மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)
அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம்.
அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.
||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||
இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது.
அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை.
||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும். அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||
அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை. அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும்.
அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள். சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்..
||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||
இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம்.
||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர் மீண்டும் மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||
இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை..
||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden] என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||
||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||
ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன்.
இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம்.
உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)
நிற்க...
அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?!
இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!!
||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||
அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது.
யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..!
தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..!
_________________________________________________________
தொடர்புடைய சுட்டிகள்:
(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன்.
இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது.
ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?!
சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)
__________________________________________________________
104 ஊக்கம்::
Hats off to you. ஒவ்வொரு வார்த்தையும் மிக அழகாக அய்ன் ராண்ட் பற்றிய புரிதலோடு கூடே ஜெமோவின் புரிதலற்ற தன்மையை பறை சாற்றுவதாகவே நினைக்கிறேன். ரோர்க் ஒரு கற்பனைப் பாத்திரமில்லை. என் அதிர்ஷ்டம் லாரி பேக்கர் என்ற பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்டைப் பற்றி தெரிந்து அவரின் கோட்பாடு, கட்டிடங்களைப் பார்த்தபின் தான் ரோர்க் எனக்கு அறிமுகமானான்.
http://lauriebaker.net/work/work/pictures-by-brunio-vellut.html
இதிலுள்ள படங்களைப் பார்த்தாலே விளங்கும்.
கருத்துக்களைப் பற்றிப் பேசும்போது கட்டிடத்துக்கு என்ன வேலை என நினைக்க வேண்டாம். ரோர்க்கின் இயற்கையோடியைந்த, ஏழைகளுக்கான கட்டிடங்களை நனவாக்கியவர் லாரி பேக்கர்.
எவ்வளவு ஆழமின்றி படித்திருந்தால் பீட்டர் கீட்டிங் பற்றி
/கீட்டிங் சாதாரணமாக எல்லாரும் செய்வதையே செய்கிறான்.முதலில் ஒழுங்காகப் படித்து வெற்றி பெறுகிறான். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்கிறான். அவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்கிறான். அதாவது அவனுடைய கலை அல்லது திறன் என்பது பிறருக்காகவே இருக்கிறது. சமூகம் எதை உருவாக்குகிறதோ அதுவே அவன் வழியாக வெளி வருகிறது. சமூகம் செதுக்கி அளித்துள்ள அச்சில் தன்னை ஊற்றிக்கொண்டு தன்னை வெற்றிகரமாக வார்த்துக்கொள்கிறான் அவன்./
உண்மையில் படித்தவர்களுக்குத் தெரியும். மாணவப் பருவத்திலிருந்தே ரோர்க்கை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய சுயத்தை வெறுத்து ஒரு புழுவாக வாழ்ந்தவன் கீட்டிங். இவர் சொல்கிற ஒழுங்கான மாணவனாக திறமையானவனாக இருப்பின் ரோர்க்கிடம் அந்த ப்ரோஜக்டுக்கு கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன. :)
/செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது./
ஒன்னாங்க்ளாஸானு.
/அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். /
ஆஹா. சத்தியம்.
ங்கொய்யால. தமிழன் அவன் வாசகனோ பெரிய்ய்ய்ய எழுத்தாளனோ இந்த கள்ள உறவு எழவு தினத்தந்தி பாஷையைத் தாண்டினவன் கிடையாது போல. அதை ஊரோடு வைத்துக் கொள்ளாமல், புரிதலுள்ள தேசத்துக்கும் பரப்பிவிடுவதில் வெகு சமர்த்தர்கள். மண்ணாங்கட்டி.
/இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது./
எனக்கு பெரிய ஆச்சரியம். மிக நுண்ணிய உணர்வை புரியாமலா கிளி சொன்ன கதையும் மத்தகமும் எழுதமுடியும். இத எழுத முடிந்த ஆளா அய்ன் ராண்டை இப்படி விமரிசிக்க முடியுமென்றிருக்கிறது.
/நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன்,/
சுகமான பயணத்துக்கு வாழ்த்துகள். ஹி ஹி பயணக் கட்டுரை கலகலன்னு வரணும்:o)
//நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. //
கருத்து வேற கேட்கிறீங்க!சொல்லிட்டா போச்சு!
கல்லூரிக் காலத்தில் தபோ வரதன் னு ஒரு பையன் கொழும்புல இருந்து வந்து படிச்சான்.நான் பார்த்த நேரங்களில் அதிகமாக அயன் ராண்ட்தான்.ஒரு புத்தகம் படிச்சே ஜெயமோகன் அயன்ராண்ட புரிஞ்சிகிட்டார்ன்னா அப்ப வரதன்?
நானும் கூடத்தான் ஒண்ணோ ரெண்டோ ஷெல்டன் படிச்சிருக்கேன்.அப்ப நானும் ஜெமோவும் .....
இந்த விவாதத்தை சரியான “வார்த்தைகளுடன்” ஜெயமோகனிடமே துவங்கலாம் , நிச்சயம் பதிலளிப்பார் ,
நிச்சயம் நல்ல கட்டுரையாக வரவேண்டியது , சில வார்த்தைகள் எல்லை தாண்டிவிட்டதாக தோன்றுகிறது .
அயன்ராண்டின் எழுத்துக்களை தாண்டி வாழ்க்கையே வழிபாட்டுக்குறியதாக மாறும்போது , சொந்த வாழ்க்கை பற்றிய விமர்சனங்களும் வருமல்லவா?
//என் அதிர்ஷ்டம் லாரி பேக்கர் என்ற பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்டைப் பற்றி தெரிந்து அவரின் கோட்பாடு, கட்டிடங்களைப் பார்த்தபின் தான் ரோர்க் எனக்கு அறிமுகமானான்.//
பின்னூட்டம் போட்டதுக்கு இது வேற தனி விருந்தா!
"Opinion differs".ஆனால் தெரியாத விசயங்களில் அடக்கி வாசிக்கலாம் ஜெமோ. என்னவோ சமீபகாலங்களில் அதிகம் பு(ச)லம்பல் தெரிகிறது ஜெமோவிடம். சரி விடுங்க-’ஃபவுண்டென் ஹெட்’ பிடிக்கலை ஒருத்தருக்கு அப்பிடின்னா அவிய்ங்களுக்கு அது பிரியலை இல்லை வேணுமிமினே அப்பிடி சொல்றாய்ங்கன்னு தான் அர்த்தம். நன்னி.
நியுயார்க் இருந்து டெல்லி வரும்போது இந்த அயன் ராண்ட் கட்டுரைகளை ஜெ தளத்தில் படித்தேன். அப்புறம் திரும்ப சிட்னியில் இருந்து பாரிஸ் வர வழியில் தான் இந்த கட்டுரை படித்தேன். சூப்பர். ஜெ பொதுவா தன் விவாதங்களில் ஒரு வட்டத்தை போடுவார். அந்த வட்டத்துக்குள் உட்கார்ந்து விவாதிப்பார். அதில் இறங்கிடடால் யாரும் வெளியேற முடியாது. வட்டத்தில் இருக்கு மேட்டர். அவர் சொல்றதில் இல்லை.
லாரி பேக்கர்
http://www.jeyamohan.in/?p=4071
@Arangasamy.K.V
||இந்த விவாதத்தை சரியான “வார்த்தைகளுடன்” ஜெயமோகனிடமே துவங்கலாம் , நிச்சயம் பதிலளிப்பார் ,||
இங்கு எது சரியான வார்த்தை இல்லையென்று எனக்குத் தெரியவில்லை... ஆமாம் நிச்சயமாகத் தொடங்கலாம்... ஆனால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது... நான் விளையாட்டாக எழுதிய மொக்கைப் பதிவுகள் படித்துச் சில "தோழர்கள்" போன்று... நானும் அவ்வளவுதான் என்று புறங்கையால் ஒதுக்கி விடலாம்... நமக்கு வசதிப்பட்ட இடத்திலிருந்து பேசுவதே பாதுகாப்பு...
||நிச்சயம் நல்ல கட்டுரையாக வரவேண்டியது , சில வார்த்தைகள் எல்லை தாண்டிவிட்டதாக தோன்றுகிறது .||
தெரியவில்லை... வார்த்தைகள் என்னுடைய எல்லைக்குள் அடங்கியிருக்கின்றன..
||அயன்ராண்டின் எழுத்துக்களை தாண்டி வாழ்க்கையே வழிபாட்டுக்குறியதாக மாறும்போது , சொந்த வாழ்க்கை பற்றிய விமர்சனங்களும் வருமல்லவா?||
கண்டிப்பாக... ஆனால் அவரின் எழுத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையையும் புரிந்து கொண்டு விமர்சனம் செய்தால் நலம்...
