விடாதழைத்த
வாசல் மணியை நிராகரித்தேன்..
சற்றுத் தாமதித்து
சாளரம் தட்டியது
செவி மடித்து
தலையணை அடைத்தேன்
தட்டாது கதவுடைத்து
உட்புகுந்தது..
அசைத்துப் பார்த்தது
அச்சத்தில் அலறினேன்
யாரது..
காற்றில் கை நீட்டித் துழாவினேன்
கொக்கின் நிறமேனும்
சொப்பனத்தில் காணா நீ..
என்னைத் தொடுவாயோ
எள்ளியதை எட்டி
எளிதாகக் கிள்ளினேன்
நகைப்பெதற்கு..
உனக்கும்தான் கண்ணில்லை..
குருடு குருடறியாதோ...
தத் த்வம் அசி..
_____________________________
29 ஊக்கம்::
வார்த்தை விளையாட்டு...வழக்கம் போல நல்லாருக்கு.
/குருடு குருடறியாதோ... தத் த்வம் அசி.. /
தத் தவமஸிக்கு புது விளக்கமா? பேஷ் பேஷ்!
/கொக்கின் நிறமேனும் சொப்பனத்தில் காணா நீ.. என்னைத் தொடுவாயோஎள்ளியதை எட்டி எளிதாகக் கிள்ளினேன் நகைப்பெதற்கு../
கனவு கண்டு பயந்தாமாதிரி தெரியுது:)).
ரொம்ப நல்லா இருக்குங்க.
Excellent
இன்னுமொரு கனவுக் கவிதையோ ..? நல்லாயிருக்கும்மா பிரியா.....வாழ்த்துக்கள்.
//கொக்கின் நிறமேனும்
சொப்பனத்தில் காணா நீ..//
டவுட்டு.. இது myth ஆ இல்ல மெய்யாலுமே இப்படித் தானா?
இன்னிக்கு கனவுல "பார்க்க" முயற்சி பண்ணறேன்... முடியலைன்னா நாளைக்கு கலர் கண்ணாடி மாட்டிட்டுத் தூங்கப் போறேன்.. :))
அசி??? அர்த்தம் புரியவில்லை.
கூறமுடியுமா?
ஒருத்தர ஒருத்தர் பாத்துக்க முடியாது.. ஆனா, நீங்க துழாவறது அதுக்குத் தெரியுது.. உங்களால, இல்லாத ஒன்றைக் கிள்ள முடியுது.. கனவு-நனவு கற்பனைச் (உண்மையாகக் கூட இருக்கலாம் :)) ) சந்திப்பின் முரண் அழகு!
தத்வமஸி.. நீங்களே அது! அடுத்த முரண் :) அழகு!
உங்களோட அதோட, உங்களோட சந்திப்பு :)
நல்லாத் தான் ஓடிப்பிடிச்சு விளையாடறீங்க நீங்க, உங்களோட அதோட :))
//குருடு குருடறியாதோ... //
ரெண்டு பேருக்கும் சீக்கிரம் பார்வை கிடைக்கட்டும்ன்னு அதுவ (இது என்னோட அது :)) ) வேண்டிக்கறேன்..
ரைட்டு
ஆகா ரொம்ப நல்லாயிருக்கு
//கொக்கின் நிறமேனும்
சொப்பனத்தில் காணா நீ.//
gud one.
//தத் தவமஸிக்கு புது விளக்கமா?//
ம்ம்ம்ம்
வழக்கம் போல
ROMBA நல்லாருக்கு
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு
ரொம்ப நல்லாயிருக்கு..
நல்லா இருக்குங்க.
வார்த்தை விளையாட்டு...வழக்கம் போல நல்லாருக்கு.//
கவிதை புரியலங்கிறதை இப்படிக்க்கூட சொல்லலாமா?
யாருமறியா சூட்சுமங்களை அறிந்தது போல செய்யும் பாசாங்கு சிரிப்புகளில் கொக்கின் நிறம் காண சொப்பன அறியாமைகள் மிகுந்திருக்கையில்.....
தத் - அது
த்துவம் - நீயாக
அஸி - உளாய்
அது நீயாக உளாய்.. குருடே.. உனக்கு குருடு அறியாது என்று எள்ளி சிரிக்கையில்.....உளாய் என்று தலைப்பிட்டு வந்து விழுந்திருக்கும் கவிதை வரிகளின் கரைகளிலிருந்து அலைகளாய் பரவும் உணர்வுகளை தேக்கிவைத்துக் கொண்டு நானும் சிரித்து விட்டு நகர்கிறேன் தோழி...!
நன்றி அது சரி..
நன்றி பாலா சார்..
நன்றி சேது..
நன்றி ராதாகிருஷ்ணன்..
நன்றி நித்திம்மா.. இது கனவில்ல..
நன்றி சந்தனா.. பார்வையில்லாதவங்களுக்கு கனவு வசப்படாது..
நன்றி மணிநேரன்... மொழிமாற்றும்போது.. ஆகிறாய்.. இருக்கிறாய்.. உள்ளாய் என்று நேரடியாக அர்த்தம் கொண்டாலும்.. இருப்பு இப்படியாக என்பதாகக் கொள்க..
நன்றி சந்தனா... ம்க்கும்..
நன்றி முகிலன்.. ரைட்டு ரைட்டு..
நன்றி தியா..
நன்றி நர்சிம்..
நன்றி குமார்..
நன்றி காயத்ரி..
நன்றி வெறும்பய.. (என்ன கொடுமை சார் இது.. இப்டிச் சொல்ல வைக்கிறாங்களே..)
நன்றி அன்பரசன்..
நன்றி குடுகுடுப்பை.. ஆமாம்.. அப்டியும் சொல்லலாம்.. நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்.. ஹிஹி..
நன்றி தேவா... :)
(என்ன கொடுமை சார் இது.. இப்டிச் சொல்ல வைக்கிறாங்களே..)
//
நாங்கெல்லாம் வெட்டிப்பயலுக... அதனால தான் இப்படி...
நன்றிங்க ப்ரியா.
தத்வமஸிக்கு புது விளக்கம்.. நடத்துங்க ப்ரியா..:))
@வெறும்பய
சரி வேற வழி...
@மணிநரேன்
:-)..
@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி தேனம்மை..
nalla sinthanai
parattugal
polurdhayanithi
@polurdhayanithi
நன்றிங்க..
Post a Comment