சற்றுமுன் கடந்தவை..
பிடரி முடியின் பக்கம் சிலிர்த்து, மூக்கு முடியின் பக்கம் கண்ணை மூடிக்கொள்ளும் சாதுப் பூனையின் பாற் கூஜாக்கள் கண்ணைத் திறந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கின்றன.
குரங்கின் ஈரல் தேடும் முதலைகளின் உடலரைந்த தடங்கள் கண்டு கிளைகள் கொண்டிருந்த பனைமரமொன்றில் 'தாவி' மெளனமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?"
கேத்திர சூத்திரத்தை மீறாத நீண்ட நேர்கோட்டின் குறுக்கால் கோணலாகக் கோடிழுத்து மேல் நுனியில் கிடைகோட்டின் ஜாதி மட்டம் இருப்பதாக புதிய தேற்றம் வாசிக்கப்பட்டது. கோட்டின் பாதியை அழி ரப்பர் கொண்டு தேய்த்து நிலைக்கோட்டை நீளமாக்கும் முயற்சியின் பின்நவீனத்துவ நிலையா இது? மட்டம் தவிர்த்து.. கோடுகள் சந்திக்கும் மையப் புள்ளியைச் சுற்றிய பாகை முன்னூற்றி அறுபதென்றேன். குறுக்கிட்ட கோட்டினால் உண்டான பாகைகள் விகிதத்தில் பாரிய வேறுபாடு சுட்டிக் காட்டப்பட்டது. இங்கு கோணற் கோட்டின் அவசியம் என்னவென்றேன். மையப்புள்ளி திடீரெனத் தொலைந்து விட்டிருந்தது. ஆங்காங்கு நாலு நுனிகள் வரையறுக்க முடியாத திசைகளில் தொங்கிக் கொண்டிருந்தன. கேத்திர சூத்திரத்துடன், கோத்திரமும் செத்துவிட்டிருந்தது.
பித்தளைத் தாம்பாளமொன்றில் அரிசி பரப்பி எதிரிலிருந்த எஸ்கிமோவின் கைவிரல் பிடித்து 'அ'-விற்கான சுழி வரைந்தேன். கையுதறி விடுவித்து மேலும் இரு சுழி வரைந்து ஆயுத எழுத்து போலாக்கி பக்கத்தில் மீன்கண் வடிவில் இரு சுற்று சுற்றி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்குத் "தெரிந்ததை" செவ்வனே செய்ததென்ற திருப்தியுடன் அதன் பனிக் கூடாரத்தின் மேல் வைத்திருந்த என் கோமாளி முகமூடியை அணிந்துகொண்டு திரும்பி விட்டேன்.
(என்ன இதெல்லாம்னு கேட்பவர்கள் தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..)
____________________________________________________________________________
60 ஊக்கம்::
ஐ. அதிபின்னவீனத்துவமா:))இதென்ன புதுசா:))
நல்ல இடுகை. அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.
ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் எப்பவும் சிரிக்கிறதை விட லூசு மாதிரி சிரிச்சேன்:))
/பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" /
:)))
/ கையுதறி விடுவித்து மேலும் இரு சுழி வரைந்து ஆயுத எழுத்து போலாக்கி பக்கத்தில் மீன்கண் வடிவில் இரு சுற்று சுற்றி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்குத் "தெரிந்ததை" செவ்வனே செய்ததென்ற திருப்தியுடன் அதன் பனிக் கூடாரத்தின் மேல் வைத்திருந்த என் கோமாளி முகமூடியை அணிந்துகொண்டு திரும்பி விட்டேன். /
யம்மா சாமி:)). சூப்பர் கம் பேக்
/(என்ன இதெல்லாம்னு கேட்பவர்கள் தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..)/
ம்கும் கேக்க வேற செய்யணூமா:)). நாமளே அப்புடித்தான் ஆயிட்டம்:)))))))
/மேல் நுனியில் கிடைகோட்டின் ஜாதி மட்டம் இருப்பதாக புதிய தேற்றம் வாசிக்கப்பட்டது. கோட்டின் பாதியை அழி ரப்பர் கொண்டு தேய்த்து நிலைக்கோட்டை நீளமாக்கும் முயற்சியின் பின்நவீனத்துவ நிலையா இது/
இந்த ஃபார்முலா அருமை=))
/கேத்திர சூத்திரத்துடன், கோத்திரமும் செத்துவிட்டிருந்தது. /
ஆஹா ஆஹா! எவ்ளோ நல்லாருக்கும்.
