header photo

Saturday, April 17, 2010

...........ரே போச்சு....


என் 
மூத்த தமிழ்... 
முத்தமிழ்... 
தனித்தமிழ்...
தனி மரபு... 
பண்பாடு..
வரலாறு... 
விழுமியம்... 
வெங்காயம்... 
த்தூ...

இவ்விடம் 
எச்சில் துப்பாதீர்! 

தமிழுக்கெதிரி 
சிங்கமெனச் சித்தரித்த
நரிகள் ஒளிந்திருக்கும் 
பொந்து இதுவல்ல...! 

அம்மா மகராசியா 
போம்மா
தெரிந்திருக்கும் 
சிங்கக் கூட்டத்தில் 
கொஞ்சம் 
மனித நெஞ்சம்...! 

இரண்டடி நிலம்
இன்னும் 
எஞ்சியிருந்தால் 
எழுதி வைக்கலாம் 
அவர்களுக்கே..!

மத்திய ஆட்சி அனுமதி கொடுத்தது... ஐக்கிய இலங்கை அரசு அனுப்பி வைத்தது... அப்புறம்? பூமி இன்னும் சுத்திக்கொண்டுதான் இருக்கிறது... பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... 
________________________________________________________________________

64 ஊக்கம்::

vasu balaji said...

//என் மூத்த தமிழ்... முத்தமிழ்... தனித்தமிழ்...தனி மரபு... பண்பாடு..வரலாறு... விழுமியம்... வெங்காயம்... த்தூ...
இவ்விடம் எச்சில் துப்பாதீர்! //

இது சொல்லிடுச்சி மொத்தமும்

vasu balaji said...

/மத்திய ஆட்சி அனுமதி கொடுத்தது... ஐக்கிய இலங்கை அரசு அனுப்பி வைத்தது.../

அவங்களே தேவலாம்.

/பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்.../

சத்தியமா வரணும்.:((

இன்னும் என்னல்லாம் நடந்து இந்தியாவ நாறடிக்கப் போறாங்களோ.

பிரபாகர் said...

செருப்படி!....

பிரபாகர்...

பிரபாகர் said...

மானங்கெட்டவர்கள்... வெட்கமாயிருக்கிறது சகோதரி!

பிரபாகர்...

பிரபாகர் said...

ச்சீ.....த்தூஊஊஊஊஊஊஊஊஊஊ........

பிரபாகர்...

க.பாலாசி said...

ம்ம்ம்... இன்னும் எதிர்பார்த்தேன்...

Unknown said...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...//

வரணும்.. வரும்

சைவகொத்துப்பரோட்டா said...

விளாசல்.

புலவன் புலிகேசி said...

ம்...கொடுமை ப்ரியா

அகல்விளக்கு said...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...//

நிச்சயம் வரும்....

☀நான் ஆதவன்☀ said...

மானங்கெட்ட அரசு :(

settaikkaran said...

எங்கு துப்ப? துப்ப எத்தனிக்கிறபோது அம்முகத்தில் விழுவது எமது எச்சிலுக்கும் இழுக்கென்று எண்ணத்தோன்றுகிறது

அண்ணாமலையான் said...

இடியே விழுந்தாலும் கலங்கா நெஞ்சம்
கடற்கரை ஓர உண்ணாவிரத மஞ்சம்
எல்லாருக்கும் இடம் கொடுத்த இதயத்தில் ஈரத்துக்கு பஞ்சம்....
தமிழனென்றால் எப்போதும் துச்சம்...!
இப்போதோ தமிழ்தாயை கண்டால் இல்லை அச்சம்...
பதில் சொல்ல காலமிருக்கு மிச்சம்...!

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தூ ....

Jackiesekar said...

அந்த கடைசியா விட்ட சாபம் எனக்கு பிடிச்சி இருந்தது...
நன்றி கலகபிரியா

அன்புடன்
ஜாக்கி...

சத்ரியன் said...

ஆமா ப்ரியா,

இவனுங்க(வழி போக்கனுக்கு பொறந்த மயிராண்டிங்க) அனுமதிக்காட்டி மயிராப்போச்சி.

//பூமி இன்னும் சுத்திக்கொண்டுதான் இருக்கிறது... பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... //

விரைவில்!

சூர்யா ௧ண்ணன் said...

