header photo
Showing posts with label அது சரி. Show all posts
Showing posts with label அது சரி. Show all posts

Saturday, August 21, 2010

பீட்ரூட்டும் ராஜபக்ஸேவும்.. கொக்கத்தடியும்..




புரட்சி செய்வது இப்படியா(ஆ)..? பாகம் ஒன்று(அய்யாங்... டொய்ங்-
ற்கு எதிர்ச்சொல் தெரியாதவர்களா நீங்கள்..)



______________________________________________________________________
(நான்)- (என்னை அடைப்புக்குள் அடக்கியிருக்கிறேன்.. அவையடக்கம்... நான் என்று ஆரம்பிப்பது ஆணவத்தைக் குறிக்கும்... என்பதால்..)இத்துப் போன சவரக்கத்தியைக் கையில் எடுப்பதா (உங்க ஆத்தா சத்தியமா சவரம் செய்வதற்கல்ல), முனை மழுங்கிய மொக்கைக் கத்தியைக் கையில் எடுப்பதா என்பதை என் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்!!!!!!!! 

இன்று.. ஆம் இன்று.. (சனிக்கிழமை).. “அது சரி” என்னும் அராஜகப் பதிவர் என்னை இரண்டும் கெட்டான் நிலமைக்குத் தள்ளியிருக்கிறார். சவரக்கத்தியா? மொக்கைக்கத்தியா? எதை எடுப்பது? குழப்பம்.. ஒரே குழப்பம்... (ஆங்கிலத்தில் இதைக் கான்பீஈஈசன் என்று குறிப்பிடுகிறார்கள்..) குழப்பத்தில்தான் பெரும்பாலும் புரட்சி வெடிக்கிறது(இல்லை... அவசரப்பட வேண்டாம்.. குழப்பத்தைக் கொதித்த விளக்கெண்ணெயென்றும், புரட்சியைக் கடுகு என்றும் தவறாக எடை போட வேண்டாம்.. அதுக்கு வருவோம் நிதானமாக..) 

சரி.. எதை எடுத்தாலென்ன அறுவைதான் குறிக்கோள்... அப்படியென்று நினைத்தாலும்.. , ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும்.. இல்லை வேண்டாம்.. இதற்கெல்லாம் பிரபல பதிவர்கள் பக்கத்தில் போட்டிருக்கும் படத்தைப் பிரதியெடுத்து இங்கு ஒட்டுவதற்கு எனக்கு நேரமில்லை... ஆதலால்... ம்ம்...ஆ.. இதுதான் சரி.. பெருவிரலையும்.. (இதுக்கே இவ்வளவு குழப்பமென்றால் புரட்சி வெடிக்காது என்ன செய்யும்..) நீட்டிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு விரலைத் தொடு என்று கேட்பதற்குக் கூட நாதியற்ற நான் (இந்த இடத்தில் நான் வந்தால், அதுக்கு ஆணவமில்லை) லியோனி, பாப்பையாவை,....யாவை எல்லாம் அழைத்துப் பட்டிமன்றம் நடத்த மட்டும் எப்படி முடியும்..

”பெக்கர்ஸ் காண்ட் பி சூஸ்ர்ஸ்” (என் தாய்த்தமிழுக்கு நன்றி..).. என்று சும்மாவா சொன்னார்கள்.. போகட்டும்...  


ஈழத்தில்... ஆட்டுக்கும், மாட்டுக்கும் (சமயத்தில் மனிதனுக்கும்) உயரமான மரத்திலிருந்து இலை பறித்துக் கொடுப்பதற்குக் கொக்கத்தடி என்ற ஒரு உபகரணத்தை உபயோகிப்பார்கள். ஆம்.. அது ஒரு சாதனை.. பழந்தமிழனின் கண்டுபிடிப்புகளில் வரலாற்று முக்கியமான உபகரணமது... பயன்படுத்தும் தருணமிது.. நீளமான தடியின் முனையில், சத்துவம் (இந்தச் சொல் சமத்துவத்திலிருந்து வந்ததா, அல்லது வேத ஆகமங்களிலிருந்து வந்ததா என்று நான் இன்று வரை ஆராய்ச்சி செய்யவில்லை) என்றழைக்கப்படும் ஒரு கத்தியைக் கட்டி... அறுப்பார்கள்... (இலையை..).. அதை வைத்து வெங்காயம் அரிவது சற்றுச் சிரமம்தான்.. ஆனால் கழுத்தை அறுக்கலாமென்று ஆணித்தரமாகத் தோன்றியதால்.. கால் விலை கொடுத்து (இங்கிருந்து அங்கு தொலைபேசியதைத்தான்.. “கால் விலை”யெனக் குறிப்பிட்டேன்..) அதை வருவித்து விட்டேன்.. 

ஆனால் தோழர்களே (மை டியர் ஃப்ரண்ட்ஸ்.. என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்)... இதையும் தீர்மானித்தது நானல்ல... எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்கள் ஆன்மீகவாதிகள்... எனக்கு இங்கும் இரண்டும் கெட்ட நிலைதான்.. ஆன்மீகவாதியுமல்ல.. நாத்திகையும் அல்ல... (என்ன கொடுமை இது... எழுதும் நேரத்தில்.. உறைக்கும் உண்மைகளை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.. ஒப்புக்கொள்ளாதிருக்கவும் முடியவில்லை..).. ம்ம்.. கலகலப்ரியா... வளவளா.. கொழகொழா என்று பேசிச் சொல்ல வந்ததை மறந்துவிடும் உன் அறணைத்தனம் என்று சாகும்... வெய்ட்.. ஆம்... இருந்தாலும்.. எல்லாம் அவன் செயல்தான்... புரட்சி செய்கிறேனென்று செய்முறை கொடுத்த அது சரியின்.. அடாவடிச் செயல்தான் காரணம்...  