இல்லாது... நயனுக்கும் பிரபுதேவாவுக்கும் கள்ள உறவு என்பது போன்ற விமர்சனங்கள் எனக்கு எப்போதுமே உவப்பானதாக இருந்ததில்லை... அது அவர்களின் வாழ்க்கை... அவர்களின் சுதந்திரம்...
இதை நான் ஜெயமோகனிடம் எதிர்பார்க்கவில்லையென்பதே என்னுடைய ஆதங்கத்தின் காரணம்..
அயன் ராண்ட், அவரது வாழ்க்கை, செக்ஸ்,தொழில்,தத்துவம் முதலான பார்வைகள் புரிய, அதை ஆழ்ந்து ருசித்து , உணர ஒரு தன்மை வேண்டும் ,
அயன்ராண்ட் மேலோட்டமாய் பார்க்க கள்ளக்காதல் என்றும் , பொழப்பு இல்லாத பேச்சு என்றும் சொல்லலாம் . அயன் ராண்டின் பாத்திரங்களே விமர்சனத்தை பொருட்படுத்தாதவர்கள். அப்படி
பட்ட அயன்ராண்ட் பற்றிய இவரது புரிதலை நினைத்து :))
கள்ள உறவு வார்த்தைக்குப் பதிலாக உபயோகப்படுத்துவதற்கு தமிழில் வேறு என்ன வார்த்தை உள்ளது? மன்னிக்கவும் அறிந்துகொள்வதற்காகவே கேட்கிறேன். மற்றபடி விமர்சனமாக அல்ல.
@T.Duraivel
உங்கள் அகராதியில் உள்ள கள்ள உறவுக்கு வேறு வார்த்தை வேறு தேடிக் கொண்டிருக்கிறீர்கள்...
என்னுடைய அகராதியில் அந்த வார்த்தை இல்லை... அவ்வளவுதான்..
மற்றபடி... உங்கள் அகராதியிலுள்ள பல வார்த்தைகளுக்கு வேறு சொற்கள் கண்டுபிடிக்க வேற செய்தால்... ஞாமறியோம் பராபரமே...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். எனக்கு பிடித்ததை இவர் மறுக்கிறாரே என்ற நிலைதாண்டி கொஞ்சம் திறந்த மனதுடன் அணுகியிருக்கலாம். எனக்கு அய்ன் ராண்ட் அவ்வளவு பரிச்சயமில்லை. எனவே வேறு கருத்துகள் இல்லை :)
ஆனால் டயானா பற்றியும் கள்ள உறவு பற்றியும் நீங்கள் சொன்னதைப் குறித்து...
//அது அவர்களின் வாழ்க்கை... அவர்களின் சுதந்திரம்... //
நிச்சயமாக. அதே சமயம் ‘கள்ள உறவு’ என்ற வார்த்தை உங்களை துணுக்குறச் செய்ய வேண்டிய அவசியமில்லையே. ஒரு திருமண ஒப்பந்தத்தில் இருக்கும்போது ஏற்படும் மற்றொரு உறவை குறிக்கும் ‘சாதாரண’ வார்த்தைதான். டயானாவிற்கோ, அய்ன் ராண்டிற்கோ, அவர்களுக்கான நியாங்களை அந்த ஒரு வார்த்தை மறுத்துவிடாது என்பது என் எண்ணம்.
என்னுடைய போஸ்ட் அண்ட் பின்னூட்டங்களை மிக உன்னிப்பாகக் கவனித்து லைஃப் ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கும்... ட்விட்டர் அறிவு ஜீவிகளுக்கு... மொக்கை சங்கம் சார்பில் ஒரு நன்றியைச் சொல்லிக் கொண்டு...
மீண்டும் வாசிப்பவர்.... இஹிஹி...
@ஸ்ரீதர் நாராயணன்
இதில் துணுக்குறச் செய்வதற்கு எதுவுமில்லை... உண்மையில் அயன் ராண்ட் இந்த வார்த்தையைக் கேட்டாலே தூசி மாதிரித் தட்டி விட்டுப் போயிருப்பார்...
ஆனால்... ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இவ்வாறு அயன் ராண்டின் பின்புலத்தைக் குறிப்பிட்டு அவரைச் சில சொற்களில் அடைத்து விமர்சனம் செய்வது ஆச்சர்யமளிக்கிறது...
இப்பொழுது நான் அயன் ராண்டுக்காகப் போராடவில்லை... அதுக்கு அவசியமும் இல்லை... ஜெயமோகன் சார் நீங்களா இப்படி என்று வியந்து கொண்டிருக்கிறேன்...
ஆதலால் எனக்குப் பிடித்த ஒன்றை மற்றவர்கள் விமர்சிக்கிறார்களென்ற நோக்கம் இதில் இல்லாமலே போய்விடுகிறது...
எல்லாரும் ஒரு விடயத்தை ஒரே மாதிரிப் பார்க்க வேண்டுமென்பதல்ல... ஆனால் மேலோட்டமான அணுகுமுறையையும்.. விமர்சனத்தையும் புரிந்து கொள்வதற்குப் பிரமாதமான அறிவு தேவையில்லை...
அறிவுஜீவிகள் மட்டுமல்லாது என்னைப் போன்ற மொக்கைகளும் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும்...
Fountain head - கல்லூரி காலகட்டத்தில் படித்தது..
கொஞ்சம் கூட தனது நிலைபாட்டில் இருந்து கீழே இறங்காமல், சமரசம் என்பதனையே ஏற்றுக் கொள்ளாமல், பிழைப்புக்காக கல் உடைத்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ரோர்க் பிரமிக்க வைக்கிறார் இன்னமும்..
உயர்கல்வி மாணவர்களைப் பற்றி ஜெ. மோ எழுதியதெல்லாம் பீட்டர் கீட்டிங் க்கு தான் பொருத்தமாக வருகிறது :)) அவர் நாவலை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது.. படிப்பை முடிக்காமலேயே வெளியேற்றப்பட்ட ரோர்க் குறைந்த செலவில் காற்றோட்டமான வெளிச்சம் மிகுந்த வீடுகளை கட்டித்தர, திறம்பட படித்து முடித்த கீட்டிங் குறிப்பிட்ட வரையறைக்குள் சிக்கிக்கொண்டு ஆடம்பரமான ஆனால் உள்வசதி குறைந்த வீடுகளை கட்டித் தருவார்.. ரோர்க்கும் அவர் சொல்லியுள்ள //நம் உயர்கல்வி மாணவர்களை தங்களை ‘உலகம் சமைப்பவர்களாக’ , உலகைச்சுமக்கும் அட்லஸ்களாக, உணரச்செய்கிறது அது.// க்கும் பொருத்தம் இருப்பதாக தெரியவில்லை..
இறுதியில் ரோர்க் ஏழைகளுக்கென ஒரு கட்டிடம் உருவாக்குவார்.. ஒரு க்ராஸ்/asterisk போன்ற வடிவில்.. மூன்று திசைகளில் வெளிச்சமும் காற்றும் புகக் கூடிய அமைப்பில் இருக்கும்.. இந்தியாவில் பின்னொரு இடத்தில் இது போன்ற கட்டிடத்தை காண்கையில் ரோர்க் நினைவுக்கு வந்தார்.. உண்மையில் ரோர்க் தான் எளியவர்களின் நலன் பற்றி உண்மையான அக்கறை கொண்டவர்..
Atlas shrugged பற்றி பிறர் சொல்லிக் கேட்டது மட்டுமே.. படிக்கவில்லை இன்னமும்.. அதற்கு மேல் அயன் ராண்டின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்ததில்லை :))
//இதேபோலத்தான் இந்தியச் சூழலில் தொழிலியக் கல்வி பெறுபவர் பின்னர் உயர்மட்ட வேலைக்குச் சென்று உயர்மட்ட குடிமகனாக ஆகப்போகிறார்.//
மறுபடியும் கீட்டிங் க்குத் தான் பொருந்துகிறது!!
அப்புறம், அந்த எல்ஸ்வர்த் டூஹீ :)) Altruism என்ற அரசியல் போர்வையில் முன்னேறி, "power" ஐக் கைப்பற்ற விரும்பும் அவரது characterization பற்றி ஜெ. மோ ஒன்றுமே சொல்லக் காணோம்..
வடக்குல சூலம் ஒனக்கு வாய்ல வாஸ்த்து வேற சரியில்லைன்னு வடுகப்பட்டி சோசியரு சோழி போட்டு பார்த்து சொல்லிப்போட்டாரு. அதனால நான் இன்னும் மூனு மண்டலம் மெளன விரதம்.
வேலை செய்யாட்டி ஜப்பான் காரன் செத்துடுவான். பேச முடியாட்டி தமிழன் செத்துடுவான். பேசாம இருக்க முடியலியே. சரி, நான் சோசியருக்கிட்ட பரிகாரம் கேட்டுக்கிறேன்.
