiGandhi™ said...
புரியலை//

ம்க்கும்... புரிஞ்சிட்டாலும்... =))... (தமிழ் படிக்க தெரியாதான்னு என்னை யாரோ கேக்குற மாதிரியே இருக்குப்பா...)

கலகலப்ரியா said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை நன்றாகவுள்ளது.......//

முனைவரா இருக்கிறதாலயோ என்னமோ.. அநியாயத்துக்கு நியாயமா இருக்கீங்க... நன்றிங்க..

கலகலப்ரியா said...

// சத்ரியன் said...
//சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!//

ப்ரியா,

தெரிஞ்சுமா பாக்காம விட்டீங்க..?//

அண்ணே... என்னோட பேரு சொன்னதால இங்கதான் பின்னூட்டம் போட்டிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது... நன்றிங்கண்ணே...

அது சரி(18185106603874041862) said...

//
பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
//

ரசனையான வார்த்தை விளையாட்டு...

//
பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
//

விருப்பத்துடன் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் ஞாபகம் வருகிறது...

கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து விட்டீர்கள்...:0)))

அது சரி(18185106603874041862) said...

லேட்டஸ்ட்டா வரோமோ இல்லியோ ஆனா டெய்லி லேட்டாவாவது வந்துடுவோம்..:0)))

கலகலப்ரியா said...

//முகிலன் said...
//வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பாட்டி விற்ற சரக்கில்
பிறந்த போதையில் கிளைவிளைவாக
பீறிட்டெழும்பிய முடை நாற்றம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
வீட்டின் கதவடைபட காரணமாகியதும்
தெரியாமலே புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!
//

குடுகுடுப்பை, you can do better//

அவங்க பாட்டுக்கு கறிக்குழம்பு கவுஜ போட்டு.. தேமேன்னு இருந்தாங்க... போயி.. அழுத்தம் கொடுத்து... உசுப்பேத்தி விட்டு... இப்போ பான்கீமூன் லெவலுக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே முகிலன்... இது நல்லாவே இல்ல சொல்லிப்புட்டேன்...

ஆனா இன்னா செய்தாரையை அப்டியே ஃபாலோ பண்ணி... நீங்க சொன்னத வழி மொழியறேன்... ஹி கேன் டூ பெட்டர்...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...
புரிஞ்சிடுச்சுபா....//

எனக்கும்... (கூட்டத்ல ஏதாவது தனிப்பட்ட முறை தீர்மானம் கொண்டு வந்திருக்கீங்களா...)

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said...
கொஞ்சமா புரியுது!//

அப்பாடா... நன்றி அருணா..

கலகலப்ரியா said...

// எல் போர்ட் said...
கவிதையிந்தமிழ் மிகவுமருமை! இதுதானேவுங்கள் ’இன்றிங்கிப்போ’ டச்?

முகிலன் சார் - ரொம்ப நன்றி - நீங்க கொடுத்த அருஞ்சொற்பொருட்களை பாத்து அதுக்கப்புறம் ரெண்டு மூணு வாட்டிப் படிச்சுப் புரிஞ்சிடுச்சு.

எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா அப்ப உங்க கவிதை அட்டெம்ப்ட் ஃபெய்லியர் ஆயிடுச்சு ப்ரியா :))//

உங்களுக்கு புரிஞ்சா... என்னோட அட்டெம்ப்ட் வெற்றிதான் சந்தனா... =))... நன்றி..

கலகலப்ரியா said...

//காதல் கவி said...
enakkum thaanga puriyala...paravaayilla...pulavan pulikesi kaappathittaar....

en puthiya valaippathivukkum varukai tharavum

http://www.elivalai.blogspot.com///

varom.. varom... nanri..

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...
அர்த்த ராத்திரியில் வீசப்படும்
அழி குண்டுகளுக்கு பயந்து
பதுங்கு குழியில்
சென்று படுத்திருந்தாலும்
அதிர்வில்லாமல் பறக்கும்
ஆகாய விமானம்
வீசும் குண்டுகள்
குறிதவறாமல்
குழிமேல் விழுந்து
காற்று வரும் வழி கூட
மண்மூடுவது தெரியாது
இருப்போமா
இறப்போமா
என்பதும் அறியாது
ஆழந்த உறக்கத்தில்
இருக்குதே எம்முயிர்....//

:).. கவிதையை மிக நெருங்கியவர்களில் ஒருவர்... நன்றி ராஜா.. அருமை...

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...
வெளியே வந்தால்
வெளிச்சம் என
வெற்றுப்பயல்களை
கூறியதை நம்பி
முள்வேலி உள்ளே வந்து
உண்ண, உறங்க
இடமின்றி
உடுக்க உடையின்றி
கையேந்தி பிழைப்பதை
எண்ணி இருந்தும் இறந்து
எம்முயிர் துடிக்குதே...
புதுப்புது பாடம் படிக்குதே...//

:)... அருமை..!

கலகலப்ரியா said...

// நேசமித்ரன் said...
கலகலப் பிரியா

உங்களின் புறவிறகு கவிதை அழகு//

நன்றி நேசமித்ரன்... (நீங்க என்னோட ஸ்னோ சூட் காலர் பத்தி பேசலைன்னு நம்பறேன்.-=))

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...
கவிதை மிக அழகு.

தேர்ந்தெடுத்துப் போட்ட வார்த்தைகளில் அனுபவம் தெரிகின்றது.

