நாம இப்டியும் மொக்கை போடுவோம்ல... (copy right கேட்பவர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவும்..)
என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு, அவளையே அவள் மெச்சிக் கொள்வது இன்னொரு கொடுமை. விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை. என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை.
_____________________________________________________________________________________________
ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது அனிமேஷன் ஃபிகராக (அஹெம்) மாறிப் போனேன்.
_______________________________________________________________________________________________
முப்பது வருஷமாக நெட்பால் ஆடும் ஒரு டீமில் கத்துக்குட்டியாக join பண்ணி அவர்களின் வேகத்திற்கும், பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது, அமெரிக்கன் ஃபூட்பால் டீமுக்கிடையில் சாரி சுற்றிக் கொண்டு ஸ்லோ மோஷனில் ஓடி அனிமேஷன் புறாவைக் கையில் பிடித்து, அதே ஸ்லோ மோஷனில் பறக்க விடுவது போல் நான் பந்தைப் பாவித்தது எனக்கே கொடுமையா தெரிஞ்சாலும், அவங்க பெருந்தன்மையா bravo என்று தட்டிக் கொடுத்தது இதமாக இருந்தது. எதுக்கும் இருக்கட்டுமென்று நியூ இயர் வரை தள்ளிப் போட்டு விட்டேன். நியூ இயர் resolution - இற்கு மேட்டர் தேட வேண்டாம் பாருங்க.
_______________________________________________________________________________________________
வீட்டுத் தோட்டத்திலிருந்த ரப்பர் பூட்ஸ் பாதியைக் காணவில்லை. மீதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. என்ன கொடுமை சரவணி என்று பக்கத்து வீட்டு அம்மணியிடம் கேட்டேன். சற்றுத் தள்ளிக் காடு இருப்பதால் நரி நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாள். அப்புறம் தோட்டப் பக்கம் பார்க்கவே ப்ப்ப்பயமாக இருக்கிறது. ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
_______________________________________________________________________________________________
சமீபத்தில் எந்தப் படமும் பார்க்கவில்லை, எந்தப் பாட்டும் கேட்கவில்லை. ப்ளாக் மட்டும் அவ்வப்பொழுது (!) பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாளரம் திறந்து எட்டிப் பார்த்தால் குளிர்ந்தது. மேல் விழுந்த பஞ்சு கையில் கரைந்து நீராக ஓடியது. அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..
_______________________________________________________________________________________________