முதலாவதாக,
அயன் ராண்டின் கருத்தியலை நிராகரிக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அந்த கட்டுரையில் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரங்கசாமி சொல்வது போல அயன்ரான்டின் வாழ்க்கையே கொண்டாடப்படுகிறது என்றாலும், கருத்தியலை தவறு என்று நிரூபிப்பதன் மூலமே அந்த பிம்பத்தையும் நிராகரிக்கலாம்.
கள்ள உறவு போன்ற வார்த்தைகளை அவர் உபயோகித்திருக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.
இரண்டாவதாக,
ஃபவ்ண்டய்ன் ஹெட் என்று ஒரு நாவலை படித்து விட்டு, அயன் ராண்டை முற்றிலுமாக நிராகரிக்கலாமா என்றால், ...கலாம் என்றே சொல்ல முடியும். இங்கு நிராகரிப்பது அந்த ஒரு புத்தகம் அல்ல, அவரது கருத்தியல் நிலைப்பாடு. அவர் எத்தனை புத்தகம் எழுதினாலும் அந்த நிலைப்பாட்டை ஒட்டியே இருக்கும் என்பதால், கருத்தில் ஒப்புதல் இல்லாதவர்கள் அதை நிராகரிக்கலாம்.
ராப் ம்யூஸிக் பிடிக்காதவர்கள் எமினெம்மை நிராகரிப்பது போல. அதற்கு எமினெம்மின் எல்லா பாடலும் கேக்க வேண்டிய அவசியமில்லையே? :)
அரவிந்தன் கன்னையன் என்பவருக்கு (அவருடையதை நேர்மையான விமர்சனம் என்று வேறு சொல்கிறீர்கள் பாருங்கள் ... அடடா ....) அளித்த பெரும் விளக்கக் கட்டுரையிலேயே உங்களது கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு தெளிவான பதில் இருக்கிறது. அதை படித்த பிறகும் இப்படி ஒரு பதிவா என்று சற்று வியப்பாகவே இருக்கிறது.
அன்புடன்
முத்துக்குமார்
இனி வரும் என் பின்னூட்டங்களுக்கு முன் முக்கியமான டிஸ்கி... நான் மூணாப்பு பெயிலு...அதானால் அயன் ராண்டை கொஞ்சமே கொஞ்சம் தான் படித்திருக்கிறேன்.
//
ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும்.
//
நானறிந்த வகையில் அயன் ராண்ட் முன்வைப்பது சமூகத்துடன் சமாதானம் செய்வதற்காக தன்னை வளைக்காத தன்மை. சுயம். இன்டிவிஜுவாலிட்டி.
அது எத்தனை தூரம் ப்ராக்டிகலான விஷயம் என்பது வேறு, ஆனால் சுயமாக சிந்திப்பதற்கும் அடக்கி ஆள நினைப்பதற்குமான தொடர்பு என்ன என்று எனக்கு புரியவில்லை.
என்னை பொறுத்த வரை, திரள்வாதத்திற்கும் தனிமனித வாதத்திற்கும் இடையில் எங்கோ ஒரு புள்ளியில் தான் வாழ்க்கை இருக்கிறது அல்லது இரண்டும் சேர்ந்து தான் இருக்கிறது.
ஜெயமோகன் சொல்வதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
தனி மனித சிந்தனை என்பதே ஒரு வகையில் சமூகத்திலிருந்து எழுவதே. அதற்கு ஆதரவாகவோ இல்லை எதிராகவோ தான் தனிமனிதனின் சிந்தனை இருக்கிறது. காலப் போக்கில் இதே சிந்தனைகள் சமூக சிந்தனையாக மாறும் போது அங்கு தனிமனிதன் என்பது அழிந்து ஒரு பொது சிந்தனையாகி விடுகிறது. இந்த நோக்கில் பார்த்தால் சமூகத்தை மீறி சுயமாக சிந்திப்பவர்கள் அதே சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியின் முன்னோடிகள் என்று சொல்லி விடலாம்.
அயன் ராண்டை படித்து கெட்டுப் போகிறார்கள் என்பது ரஜினிகாந்த்தை பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது. உண்மையில், தமிழ்நாட்டில் எத்தனை பேர் அயன் ராண்ட் படித்திருப்பார்கள்? ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும், ஜெயமோகனும் படித்தவர்களை விட அயன்ராண்ட் படித்தவர்கள் மிகக்குறைவு என்பது என் அனுமானம்.
சமூகம் ஏற்றுக்கொண்டபடியே ஒரு உறவுக்கான ஒப்பந்தம் புரிந்து அந்த உறவை (பாலியல் சார்ந்த என்பது முக்கியமானது) வெளிப்படையாக பேணிகொண்டிருக்கும்போதே சமூகம் ஏற்றுக்கொள்ளாத - ரகசியமான - ஏற்கனவேயான ஒப்பந்தத்திற்கெதிராக கொள்ளும் ஒரு உறவை (இதுவும் பாலியல் சார்ந்த என்பது வெளிப்படை) கள்ள உறவென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? உமது உடமையை உமக்குத்தெரியாமல் அபகரிப்பதை கள்ளம் / திருட்டு என்ற வார்த்தைகளில்தானே அழைப்பீர்கள் ? உங்கள் அகராதியில் இல்லை - உங்களுக்கு உவப்பாக இல்லை என்பதற்காக அந்த வார்த்தையை நீக்கி விட முடியுமா என்ன ?
அந்த கள்ள உறவு விவகாரத்தை ஏன் குறிப்பிட நேர்ந்தது என்பதற்கும் முன் சொன்ன கட்டுரையிலேயே விளக்கம் உள்ளது. அயன் ராண்ட்-ஐ மட்டம் தட்டவோ கீழ்மைப்படுத்தவோ அல்ல என்பது முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது.
கள்ள உறவு என்ற பதம் உங்களுக்கு அசூயையை ஏற்படுத்தினால் நேர்மையற்ற உறவு, நெறியற்ற உறவு, முறையற்ற உறவு என்றெல்லாம் கூட பாலிஷாக சொல்லிக்கொள்ளலாம். விஷயம் என்னவோ ஒன்றுதான்.
அன்புடன்
முத்துக்குமார்
ஜெய மோகன் இதை நிராகரிக்க காரணம், அது இலக்கிய படைப்பு அல்ல என்கிறார். இலக்கியத்திற்கான வரையறைகள் என்ன என்று பெரும் கேள்வி நிற்கிறது என்றாலும் அவரது நோக்கில் ஃபவ்ண்டய்ன் ஹெட் ஒரு தத்துவத்தின் அடிப்படையிலானது. அதில் வரும் மனிதர்கள் உண்மையான மனிதர்களின் பிரதிபலிப்பை விட தத்துவ நாயகர்களாகவே இருக்கிறார்கள். ராமாயணம் போல.
இதை வேண்டுமானால் ஒரு தத்துவ நூல் என்று சொல்லலாம், ஆனால் இலக்கிய படைப்பு ஆகாது என்பது அவர் அதை நிராகரிக்க முக்கிய காரணம்.அது தத்துவ பிரச்சாரமாக இருந்தால், நான் ஜெயமோகனுடன் ஒத்துப் போகிறேன்.
கடைசியாக,
சுயமாக இருத்தல் முக்கியமா, சமூகத்துடன் ஒத்துப் போவது முக்கியமா என்றால், சுயமாக இருத்தலே மிக முக்கியம் என்று படுகிறது. சமூகத்திற்காக சமரசம் செய்து யாரோ ஒருவர் விதித்தபடி வாழ என்னால் முடியாது. அது என் வாழ்க்கை அல்ல. நான் ஏன் யாரோ ஒருவரின் வாழ்க்கையை வாழ வேண்டும்?
முன்பே சொன்னது போல, பூமி தட்டை என்று நம்பிய சமூகத்துடன் ஒத்துப் போகாமல் மிகச்சிலராவது நின்றதால் தான் இன்றைக்கு பல விஷயங்கள் நடக்கிறது. அம்மை போடுவது அம்மாவின் கோபம் என்பதை சிலர் ஒத்துக் கொள்ளாததால் தான் இன்று பலர் உயிருடன் இருக்கிறார்கள்.
மன அழுத்தம் வர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதனால் அயன் ராண்ட்ட்க்கு அவரது கொள்கைகளால் தான் மன அழுத்தம் வந்தது என்று உறுதியாக சொல்ல முடியாது. (அவரே சொல்லி இருந்தால் அது வேறு விஷயம்).
எல்லா விஷயத்திலும் சமரசம் செய்து, அதனாலேயே மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட்வர்களை கூட எனக்கு தெரியும். எந்த சமரசமும் இல்லாமல் கடைசிவரை இருந்தவர்களையும் தெரியும்.