வாழ்த்துகள்//

ரொம்ப நன்றி ராகவன்..! :)

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...
விதியோ
வேறெவர் சதியோ
இல்லை பேராசைப்பட்ட
எம்மதியோ
இழுத்துச் சென்ற
ஈழ மண்ணில்
இனப்பயங்கரவாதம்
தலைவிரித்தாடி
எம்மினம் அழிக்க
ஏதும் செய்யமுடியா
இழிநிலையில்
என்றிந்த உலகை
விட்டு நீங்குவோம்
என்பதறியாத
நிலையில்
எம்மனம்..//

ம்ம்...

கலகலப்ரியா said...

//அது சரி said...
//
பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
//

ரசனையான வார்த்தை விளையாட்டு...

//
பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
//

விருப்பத்துடன் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் ஞாபகம் வருகிறது...

கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து விட்டீர்கள்...:0)))//

ரொம்ப நன்றிங்... !

அது சரி... புரியலைன்னு சொல்ற அழகு... இப்டியாவது திரும்ப திரும்ப படிக்கிறாய்ங்களே... =))

கலகலப்ரியா said...

//அது சரி said...
லேட்டஸ்ட்டா வரோமோ இல்லியோ ஆனா டெய்லி லேட்டாவாவது வந்துடுவோம்..:0))//

நம்பிட்டோம்... முரண்தொடை அவ்ளோ நிச்சலனம்...!

கலகலப்ரியா said...

//
வானம்பாடிகள் said...
இப்புடி மாடரேஷன் வெச்சி வசதிக்கு பின்னூட்டத்துக்கு பதில் போட்டா மீ த 50லாம் எப்டி போடுறது.//

இது ஸ்விஸ் லாட்டரி மாதிரி...! ஜாக்பாட் அடிச்சா... பார்த்து சொல்லிக்க வேண்டியதுதான்.. !

அது சரி(18185106603874041862) said...

//

அது சரி... புரியலைன்னு சொல்ற அழகு... இப்டியாவது திரும்ப திரும்ப படிக்கிறாய்ங்களே... =))

//

ச்சே...டீஸன்ட்டா எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலருக்கே...எனக்கு படிக்கிறதுக்கு முன்னாடியே புரிஞ்சிடுச்சி...புரிஞ்சிடுச்சி...புரிஞ்சிடுச்சி.....சொன்னா நம்பணும்...சிரிக்கப்படாது...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...
லேட்டஸ்ட்டா வரோமோ இல்லியோ ஆனா டெய்லி லேட்டாவாவது வந்துடுவோம்..:0))//

நம்பிட்டோம்... முரண்தொடை அவ்ளோ நிச்சலனம்...!

//

உண்மை தான்...கடையை மூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்...பார்ப்போம்...

கலகலப்ரியா said...

அது சரி said...
//

அது சரி... புரியலைன்னு சொல்ற அழகு... இப்டியாவது திரும்ப திரும்ப படிக்கிறாய்ங்களே... =))//

ச்சே...டீஸன்ட்டா எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலருக்கே...எனக்கு படிக்கிறதுக்கு முன்னாடியே புரிஞ்சிடுச்சி...புரிஞ்சிடுச்சி...புரிஞ்சிடுச்சி.....சொன்னா நம்பணும்...சிரிக்கப்படாது... //

படிக்கிறதுக்கு முன்னாடியேவா... அப்டின்னா கண்டிப்பா நம்பதான் வேணும்.. அதும் கோர்ட்ல சொல்றாப்ல... மூணு வாட்டி வேற சொல்லியாறது.. வேற வழி... நம்பி... நம்பி... நம்பிட்டோம்...! (சிரிக்க கூட இல்லை பாருங்க..)

கலகலப்ரியா said...

//அது சரி said...
//
கலகலப்ரியா said...
//அது சரி said...
லேட்டஸ்ட்டா வரோமோ இல்லியோ ஆனா டெய்லி லேட்டாவாவது வந்துடுவோம்..:0))//

நம்பிட்டோம்... முரண்தொடை அவ்ளோ நிச்சலனம்...!

//

உண்மை தான்...கடையை மூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்...பார்ப்போம்...//

:O.. :O.. :O... இன்னாது... கடைய மூடுறதா..? விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் தகறாரா...? நாம மறியல் போராட்டம் நடத்துவோம்.. சீரியஸா...

அது சரி(18185106603874041862) said...

//

:O.. :O.. :O... இன்னாது... கடைய மூடுறதா..? விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் தகறாரா...? நாம மறியல் போராட்டம் நடத்துவோம்.. சீரியஸா...

//
ஹா ஹா...அப்படி டக்குன்னு கடைய மூட நாங்க என்ன இந்தியாவோட மக்கு மத்திய அரசா?? நான் கடைய மூடினா ஒரு பெரிய கலவரம் நடக்கும்னு எனக்கு தெரியாது?? எத்தனை பஸ்ஸை எரிப்பாங்க...எத்தனை பேரு தீக்குளிப்பாங்க..(சரியா படிக்கணும்...டீக்குடிப்பாங்கன்னு சொல்லலை)...அதனால மெதுவா மூடறதே தெரியாம மூடுவோமாக்கும்...:0)))

(on a serious note, as I am not a writer, hardly know anything about literature, writing is not for me...slowly i am trying to give up blogging.....let me see...)

கலகலப்ரியா said...

அப்டின்னா எல்லாரும் ப்ளாக் இழுத்து மூடிட்டு போயிண்டே இருக்கணும் போலயே... நமக்கு மட்டும் லக்கனுமு... லக்கியமு... எல்லாம் தெரியுதா... வாட் அன் இன்சல்ட்டு... இப்டியே பயமுறுத்தாதீங்க சாமீ... உருப்படியா எழுதிக்கிட்டிருக்கிறது ஒண்ணு... ரெண்டு பேருதான்... அவிங்களும் இப்டி பந்தா கேஸ் ஆய்ட்டா கஷ்டம்பா... என்னமோ... நாம ஒரு எழுத்தாளர இழக்கறோமோ இல்லியோ... நீங்க ஒரு வாசகிய இழக்கப் போறீங்க.. =))... நன்னா யோசிச்சி முடிவு பண்ணுங்கோ... அவ்வ்வ்வ்...