"சித்திராப் பௌர்ணமியின் தொடரலைகள்..."
.....அலைகள் ஓய்வதில்லை. ha,ha,ha,ha...
கவிதைக்கு தான் பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை போடணும்னு இல்ல...இந்த இடுகைக்கும் போடலாம்...
பிடரி முடியின் பக்கம் சிலிர்த்து, மூக்கு முடியின் பக்கம் கண்ணை மூடிக்கொள்ளும் சாதுப் பூனையின்##
எப்பிடி ப்ரியாக்கா உங்க விரல்களில் மட்டும் தமிழ்இப்படி விளையாடுது
அடக் கொடுமையே...
நல்ல பொருத்தமான தலைப்பு:)))))))))
அருமை...
(அர்த்தம் புரியலைன்னா நாங்க இப்பிடித்தான் சொல்லுவம்)
பௌர்ணமி effect இன்னுமா? .தொடரே இப்படின்னா அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் ?
நீங்க ஒரு பெண் நேசமித்திரன் போல.
//பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" //
நல்லாயிருக்குங்க. யார் என்ன சொன்னாலும் நீங்க கவலைப்படாதீங்க. வருங்காலத்தில ஒரு ஜெயமோகினியா ஆக வாய்ப்பு இருக்கு.
:)
சரி... பேன் பார்த்தாங்களா இல்லையா
எண்டர் தட்டாம போட்டா இது கவிதை இல்லைன்னு ஆகிடுமா?
//அதிபின்நவீனத்துவம்//
அவ்வ்வ் பழைய வெர்ஷனான பின்நவீனமே இன்னும் சரியா புரியல.. இப்ப இதுல புது வெர்ஷனே வந்திடுச்சா! சுத்தம்.. ஒன்னும் புரியாதே
||வானம்பாடிகள் said...
ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் எப்பவும் சிரிக்கிறதை விட லூசு மாதிரி சிரிச்சேன்:)||
அடச் சை... ரொம்ம்ப சீரியஸா ஒரு இடுகை போட்டா... இப்பூடீ காமெடி பீஸாக்குறீங்களே சார்... ஹ்ம்ம்..
||சே.குமார் said...
நல்ல இடுகை. அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன||
நன்றி குமார்.. நானும் அப்டித்தான் நினைக்கறேன்..
||Chitra said...
"சித்திராப் பௌர்ணமியின் தொடரலைகள்..."
.....அலைகள் ஓய்வதில்லை. ha,ha,ha,ha||
நீங்களுமா சித்ரா.. :))
||அது சரி said...
கவிதைக்கு தான் பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை போடணும்னு இல்ல...இந்த இடுகைக்கும் போடலாம்...||
இது முகிலனுக்குதானே சொல்றீங்கோ.. போடுவாய்ங்க... ஆமா இது கவிதை இல்லைன்னு யார் உங்க கிட்ட சொன்னது....
||Balavasakan said...
பிடரி முடியின் பக்கம் சிலிர்த்து, மூக்கு முடியின் பக்கம் கண்ணை மூடிக்கொள்ளும் சாதுப் பூனையின்##
எப்பிடி ப்ரியாக்கா உங்க விரல்களில் மட்டும் தமிழ்இப்படி விளையாடுது||
எல்லாம் நான் கொடுத்த இடம் வாசு.. வேற என்னத்தச் சொல்ல... சரி விடு அது விளையாடிட்டு போகட்டும்..
ஒஹோ.. சித்ராபெளர்ணமின்னா இப்படி ஆயிடுவிங்களா?
//பௌர்ணமி effect இன்னுமா? .தொடரே இப்படின்னா அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் ?