(நான் அயன் ராண்ட் படிக்கவே இல்லை.எனக்கு கூட மன அழுத்தம் வருகிறது.ஊரில் சிகரெட் விலை ஏறிவிட்டது. என்ன செய்வது)
@Muthu
இப்போ எனக்கு உவப்பாக இல்லையென்று நான் சொல்வது உங்களுக்கு உவப்பில்லாத பட்சத்தில் நான் அந்தப் பிரயோகத்தைக் கையாள முடியுமா..?!
சரி அத விடுங்க... நீங்க நின்று பேசிக் கொண்டிருக்கும் தளம் வேறு... நீங்கள் பாலிஷாகச் சொல்லும் பதங்களைப் பற்றியோ ரா-வாகச் சொல்லும் பதங்களைப் பற்றியோ நான் இங்கு விவாதம் செய்து கொண்டிருக்க முடியாது....
கருத்துக்கு நன்றி....
//
Muthu said...
சமூகம் ஏற்றுக்கொண்டபடியே ஒரு உறவுக்கான ஒப்பந்தம் புரிந்து அந்த உறவை (பாலியல் சார்ந்த என்பது முக்கியமானது) வெளிப்படையாக பேணிகொண்டிருக்கும்போதே சமூகம் ஏற்றுக்கொள்ளாத - ரகசியமான - ஏற்கனவேயான ஒப்பந்தத்திற்கெதிராக கொள்ளும் ஒரு உறவை (இதுவும் பாலியல் சார்ந்த என்பது வெளிப்படை) கள்ள உறவென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? உமது உடமையை உமக்குத்தெரியாமல் அபகரிப்பதை கள்ளம் / திருட்டு என்ற வார்த்தைகளில்தானே அழைப்பீர்கள் ? உங்கள் அகராதியில் இல்லை - உங்களுக்கு உவப்பாக இல்லை என்பதற்காக அந்த வார்த்தையை நீக்கி விட முடியுமா என்ன ?
//
முத்து,
நீங்கள் சொல்லும் சுட்டியை நான் படிக்கவில்லை.
ஆனால், உங்கள் உடைமை என்பதை ஒத்து கொள்ள முடியாது. அயன் ராண்ட் அவரது கணவரின் உடைமை என்று சொல்ல வருகிறீர்களா? யாரும் யாருடைய உடைமையும் அல்ல. யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாட முடியாது.
எந்த ஒரு சமூகமும், நாடும் கூட அதன் பிரஜைகளுக்கு உரிமை கொண்டாட முடியாது. என் நாடு ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது என்பதால் அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அது தான் அயன் ராண்ட் சொல்வது. நீ நீயாக இரு. நான் நானாக இருக்கிறேன்.
ஜெமோ யாரைத்தான் விட்டு வைத்தார்? :) இவரின் (இயலா) ஒழுக்க சிகாமணி வட்டத்திற்குள் வராத எல்லா படைப்பாளிகளையுமே மிக இழிவான வார்த்தைகளைக் கொண்டுதான் விமர்சித்திருக்கிறார்.ஜான் ஆப்ரகாமிலிருந்து கமலாதாஸ் வரைக்குமானவர்களின் மீது ஜெமோ உமிழ்ந்த எச்சிலை அவரது அபாரமான மொழியில் படித்துக் கடந்து போய்விடுவதுதான் நம் விதி.
இங்கு கள்ள உறவு என்கிற அமில வார்த்தைக்கு வியாக்கியானம் சொல்லப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை கடக்க சிறிது கடினமாகத்தான் இருக்கிறது. தனிமனித உயிர்ப்பை முன்னிறுத்தும் அயன்ராண்ட் இன்னொரு உறவில் ஈடுபடாதிருந்தால்தான் அவருடைய எழுத்தை போலித்தனம் என சந்தேகிக்க வேண்டி வந்திருக்கும்.மாறாய் அவர் இன்னொரு உறவில் ஈடுபட்ட தகவல் எனக்குப் புதிய மகிழ்ச்சிதான்.
ஜெமோ வகையறா சமூகங்கள் கட்டமைத்திருக்கும் அல்ப வகைப்பாட்டில் வியாபாரிகள் அடங்கிவிட முடியுமே தவிர உண்மையான கலைஞர்கள் அடங்கிவிடமுடியாது. உறவிலோ காதலிலோ கள்ளத்தனம் என்பதெல்லாம் எதுவும் கிடையாது. ஏமாற்றம் துரோகம் என்பதெல்லாம் நாம் அன்பு என போதித்துக் கொள்ளும்/நம்பும் ஈகோ செய்யும் வேலைதானே தவிர அன்பின் வடிவம் அன்பாய் இருப்பது மட்டும்தான்.
அயன்ராண்ட் தன்னுயிர்ப்பிலிருந்து / சுயநலத்திலிருந்து நகரவில்லை என்கிற விமர்சனங்கள் என்னளவில் ஒத்துக் கொள்ளப்பட வேண்டியதுதான்.
@வானம்பாடிகள்//
HOWARD ROARK laughed
**
தமிழனுக்கு ஒரு வியாதி இருக்கிறது.
என்னவென்றால், சுதந்திரதினத்தன்று "குஜ்லி குஜ்லாம்பாளை" கூட்டி வந்து "இந்தியாவின் 43 மூனே முக்கா சுதந்திரத்தைப் பற்றிய உங்கள் கருத்தைச் நேயர்களுக்குச் சொல்லுங்கள்" என்று ஆரம்பித்து, அந்த சுதந்திரதினத்தன்று அவரிடம் கேள்வி கேட்க 10 மொக்கைகளை போனில் தயார் செய்வது.
.
அது போலத்தான் மதன் என்ற ஓவியர் தன் ஓவிய உலகில் கிடைத்த புகழில் வரலாறு முதல் அறிவியல் வரை எல்லா அப்பளக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார். இன்னும் பல மொக்கைகள் தாது விருத்திக்கு என்ன செய்யலாம் என்பதில் தொடங்கி மொகலாய பேரரசில் பத்தினி யார் என்று கேள்விகேட்கிறார்கள்.
அடுத்து ஞாநி. ஓ பக்கத்தில் ஆரம்பித்து பாலியல் கல்விவரை பதில் சொல்லத் தொடங்கி அப்புறம் நிறுத்திவிட்டார்.ஆனந்தவிகடன் என்ற ஒரு பத்திரிக்கை என்று நினைக்கிறேன்
சுஜாதா,மதன்,ஞாநி வரிசையில் இப்போது இவர் . சாம்பார் வைப்பது எப்படி என்று கேட்டால்கூட "பொந்துஞான மரபில் சாம்பாரியல் கூட்டில் அடைவேகவைக்க அடுப்படி எதற்கு?" ..என்று எதையாவது 100 பக்கத்தில் எழுதிவிடுவார்
கதை எழுதுபவர் எல்லாம் வரலாற்று ஆசிரியன் அல்ல
அரசியல் பேசுபவர் எல்லாம் பாலியல் கல்வியில் ஆசான் அல்ல
தமிழில் தலையணை சைசில் பத்து கதைப்புத்தகம் எழுதிவிட்டால் உலகத்தில் எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லும் தகுதி தானாக வந்துவிடுகிறது. கதை எழுதுபவரிடம் போய் உலகவிசங்கள் அனைத்திற்குமான வியாக்கியானங்களைக் கேட்பது ஒரு வகை நோய். அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று கேப்பில் கம்பு சுற்றுவது கோமாளித்தனம். :-((((
கதைப்புத்தகம் படித்தோமோ கடந்துபோனோமோ என்று இருக்க வேண்டும். எழுதியவன், அச்சுக் கோர்த்தவன், போஸ்டர் ஒட்டியவன் , கல்லாப்பெட்டில் காசை வாங்கியன் என்று யாரையாவது தொழுதே தீருவேன் என்று பித்துப் பிடித்தவர்கள் இருக்கும் வரை இது போன்ற அபத்தவாதிகள் வாழ்வார்கள்.
இந்த மொன்னையில் "இரசினி இரசிகர்கள் ஏன் பால்குடம் எடுக்கிறார்கள்?" என்று மேதாவிகளின் கேள்வி வேறு.
கதைப்புத்தகம் எழுதுபவனுக்கு வாசகர் வட்டம் , சாமியாருக்கு பக்தர் வட்டம், நடிகனுக்கு இரசிகர் வட்டம்......
பிள்ளைகுட்டியப் படிக்கவைக்காலாம்.....
.
@கல்வெட்டு
இதையேதான் கொஞ்சம் வேறு வார்த்தைகளில் நான் நினைத்தேன்...