அய்யோ...எல்லாரும் கடையை இழுத்து மூடணும்னு நான் எங்க சொன்னேன்??...அதெல்லாம் நான் சொல்லவே இல்லை...நீங்க வேற எதுனா புதுசா கிளப்பி விட்றாதீங்க....:0))))

கடையை மூட்றதில என்னங்க பந்தா?? பந்தா தவிர வேறு காரணங்களும் இருக்கலாமில்லையா?? குறிப்பாக சைக்காலஜி??

வாசகர்களா என்று எனக்கு தெரியாது...ஆனா, நல்ல நண்பர்கள் என்று நான் நினைப்பவர்களை இழக்க மனமின்றியே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்....

அது சரி(18185106603874041862) said...

ஐ...மீ த ஹன்ட்ரத் :0))))

கலகலப்ரியா said...

//அய்யோ...எல்லாரும் கடையை இழுத்து மூடணும்னு நான் எங்க சொன்னேன்??...அதெல்லாம் நான் சொல்லவே இல்லை...நீங்க வேற எதுனா புதுசா கிளப்பி விட்றாதீங்க....:0)))//

தோடா... இவங்க பூதம் கிளப்பி விட்டு.. நம்மள சொல்லுறாய்ங்க...

//
கடையை மூட்றதில என்னங்க பந்தா?? பந்தா தவிர வேறு காரணங்களும் இருக்கலாமில்லையா?? குறிப்பாக சைக்காலஜி??//

ம்ம்... லிட்டரேச்சர் போயி... மகமாயி... இல்லை.. சைக்கலாஜி.. வந்தாச்சா... ராவணா..ஆமா.. பந்தாவுக்கும் சைக்காலஜிக்கும் சம்மந்தம் இல்லைங்கிறீங்களா... =))

//வாசகர்களா என்று எனக்கு தெரியாது...ஆனா, நல்ல நண்பர்கள் என்று நான் நினைப்பவர்களை இழக்க மனமின்றியே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்....//

அப்பாடா... நண்பர்கள் வாழ்க.. வளர்க... =))..

கலகலப்ரியா said...

//அது சரி said...
ஐ...மீ த ஹன்ட்ரத் :0))))//

ரொம்ம்ம்ம்ப முக்கியம்... ஒரு அலுமினியத்தட்டு (கழுவினது..) பரிசா கொடுங்கப்பா... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
ம்ம்... லிட்டரேச்சர் போயி... மகமாயி... இல்லை.. சைக்கலாஜி.. வந்தாச்சா... ராவணா..ஆமா.. பந்தாவுக்கும் சைக்காலஜிக்கும் சம்மந்தம் இல்லைங்கிறீங்களா... =))
//

ராவணா?? :0))))...இதுவும் நல்லாத் தான் இருக்கு...

பந்தாவுக்கும் சைக்காலஜிக்கும் சம்பந்தம் இருக்கு...உண்மை தான்...ஆனா, சைக்காலஜிக்கும் பந்தாவுக்கும் மட்டுமே சம்பந்தம் இல்ல...:0)))

//
//வாசகர்களா என்று எனக்கு தெரியாது...ஆனா, நல்ல நண்பர்கள் என்று நான் நினைப்பவர்களை இழக்க மனமின்றியே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்....//

அப்பாடா... நண்பர்கள் வாழ்க.. வளர்க... =))..
//

நீங்க இப்படி நண்பர்கள் வாழ்கன்னு சொல்றீங்க...ஆனா பல பேரு கொலைவெறியோட சுத்திக்கிட்டிருக்கலாம்....:0)))

(அதை விடுங்க...ஸ்விஸ்ல க்றிஸ்ட்மஸ் எல்லாம் எப்படி இருக்கு....இங்க பயங்கர ஸ்னோ...ட்ரைவ் பண்ணவே முடியலை....உங்க ஊர்ல எப்படி சமாளிக்கறீங்கன்னு எங்களுக்கெல்லாம் சொல்லித் தரப்படாதா??)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...
ஐ...மீ த ஹன்ட்ரத் :0))))//

ரொம்ம்ம்ம்ப முக்கியம்... ஒரு அலுமினியத்தட்டு (கழுவினது..) பரிசா கொடுங்கப்பா... =))

//

குடுக்கறதே குடுக்கறீங்க...கொஞ்சம் மேல காசு போட்டு வெள்ளித் தட்டா தந்தா நல்லாருக்கும்....அடகு வச்சி ஒரு குவாட்டராவது வாங்கிப்பேன்...(பின்ன, கோயிலுக்கு போவேன்னு சொன்னா நம்பவா போறீங்க??)

:0)))

கலகலப்ரியா said...

ஏன்.. ராவணனுக்கு என்ன குறைச்சல்...:)

காக்கா எல்லாம் கறுப்புங்கிறதுக்காக கறுப்பெல்லாம் காக்கா ஆய்டாதுன்னு... லாஜிக் நம்மளுக்கும் தெரியும்.. இத வச்சே சமாளிக்க ட்ரை பண்ணலாம்... அம்புட்டுதேன்...

அட கொலைக்கு அஞ்சினவங்களா நாம... (சாவறதுக்கு அஞ்சினன்னு சொல்லணுமோ... சரி எப்டி வேணா இருக்கட்டு..)..