தாயை மதிக்க தெரியாத இந்த மானங்கெட்ட பொழப்புக்கு உலக தமிழ் மாநாடு ஒரு கேடு..

சிநேகிதன் அக்பர் said...

வெட்கப்பட வேண்டிய விசயம்.

குலவுசனப்பிரியன் said...

கொடுங்கோலனுக்கு பூரணகும்ப மரியாதை கொடுக்கிறவர்கள் இன்னும் வேறென்ன செய்யமாட்டார்கள்.

உங்கள் சாபம் பலிக்கட்டும்.

தமிழ் அமுதன் said...

எந்த ஒரு விசயத்திற்கும் ஒரு எல்லை உண்டு ..! இப்படியே போனால் ..! தமிழ் ..தமிழ் .என்று அரசியல் பிழைப்பு நடத்தும் நாய்களுக்கு .................... வேணாம் கெட்ட வார்த்தையா வருது...!

ஈரோடு கதிர் said...

திரும்பி வரட்டும்

மணிஜி said...

பலிக்கட்டும்....................................................(மா??)

அது சரி(18185106603874041862) said...

//
பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...
//

இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது நிச்சயம் வரும். ஹிட்லர், இடி அமீன் வரிசையில் இவன் பெயரும் வைக்கப்படும்.

இராகவன் நைஜிரியா said...

தமிழ் இன மான காவலர்கள்...

தமிழ் இனத் தலைவர்கள்

தமிழை காக்க வந்தவார்கள்.

இதற்கு ஒரு விழா எடுக்காம இருக்காங்களான்னு பார்க்கணும்.

செ.சரவணக்குமார் said...

அருமையா சொல்லியிருக்கீங்க ப்ரியா.

balavasakan said...

................
((

ரோஸ்விக் said...

ச்சூ...ச்சூ ... அடங்கிபோயிருடா... இங்க வந்து கெட்டவார்த்தை எல்லாம் பேசக்கூடாது...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...//

வரணும்.. வரும்

நான் வர்றேங்க... சாரி.

Unknown said...

"தாயை மதிக்க தெரியாத இந்த மானங்கெட்ட பொழப்புக்கு உலக தமிழ் மாநாடு ஒரு கேடு.."


கொத்து கொத்தா செத்ததுக்கே
வருத்தபடலே ...
இன்னொரு சாமியார காட்டினா
இதையும் மறப்பான்
மர'த்தமிழன் .....

பத்மா said...

உணர்ச்சி கொந்தளிப்பு .மனசு ஆற மாட்டேங்குது பிரியா

அஹோரி said...

தி மு க வுக்கு ஓட்டு போட்டவனெல்லாம் கண்ணாடிய பாத்து துப்பி கொள்ளவும்.

archchana said...

இது எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து செய்த நாடகம்.
என்ன செய்வது .......நாம் பெற்ற துன்பம் பெறுக என்று சாபமிடுவதை தவிர எம்மால் என்னதான் செய்யமுடியும்.

ராஜ நடராஜன் said...

ரௌத்திரம் பழகு மந்திரத்தின் உண்மையான வெளிப்பாடு.

ராஜ நடராஜன் said...

மனிதாபிமானத்திலும் கூட அரசியல் செய்கிறார்களே:(

Anonymous said...

தமிழனுக்கு எதிரி இலங்கைல மட்டுமா
வெட்கக்கேடு

ஆ.ஞானசேகரன் said...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... //

உண்மை ப்ரியா,...

Anonymous said...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... //

........விரைவில் சாயும் பொழுது

Santhappanசாந்தப்பன் said...

இவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து, சபையில் உட்காரவைத்திருக்கும், ஒவ்வோரு தமிழ் வாக்காளனும், வெட்கி தலைகுனிய வேண்டும்!

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..

பனித்துளி சங்கர் said...

///////இரண்டடி நிலம்
இன்னும்
எஞ்சியிருந்தால்
எழுதி வைக்கலாம்
அவர்களுக்கே..!////////////


சரியாக சொன்னீர்கள் .

'பரிவை' சே.குமார் said...

சாட்டையடி கவிதை
ரொம்ப நல்லாயிருக்கு..

பய புள்ளக திருந்துவாங்களான்னா... 'நோ'.

கலகலப்ரியா said...

நன்றி பாலா சார்..

