header photo

Tuesday, September 14, 2010

துருப்பிடிக்காமலிருக்க..

இரும்பிலிருந்து தோன்றும் துருவே
இரும்பிற்குச் சமாதியெழுப்பும் 

சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால் 
செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..

குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்று
தென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை

எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. 
இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய 
அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. 

சாக்கியமுனி சிலை வடிவிலாவது
குறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்..  
அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும் 
அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!

_________________________

Saturday, September 11, 2010

நீ பட்ட பாட்டினையறிகுவேன்..

இன்று கோபுரங்கள் சாய்க்கப்படும் நாளென்று விதிக்கப்பட்ட நாளோ?!  

சிகரம் பாரதியை நினைவு கூரும் முகமாக.....!!!! love mah bharathi... love sowmya..!!!
_________________________________________
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்-என்றன்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை எண்ணித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
__________________________________

பாட்டைக் கேட்டுத் தாளம் போடுவதற்கு இங்கே சொடுக்கவும்... 

_________________________________________