ஆக்க்கா.... லண்டன்ல இந்த வருஷமும் ஸ்னோ வந்துட்டாரா... லாஸ்ட் இயர் வந்து பார்த்ததால லண்டன் புடிச்சிடுத்து போல... இங்க எப்டி மனேஜ் பண்றோம்ன்னு வந்து பாருங்க... =)).. முதல்ல winter tyre change பண்ணுங்க... அப்புறம்... லண்டன் காரங்க ஸ்னோ கிளீன் பண்ண வசதி பண்ணனும்... (அங்க சம்மர்ல மட்டும் டிரைவ் பண்ண முடியுதாக்கும்... கொடுமைடா சாமி... ரங்கநாதன் ஸ்ட்ரீட் தேவலாம்...=)))

கலகலப்ரியா said...

// அது சரி said...

:0)))//

நாமளே எப்போவாவது கோயில்னா எப்டி இருக்கும்னு மறந்துடப்டாதுன்னு கோயில் பக்கம் போவோம்.. இதில நீங்க சொல்லி நாம நம்பாம என்ன ஆய்ட போறது... அப்புறம் வெள்ளி எல்லாம் கட்டுப்படி ஆவாது... வேணும்னா எவர் சில்வர் கொடுக்கலாம்... =))...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஏன்.. ராவணனுக்கு என்ன குறைச்சல்...:)
//

ராவணனுக்கு என்ன குறைச்சலா? எல்லாரும் ராமன் பெரிய ஆளு, கடவுளோட அவதாரம்னு படம் காட்டினப்ப, அவன் கடவுளா இருந்தா எனக்கென்னன்னு துணிஞ்சி நின்ன ராவணன் தான் பெரியாளு....ராமன் எல்லாம் சும்மா டம்மி பீஸூ...அவனுக்கு சுக்ரீவன், அனுமன், அப்புறம் சுக்ரீவனோட ஒட்டு மொத்த படையே துணை....ராவணன் தன் கையே தனக்குதவின்னு எதிரித்து நின்னான்...கடைசியில தோத்துட்டாலும் ராவணன் ஹீரோ....ராமன் சைட் ரோல் :0)))

//
காக்கா எல்லாம் கறுப்புங்கிறதுக்காக கறுப்பெல்லாம் காக்கா ஆய்டாதுன்னு... லாஜிக் நம்மளுக்கும் தெரியும்.. இத வச்சே சமாளிக்க ட்ரை பண்ணலாம்... அம்புட்டுதேன்...
//

உங்க லாஜிக்ல தப்பு இருக்கு...எல்லா காக்காவும் கறுப்பு இல்ல...எங்க ஊர்ல வெள்ளை காக்கால்லாம் இருக்கு...:0)))

//
அட கொலைக்கு அஞ்சினவங்களா நாம... (சாவறதுக்கு அஞ்சினன்னு சொல்லணுமோ... சரி எப்டி வேணா இருக்கட்டு..)..
//

கொலையா....எவிட....என்ட குருவாயூரப்பா...ஞான் ஈயிடத்திலருந்து எஸ்கேப்பாயி...

//
ஆக்க்கா.... லண்டன்ல இந்த வருஷமும் ஸ்னோ வந்துட்டாரா... லாஸ்ட் இயர் வந்து பார்த்ததால லண்டன் புடிச்சிடுத்து போல... இங்க எப்டி மனேஜ் பண்றோம்ன்னு வந்து பாருங்க... =)).. முதல்ல winter tyre change பண்ணுங்க... அப்புறம்... லண்டன் காரங்க ஸ்னோ கிளீன் பண்ண வசதி பண்ணனும்... (அங்க சம்மர்ல மட்டும் டிரைவ் பண்ண முடியுதாக்கும்... கொடுமைடா சாமி... ரங்கநாதன் ஸ்ட்ரீட் தேவலாம்...=)))
//

ஸ்னோ க்ளீன் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்....ஆனா, திருப்பி திருப்பி வந்தா என்னன்னு க்ளீன் பண்றது??

கார் டயர் மாத்தில்லாம் பிரயோஜனமில்லைங்க....லாண்ட் ரோவரே நாலு ரவுண்ட் ஏத்துன மாதிரி ஸ்கிட் ஆகுது...இன்னிக்கி ஸ்காட்லண்ட்ல ஒரு ஏர்க்ராஃப்ட்டே ஸ்கிட் ஆகிடுச்சி...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

நாமளே எப்போவாவது கோயில்னா எப்டி இருக்கும்னு மறந்துடப்டாதுன்னு கோயில் பக்கம் போவோம்..
//

மறதி யாருக்கு...உள்ள இருக்க சாமிக்கா இல்ல உங்களுக்கா?? :0))
//
இதில நீங்க சொல்லி நாம நம்பாம என்ன ஆய்ட போறது... அப்புறம் வெள்ளி எல்லாம் கட்டுப்படி ஆவாது... வேணும்னா எவர் சில்வர் கொடுக்கலாம்... =))...
//

அய்ய...எவர்சில்வரை வச்சி என்ன பண்றது?? அதுக்கு அலுமினிய தட்டே குடுங்க போதும்....ஸ்விஸ்க்கு வந்து வாங்கல்லாம் முடியாது...இங்க போஸ்ட் பண்ணிருங்க...(நம்பர் 10, லண்டன் குறுக்குத் தெரு,LN4 2JS, லண்டன் யு.கே)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//ராவணனுக்கு என்ன குறைச்சலா? எல்லாரும் ராமன் பெரிய ஆளு, கடவுளோட அவதாரம்னு படம் காட்டினப்ப, அவன் கடவுளா இருந்தா எனக்கென்னன்னு துணிஞ்சி நின்ன ராவணன் தான் பெரியாளு....ராமன் எல்லாம் சும்மா டம்மி பீஸூ...அவனுக்கு சுக்ரீவன், அனுமன், அப்புறம் சுக்ரீவனோட ஒட்டு மொத்த படையே துணை....ராவணன் தன் கையே தனக்குதவின்னு எதிரித்து நின்னான்...கடைசியில தோத்துட்டாலும் ராவணன் ஹீரோ....ராமன் சைட் ரோல் :0)))//

