header photo
Showing posts with label அதிபின்நவீனத்துவம். Show all posts
Showing posts with label அதிபின்நவீனத்துவம். Show all posts

Monday, May 3, 2010

சித்திராப் பௌர்ணமியின் தொடரலைகள்...

சற்றுமுன் கடந்தவை.. 


பிடரி முடியின் பக்கம் சிலிர்த்து, மூக்கு முடியின் பக்கம் கண்ணை மூடிக்கொள்ளும் சாதுப் பூனையின் பாற் கூஜாக்கள் கண்ணைத் திறந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கின்றன. 

குரங்கின் ஈரல் தேடும் முதலைகளின் உடலரைந்த தடங்கள் கண்டு கிளைகள் கொண்டிருந்த பனைமரமொன்றில் 'தாவி' மெளனமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" 

கேத்திர சூத்திரத்தை மீறாத நீண்ட நேர்கோட்டின் குறுக்கால் கோணலாகக் கோடிழுத்து மேல் நுனியில் கிடைகோட்டின் ஜாதி மட்டம் இருப்பதாக புதிய தேற்றம் வாசிக்கப்பட்டது. கோட்டின் பாதியை அழி ரப்பர் கொண்டு தேய்த்து நிலைக்கோட்டை நீளமாக்கும் முயற்சியின் பின்நவீனத்துவ நிலையா இது? மட்டம் தவிர்த்து.. கோடுகள் சந்திக்கும் மையப் புள்ளியைச் சுற்றிய பாகை முன்னூற்றி அறுபதென்றேன். குறுக்கிட்ட கோட்டினால் உண்டான பாகைகள் விகிதத்தில் பாரிய வேறுபாடு சுட்டிக் காட்டப்பட்டது. இங்கு கோணற் கோட்டின் அவசியம் என்னவென்றேன். மையப்புள்ளி திடீரெனத் தொலைந்து விட்டிருந்தது. ஆங்காங்கு நாலு நுனிகள் வரையறுக்க முடியாத திசைகளில் தொங்கிக் கொண்டிருந்தன. கேத்திர சூத்திரத்துடன், கோத்திரமும் செத்துவிட்டிருந்தது. 

பித்தளைத் தாம்பாளமொன்றில் அரிசி பரப்பி எதிரிலிருந்த எஸ்கிமோவின் கைவிரல் பிடித்து 'அ'-விற்கான சுழி வரைந்தேன். கையுதறி விடுவித்து மேலும் இரு சுழி வரைந்து ஆயுத எழுத்து போலாக்கி பக்கத்தில் மீன்கண் வடிவில் இரு சுற்று சுற்றி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்குத் "தெரிந்ததை" செவ்வனே செய்ததென்ற திருப்தியுடன் அதன் பனிக் கூடாரத்தின் மேல் வைத்திருந்த என் கோமாளி முகமூடியை அணிந்துகொண்டு திரும்பி விட்டேன். 

(என்ன இதெல்லாம்னு கேட்பவர்கள் தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..)
____________________________________________________________________________