எழுத்தாளரோ, நடிகரோ, ஓவியரோ.. யாரென்றாலும் சற்றுப் புகழ் பெற்று விட்டால்... அவருக்கு உலகிலுள்ள சர்வமும் தெரிந்தாக வேண்டுமென்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்...
அதில் ஏதாவது தெரியவில்லையென்று சொல்லி விட்டால் அவமானம் என்று நினைத்து அவர்களும் பதில் சொல்கிறார்கள்...
தெரியாத ஒன்றைத் தெரியாது என்று சொல்லும் மிடுக்கை பலர் கற்பதாகக் காணோம்...
(இப்போ பல பேருக்கு.. - நான் ஜெ.மோ. அவர்களைச் சொல்லவில்லை.. - கூகிளாண்டவரில் தேடிக் காப்பி பேஸ்ட் செய்வது மிக வசதியாக இருக்கிறது... எதுவானாலும் மனப்பாடம் செய்து வைத்திருப்பது போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்..)
கலகலப்ரியா,
//எழுத்தாளரோ, நடிகரோ, ஓவியரோ.. யாரென்றாலும் சற்றுப் புகழ் பெற்று விட்டால்... அவருக்கு உலகிலுள்ள சர்வமும் தெரிந்தாக வேண்டுமென்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்... //
//தெரியாத ஒன்றைத் தெரியாது என்று சொல்லும் மிடுக்கை பலர் கற்பதாகக் காணோம்... //
தன்னுடைய இரசிக வட்டத்தில் இருக்கும் $%^^#$^&**((%^% தக்கவைக்க வேண்டாமா? தனது கீரோ அடிவாங்குறார் என்பதை தனது சினிமா இரசிகன் தாங்கிக் கொள்ளமாட்டான் என்று 70 வயதிலும் கீரோக்கள் கம்பு சுற்றவில்லையா?
சாய்பாபா போன்ற மனிதர்களும் இடைவிடாமல் ஏதாவது ஒரு மேஜிக் செய்து கொண்டுள்ளார்கள் இரசிகர்களைத் தக்கவைக்க.
கதைப்புத்தகம் எழுதி வாசக வட்டங்களை வைத்துள்ளவர்கள் சிம்மாசனத்தில் இருந்தே ஆகவேண்டும்.
எனக்குத் தெரியாது.
அது என் துறை அல்ல.
நான் எழுதிய கதைப்புக்கில் இருந்து கேள்வி கேளுங்கள்.
எனக்குத் தெரியாது உங்கள் கருத்து என்ன?
படித்துச் சொல்கிறேன்.
நானும் உங்களைப் போல சாமன்யனே
.... என்று சொல்ல நெஞ்சுரம் இல்லாமையால் வரும் கம்புசுற்றாலஜி இது.
கேட்பவனை நோவதா? அல்லது "ஆஹா ஒரு அடிமை சிக்கிட்டான்" என்ற ரீதியில் வியாக்கியானம் பேசும் இந்த மனிதர்களை நோவதா?
செருப்பு தைப்பது,நடிப்பது போல கதை எழுதுவது ஒரு தொழில். ஒரு துறையில் சிறந்து இருப்பதனாலே அவர்கள் சர்வவல்லமை படைத்த கேள்வி பதில் மெசின் அல்ல .
கேட்பவர்களை நோகலாம். :-((((
.
பின்னூட்டங்களுக்கு ரொம்ப நன்றி... வந்து தனித்தனியா பதில் எழுதுறேன்..
பின்னூட்டங்கள் வெளியிடலாம்... பதில் சொல்லச் சற்றுத் தாமதமாகும்...
மன்னிக்கணும்...
இன்று போய்.... அப்புறம் வர்றேன்... :))
//அப்புறம், அந்த எல்ஸ்வர்த் டூஹீ :)) Altruism என்ற அரசியல் போர்வையில் முன்னேறி, "power" ஐக் கைப்பற்ற விரும்பும் அவரது characterization பற்றி ஜெ. மோ ஒன்றுமே சொல்லக் காணோம்..//
வெயிட்டீஸ்.. கட்டுரையில் இருந்த சுட்டியை மட்டும் படித்துவிட்டு இதை சொல்லிவிட்டேன்.. கீழே இருந்த சுட்டிகளில் ஜெ.மோ இவரைப் பற்றியும் பேசியிருக்கிறார்.. அதனால் இதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..
ஜெ.மோ இப்புத்தகம் குறித்து நிறைய பேசியிருக்கிறார்.. அதெல்லாம் சரியாகப் புரியவில்லை.. சரியாகப் புரியாமல், அவர் சொன்னதை தவறு என்று சொல்லவும் விரும்பவில்லை..
//இவர்களின் சிந்தனைகளைவிட இவர்களின் ஆளுமைகளை அறிந்து அதனால் கவரப்பட்டவர்களே இளைஞர்களில் அதிகமானவர்கள்.// இப்படிச் சொல்லி, கல்லூரி காலகட்டத்தில் ரோர்க்கை பிடித்தது இதனால் தானோ என்று என்னைக் குழம்பவும் வைக்கிறார்..
எனிவே, எனக்கு ரோர்க் என்ற கதாபாத்திரம் பிடிக்கும்.. He was simple, intelligent, and true to his spirit (which may not be possible in real world at all times).. He believed that a building had to be built for the purpose it would serve, and not for its beautiful appearance.. I have my own likes and dislikes for the novel.. அதற்கு மேல் யோசிக்கப் பிடிக்கவில்லை.. பை..
Priya - good post! வேதனை - வட்டத்திற்குள் அமர்ந்து கொண்டு எட்டின அளவுகோலை வைத்துக் கொண்டு பூராபயலையும் அதுக்குள்ள அடக்கி கொண்டு வந்து சான்றிதழ் வழங்க நினைப்பது.
கல்வெட்டு - உங்க பின்னூட்டங்கள் வாசித்தாலே எத்தாலேயே பொரடியில அடிவாங்குற மாதிரி இருக்குப்போய்ய்ய்... ///கம்புசுற்றாலஜி இது./// loved it!
நான் எய்ன் ராண்டையும் படித்ததில்லை, ஜெயமோகனையும் படித்ததில்லை. ஆதலால் வேறு கருத்துகள் எதையும் சொல்லாமல் இரண்டு கட்டுரைகளையும் கடந்து போகிறேன்.
ப்ரியா.........என்னது......அயன் ராண்டின் தத்துவங்களை இந்த அளவிற்கு உள் வாங்கியிருக்கும் உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்ம்மா.......டயானாவின் வாழ்க்கைப் போராட்டங்களைக்கூட இப்படி ஒரு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது தகுமோ? "கள்ள உறவு" என்ற வார்த்தை பலமுறை உளவியல் ரீதியான கொலை முயற்சி........கால்ங் காலமாக நடக்கும் கொடுமை....தாங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டிகளை வாசித்துவிட்டு மீதம்.........பகிர்வுக்கு நன்றி.
@வானம்பாடிகள்
@பாலா சார்
ரோர்கின் கட்டிடங்கள் பணக்காரர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டன,அதில் அவர் ஒரு வானளாவியை கட்டி முடிப்பது போல படம் முடியும்,லாரி பேக்கர் என்னும் கட்டிடக்ககலை வல்லுனர் இயறகையுடன் ஒத்துப்போகும்,குறைந்த செலவு பிடிக்கும் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை சேவையாகவே செய்து வந்தார்.விற்கவில்லை.
====
படத்தில் ரோர்க் பாத்திரம் fl wright என்னும் அமெரிக்க ஆர்கிடெக்டின் பிதாமகரை குறிக்கும்,அவர் தான் வானளாவியை 60களிலேயே வடிவமைத்து முடித்தவர்,அதன் அப்பட்டமான காப்பி தான் புர்ஜ் கலீஃபா.
http://en.wikipedia.org/wiki/Frank_Lloyd_Wright
இவரின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படுவது ஃபாலிங் வாட்டர் என்னும் காஃப்மென் என்னும் தொழிலதிபருக்கு வடிவமைத்த காட்டுவீடு
http://en.wikipedia.org/wiki/Fallingwater
====
தவிர ஜெமோ எதையாவது இதுபற்றி சொல்லியிருந்தால் அபத்தமாகவே இருக்கும்.அவருக்கு எல்லோரையும் விட அவரின் மகனும் மகளுமே அறிவாளிகள்.உலக அறிஞர்கள் கூட அதற்கு அடுத்தபடிதான். நன்றி
//நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் ,
ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்?
பீடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறீர்களா ? உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்த தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறிர்கள் ,//
நான் அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றியோ, மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றியோ, புவிவெப்பமாதல் பற்றியோ ஏதும் எழுதியதில்லை. எனக்குத்தெரியாத தளங்கள் அவை என்பதே காரணம். ஆனால் இந்தியமொழிகளில் என்னைப்போன்ற எழுத்தாளர்கள் அவற்றைப்பற்றி தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களிடம் ‘நீ ஏன் இதையெல்லாம் பேசவேண்டும், போய் கதை மட்டும் எழுது போ’ என்று சொல்லும் குரலின் ஆணவத்தை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அங்கே எழுத்தாளன் மொழியில்லாத சாதாரண மனிதர்களின் மொழியாக நின்று பேசுகிறான் என்பதே அதற்குக் காரணம்.