அது அது..! நியாயம் தெரிஞ்சவா நாலு பேரு இருக்கான்னு நினைக்கிறப்போ... அவ்வ்வ்வ்... அழுவாச்சியா வருது.. =))

//
காக்கா எல்லாம் கறுப்புங்கிறதுக்காக கறுப்பெல்லாம் காக்கா ஆய்டாதுன்னு... லாஜிக் நம்மளுக்கும் தெரியும்.. இத வச்சே சமாளிக்க ட்ரை பண்ணலாம்... அம்புட்டுதேன்...
//

உங்க லாஜிக்ல தப்பு இருக்கு...எல்லா காக்காவும் கறுப்பு இல்ல...எங்க ஊர்ல வெள்ளை காக்கால்லாம் இருக்கு...:0)))//

ஃபேர் அண்ட் லவ்லி காக்கா போல... (இல்லைனா கொக்குக்கு உங்க ஊர்ல காக்குன்னு (அமெரிக்கன் ஸ்லாங்) பேரோ என்னமோ..) நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்பதில் உங்களை விட நான் உறுதியாக இருக்கிறேன்..

//
அட கொலைக்கு அஞ்சினவங்களா நாம... (சாவறதுக்கு அஞ்சினன்னு சொல்லணுமோ... சரி எப்டி வேணா இருக்கட்டு..)..
//

கொலையா....எவிட....என்ட குருவாயூரப்பா...ஞான் ஈயிடத்திலருந்து எஸ்கேப்பாயி...//

எஸ்கேப் ஆகா இவ்ளோ பிரம்ம பிரயத்தனம் பாருங்கோ.. .=))

//
ஆக்க்கா.... லண்டன்ல இந்த வருஷமும் ஸ்னோ வந்துட்டாரா... லாஸ்ட் இயர் வந்து பார்த்ததால லண்டன் புடிச்சிடுத்து போல... இங்க எப்டி மனேஜ் பண்றோம்ன்னு வந்து பாருங்க... =)).. முதல்ல winter tyre change பண்ணுங்க... அப்புறம்... லண்டன் காரங்க ஸ்னோ கிளீன் பண்ண வசதி பண்ணனும்... (அங்க சம்மர்ல மட்டும் டிரைவ் பண்ண முடியுதாக்கும்... கொடுமைடா சாமி... ரங்கநாதன் ஸ்ட்ரீட் தேவலாம்...=)))
//

ஸ்னோ க்ளீன் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்....ஆனா, திருப்பி திருப்பி வந்தா என்னன்னு க்ளீன் பண்றது??//

அப்டின்னா நீங்க கண்டிப்பா இங்க வந்துதான் பார்த்துக்கிடனும் எப்டின்னு... =))...

//கார் டயர் மாத்தில்லாம் பிரயோஜனமில்லைங்க....லாண்ட் ரோவரே நாலு ரவுண்ட் ஏத்துன மாதிரி ஸ்கிட் ஆகுது...இன்னிக்கி ஸ்காட்லண்ட்ல ஒரு ஏர்க்ராஃப்ட்டே ஸ்கிட் ஆகிடுச்சி...//

அடப்பாவிங்களா... அனுபவம் பத்தலை.... உப்பு தூவ மாட்டாய்ங்களோ... (கறிக்கு அல்ல... )))

கலகலப்ரியா said...

//அது சரி said...
//
கலகலப்ரியா said...

நாமளே எப்போவாவது கோயில்னா எப்டி இருக்கும்னு மறந்துடப்டாதுன்னு கோயில் பக்கம் போவோம்..
//

மறதி யாருக்கு...உள்ள இருக்க சாமிக்கா இல்ல உங்களுக்கா?? :0))//

ரெண்டு பேருக்கும்தான்...

//
இதில நீங்க சொல்லி நாம நம்பாம என்ன ஆய்ட போறது... அப்புறம் வெள்ளி எல்லாம் கட்டுப்படி ஆவாது... வேணும்னா எவர் சில்வர் கொடுக்கலாம்... =))...
//

அய்ய...எவர்சில்வரை வச்சி என்ன பண்றது?? அதுக்கு அலுமினிய தட்டே குடுங்க போதும்....ஸ்விஸ்க்கு வந்து வாங்கல்லாம் முடியாது...இங்க போஸ்ட் பண்ணிருங்க...(நம்பர் 10, லண்டன் குறுக்குத் தெரு,LN4 2JS, லண்டன் யு.கே)//

ஆமாமா.. நிஜ அட்ரஸு கொடுத்தா நெசம்மாவே வந்து எலுமிச்சம் பழத்துக்கு எவர்சில்வர் தட்டுன்னு வித்துடுவோம் பாருங்க... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
அது அது..! நியாயம் தெரிஞ்சவா நாலு பேரு இருக்கான்னு நினைக்கிறப்போ... அவ்வ்வ்வ்... அழுவாச்சியா வருது.. =))
//

ப்ப்பச்...இப்பிடியெல்லாம் அழப்படாது...உங்களைப் பார்த்து நாளைக்கு உங்க பதிவுக்கு வர்ற எல்லாரும் அழப் போறாங்க...(இன்னிக்கே கவிதையை படிச்சிட்டு பல பேரு முடியை பிச்சிக்கிட்டு அந்த வலி தாங்காம அழுதுக்கிட்டு இருக்காங்களாம்...நாளைக்கு மீதிப் பேரும் அழப் போறாங்க....)

