header photo
Showing posts with label சஞ்சய்காந்தி. Show all posts
Showing posts with label சஞ்சய்காந்தி. Show all posts

Tuesday, March 2, 2010

பிஸினெஸ் ஹெட்டும்.. கிரிக்கெட் "மு"ட்டையும்...

வருங்காலப் பிரதமர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொ"ல்லு"ம் பிஸினெஸ் ஹெட் மேதகு திரு சஞ்சய்காந்தி அவர்களுக்கு மினிமீல்ஸ் பதிவு போடச் "சரக்கு" பற்றாக்குறை ஆதலால், அவரின் அப்பாவி உறவுகளான ஆடு, மாடு படங்களை அவர்களின் அனுமதி இல்லாமலேயே கண்டமேனிக்குப் பிடித்துப் போட்டு இம்சைகாந்தி ஆகிக் கொண்டிருக்கிறார்.

"நானும் உங்கள மாதிரிதான்" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் இவரின் தலையை ஃபிளாஷ் பொருத்திய கேமரா வைத்துப் படம் பிடிப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விடக் கொடுமையானது. இது அறியாத யாரோ பிஸினெஸ் ஹெட்டுக்களின் வீணாப்போன மாநாடு ஒன்றில் படம் பிடிக்கப் போய் நம்ம "வருங்காலப் பிரதமர்" தலை எகிறிப் போய் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் விழுந்திருக்கிறது. அவரின் தொப்பி மட்டும் கேமராவில் சிக்கியிருக்கிறது. வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் அந்த அரிய படத்தை நீங்களும் கொஞ்சம்பாருங்களேன்: 

 

விதி யாரை விட்டது..? எகிறின தலை எகிறினது கிணத்திலயோ, குளத்திலயோ விழுந்திருக்கப்டாதா? அது நேரா போய் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் சார் கையிலயா விழணும்? என்னது அப்புறம் என்னாச்சா? நொங்குதான்...! ஃபிளாஷ் ஆஃப்ல போட்டு எடுத்த இந்தப் படத்தையும் கொஞ்சம் பாருங்க...!


 
 ஹும்... நன்றி ஹிந்துப் பத்திரி"கை"..  

___________________________________________________________________

கிரிக்கெட் தொடர் பதிவு ஒண்ணு பன்னிக்காய்ச்சல் வைரஸ் வேகத்தில பரவிக்கிட்டிருக்கு. எனக்கு தொத்துறதுக்குள்ள ஒரு 'டம்மி' ஃப்ளு சாப்ட்டு வைப்போம்.

கிரிக்கெட் அப்டிங்கிறதுக்கு தமிழ்ல சில்வண்டு என்று பேருங்க. இது வெட்டுக்கிளி மற்றும் தத்துக்கிளி  போல இருக்கிறதால... இதுவா.. அதுவான்னு கன்பீசன் ஆகிப் போவுமாமுங்க. கிட்டத் தட்ட தொள்ளாயிரம் வகையான கிரிக்கெட் உண்டாமுங்க... அடி ஆத்தீ. அப்புறம் பாலா சார் மாதிரி இதுங்களும் nocturnal, சாமக்கோ.... இல்லை சாமக்கிரிக்கெட்டுங்க. டிரிட் டிரிட்.. அப்டின்னு இரவில இதுங்க ரீங்காரிக்கிற சத்தம் இருக்கே செம த்ரில்லிங். அப்புறம் எல்லா வண்டும் போல... சில்வண்டும் முட்டை போட்டுதான் குஞ்சு பொரிக்குதாமுங்க. அந்தப் பொரியல் நல்லா இருக்குமான்னு யாரோ கேக்குற மாதிரி இருக்கே... சாப்ட்டு பார்த்து சொல்லுங்க.

முகிலன்... என்னைப் போய்... கிரிக்கெட்டு புடிக்காதுன்னு சொல்லிப்புட்டியளே... இதை வரலாறு மன்னிக்குமா... அவ்வ்வ்வ்...

தொடர் இடுகை போட நான் யாரையும் அழைக்கணுமே..?.. அட என்ன இப்டி ஓடுறீங்க... அட நில்லுங்க.... சின்னம்மிணி.. நீங்களாவது நில்லுங்க... நான்தான் யாரும் கூப்ட முன்னாடியே பதிவு போட்டுட்டேன்ல... அதனால யாரையும் கூப்ட மாட்டேன்... இத சொல்றதுக்குள்ள... இப்டியா... அவ்வ்வ்வ்.... 

சஞ்சய் மோனே... அப்ப வரட்டா.... அடுத்த வாட்டி வாத்து படம் புடிச்சிக்கிட்டு வாங்.... க்வாங்...! பாசக்காரப் பசங்கடா சாமி.... நம்மள மொக்கை போட வைக்க இவ்ளோ கஷ்டப்படணுமா அப்பு...!!