header photo

Sunday, April 25, 2010

கனநனவு...

அன்று.. 
நிகழ்தகவு ஒன்று.. 

மழையொழுக்கின் பிளவுகளில் 
மரஸ்தூபி மடி சாய்ந்துறங்கி 
கனவுக் காற்றில் தடம் பதித்து 
கன கற்றூண்களிடை பாவுகையில் 
நனவு நிலம் பட்டெகிறிய துளியில் 
பன்னீர் வாசனையுடன் உறங்கிய விடியல்

இன்று.. 
நிகழ்தகவு பூஜ்யம் புள்ளி ஐந்து.. 

கற்றூணில் நெற்றி நெட்டித் 
தெறித்துத் திரும்பி மற்றொன்றில் முட்டி 
தூணடி சரிந்து சாய்ந்தமர்கையில் 
ஆறுலகம் தாண்டி கறையானரித்த கம்பத்தில் 
தேநீர் தாங்கி விழித்துக் கொண்டிருக்கிறது 
மண்வாசனையுடனான துயில்... 

Saturday, April 17, 2010

...........ரே போச்சு....


என் 
மூத்த தமிழ்... 
முத்தமிழ்... 
தனித்தமிழ்...
தனி மரபு... 
பண்பாடு..
வரலாறு... 
விழுமியம்... 
வெங்காயம்... 
த்தூ...

இவ்விடம் 
எச்சில் துப்பாதீர்! 

தமிழுக்கெதிரி 
சிங்கமெனச் சித்தரித்த
நரிகள் ஒளிந்திருக்கும் 
பொந்து இதுவல்ல...! 

அம்மா மகராசியா 
போம்மா
தெரிந்திருக்கும் 
சிங்கக் கூட்டத்தில் 
கொஞ்சம் 
மனித நெஞ்சம்...! 

இரண்டடி நிலம்
இன்னும் 
எஞ்சியிருந்தால் 
எழுதி வைக்கலாம் 
அவர்களுக்கே..!

மத்திய ஆட்சி அனுமதி கொடுத்தது... ஐக்கிய இலங்கை அரசு அனுப்பி வைத்தது... அப்புறம்? பூமி இன்னும் சுத்திக்கொண்டுதான் இருக்கிறது... பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... 
________________________________________________________________________