header photo

Thursday, November 10, 2011

யாருமில்லாமலில்லை











கண்ணாடிக்கு 
அந்தப் பக்கம் 
இந்த மழை 
கால் மாற்றி
கால் மாற்றி
எனக்காகவே 
காத்துக் கொண்டிருக்கிறது

விடாமல் 
உயிரை வாங்குகிறது 
ஆகிய சலிப்புகள் 
என்னது என்பதை
இன்னும் கொஞ்சம்
உறுதி செய்கின்றன

இளக்காரத்தை 
ஏளனம் செய்தபடி
காலொடிய நிற்கிறது
கனமழை.. 

இன்னும் 
என்ன வேடிக்கை
இருக்கையைப் பின் தள்ளி
எழுந்து கொண்டேன்.. 

10 ஊக்கம்::

குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க: எவருமில்லாமலில்லை

SURYAJEEVA said...

அசைபோட்டு கொண்டு இருக்கிறேன்

அன்புடன் நான் said...

மழை... சிலிர்க்கிறது

vasu balaji said...

மழையொழுக்கு மாதிரியே இருக்கிறது கவிதை.
கால் மாற்றி கால் மாற்றிக் காத்துக் கொண்டிருப்பது அருமையான கற்பனை.

கலகலப்ரியா said...

@குடுகுடுப்பை

எனக்கு எதிர்க்கவுஜ புடிச்சிருக்கறதால தப்பிச்சீரு... =)))

கலகலப்ரியா said...

@suryajeeva

நன்றி சூர்யாஜீவா

கலகலப்ரியா said...

இல்லைனா சூர்யஜீவா?

கலகலப்ரியா said...

@சி.கருணாகரசு

நன்றி கருணாகரசு

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி சார்..

'பரிவை' சே.குமார் said...

கவிதை முதல் மழைத்துளி உடம்பில் பட்டது போல் சிலிர்க்கிறது....