ஜெ
ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள் .
http://www.jeyamohan.in/?p=6628
நல்ல பதிவு. ஜெயமோகனைப் படித்தபோதே உங்களைப் போலவே ஆச்சர்யப் பட்டேன். என்ன செய்ய? :-)
தமிழ் நாட்டில் எஞ்சினியரிங் படிப்பவர்களில் பலரும் அயன் ரெண்டை வழி படுபவர்கள் என்று பொருள் படும்படி எழுதி இருந்தார். எதை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. பலரும் பத்தகமே படிப்பதில்லை.. கல்லூரிக் காலத்தில் - அதிலும் அயன் ரெண்டைஎல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. தமிழ் நாட்டில் 450 இன்ஜினியரிங் கல்லூரி இருக்கிறது - அதில் 5% அளவுக்கு அயன் ரெண்டை கேள்விப் பட்டிருந்தாலே ஆச்சர்யப் பட வேண்டும்.
இதையெல்லாம் மறந்துவிட்டு அவருடைய புதினங்களை படிக்க பழகிக் கொண்டிருக்கிறேன்.
பல பகிர்வுகள்
மிக்க நன்றி ப்ரியா
@அதுசரி !
"ஆனால், உங்கள் உடைமை என்பதை ஒத்து கொள்ள முடியாது. அயன் ராண்ட் அவரது கணவரின் உடைமை என்று சொல்ல வருகிறீர்களா? யாரும் யாருடைய உடைமையும் அல்ல. யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாட முடியாது.
எந்த ஒரு சமூகமும், நாடும் கூட அதன் பிரஜைகளுக்கு உரிமை கொண்டாட முடியாது. என் நாடு ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது என்பதால் அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அது தான் அயன் ராண்ட் சொல்வது. நீ நீயாக இரு. நான் நானாக இருக்கிறேன்."
நான் மணவாழ்க்கை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் அவ்வாறு கூறினேன். உங்களது ஓரளவிற்கு ஒப்புக்கொள்கிறேன்.
அன்புடன்
முத்து
"கதைப்புத்தகம் படித்தோமோ கடந்துபோனோமோ என்று இருக்க வேண்டும்."
அடேங்கப்பா !!!!
//தமிழனுக்கு ஒரு வியாதி இருக்கிறது.
என்னவென்றால், சுதந்திரதினத்தன்று "குஜ்லி குஜ்லாம்பாளை" கூட்டி வந்து "இந்தியாவின் 43 மூனே முக்கா சுதந்திரத்தைப் பற்றிய உங்கள் கருத்தைச் நேயர்களுக்குச் சொல்லுங்கள்" என்று ஆரம்பித்து, அந்த சுதந்திரதினத்தன்று அவரிடம் கேள்வி கேட்க 10 மொக்கைகளை போனில் தயார் செய்வது.//
இன்னோர் வியாதி எல்லாரையும் பற்றி குறை சொல்லி எல்லா இடங்களிலும் கமெண்ட் எழுதுவது. அதையும் சேர்த்துக் கொள்ளலாமே கல்வெட்டு சார்? :) (விவாதத்திற்காக மட்டுமே சொல்கிறேன். புண்படுத்த அல்ல).
இத்தனைக்கும் இங்கு கமெண்ட் போட்டிருக்கும் பலரிடமும் யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனாலும் ஒருவர் கருத்திற்கு மற்றவர் பதில் அளித்துக் கொண்டேதான் இருக்கிறோம். உங்களுக்கு பிடிக்காதவர் (அல்லது உங்கள் சித்தாந்தங்களுக்கு மாற்று சிந்தனை உள்ளவர்) பேசும்போது மட்டும் ‘என்னா தெரியும் அவனுக்கு’ என்ற கேள்வி வருகிறது.
என்னமோ போங்க :)
//நான் அந்தப் பிரயோகத்தைக் கையாள முடியுமா..?!//
Open Affair என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நீங்கள் அதை கடந்து போயிருப்பீர்களோ என்னவோ.
தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் காதல் வாழ்க்கையை பற்றிப் பேசினால் அவர்களுடைய தொண்டர்களுக்குப் பொறுக்காது. தத்துவ தளத்திலும் இருக்கும் வாசகர்களுக்கும் அந்த உளவியல் சிக்கல் இருக்கிறதா?
தினத்தந்தி வாசகர்களுக்கு கிளுகிளுக்க வைக்கும் உணர்வை ஏற்படுத்தும் வார்த்தையாகவே நீங்களும் பார்க்கிறீர்கள் போல. அய்ன் ராண்டின் காதலர் நாதன் ப்ராண்டனும் கூட புத்தகம் எழுதியிருக்கிறார் என்று தெரிய வந்தது. படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.
.
ஸ்ரீதர் நாராயணன் said...
//இன்னோர் வியாதி எல்லாரையும் பற்றி குறை சொல்லி எல்லா இடங்களிலும் கமெண்ட் எழுதுவது. அதையும் சேர்த்துக் கொள்ளலாமே கல்வெட்டு சார்? :) (விவாதத்திற்காக மட்டுமே சொல்கிறேன். புண்படுத்த அல்ல).//
விவாதமாக இருந்தாலும் உரையாடலாக இருந்தாலும் புண்படுதல் இல்லை. கேட்க சகல உரிமையும் உண்டு ஸ்ரீதர் நாராயணன்.
ஆம் நான் குறை சொல்லி பின்னூட்டங்கள் இடுகிறேன். உண்மைதான். அதாவது எனது பார்வையில் குறையாகத் தோன்றுவதை...அதிகமாக இந்த எழுத்துவியாதிகளிடம் எனது கோபம் இருக்கும். உண்மைதான்.
இதுகளின் கம்புசுற்றல்களைக் கண்டுகொள்ளாமல் போவதற்கு எருமைமாடாய்ப் போகும் வரம் இடுந்தால் கொடுங்கள் ஸ்ரீதர் நாராயணன் . புண்ணியமாய்ப் போகும். பிடிங்கள் சிரிப்பானை :-))))
**
//இத்தனைக்கும் இங்கு கமெண்ட் போட்டிருக்கும் பலரிடமும் யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனாலும் ஒருவர் கருத்திற்கு மற்றவர் பதில் அளித்துக் கொண்டேதான் இருக்கிறோம். உங்களுக்கு பிடிக்காதவர் (அல்லது உங்கள் சித்தாந்தங்களுக்கு மாற்று சிந்தனை உள்ளவர்) பேசும்போது மட்டும் ‘என்னா தெரியும் அவனுக்கு’ என்ற கேள்வி வருகிறது. //
நான் சொல்வது, இலக்கிய மொக்கைகளிடம் போய் உலகின் எல்லாத்துறை சம்பந்தமான கேள்விகளைக் கேட்கும் வாசக வட்டங்களுக்கு.
கலகலப்பிரியாவின் பதிவில் நடக்கும் உரையாடல்களுக்குச் சொன்னது அல்ல.
**
‘என்னா தெரியும் அவனுக்கு’ என்ற ரேஞ்சில் பதில் சொல்லும் இலக்கிய மொக்கைகளைத்தான் நான் சாடுகிறேன். நானும் அப்படி என்கிறீர்களா? ம்ம்.... எனது பதிவுகளில் கேள்வி பதிலாகக் கூட பேச மாட்டேன் உரையாடலாகப் பேசவே முயல்வேன். என்னிடம் தகவல் அல்லது கேள்வி அல்லது உதவி ..அல்லது ஏதோ ஒன்று கேட்டவரிடம் நான் ஒருவித அருவா வாளி (அறிவாளி என்று கொள்க) தனத்தில் நான் பேசியிருந்தால் தவறுதான்.
*
தினமும் கற்றுக்கொள்கிறேன் யாரிடமிருந்தாவது. ‘என்னா தெரியும் அவனுக்கு’ என்று நான் நினைக்க ஆரம்பிக்கிறேனோ அன்று நான் மனிதனே அல்ல. இலக்கிய மொக்கை ஆசானாகிவிடுவேன் என்று கொள்க.
*
.
ஸ்ரீதர் நாராயணன,
தகவலுக்காக....
