நடராஜநிலை நாரைபோல்
நட்சத்திர நிழற்போக்கில்
நயனங்கள் நகர்த்தியபடி
நிலைகொண்டிருக்கும் நிலா
இரண்டிற்குமான இணைப்பிடத்தில்
ஈர்ப்பியல்பில்லாதியங்கி
வழியெதுவும் வரையாது
விரைந்து கொண்டிருக்கும் விண்மீன்
தன்போக்கில் திரும்புகையில்
தன் தலைவன் தொலைந்ததெங்கே?
சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறுக்கிச் சிரித்தபடி நிலவைச்
சுற்றிச்செல்லும் சுடர் அடக்கிய
செம்மை சுடும் செல் விலகி..!
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
30 ஊக்கம்::
கொங்கணவக்கொக்கு, நடராஜநிலை நாரை, ஈர்ப்பியல்பில்லாதியங்கி, செம்மைசுடும் செல் விலகி..அம்மம்மாடியோ!!.
சரியான வீகெண்ட் ஹோம் ஒர்க்:(..அவ்வ்வ்வ்வ்.
அக்கா, விளக்கவுரை கொடுங்க.
two in one ட்ரீட்டா? ரைட்டு:))
//ஈர்ப்பியல்பில்லாதியங்கி//
நான் ரொம்ப ரிஸ்க் எடுக்கல இந்த வாக்கியத்தை விட்டுட்டு அடுத்த வரிக்கு தாவிட்டேன் :)
//உறவுகள் நகவிதம்..//
intha kavithayai nan nadattum vezham endra ithalil velida ungal anumathi vendum
ennai todarbu kolla
karthik.lv@gmail.com or editor.vezham@gmail.com
-LK
ஒருநாளு இல்ல ஒருநாளு... நானும் இந்தமாதிரி எழுதி மண்ட காய விடுறனா இல்லையான்னு பாருங்க.....
ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொண்டு...ஜீட்....
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
எதுவானாலும் நீங்கள் எழுதிய கவிதை நன்றாக உள்ளது.
உங்க கவிதைல கொஞ்சம் நிறைவின்மைத் தெரியுதுங்க இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் போல...
மொழி அடர்த்தி அழகு
மொழிபெயர்ப்புக்கு மிக்க நன்றி
இது குறித்த என் இடுகை
http://nesamithran.blogspot.com/2010/04/blog-post.html
// இதுக்கே தாவு தீர்ந்து போச்சு சாமி..//
படிச்ச எனக்கும் தான் .. ரெண்டு நாளா இதைப் பத்தி யோசித்து
// இதுக்கே தாவு தீர்ந்து போச்சு சாமி..//
படிச்ச எனக்கும் தான் .. ரெண்டு நாளா இதைப் பத்தி யோசித்து
// இதுக்கே தாவு தீர்ந்து போச்சு சாமி..//
படிச்ச எனக்கும் தான் .. ரெண்டு நாளா இதைப் பத்தி யோசித்து
// இதுக்கே தாவு தீர்ந்து போச்சு சாமி..//
படிச்ச எனக்கும் தான் .. ரெண்டு நாளா இதைப் பத்தி யோசித்து
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா ; என்று கேள்வி பட்டிருக்கிறேன் .ஆனால் இதென்ன கொங்கணவ கொக்கு ..................புரியவில்லை.
வானம்பாடிகள் வீட்டுப்பாடம் முடிச்சதும் அனுப்புங்க.
வந்திருந்தேன் பிரியா. நேசமித்திரன் கவிதையை ....... உன் துணிச்சலைப் பாராட்டாமல் போக முடியவில்லை.
//
நடராஜநிலை நாரைபோல்
//
இது நல்லாருக்கு...நாரையை இப்படி யோசிச்சது இல்ல...
உங்க கவிதய நான் மொழிபெயர்த்த மாதிரி இருக்கு ப்ரியா :))
உங்க கவிதை தான் அந்த விண்மீன் னு நினைக்கறன் :)
naa ithuthaan inga 1st time......:)
maari maari click seithu mithra sir in intraikkana idukaikku kaaranam therinthu konden...:)
ungalin aangila mazhipeyarppum azhgu..!
jess avunga sonnathu pola..,
thyriyam thaan ungalukku.
azhagaana thyriyam:)
vaazhthukal.....!!
intha kokku...puriyalanga yenakku!