நீங்க ஒரு பெண் நேசமித்திரன் போல//
ஹி ஹி ஹி, ரைட்டு பத்மா.....
||புலவன் புலிகேசி said...
அடக் கொடுமையே..||
வாங்க புலி... ஒரு ஹார்லிக்ஸ் கூடக் கொண்டு வரல... இப்டி தலைல அடிச்சுக்கிட்டு அழுதா என்ன அர்த்தம்..
|| *இயற்கை ராஜி* said...
நல்ல பொருத்தமான தலைப்பு:))))))))||
நன்றி ராஜி.. ஹிஹி.. பொருத்தமா தலைப்பு வைக்கிறதில நாங்க கில்லாடிங்கல்ல...
||முகிலன் said...
அருமை...
(அர்த்தம் புரியலைன்னா நாங்க இப்பிடித்தான் சொல்லுவம்)||
ஐ... நல்லா இருக்கே இந்த ட்ரிக்கு.. அதுக்காக நான் உங்க க்ரிக்கெட் பதிவில எல்லாம் அருமைன்னு பின்னூட்ட மாட்டேனாக்கும்..
||padma said...
பௌர்ணமி effect இன்னுமா? .தொடரே இப்படின்னா அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் ?
நீங்க ஒரு பெண் நேசமித்திரன் போல||
அன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி பத்மா..
என்னாது பெண் நேசமித்ரனா... அட என்னங்க நீங்க.. அவங்களயும் நம்ம கூட லூஸு லிஸ்ட்ல சேர்க்கறீங்க.. இது நல்லா இல்ல சொல்லிப்ட்டேன்... அதில்லாம எனக்கு இன்லீஸ்பீஸ் எல்லாம் டமில்ல எழுத வராதுங்காட்டியும்.. நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய..
||அகநாழிகை said...
//பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" //
நல்லாயிருக்குங்க. யார் என்ன சொன்னாலும் நீங்க கவலைப்படாதீங்க. வருங்காலத்தில ஒரு ஜெயமோகினியா ஆக வாய்ப்பு இருக்கு.||
வாங்க அகநாழிகை.. நான் எல்லாம் எதுக்கும் கவலைப்பட மாட்டேனுங்க.. ஒரு வார்த்த சொன்னாலும் திரு வார்த்தை சொன்னீங்க.. ஜெயமோகினி... அருமையா இருக்கு பேரும்.. என் பேரைச் சொல்லி ஒரு கிலோ சாக்லட் வாங்கிச் சாப்டுங்க..
||ஈரோடு கதிர் said...
சரி... பேன் பார்த்தாங்களா இல்லையா||
ஆகா... படிக்காமலே பந்தாவா ஒரு கேள்வி..
||நான் ஆதவன்☀ said...
எண்டர் தட்டாம போட்டா இது கவிதை இல்லைன்னு ஆகிடுமா?
//அதிபின்நவீனத்துவம்//
அவ்வ்வ் பழைய வெர்ஷனான பின்நவீனமே இன்னும் சரியா புரியல.. இப்ப இதுல புது வெர்ஷனே வந்திடுச்சா! சுத்தம்.. ஒன்னும் புரியாதே||
அதுதானே.. இதுவும் கவுஜதான்.. கவுஜதான்.. கவுஜதான்..
ஒன்னும் புரியலைன்னா இது அதிபின்நவீனத்தின் மிகப் பெரிய சக்ஸஸ்... நன்றி நன்றி நன்றி..
பதிவுக்கு கூடவே..தமிழ்ல விளக்கம்
கொடுத்து இருக்கலாம் ...!;)
||முரளிகுமார் பத்மநாபன் said...
ஒஹோ.. சித்ராபெளர்ணமின்னா இப்படி ஆயிடுவிங்களா?
//பௌர்ணமி effect இன்னுமா? .தொடரே இப்படின்னா அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் ?
நீங்க ஒரு பெண் நேசமித்திரன் போல//
ஹி ஹி ஹி, ரைட்டு பத்மா.....||
முரளி எனக்கு தினமும் சித்ராப்பௌர்ணமிதான்பா..