நன்றிண்ணா... (துப்ப வேணாம்னா துப்பறதே வழக்கமாய்டுத்து..:)))

நன்றி பாலாசி... ம்ம்.. எல்லாம் எழுத இடம் போதாது..

நன்றி முகிலன்...

நன்றி சைவகொத்து..

நன்றி புலிகேசி...

நன்றி அகல்விளக்கு..

நன்றி ஆதவன்...

நன்றி சேட்டைக்காரன்.. ம்ம்..

நன்றி அகநாழிகை...

நன்றி அண்ணாமலை.. நல்லாருக்குங்க..

நன்றி நண்டு.. வாணாம்னா கேட்டாதானே..

நன்றி ஜாக்கி.. :(..

நன்றி சத்ரியன்.. யப்பா சாமீ..

நன்றி சூர்யா... என்ன பண்ண..

நன்றி அக்பர்... ம்ம்..

நன்றி குலவுசனப்ரியன்.. சாபம் பலிக்கறதில்ல.. விதைத்தது முளைக்கும்..

நன்றி ஜீவன்..

நன்றி கதிர்..

நன்றி மணிஜி... ...(ம்!)

நன்றி அதுசரி..

நன்றி ராகவன்...

நன்றி சரவணக்குமார்..

ம்ம் வாசு.. :(.. நிலமை அப்டி..

நன்றி ரோஸ்விக்..

நன்றி செந்தில்..

நன்றி பத்மா.. ஆமாம் ஆற மாட்டேங்குது..

கலகலப்ரியா said...

நன்றி அஹோரி...

நன்றி அர்ச்சனா..

நன்றி நடராஜன்.. ரௌத்ரம் பழக மட்டும்தான் முடியுது.. :))

நன்றி சின்னம்மிணி...

நன்றி ஞானசேகரன்..

நன்றி தமிழரசி..

நன்றி பிள்ளையாண்டான்..

நன்றி ராஜா..

நன்றி சங்கர்..

நன்றி குமார்..

R.Gopi said...

நீண்ட நாளைக்கு பிறகு சாட்டை பலமால சுழன்றிருக்கிறது ப்ரியா...

கலக்கல்........

அன்பேசிவம் said...

பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...///

வரட்டும் வரட்டும், எல்லோரும் பிராத்தித்தால் கொஞசம் சீக்கிரமாவே வரும்.

வரதராஜலு .பூ said...

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்... //

வரும். நிச்சயம் வரும். லட்சகணக்கான மக்களை கொன்றவர்களுக்கு துணை நின்றவர்களுக்கு நிச்சயம் வரும். அனைத்தையும் விட பெரிய துரோகம் இப்பொழுது செய்தது. மானங்கெட்ட மயிறானுங்க

VELU.G said...

ம்.... போட்டுத்தாக்குங்க

Radhakrishnan said...

வேதனை.

vasan said...

காஷ்மீருக்கு,
ப‌ழைய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளே!!
திரும்பி வ‌ந்து த‌ங்கி வாழ‌,
ஒம‌ர் கேட்ட‌தும், ஓகேங்க‌றார் ப‌ சி.

த‌மிழ‌க‌த்துக்கு, விசா வாங்கி
சிகிச்சைக்காய் வ‌ந்தாலும்,
வானேறி வ‌ந்த‌ வ‌ழியே
திரும்பி போக‌ச் சொல்றார் மு க‌.
மாற‌னுக்கும், எம்ஜியாருக்கும்
சிகிக்சைக்காய், த‌னி விமான‌ங்கள்.
க‌ட்ட‌பொம்மன் ப‌ட‌ வ‌ச‌ன‌ம் நினைவில்.
``உயிருக்கு ப‌ய‌ந்த‌வ‌ர்க‌ளே ....``

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//என் மூத்த தமிழ்... முத்தமிழ்... தனித்தமிழ்...தனி மரபு... பண்பாடு..வரலாறு... விழுமியம்... வெங்காயம்... த்தூ...
இவ்விடம் எச்சில் துப்பாதீர்! //

Super Priya.

Sanjai Gandhi said...