...தற்போது அமெரிக்காவில் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாய நறுக் செய்யப்படுகின்றது.....
http://www.raafi.com/2010/10/circumcision-adults-only.html
- டெக்கன் க்ரானிக்கிள், ஆகஸ்ட் 18, 2006.(NAGORE RUMI)
நாகூர் ரூமி என்பவர் நான் நினைப்பவராக இருந்தால் பேராசிரியர் மற்றும் கதை புக் ரைட்டர். போகிற போக்கில் இவர்கள் எழுதும் தகவல் கம்புசுற்றாலஜிகளை என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்?
.
//வானம்பாடிகள் said...
Hats off to you. ஒவ்வொரு வார்த்தையும் மிக அழகாக அய்ன் ராண்ட் பற்றிய புரிதலோடு கூடே ஜெமோவின் புரிதலற்ற தன்மையை பறை சாற்றுவதாகவே நினைக்கிறேன்.
//
.
கலகலப்பிரியா,
இதை வெளியிடுவதும் இடாததும் உங்கள் உரிமை.
***
ஸ்ரீதர் நாராயணன்,
தகவலுக்காக....
http://charuonline.com/blog/?p=1089
இங்கே எளக்கியவியாதி சிம்மாசனத்தில் இருந்து கொண்டு பேசும் இவருக்குகூட சில இரசிககண்மனிகள் வாசகர்வட்ட குஞ்சுகள் இருப்பார்கள்.
இருத்தலியம் பற்றிப் பேசலாம் ஆனால் சக மனிதர்களுடன் வாழத்தெரியாதவர்கள் பேசத்தெரியாத பீடத்தில் இருந்தே பதில் சொல்லும் டமிள் எளக்கியவியாதிகள் இருக்கும் வரை என்னதான் செய்வது. :-(((((
.
//இதுகளின் கம்புசுற்றல்களைக் கண்டுகொள்ளாமல் போவதற்கு எருமைமாடாய்ப் போகும் வரம் இடுந்தால் கொடுங்கள் ஸ்ரீதர் நாராயணன் . புண்ணியமாய்ப் போகும். பிடிங்கள் சிரிப்பானை :-))))//
பிடித்துக் கொண்டேன் :)
சென்ற வருடம் இந்த அமெரிக்காவில் CDCன் Compulsory Cirucumcision விஷயம் இணையத்தில் விவாதப் பொருளாக இருந்தது நினைவிற்கு வருகிறது. நாகூர் ரூமி அதைப் படித்துவிட்டு தவறாக எழுதியிருக்கிறார் போலும். நீங்கள் சொன்னது போல நாகூர் ரூமி ஒரு எழுத்தாளர்தான்.
ப்ளாக் எழுத்தாளர், பத்திரிகை கிசுகிசு எழுத்தாளர், புலன் விசாரணை என்றப் பெயரில் புளுகும் எழுத்தாளர், ஷூ லேஸ் முடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதும் எழுத்தாளர், IMDB, விக்கிபீடியா கட்டுரைகளை மொழிபெயர்க்கும் எழுத்தாளர் என்று பலரும் நம்மைப் போல சராசரி மனிதர்கள்தான் என்ற நிதர்சனத்தை எப்போதோ உணர்ந்து கொண்டுவிட்டேன். அதனால் அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை இப்பொழுதெல்லாம். :)
என்னுடைய முந்தைய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Tommy Hilfiger உடைகளை அணிந்தால் கோபப்படுவார். அவர் இன்னமும் ஹில்ஃபிகர் ஓப்ரா வின்ஃப்ரி நிகழ்ச்சியில் ‘எனது ஆடைகள் கறுப்பர்களுக்கானதல்ல’ என்று இன்வெறுப்போடு சொன்னதாக நம்பிக் கொண்டிருக்கிறார். கூகுளில் கொஞ்சம் மெனக்கெட்டால் இம்மாதிரி தவறான தகவல்களை (Hoax) களைவது பற்றி சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் இணையத்தில் பரப்பப்படும் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. சில மாதங்களுக்கு முன்னர் வந்த ‘குழந்தைகல் தடுப்பூசியின் அரசியல்’ பற்றிய கட்டுரையும் (பதிவர் பைத்தியகாரன் எழுதியது) இம்மாதிரி தகவற்ப்பிழைகள் கொண்டிருந்தது.
//கலகலப்பிரியாவின் பதிவில் நடக்கும் உரையாடல்களுக்குச் சொன்னது அல்ல.//
புரிகிறது. :)
// எனது பதிவுகளில் கேள்வி பதிலாகக் கூட பேச மாட்டேன் உரையாடலாகப் பேசவே முயல்வேன். நான் ஒருவித அருவா வாளி (அறிவாளி என்று கொள்க) தனத்தில் நான் பேசியிருந்தால் தவறுதான்.//
உங்கள் உரையாடல் அணுகுமுறையில் குறையேதுமில்லை.
இந்தப் பதிவில் நீங்கள் ஜெயமோகன் எதைப் பற்றிக் கேட்டாலும் பொந்து ஞானமரபோடு (உங்கள் வார்த்தையில்) சம்பந்தப்படுத்தி அதை உயர்த்திப் பேசுவார் என்று எழுதியிருந்தீர்கள். நான் படித்த வரையில் ஜெயமோகன் கீழையியல் தத்துவ மரபுகளை சரியான முறையில் அணுகியும், அதனுடைய பிழைகளை பகடியாகவும் நிறையவே எழுதியிருந்தார்.
கீழையியல் தத்துவ மரபு உங்களுக்கு உவப்பானதல்ல என்பதினால் நீங்கள் ஜெயமோகனின் எழுத்தின் மேல் பாரபட்சமான நிலை கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. அதனால் அப்படி குறிப்பிட்டிருந்தேன். அவ்வளவுதான்.
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.
.
ஸ்ரீதர் நாராயணன் said...
பதிலுக்கு நன்றி.
// இந்தப் பதிவில் நீங்கள் ஜெயமோகன் எதைப் பற்றிக் கேட்டாலும் பொந்து ஞானமரபோடு (உங்கள் வார்த்தையில்) சம்பந்தப்படுத்தி அதை உயர்த்திப் பேசுவார் என்று எழுதியிருந்தீர்கள். //
பலமுறை அவரின் இந்து ஞானமரபு பற்றிய எழுத்துகளை (அவரின் பதிவுகளில்) படித்து மண்டை காய்ந்து போயுள்ளேன்.
இந்து என்பதே கேள்விக்குறியான ஒரு வார்த்தை. அதன் மீது கட்டப்படும் மதமானாலும் சரி அல்லது ஞானமானாலும் சரி மரபானாலும் சரி பேஸ்மண்ட்வீக் பில்டிங் ஸ்ட்ராங் தத்துவமே.
கிண்டல் / லந்து தொனியில் நான் பயன்படுத்தும் வார்த்தைதான் பொந்துஞானமரபு (பொந்துமதம் என்று லக்கி முதலில் விளிக்க ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன்).
// நான் படித்த வரையில் ஜெயமோகன் கீழையியல் தத்துவ மரபுகளை சரியான முறையில் அணுகியும், அதனுடைய பிழைகளை பகடியாகவும் நிறையவே எழுதியிருந்தார்.//
எதை வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கலாம் நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில், நிகழ்காலத்தில் அரசுக்கு ஆதரவாய் இருந்தால் "சன் டீவியின் எந்திரன்" என்றுகூட ஒரு தலைப்பை எடுத்து முனைவர் பட்டம் பெற கட்டுரை சமர்ப்பிக்கலாம். முனைவர் பட்டமும் எளிதில் பெறலாம்.பின்னால் நடந்து அல்லது அதிக தூரம் எச்சில் துப்பி அதில் கின்னஸ் சாதனை புரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
எனவே கின்னஸ் சாதனை செய்தார் என்பதற்காகவோ அவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதற்காகவோ அல்லது ஆராய்ந்தவர் அறிந்தவர் என்பதற்காகவோ ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை என்னால். :-((((
அவர்களின் பேசுபொருள் என்ன ?
அதன் நோக்கம் என்ன?
அதன்மூலம் சொல்லவரும் hidden agenda என்ன?
அவர்கள் அணிந்து கொள்ளும் மதவாத மற்றும் பிழைப்புவாத அடையாளங்கள் என்ன?
....என்று ஊடுருவி பார்க்கும்போது அவர்களின் மேதைமைகள் என்று சொல்லப்படும் ஜிகினாக்கள் வெற்று பக்கோடா காகிதங்களாகப் போய்விடுகிறத :-((((
ஜெயமோகன் போன்றவர்களின் இந்துஞானமரபு (உங்களுக்காக சரியான பதத்தில்) என்னும் புதிய ஜிகினாப் பொட்டலத்தில் என்ன மடித்துக் கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.
காமாலைகண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல ஒருவேளை எனக்கு இருக்கும் மத/சாதி ஒவ்வாமை இப்படி ஜெயமோகன் போன்றவர்களின் மதப்பிரசங்கத்தைப் பார்க்கவைக்கிறது என்று நினைக்கிறேன்.