ரைட்டு பத்மாவா? கொக்கமக்கா... அவங்களுக்குப் போட்ட பதில்தான் இதுக்கும்..
|| ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
பதிவுக்கு கூடவே..தமிழ்ல விளக்கம்
கொடுத்து இருக்கலாம் ...!;||
அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா செலவாகும்... இந்த மொழிதான் எனக்கு புடிச்சிருக்கு..
//எஸ்கிமோவின் கைவிரல்//
அப்டின்னா என்ன?
//தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..//
நல்லவேள சொன்னீங்க....
வாழ்த்துகள்
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
ம்ம்.. என்னமோ புரிந்தும் புரியாமலும் புரிவது போல் இருக்கு :) கோடுகளும் அவைகளைக் கொண்டு பிரிக்கபட்ட மனித விகிதங்களும் (பை சார்ட் நினைவுக்கு வருது :) ), அவை சொல்லும் செய்தியும் (நான் புரிந்து கொண்ட மட்டில்) அருமை!
Unga Blog Romba Nalla Iruku...
Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips
உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html
நானும் இதை தான் கேட்கிறேன் உங்க விரல்களில் மட்டும் எப்படி தமிழ் இப்படி விளையாடுது சித்திரா பௌர்ணமியின் தொடரலைக்கும் ஏடு தொடக்கலுக்கும் என்ன தொடர்பு ..........ம ம்ம் மற்றது நீங்க கணிதம் படித்தனிங்களா.......கேத்திரகணித சூத்திரம் எல்லாம் ..........அருமை அதைவிட மையப்புள்ளி திடீரென தொலைந்தது எமக்கான நல்ல உவமை.மேலும் கீழும் புரியாமல் இடையிலுள்ள தேற்றம் மட்டும் என்னால் நிறுவப்பட்டது.
இனி இந்த தளத்திலிருந்து வெளி நடப்பு செய்கிறேன்!
||க.பாலாசி said...
//எஸ்கிமோவின் கைவிரல்//
அப்டின்னா என்ன?
//தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..//
நல்லவேள சொன்னீங்க...||
ம்ம்.. இவ்ளோ நேரத்தில எஸ்கிமோன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும்.. 0)).. கைவிரல்ன்னா எஸ்கிமோவின் கைவிரல்தான்..
நல்ல வேளை படிச்சீங்க..
|| VAAL PAIYYAN said...
வாழ்த்துகள்
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN||
capital letter la irukkum junior ku வாழ்த்துகள்..
|| எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ம்ம்.. என்னமோ புரிந்தும் புரியாமலும் புரிவது போல் இருக்கு :) கோடுகளும் அவைகளைக் கொண்டு பிரிக்கபட்ட மனித விகிதங்களும் (பை சார்ட் நினைவுக்கு வருது :) ), அவை சொல்லும் செய்தியும் (நான் புரிந்து கொண்ட மட்டில்) அருமை||
நன்றி சந்தனா.. :)
||ஸ்வாமி ஓம்சைக்கிள் said...
உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html||
கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்க... இப்பூடிப் போட்டி கீட்டின்னு போறது வெத்து வேலைன்னு நான் கற்றுக்கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்று சைக்கிள்.. :)).. கிண்டலுக்கு ஒரு அளவே இல்லையா... நம்மள பார்த்து கத்துக்குங்க... சண்டை சச்சரவுக்கு போகாம.. :))))
||archchana said...
நானும் இதை தான் கேட்கிறேன் உங்க விரல்களில் மட்டும் எப்படி தமிழ் இப்படி விளையாடுது சித்திரா பௌர்ணமியின் தொடரலைக்கும் ஏடு தொடக்கலுக்கும் என்ன தொடர்பு ..........ம ம்ம் மற்றது நீங்க கணிதம் படித்தனிங்களா.......கேத்திரகணித சூத்திரம் எல்லாம் ..........அருமை அதைவிட மையப்புள்ளி திடீரென தொலைந்தது எமக்கான நல்ல உவமை.மேலும் கீழும் புரியாமல் இடையிலுள்ள தேற்றம் மட்டும் என்னால் நிறுவப்பட்டது||
ஆ.. அர்ச்சனா நீங்களுமா... ரொம்ப சந்தோஷமா இருக்கு கேக்கறப்போ.. தொடரலைக்கும் என்னோட கிறுக்கலுக்கும் சம்மந்தம் உண்டு..