தவறான நிகழ்வு.. உலகின் பல இடங்களில் மருத்துவ உதவி கிடைக்கும் என்றாலும் இந்தியாவை தேடி வந்தவரை திருப்பி அனுப்பியது தவறே.. அவர் மீது இந்தியாவில் எந்த குற்ற வழக்கும் இல்லை.. அப்படி இருப்பவர் கூட ஒளிந்து வந்து செல்கிறார்கள்.

அனுமதி கொடுத்த மத்திய அரசை நீங்களாவது திட்டாம விட்டிங்களே..

வானமே எல்லை said...

I do not see any big time politics behind the whole scenario which is an isolated incidence. This could be a procedural error which can be rectified easily. I will never expect a Chief Minister to intervene in visa and entry issues of individuals. Making this as a big issue among our diaspora is of typical Tamil nature. These are my humble opinion,

கலகலப்ரியா said...

நன்றி கோபி...

நன்றி முரளி...

நன்றி வரதராஜலு..

நன்றி வேலு...

நன்றி ராதாகிருஷ்ணன்..

நன்றி வாசன்..

நன்றி ஜெஸ்வந்தி..

நன்றி சஞ்சய்... ம்ம்...

கலகலப்ரியா said...

//வானமே எல்லை said...
I do not see any big time politics behind the whole scenario which is an isolated incidence. This could be a procedural error which can be rectified easily. I will never expect a Chief Minister to intervene in visa and entry issues of individuals. Making this as a big issue among our diaspora is of typical Tamil nature. These are my humble opinion,//


ty for yer comment..! well.. you might be right..! as i've been watching lotz of unimaginable scenarios for a couple of years... mah brain must've been corrupted..! alas.. nobody in dis freakin world will think that a CM will poke his ugly nose on these kinds of individual affairs..!!! & what do you want to say? that an "Apolitical" Alien erred procedurally and is busy debugging till now?!

Tamil Diaspora's nature?... ya right again..!!! we make things BIG... and quack till we tire and fall into coma.. for a long long time..!!! neway.. u've opened mah eyes... shall stand out from da crowd... shall be away from those "so called" sick diaspora..! lemme import some perfume and spray it on da crap...!!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கோபம் சூப்பர் ப்ரியா! செம்ம காரம் :))

நானும் துப்பிக்கறேன்... ***** போச்சு

//பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...//

வரும் வரும்ன்னு காத்திருந்து எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு இப்போ.. எல்லாருக்கும் வர்றதில்லயே அந்தப் பொழுது... வந்த வேகத்துலயே அதுவும் துப்பிட்டுத் திரும்பிடும் போல..

கலகலப்ரியா said...

நன்றி சந்தனா.. ம்ம்

சுண்டெலி(காதல் கவி) said...

இன்னும் அதிகமாகக் கூட திட்டலாம் இந்த மானங்கெட்டவர்களை...........

ILLUMINATI said...

///பொழுது சாயுறப்போ இது உனக்கும் திரும்பி வரும்...//

சீக்கிரமே திரும்பட்டும்.....அப்பயாவது ஏதாவது நல்லது நடக்குமான்னு பாப்போம்....

சிங்கம் said...

எதுக்கு பொழுது சாயணும். இப்பவே போய்செந்தாலும் ரோம்ப நல்லதே

சிங்கம் said...

எதுக்கு பொழுது சாயணும்? இப்பவே போய் சேந்தா ரொம்ப நல்லது..

VR said...

வணக்கம் கல கல,

உங்கள் பதிவுகளை நீண்ட நாள்களாக வாசிகேறேன். மனதுக்கு தெம்பாக இருக்றது. உங்களுக்கு மெயில் பண்ணனும்.

கலகலப்ரியா said...

நன்றி சுண்டெலி..

நன்றி illuminati..

நன்றி சிங்கம்.. ம்.. சில பேரு இருந்தாலும் ஒன்னுதான்... இல்லைன்னாலும் ஒன்னுதான்... இப்பவே எனக்கு வித்யாசம் எதுவும் தெரியல..

நன்றி V.R. பின்னூட்டமிட்டாலே எனக்கு மெயில்லதான் வரும்.. வெளியிடாமல் படித்துக் கொள்கிறேன்... மீண்டும் நன்றி..

pichaikaaran said...

for every action, yhere is an opposite and equal reaction

Vijiskitchencreations said...

my fist visit. Wow beautiful blog.
nice poem. I like your poem.
pls come with your poem.
www.vijisvegkitchen.blogspot.com