சூப்பரா இருக்குங்க கவிதை..
பொழிப்புரை வேண்டுவோர் ஐம்பது டாலர் வரைவோலையோடு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி........
மிகவும் அருமையான மொழிமாற்றம் . அழகாக சொல்லி இருக்கீங்க . வாழ்த்துக்கள் . தொடருங்கள் .
கவிதையும் மொழிபெயர்ப்பும் அழகு...
நன்றி பாலா சார்... டபுள் ட்ரீட்டா... அவ்வ்வ்... என்னோட கவுஜயை அங்கீகரித்தமைக்கு நன்றி..
நன்றி சைவகொத்து... அவ்வ்வ்...
நன்றி ஆயில்யன்.. அப்போ ஃபுல் ஸ்கிப்தானா...
நன்றி LK... o.k.. =))
பாலாசி உன்னால் முடியும் தம்பி... நாமளும் ஒரு லைன் ஹைலைட் பண்ணி சூப்பரப்புன்னு பின்னூட்டுவோம்ல...
மணிஜீ... உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு...
தலிவா நாம பேமஸ் ஆவ வழி சொல்லும் நீர் வாழி...
ரொம்ப நன்றி அர்ச்சனா... கொங்கணவன் கண்களிற் பட்டுச் சாம்பலான கொக்கு.. ஹிஹி..
ரொம்ப நன்றி மித்ரன்... இதுவே நமக்கு சாஸ்திப்பா சாமீ... அது அதுவா பேசினாதான் உண்டு... )))
நசரேயன்... தாவு தீர்ந்து போன மேட்டர நாலு தடவை சொல்லி உறுதிப் படுத்திக்கனுமா... கூகிள் உங்களையும் படுத்திட்டாளா...ரா...
குடுகுடுப்பையார்... இருங்க இருங்க... ஒரு நாள் சேர்த்து வச்சு உடுக்கை அடிக்கறோம்...
ஜெஸ்வந்தி வாங்க.. வரணும்... சொல்லாமக் கொள்ளாம வரலாம்... ஆனா சொல்லாமப் போகப்டாது... ஹிஹி.. எனக்கு எப்பவுமே அசட்டுத் துணிச்சல் ஜாஸ்தி...
அதுசரி நன்றிங்... ஒரு லைன் புடிச்சு பின்னூட்டற டெக்குனிக்கு நீங்களும் புடிச்சாச்சா... வெரி குட்டு...
சந்தனா... அவ்வ்வ்வ்... வர வர ஒண்ணும் செரியில்ல... எப்பூடி எல்லாம் டவுட் வருது... அவ்வ்வ்...
ரொம்ப்ப நன்றி இரசிகை.. உங்க அன்புக்கு நன்றி மக்கா... உங்க பின்னூட்டம் மிக மிக அழகு... அப்புறம் கொக்கை விடுங்க அது சாம்பலாய்டுத்து...
ரொம்ப நன்றி முகிலன்... ஆரம்பிச்சிட்டாய்ங்கையா ஆரம்பிச்சிட்டாய்ங்க...
ரொம்ப நன்றி பனித்துளி சங்கர்... உங்க தொடர் வருகைக்கும்...
மிக்க நன்றி அஹமது இர்ஷாத்..வருகைக்கும்..
//க.பாலாசி said...
ஒருநாளு இல்ல ஒருநாளு... நானும் இந்தமாதிரி எழுதி மண்ட காய விடுறனா இல்லையான்னு பாருங்க.....
//
பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள் :)
துவக்கமே அருமை ........ மொழியை இத்தனை அடர்த்தியாய் கையாளும் கலையை எங்கு கற்றீர்கள்.... ! வாழ்த்துக்கள்!
சின்னம்மிணியோ... இது உங்களுக்கே நியாயமா... அவ்வ்வ்...
நன்றி கவிதன்...
அருமை நண்பரே nice work
Post a Comment