கணிதமும் படிச்சேன்.. :)).. நன்றி திரும்பவும்..
||ஷர்புதீன் said...
:)||
:-/
||பிள்ளையாண்டான் said...
இனி இந்த தளத்திலிருந்து வெளி நடப்பு செய்கிறேன்||
ஆகா சொல்லிட்டு போறாய்ங்க.. உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு..
புரியாமல்தான் இவ்வளவு தாமதமான பின்னூட்டம் சகோதரி...
வழக்கமான உங்களின் முத்திரையுடன் அருமையான இடுகை!
பிரபாகர்...
நன்றி அண்ணா...
///குரங்கின் ஈரல் தேடும் முதலைகளின்///
இன்னும் இந்த கதை எல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறீர்களே...
நல்ல இடுகை...வாழ்த்துக்கள்..
என் சிற்றறிவு மூளைக்கு ஒண்ணுமே எட்டலை கலகலப்ரியா.
/பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" /
ஆஹா ஆஹா!சூப்பர்..
நன்றி கமலேஷ்.. :)..
நன்றி ரதி வருகைக்கும்..
நன்றி ஜெஸ்வந்தி..
//என்னாது பெண் நேசமித்ரனா... அட என்னங்க நீங்க.. அவங்களயும் நம்ம கூட லூஸு லிஸ்ட்ல சேர்க்கறீங்க.. இது நல்லா இல்ல சொல்லிப்ட்டேன்... அதில்லாம எனக்கு இன்லீஸ்பீஸ் எல்லாம் டமில்ல எழுத வராதுங்காட்டியும்.. நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய..//
ஆஹா ! இங்கிலிஷ்ல இருக்குறத தமிழ்ல மொழிபெயர்க்குற அளவு நமக்கு பத்தாதுங்க
மொழி பெயர்த்தாலும் புரியாமைதாங்க பதிலா இருக்கும் .இப்படித்தான் எழுதி இருக்காங்க பிரமிள்ல்ல ஆரம்பிச்சு பிரம்ம ராஜன் வரைக்கும்
பிளாசர்கள் அப்படீங்குறத அப்படியேதான் பிரமிளும்
ஜென் ன்குறத பிரம்மராஜனும் பயன் படுத்தி இருக்காங்க
மொழிபெயர்க்க யாராச்சும் கிடைச்சா இங்கிலிஷ மொழிபெயர்த்து போடலாம்
உங்க கவிதை எல்லோரையும் போல எனக்கும் புரியலைங்க
நன்றி !
||நேசமித்ரன் said...
//என்னாது பெண் நேசமித்ரனா... அட என்னங்க நீங்க.. அவங்களயும் நம்ம கூட லூஸு லிஸ்ட்ல சேர்க்கறீங்க.. இது நல்லா இல்ல சொல்லிப்ட்டேன்... அதில்லாம எனக்கு இன்லீஸ்பீஸ் எல்லாம் டமில்ல எழுத வராதுங்காட்டியும்.. நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய..//
ஆஹா ! இங்கிலிஷ்ல இருக்குறத தமிழ்ல மொழிபெயர்க்குற அளவு நமக்கு பத்தாதுங்க ||
அதே மாதிரி எனக்கு ஆங்கிலத்தில இருக்கிறத தமிழ்ல எழுத வராதுன்னு சொன்னேன்.. (இலகுவானவை தவிர)
||மொழி பெயர்த்தாலும் புரியாமைதாங்க பதிலா இருக்கும் .இப்படித்தான் எழுதி இருக்காங்க பிரமிள்ல்ல ஆரம்பிச்சு பிரம்ம ராஜன் வரைக்கும்
பிளாசர்கள் அப்படீங்குறத அப்படியேதான் பிரமிளும்
ஜென் ன்குறத பிரம்மராஜனும் பயன் படுத்தி இருக்காங்க||
எனக்கு இவங்க எல்லாம் யார்ன்னு தெரியாது.. அண்ட்.. யார் யார் என்ன பண்ணாலும் அது அவங்க சொந்தப் பாணி.. அவங்க அவங்க இஷ்டம்..
