எங்கேடி ப்ரியா? ஏய் வா... நேத்து இடைல விட்ட கதைய சொல்லி முடி... பள்ளி மைதானத்தில்... ஓரமாக இருக்கும் மரநிழலில் இடம் பிடித்து... லஞ்ச் பாக்ஸ் திறந்து வைத்துக் கொண்டு.. வட்டமாக உட்கார்ந்து.. பேசும் கதைகள்... பாடும் பாட்டுக்கள்... (ஓ..! இது வேற ஒரு பதிவில் சொல்லலாம்..=))..)..
மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...
விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...
இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)
இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...
இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...
ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..
இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...
வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..
(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )
இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!
இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...
மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!

(யார்அது. .? அப்பாடி தொலைஞ்சான்னு பெருமூச்சு விடுறது.. வருவோம்ல... இருங்கடி..)
___/\___