//
ஃபேர் அண்ட் லவ்லி காக்கா போல... (இல்லைனா கொக்குக்கு உங்க ஊர்ல காக்குன்னு (அமெரிக்கன் ஸ்லாங்) பேரோ என்னமோ..) நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்பதில் உங்களை விட நான் உறுதியாக இருக்கிறேன்..
//

அமெரிக்கா பேரிக்கால்லாம் எனக்கு தெரியாதுங்க....சிக்கன் சிக்கினா சிக்கன் பிரியாணி...காக்கா கிடைச்சா காக்கா பிரியாணி...அவ்ளோ தான்...:0)))

//கார் டயர் மாத்தில்லாம் பிரயோஜனமில்லைங்க....லாண்ட் ரோவரே நாலு ரவுண்ட் ஏத்துன மாதிரி ஸ்கிட் ஆகுது...இன்னிக்கி ஸ்காட்லண்ட்ல ஒரு ஏர்க்ராஃப்ட்டே ஸ்கிட் ஆகிடுச்சி...//

அடப்பாவிங்களா... அனுபவம் பத்தலை.... உப்பு தூவ மாட்டாய்ங்களோ... (கறிக்கு அல்ல... )))
//

உப்பு போட்டாங்க..(ரன்வேல தான்...) ஆனா பக்கத்துல இருக்க யுனிவர்சிட்டி பொண்ணுங்க அதெல்லாம் கலெக்ட் பண்ணி டக்கீலா அடிச்சிட்டாங்களாம்...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
அய்ய...எவர்சில்வரை வச்சி என்ன பண்றது?? அதுக்கு அலுமினிய தட்டே குடுங்க போதும்....ஸ்விஸ்க்கு வந்து வாங்கல்லாம் முடியாது...இங்க போஸ்ட் பண்ணிருங்க...(நம்பர் 10, லண்டன் குறுக்குத் தெரு,LN4 2JS, லண்டன் யு.கே)//

ஆமாமா.. நிஜ அட்ரஸு கொடுத்தா நெசம்மாவே வந்து எலுமிச்சம் பழத்துக்கு எவர்சில்வர் தட்டுன்னு வித்துடுவோம் பாருங்க... =))

//

நீங்க விக்க மாட்டீங்க...ஆனா நெட்ல இருந்து அட்ரஸ் கலெக்ட் பண்ணி பல பேரு வித்துக்கிட்டு இருக்காங்க...கொஞ்சம் விட்டா நான் தான் டோனி ப்ளேய்ர்னு எங்கனா பேங்க்ல லோன் வாங்கிருவாய்ங்க போலருக்கு...(அதனால தான் நெட்ல நான் அட்ரஸ் கொடுக்கறதில்லை...)

கலகலப்ரியா said...

//அது சரி

ப்ப்பச்...இப்பிடியெல்லாம் அழப்படாது...உங்களைப் பார்த்து நாளைக்கு உங்க பதிவுக்கு வர்ற எல்லாரும் அழப் போறாங்க...(இன்னிக்கே கவிதையை படிச்சிட்டு பல பேரு முடியை பிச்சிக்கிட்டு அந்த வலி தாங்காம அழுதுக்கிட்டு இருக்காங்களாம்...நாளைக்கு மீதிப் பேரும் அழப் போறாங்க....)//

=)))))... என்னோட கவிதை படிக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு முடியே இல்ல... ஸோ பாதிப்பு அவ்ளவா இருக்காதுன்னு நம்பறேன்... =))

//
அமெரிக்கா பேரிக்கால்லாம் எனக்கு தெரியாதுங்க....சிக்கன் சிக்கினா சிக்கன் பிரியாணி...காக்கா கிடைச்சா காக்கா பிரியாணி...அவ்ளோ தான்...:0)))//

அது காக்காவோ குருவியோ... அங்க எதுக்கு பிரியா... ஆணின்னு எல்லாம் நல்லாவே இல்ல சொல்லிப்புட்டேன்... =))

//
உப்பு போட்டாங்க..(ரன்வேல தான்...) ஆனா பக்கத்துல இருக்க யுனிவர்சிட்டி பொண்ணுங்க அதெல்லாம் கலெக்ட் பண்ணி டக்கீலா அடிச்சிட்டாங்களாம்...:0)))//

ஏங்க..? அங்க எல்லாருமே இதே வேலையாதான் இருக்காய்ங்களா..? ஹும்... பிரித்தானியாவ இனி கோத்தபாயலதான் காப்பாத்த முடியும்.. =))..

கலகலப்ரியா said...

//
நீங்க விக்க மாட்டீங்க...ஆனா நெட்ல இருந்து அட்ரஸ் கலெக்ட் பண்ணி பல பேரு வித்துக்கிட்டு இருக்காங்க...கொஞ்சம் விட்டா நான் தான் டோனி ப்ளேய்ர்னு எங்கனா பேங்க்ல லோன் வாங்கிருவாய்ங்க போலருக்கு...(அதனால தான் நெட்ல நான் அட்ரஸ் கொடுக்கறதில்லை...) //

அச்சோ... அது வேறயா... அதுக்கு டோனி அட்ரெஸ் போறுமே... =)).. சரி சரி..... தேவைனா கேட்டு வாங்கிக்கறோம்.. =))... போஸ்ட்ல... =)))))...

கலகலப்ரியா said...

