காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!
ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.
வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?
வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹிஹி..
வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?
வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..
வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..
வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...
வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?
வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..
வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...
வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..
வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..
வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?
வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..
வடிவேலு: அப்போ பட்டாசு...?
வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...
வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..
வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..
வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: ஹிஹி..
வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..
வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..
வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..
வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..
வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?
வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..
வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..
வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "
வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..
வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..
வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..
வெடிவாலு: "மேல"..
வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...
வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..
வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..
வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..
வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..
வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..
வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..
வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..
வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..
வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..
வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."
வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..
வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....
வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...
வெடிவாலு: அண்ணே..
ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...
வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..
பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..

______