header photo
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, April 17, 2010

...........ரே போச்சு....


என் 
மூத்த தமிழ்... 
முத்தமிழ்... 
தனித்தமிழ்...
தனி மரபு... 
பண்பாடு..
வரலாறு... 
விழுமியம்... 
வெங்காயம்... 
த்தூ...

இவ்விடம் 
எச்சில் துப்பாதீர்! 

தமிழுக்கெதிரி 
சிங்கமெனச் சித்தரித்த
நரிகள் ஒளிந்திருக்கும் 
பொந்து இதுவல்ல...! 

அம்மா மகராசியா 
போம்மா
தெரிந்திருக்கும் 
சிங்கக் கூட்டத்தில் 
கொஞ்சம் 
மனித நெஞ்சம்...! 

இரண்டடி நிலம்
இன்னும் 
எஞ்சியிருந்தால் 
எழுதி வைக்கலாம் 
அவர்களுக்கே..!

மத்திய ஆட்சி அனுமதி கொடுத்தது... ஐக்கிய இலங்கை அரசு அனுப்பி வைத்தது... அப்புறம்? பூமி இன்னும் சுத்திக்கொண்டுதான் இருக்கிறது... பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... 
________________________________________________________________________

Sunday, May 31, 2009

தான் ஆடா விட்டாலும்.. தன் வால் ஆடும்..

நறநறநற.. முடியலடா சாமி.. நானும் இலங்கைச் செய்தி படிக்கிறதில்லன்னு ஒரு தீர்மானத்தோட இருக்கப் பார்க்கிறேன், முடியல. என்னைச் சுற்றியுள்ள, தமிழ் ஆதரவாளர்கள் தொல்லை தாங்க முடியல. நேற்று அழகா, நகைச்சுவையா ஒரு கவிதை (நானே கவிதைனுதான் சொல்லிக்கிறதுதான், மத்தவங்க அபிப்பிராயம் எப்படின்னு இன்னும் கேக்கல) எழுதலாம்னு ஆரம்பிச்சா, ஒரு நண்பர் ச்சு கொட்டிக்கிட்டே வந்தவரு, என்ன கொடுமை எல்லாம் நடக்குதுன்னு ஆரம்பித்தார். வந்திச்சு பாருங்க ஒரு கோவம் "யோவ் மனுஷா கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துடப்டாதே, உடனே வந்துடுவீங்களே" வள்ளென்று எரிந்து விழுந்தேன். பாவம் மனுஷன் அரண்டு போயிட்டாரு. ஏதோ தப்புத்தான் பண்ணிட்டோம் போலன்னு மன்னிப்பு எல்லாம் கேட்டாரு.. சை-ன்னு ஆய்டுத்து.

சாவு விழுந்தா, அது பத்தி ஆயிரம் கேள்வி மத்தவங்களுக்கு. ஏன், எதுக்கு, எப்டி, எப்போ.. அது மட்டுமா.. அப்டி இருந்திருக்கலாம், இப்டி இருந்திருக்கலாம்.. இதில திருப்தியாளர்கள், குரூர திருப்தியாளர்கள் முட்டைல முடி பிடுங்குவாங்க பார்க்கணும் அட அட, அத விட எதிர்காலம் பத்தி ரொம்ப நீட்டி முழக்குவாங்க பாருங்கோ, என்னமோ இனிமே அவங்கதான் எல்லா பொறுப்பும் ஏத்துக்கிட்டு வாழ் நாள் பூரா கஞ்சி ஊத்தப்போற மாதிரி. சாவு வீட்ல இருக்கிறவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனோட வலி.

இன்னைக்கும் எத்தன நாளைக்குத்தான், தலைல கை வச்சிண்டு உக்காந்திருக்கிறது, எங்கயாவாது புதுசா படம் வெளியிட்டிருக்காங்களா பார்க்கலாம்னு ஆர்வமா தேடினா.. ஒரு படம்.. villain to hero transformation.. ஐக்கிய இலங்கையின் நாயகன் அவர்கள் பற்றி ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து ஒரு அருமையான பாட்டு. (அந்தத் தமிழுக்கு நான் பொறுப்பில்ல) படம் ஆரம்பிக்க முன்னாடியே நான் வெளில வந்துட்டேன்.

சரி, இடுகைப் பக்கம் போகலாம்னா இடைல ஒரு செய்தி "விடுதலைப் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் ஆரம்பிச்சிட்டாங்களாம்" ஹாஹாஹா... அங்க அடைச்சு வச்சிருக்கிற பாதித் தமிழனையும், மிச்சம் மீதி வெளில இருக்கிற கிழடு கெட்ட, குஞ்சு குழுவான்களையும் ஒவ்வொரு நாளும் கேக்க ஆள் இல்லாத முன்னைய நாட்களைப் போல் விதம் விதமா கொல்றதுக்கு, கொல்லப் போறதுக்கு பேரு இது. முற்று முழுதா ஒரே நாள்ல கொல்றதுக்கு தெனாவெட்டும், பலமும், பக்கபலமும் இருக்கலாம், ஊத்தி அழிக்க அமிலம் இருப்பில இருக்கணுமா இல்லையா?!

அது பக்கத்தில ஒரு கொசுறு.. கோத்தவுக்கும், மஹிந்த ராஜாவுக்கும் கலாநிதி பட்டமாம். மேல உள்ள காணொளிக்காக இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அட எதுக்கா இருந்தா என்ன, என்னோட தோள்ல நானே தட்டி, இடது கையால சர்க்கரை எடுத்து வலது கைல கொடுத்து, அத என்னோட வாயில போட்டுக்கிறதுக்கு பேரு பட்டம்னா நானும் நிறைய வாட்டி வாங்கி இருக்கேன்.

தலைப்பைப் பார்த்துக் குழம்பறவங்களுக்கு வால்னு குறிப்பிட்டது அடியேளைத்தான். லாஜிக் தேடறவங்களுக்கு, அப்டி ஏதும் அங்க இல்லைங்க! அட அது எங்கதான் இருக்கு சொல்லுங்க..?!


அண்ணாமலைக்கு அரோகரா..
ஐக்கிய இலங்கைக்கு அரோகரா..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..
தமிழனுக்கு திண்டாட்டம்..

இப்டி கூமுட்டத்தனமா, உணர்ச்சிவசப்பட்டு எழுதறதெல்லாம் எழுத்தில்லைனு சில மேதாவிகள் விசனப்படலாம். என்னங்க பண்றது மரக்கட்டையா பிறந்திருக்கலாம்னு எனக்கும் ஆதங்கம் ரொம்ப நாளா.