டயமு.. டயமு... ஆபீஸு.. இயர் எண்டு... இப்போ மீ த எஸ்கேப்பு... அவ்வ்வ்வ்... :(((... (காப்பி ரைட்டு ப்ரியாவு... இத காப்பி பண்ணி ரஜினி ஃபிலிமு-ல பாட்டுப் போட்டுடுவாய்ங்கப்பு... =)))..

குட்டு நைட்டு...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
=)))))... என்னோட கவிதை படிக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு முடியே இல்ல... ஸோ பாதிப்பு அவ்ளவா இருக்காதுன்னு நம்பறேன்... =))
//

ஆஹா...அப்படியா சேதி...நான் அந்த முக்கால்வாசி பேர்ல இல்ல...அதனால வலிக்குது...:0)))

//
அது காக்காவோ குருவியோ... அங்க எதுக்கு பிரியா... ஆணின்னு எல்லாம் நல்லாவே இல்ல சொல்லிப்புட்டேன்... =))
//

பிரியாணியை பிரியா...ஆணின்னுக்கூட படிக்கலாமா....ம்ம்ம்....மொதல்ல நான் தமிழ் படிக்கணும் போலருக்கே...

//
ஏங்க..? அங்க எல்லாருமே இதே வேலையாதான் இருக்காய்ங்களா..? ஹும்... பிரித்தானியாவ இனி கோத்தபாயலதான் காப்பாத்த முடியும்.. =))..
//

ச்சேசே....அதே வேலையால்லாம் இல்லைங்க...ரொம்ப குளிர்....பாவம்....ஸ்டூடன்ட்ஸ் என்ன பண்ணுவாங்க...வறுமையின் கொடுமை....டக்கீலா வாங்க மட்டும் தான் காசு இருந்துச்சி...உப்பு வாங்க பைசா இல்ல...அதான் ரன்வேல போட்ருந்த உப்பை கலெக்ட் பண்ணிட்டாங்க... மத்தபடி எல்லாம் நல்ல புள்ளைக தான்...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

அச்சோ... அது வேறயா... அதுக்கு டோனி அட்ரெஸ் போறுமே... =)).. சரி சரி..... தேவைனா கேட்டு வாங்கிக்கறோம்.. =))... போஸ்ட்ல... =)))))...
//

அது ரொம்ப ஈஸி.....அவரு நம்ம ஏரியா தான்...Bayswater

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
டயமு.. டயமு... ஆபீஸு.. இயர் எண்டு... இப்போ மீ த எஸ்கேப்பு... அவ்வ்வ்வ்... :(((... (காப்பி ரைட்டு ப்ரியாவு... இத காப்பி பண்ணி ரஜினி ஃபிலிமு-ல பாட்டுப் போட்டுடுவாய்ங்கப்பு... =)))..

குட்டு நைட்டு...

//

ஆமா...நான் கூட நாளைக்கு ஆஃபிஸ் போகணும் போலருக்கு...அதனால குட்நைட்... Have a tight sleep...and have a good day tomorrow...

Happy Holidays...!

கலகலப்ரியா said...

இப்போ தமிழ்தானே படிச்சிக்கிட்டிருக்கீங்க... =))...

ஆமாம் பாவம்பா... உப்புக்கில்லா டக்கீலாஸ்... =))

நானு காலைல எழுந்திரிக்கனும்... அவ்வ்வ்....

கலகலப்ரியா said...

ம்ம்... சரி இன்னும் டயம் இருக்கு போல... வலிக்காம இருக்க... =))...

கலகலப்ரியா said...

same to you..! merry x-mas & happy new year... (athukkulla oru idugai poada maatteenga..=))..

nite...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
இப்போ தமிழ்தானே படிச்சிக்கிட்டிருக்கீங்க... =))...

//

அப்பிடியா..:0)))

//
நானு காலைல எழுந்திரிக்கனும்... அவ்வ்வ்....
//

சரி சரி...தூங்கி வழியாதீங்க...தூங்க போங்க...அப்புறம் நாளைக்கு ஆஃபிஸ்ல போய் என்னை திட்டக்கூடாது....

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
same to you..! merry x-mas & happy new year... (athukkulla oru idugai poada maatteenga..=))..
//

Thank you...Have a great new year..

//
nite...
//

Good night..

குடுகுடுப்பை said...

ஈழத்தமிழரின் சிரமங்களை கவிதையாக எழுதியிருப்பது துபாய் ராஜாவின் பின்னூட்டம் மூலம் அறிகிறேன்.

இது தெரியாமல் நான் குடிகார எதிர்கவுஜ போட நினைத்தேன்.

நெத்தியில் அறையும்படி நேரடியாகவே எழுதலாமோ?..

துபாய் ராஜா said...

இங்கே எழுதிய எனது மூன்று கருத்துக்களையும் 'ராஜா சபை'யிலும் எழுதி கொ(ல்ல)ள்ளட்டுமா ப்ரியா...
(ஒரு பதிவா போட்டுடலாம்ன்னு இருக்கேன்...)

பித்தனின் வாக்கு said...

இந்தக் கவிதைக்கு நான் எனதறிவில் சாவுக்கும், வாழ்விற்க்கும் இடையிலான ஆன்மாவின் போராட்டம் என எடுத்துக் கொள்கின்றேன்.
// பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //
உடலில் ஆன்மா வசிப்பது என்று கொள்ளலாம் அல்லவா?
// கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...! //
வாழ்வே, சாவே என்று தெரியாமல் நிதம் வாழும் வாழ்க்கை என்று கொள்ளலாம்.
இருந்தாலும் எனது மண்டைக்கு விளங்கவில்லை. நீங்க விளக்கினால் சரி.

Anonymous said...

arumai...valthukal akka

கலகலப்ரியா said...

