header photo
Showing posts with label நகைச்சுவை (என்றும் கொள்ளலாம்). Show all posts
Showing posts with label நகைச்சுவை (என்றும் கொள்ளலாம்). Show all posts

Saturday, October 3, 2009

பூச்சியும்.. கண்ணாமூச்சியும்..

குகையின்..
கும்மிருட்டில்..
குத்துவிளக்கொன்று..
ஒளிர்ந்து கொண்டிருந்தது..
ஆந்தை ஒன்று..
இரவு பகல் அறியாது..
எந்நேரமும்..
விழித்திருந்தது..
சீரற்று அவ்வப்போ அலறியது..
குகைப்பாறை அதிர்ந்தது..
விளக்குச் சுவாலை அசைந்தது..
ஒரு மின்மினிப் பூச்சியும்..
நெய் விளக்கொன்றும்..
அதனுடன் சேர்ந்து..
சில விட்டில் பூச்சிகளும்..
சற்று எட்டிப் பார்த்தன..
விட்டில் பூச்சிகள்..
விளக்குகளில் விழாது தப்பி..
ஆந்தைக்கிரையாயின..
நெய்யும் விளக்கும்..
நிமிடங்களில் கரைந்தன..
குத்து விளக்கு..
அசையாதிருந்தது..
ஆந்தையின் கண்..
மின்மினியை சுற்றியது..
சுவர்களில் முட்டி மோதி..
குகையை வட்டமிட்ட மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!


......