||மொழிபெயர்க்க யாராச்சும் கிடைச்சா இங்கிலிஷ மொழிபெயர்த்து போடலாம் ||
all the best..!
||உங்க கவிதை எல்லோரையும் போல எனக்கும் புரியலைங்க ||
அட உங்களுக்கே புரியலையா.. மணிஜிக்கு ஃபோன் போடலயா ஹாஹா :)
||நன்றி !||
அதே..!
//அட உங்களுக்கே புரியலையா.. மணிஜிக்கு ஃபோன் போடலயா ஹாஹா :)//
அவர் கவிதைக்கு விளக்கம் கேட்டுத்தான் அவருக்கு போன் போடுறது உங்களுடைய கவிதைக்கு அல்ல
மேலும் உங்களின் பின்னூட்ட பதில் சொல்லும் தொனி மிக வருத்தமளிக்க கூடியதாய் இருக்கிறது இனி பின்னூட்டம் இடுவது உசிதம் அல்ல வென்று நினைக்கிறேன் இந்த முறையும் என் பெயர் குறிப்பிடப்பட்டதாலேயே பின்னூட்டம் இட்டேன் . நன்றி
||நேசமித்ரன் said...
//அட உங்களுக்கே புரியலையா.. மணிஜிக்கு ஃபோன் போடலயா ஹாஹா :)//
அவர் கவிதைக்கு விளக்கம் கேட்டுத்தான் அவருக்கு போன் போடுறது உங்களுடைய கவிதைக்கு அல்ல
மேலும் உங்களின் பின்னூட்ட பதில் சொல்லும் தொனி மிக வருத்தமளிக்க கூடியதாய் இருக்கிறது இனி பின்னூட்டம் இடுவது உசிதம் அல்ல வென்று நினைக்கிறேன் இந்த முறையும் என் பெயர் குறிப்பிடப்பட்டதாலேயே பின்னூட்டம் இட்டேன் . நன்றி||
உங்கள் பெயர் குறிப்பிட வேண்டி வந்ததற்கு நானும் மிகவும் வருந்துகிறேன்... உசிதமற்றவை தவிர்ப்பதே உகந்தது.. :)... ரொம்ப நன்றி..!
உங்களுக்கும் ரொம்ப நன்றி :)
மீ டூ லேட் டு டே..
ஓட்டு போட்டுட்டேன்..
கும்மி இடுகை போட்டு ரொ...ம்...ப நாள் ஆச்சே...
(யாரவது வந்து இடுகையே போடாதவர் இடுகையைப் பத்தி பேசப்பிடாதுன்னு சொல்லபிடாது...)
//இராகவன் நைஜிரியா said...
மீ டூ லேட் டு டே..
ஓட்டு போட்டுட்டேன்..
கும்மி இடுகை போட்டு ரொ...ம்...ப நாள் ஆச்சே...
(யாரவது வந்து இடுகையே போடாதவர் இடுகையைப் பத்தி பேசப்பிடாதுன்னு சொல்லபிடாது...//
ம்க்கும்... பெட்டர் லேட் தான் நெவர்... ப்ராக்கெட்ல சொல்லித் தப்பிச்சிட்டீங்க.. பொழைச்சிப் போங்க..
சித்திரா பவுர்ணமியில நிஜமாவே பைத்தியம் பிடிக்குமா ப்ரியா?
||SanjaiGandhi™ said...
சித்திரா பவுர்ணமியில நிஜமாவே பைத்தியம் பிடிக்குமா ப்ரியா?||
தினமும் பௌர்ணமி நமக்கு... இதில இந்தக் கேள்வி ரொம்ம்ம்ம்ப அவசியமா சஞ்சய்...
Post a Comment