//அது சரி said...
//
கலகலப்ரியா said...
இப்போ தமிழ்தானே படிச்சிக்கிட்டிருக்கீங்க... =))...

//

அப்பிடியா..:0)))

//
நானு காலைல எழுந்திரிக்கனும்... அவ்வ்வ்....
//

சரி சரி...தூங்கி வழியாதீங்க...தூங்க போங்க...அப்புறம் நாளைக்கு ஆஃபிஸ்ல போய் என்னை திட்டக்கூடாது....//

அது திட்டியாச்சு... என்னைத்தான்... =))

கலகலப்ரியா said...

// குடுகுடுப்பை said...
ஈழத்தமிழரின் சிரமங்களை கவிதையாக எழுதியிருப்பது துபாய் ராஜாவின் பின்னூட்டம் மூலம் அறிகிறேன்.

இது தெரியாமல் நான் குடிகார எதிர்கவுஜ போட நினைத்தேன்.

நெத்தியில் அறையும்படி நேரடியாகவே எழுதலாமோ?..//

அதனால் என்ன... எதிர்க் கவிதை எல்லாம் நல்ல விஷயம்தான்... அப்புறம் நெத்தில அடிக்கிற மாதிரியும் சொல்லிக்கிட்டுதான் இருக்கோம்... இது நமக்குள்ள கவிதாயினின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தி உக்காந்திருக்கிறவா பண்ற அழிம்பு... =))

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...
இங்கே எழுதிய எனது மூன்று கருத்துக்களையும் 'ராஜா சபை'யிலும் எழுதி கொ(ல்ல)ள்ளட்டுமா ப்ரியா...
(ஒரு பதிவா போட்டுடலாம்ன்னு இருக்கேன்...)//

தோடா... இதுக்கு என் கிட்ட அனுமதி கேக்கணுமா... உங்க கவிதை... உங்க ப்ளாக்... கலக்குங்க...

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...
இந்தக் கவிதைக்கு நான் எனதறிவில் சாவுக்கும், வாழ்விற்க்கும் இடையிலான ஆன்மாவின் போராட்டம் என எடுத்துக் கொள்கின்றேன்.
// பருந்தொன்றமர்ந்து பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம் //
உடலில் ஆன்மா வசிப்பது என்று கொள்ளலாம் அல்லவா?
// கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...! //
வாழ்வே, சாவே என்று தெரியாமல் நிதம் வாழும் வாழ்க்கை என்று கொள்ளலாம்.
இருந்தாலும் எனது மண்டைக்கு விளங்கவில்லை. நீங்க விளக்கினால் சரி//

=)).. நன்றி பித்தன்... உங்க மண்டை என்ன பாஷை விளங்கிக்கொள்ளும் என்று எனக்குத் தெரியாதே... o))

கலகலப்ரியா said...

//
deeps said...
arumai...valthukal akka//

thank you deeps..

Sanjai Gandhi said...

//
//SanjaiGandhi™ said...
புரியலை//

ம்க்கும்... புரிஞ்சிட்டாலும்... =))... (தமிழ் படிக்க தெரியாதான்னு என்னை யாரோ கேக்குற மாதிரியே இருக்குப்பா...) //

அந்த பயம் இருக்கட்டும் வாபா.. :)))))))))))))

கலகலப்ரியா said...

//SanjaiGandhi™ said...

//
//SanjaiGandhi™ said...
புரியலை//

ம்க்கும்... புரிஞ்சிட்டாலும்... =))... (தமிழ் படிக்க தெரியாதான்னு என்னை யாரோ கேக்குற மாதிரியே இருக்குப்பா...) //

அந்த பயம் இருக்கட்டும் வாபா.. :)))))))))))))//

மோனே சஞ்சு... வேணாம்... தூங்கிட்டிருக்கிற சந்திரமுகிய எழுப்பி விட்டா அப்புறம் தாங்க முடியாது... ஆமாம்...

Sanjai Gandhi said...

//மோனே சஞ்சு... வேணாம்... தூங்கிட்டிருக்கிற சந்திரமுகிய எழுப்பி விட்டா அப்புறம் தாங்க முடியாது... ஆமாம்...

//

லகலகலகலகலகலகப் ப்ரியா...

கலகலப்ரியா said...

// SanjaiGandhi™ said...

//மோனே சஞ்சு... வேணாம்... தூங்கிட்டிருக்கிற சந்திரமுகிய எழுப்பி விட்டா அப்புறம் தாங்க முடியாது... ஆமாம்...

//

லகலகலகலகலகலகப் ப்ரியா...//

ஆ... காலைலயே கும்மியா...:O

பா.ராஜாராம் said...

கட்டன் சாயா,
கை வெடி குண்டு,
நொறுங்கிய எழும்பு நிமிர்த்தும்
கத்தாளை மருந்து,..

வீழ்வேனென்று நினைத்தாயோ என்கிற
மருந்தைப் போன்ற
ஒரு மருந்து!

வாழ்த்துக்கள்டா குட்டீஸ்!

(இவை,கவிதை குறித்தன்று.)

hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

கட்டன் சாயா,
கை வெடி குண்டு,
நொறுங்கிய எழும்பு நிமிர்த்தும்
கத்தாளை மருந்து,..

வீழ்வேனென்று நினைத்தாயோ என்கிற
மருந்தைப் போன்ற
ஒரு மருந்து!

வாழ்த்துக்கள்டா குட்டீஸ்!

(இவை,கவிதை குறித்தன்று.)//

நன்றி பா.ரா..! வழக்கம் போல... அழகா சொல்லி இருக்கீங்க..!

கலகலப்ரியா said...

// hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com//

ty..ram..