முன்னுரை சற்று நீண்டு விட்டது... ஆனாலும் அரசியல்வாதிகள் போன்று.. என்னுரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்(ல்)கிறேன் என்று செல்வதில் எனக்கு உடன்பாடில்லை.. விடயத்திற்குச் செல்வோம்.. அல்லது வருவோம்.. (அதே, ஸேம், இரண்டும் கெட்ட, குழப்பம் மற்றும் கான்பீசன்..)..

புரட்சி உருளைக்கிழங்கு வடிவிலிருக்குமென்று திருக்கை (இல்லை இது கடல்வாழ் உயிரினமல்ல.. அது சரி அவர்களின் திருக்கரம்..) மலர்ந்திருக்கிறார்... வால்மீகி... அடச்சை இது வேற... ஐ மீன்.. என்கிறார் “அது சரி”.. அதைச் செந்நிறமென்று வேறு எழுதித் தொலைத்திருக்கிறார்.. பின்விளைவுகள் பற்றிச் சற்றேனும் சிந்தித்திருப்பாரானால்.. ம்ம்... முடியாதது பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது.. கரண்டியிலிருந்தால்த்தானே சட்டியில் வருமென்பார்கள்.. (இதொன்றும் கான்பீசன் அல்ல.. கரண்டியிலிருப்பதைச் சட்டியிலிடுவதைச் சொன்னேன்.. மாற்றி யோசியுங்கள்.. மை டியர் ஃப்ரண்ட்ஸ்..).. 

ம்ம்... என்னவாயிற்று இப்போ..?

இன்றைக்கு பீட்ரூட் பச்சடி செய்யலாமென்று கடைக்குப் போனால்... பீட்ரூட் என்றிருந்த பெயர்ப்பலகையில்.. புரட்சி என்று கொட்டை கொட்டையாக ஜேர்மன் மொழியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அங்கு பீட்ரூட்டைக் காணவில்லை... சீண்டுவாரற்ற... நான் மட்டும் சீண்டும் பீட்ரூட்.. காணாமற் போனதன் அதிசயம் கண்டு வியந்து நின்றது ஓரிரு நிமிடங்கள்தான்.. பீட்ரூட் வாங்க யாரும் கியூவில் நிற்கவும் காணோம்... பக்கத்தில் கையுறை மாட்டி அழுகிப்போன உருளைக்கிழங்கைப் பொறுக்கிக் கொண்டிருந்த விற்பனையாளரிடம்... எங்கே பீட்ரூட் என்று கேட்டால்... அவருக்குத் தமிழ் தெரியாது என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்... அப்போ புரட்சி என்று கேள்வி போலிழுத்தால்... ஆ.. ஐ காட் இட் நவ்... என்று தமிழில் சொல்லிவிட்டு.. புரட்சி எப்போ வேண்டுமானாலும் வெடிக்குமென்றார்கள்... பூனையைக் கூட மடியில் கட்டிக் கொண்டிருக்கலாம்... இதை எப்படியென்று மண்டைக் குடைச்சலாகி விட்டது... செய்தி எப்படிக் காட்டுத்தீ போல் பரவுகிறது பாருங்கள்.. காலையில் பெயர்ப்பலகை மாற்றிக் கொண்டிருக்கும்போதே... கழுத்தில் சிவப்புத் துண்டு போட்ட ஒருவர்.. ”ஆய் போவன்” என்று மிரட்டியபடி கழுத்தைச் சுரண்டுகிறார்.. உலகத்தில் சிவப்பாக இருக்கும் எல்லாவற்றையும் அவர்தான் குத்தகை எடுத்திருக்கிறாராம்... வெடிக்கும் என்பது ஆடிஷனல்.. (தமிழ்த்தாய்....) நன்மையென்றார்... கையோடு கொடுத்தனுப்பி விட்டேன் என்கிறார்... 

அங்கேயே புரட்சி வெடித்திருக்கும்... ஆனால் பாருங்கள்.. அதற்கு முதலில் புரட்சி வேண்டும்... புரட்சியே இல்லாது புரட்சியை வெடிக்க வைப்பது எப்படியென்று யோசிப்பது கேனத்தனம்... அதனால்.. முதலில் புரட்சியை உருவாக்க வேண்டும்.. புரட்சியை உருவாக்குவதைத்தான் புரட்சி செய்வது என்கிறார்கள்... அதுக்குத் தலைக்கறிக்குச் செய்யும் மசாலாவை (இதுவும்.. செய்முறை உதவி... ஒரு எதிரி..).. புரட்சியில் புரட்டி... மீண்டும் புரட்சியை வைத்தே புரட்சி செய்கிறாராம்... அரிசியிலிருந்து... சோறு செய்வதைப் போலவா இது.. செத்த பாம்பை மீண்டும் சாக-அடிப்பது போலல்லவா இருக்கிறது... 

புரட்சி என்பதன் அடிப்படைப் பொருளையே மாற்றி... என் பீட்ரூட் பச்சடியைக் கிச்சடி செய்த அது சரி பெயரை... இன்றிலிருந்து... இது பிழை... என்று உரத்துக் கூறுங்கள்... இது புரட்சி அல்ல... புரட்சிக்கான ஆரம்பம்... புரட்சி விதை வாங்குவதற்கு உண்டியல் குலுக்குவது போன்றது இது... 

(பீட்ரூட்... சாரி.. புரட்சி தொடரும்..)

______________________________________________________________