புரிதலுக்கு நன்றி
இடம்கொடுத்த களம் கொடுத்த கலகலப்பிரியாவிற்கு நன்றி.
--
ஜோடா ப்ளீஸ்
.
//அவர்களின் பேசுபொருள் என்ன ?
அதன் நோக்கம் என்ன?
அதன்மூலம் சொல்லவரும் hidden agenda என்ன?
அவர்கள் அணிந்து கொள்ளும் மதவாத மற்றும் பிழைப்புவாத அடையாளங்கள் என்ன?
....என்று ஊடுருவி பார்க்கும்போது //
மிகச் சரி. நீங்கள் சொல்லவருவது புரிகிறது.
இந்தப் புரிதலோடு அடுத்த உரையாடலில் சந்திப்போம் :)
நல்ல பதிவு.
@வானம்பாடிகள்
நன்றி சார்... எதுக்கு hats off... அங்க நிறைய பேரு ராக்கெட் blast off ஆன மாதிரி ஆயிட்டாய்ங்க... தீ மற்றும் புகை...
@வானம்பாடிகள்
interesting... வெற்றிகரமாக வார்த்துக் கொள்கிறான்னு ஜெ. சொன்னாங்களா... இதை நான் படிக்கலை... ஸோ... சுத்தம்..!!
@வானம்பாடிகள்
அவங்க அவங்களுக்கு தேவைன்னா எப்டி வேணா மாத்துவாங்க...
@வானம்பாடிகள்
பயணக் கட்டுரையா... ஆகா... என்னை எழுத்தாளர் ஆக்கப் பார்க்கறாய்ங்கப்பு... எஸ்கேப்பு...
@ராஜ நடராஜன்
ம்ம்... ஷெல்டன் எல்லாம் ட்ரெயின்ல போர் அடிக்காம இருக்கப் படிக்கலாம்... ஆமா... அத வச்சுக்கிட்டு நீங்க ஷெல்டன ஜட்ஜ் பண்ணலாம்... ஆனா அவரோட அம்மா பத்தி எல்லாம் ஆராய்ஞ்சு அவரப் பத்தி எழுதப்டாது.. (அட்லீஸ்ட்.. அவரோட பயோக்ராஃபி படிச்சுட்டு எழுதுங்க..:o))
@Arangasamy.K.V
ஓ... இதுக்கு பதில் சொல்லிட்டேன்... ரைட்டு..
@மரா
நன்றிங்க மரா...
@MuthuThamizhini
இந்த வட்ட மேட்டர் எனக்கு தெரியல... அவ்ளோவா அவங்க விவாதம் எல்லாம் படிச்சதில்ல... அப்டி வட்டம் போட்டுக்கிட்டு உக்காந்தார்னா கஷ்டம்தான்..
@Arangasamy.K.V
நன்றிங்க... நிதானமா படிச்சுப் பார்க்கலாம்..
@ரோகிணிசிவா
well said rohini.. நன்றி..
@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
||கொஞ்சம் கூட தனது நிலைபாட்டில் இருந்து கீழே இறங்காமல், சமரசம் என்பதனையே ஏற்றுக் கொள்ளாமல், பிழைப்புக்காக கல் உடைத்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ரோர்க் பிரமிக்க வைக்கிறார் இன்னமும்.. ||
அதே...!!
இங்கயும் நிறையப் பேரு கொள்கைக்காகக் கோழி முட்டையா... கோழி முட்டைக்காகக் கொள்கையான்னு எல்லாம் ஏதோ சொல்லிட்டிருக்காங்க.. செயல் முட்டை...
@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
தெரியல சந்தனா... சொன்ன மாதிரி நான் ஜெ. அவங்களோட அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கலை... நேரப் பற்றாக்குறை... சி(ப)லது சலிப்பு...
@அது சரி(18185106603874041862)
ம்ம்...
@அது சரி(18185106603874041862)
கலைஞர் ரெக்கார்ட்டை உடைத்த அய்யா அதுசரி வாழ்க... 13 நிமிஷத்திலயே மௌன விரதம் அய்யோ...
@அது சரி(18185106603874041862)
சரி நடுவர் அவர்களே... (பாப்பையா வேலைய நீங்க எடுத்துக்கிட்டா அவர் எங்க போறது பொழைப்புக்கு..)
கருத்தைச் சரிவரப் புரிஞ்சுக்கிட்டாங்களா அப்டிங்கிறதே கேள்விக்குறியா இருக்கு... ஒரு வேளை எனக்கு ஜெ. புரியாம இருக்கலாம்... :o) ஆமென்..
@Muthu
நான் எல்லாவற்றையும் படிக்கவில்லையென்று தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்... தவிர... அவர் எதற்கு எப்படி விளக்கமளித்தாலும்.. இப்படி எழுதுவதற்கு எந்த அவசியமும் நேர்ந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை...
பட்டாம்பூச்சிகளெல்லாம் சுதந்திரமாகப் பறக்கின்றன, அழகழகாக வண்ணங்கள் குழைத்துக் கண்களைக் கவருகின்றன... அது ஒரு போதை... அது அரிக்கும் அருவருப்பான உரோமங்கள் தாங்கிய புழுவிலிருந்து வந்தது என்பதை மறக்கலாகாது...
என்பதற்கும்...
புழுவொன்று உரோமம் உதிர்த்துச் சிறகு முளைத்துப் பறக்கிறது என்பதற்கும்...
வித்தியாசம் இருக்கிறது... பார்க்கும் கோணமும்... விமர்சிக்கும் தேவையும்... என் பக்கத்திலிருந்தே ஆரம்பிக்கிறது...
மற்றபடி... பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிதான்...
@அது சரி(18185106603874041862)
ம்ம்.. இவ்ளோ பில்ட் அப் எதுக்கு...
@அது சரி(18185106603874041862)
ம்ம்.. சரி...
அப்புறம்..
ப்ராக்டிகலான விஷயம் இல்லாமப் போவதற்கு எது காரணமென்று கொண்டால்... அயன் ராண்டைச் சுயநலவாதியென்று தூற்றும் சுயநலவாதிகளே காரணமென்று எளிதாகச் சொல்லிவிடலாம்...
லாஸ்ட்டா சொன்னது மாதிரிக் கிட்டக் கிட்ட ஜெ. எங்கயோ குறிப்பிட்ட கவனம்...
@அது சரி(18185106603874041862)
ம்ம்... தீ உண்டாக்க வேண்டுமென்றால்... தீப்பிடிக்கக் கூடிய ஒரு பொருள்... ஆக்ஸிஜன்.. மற்றும் தகனமடைய வேண்டிய வெப்பநிலை இருந்தாக வேண்டும் என்பது போல்...
சமூகம் ஒன்றிருந்தால்... அதன் நடவடிக்கைகளைக் கவனித்து... இது ஏன் என்று கேள்வி எழுப்புவதோ... இது சரி... அல்லது தவறு என்று ஒரு தனி மனிதனுக்குக் கேள்வி வருவதோ இயல்பு..
தனிமனிதச் சிந்தனை அழிந்து பொதுச் சிந்தனை ஆவதென்றால்...
இப்போ... ஜெயமோகன் குறிப்பிட்ட அயன் ராண்டின் சுயநலத்தையே எடுத்துக் கொண்டால்...
அவள்... அவள் வாழ்க்கை... மற்றவன் கழுத்தைத் திருகாத வரைக்கும்... மற்றவன் மூக்கைச் சுரண்டாத வரைக்கும்... அவளின் வாழ்க்கையை அவள் வாழ்கிறாள்... என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.. என்று போய்க் கொண்டிருந்தால்...
சிந்தனை... அல்லது நோக்கம் பொதுவாக இருந்தாலும்... ஒவ்வொரு தனிமனிதனும் ஒரே மாதிரி இருக்க முடியாது...
அதாவது... அவனவன் சிந்தனை... அவனவனுக்கு உவப்பாக வாழ்ந்தால்.. அதைப் பரஸ்பரம் புரிந்து கொள்வது பொதுச் சிந்தனையென்று கொள்ளலாம்...
அதுவும் தனிமனிதனிடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்...
காந்தி சொன்ன மாதிரி.. நீ என்பதுதான் சமுதாயம்... சமூகத்தை மீறிச் சுயமாகச் சிந்திப்பதென்பது..
பூமி தட்டையல்ல என்று சொல்லித் தண்டிக்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது... அது பொது அறிவாகக் கொஞ்சக் காலம் பிடிக்கும்...
ஆனால் ஒருத்தன் அதை ஆரம்பிக்க வேண்டுமே...
ஆரம்பித்தவர்களில் அயன் ராண்டின் பங்கு மிக முக்கியம்...
(ஒரே விஷயம்தான் பேசறேனா தெரியல... இல்லைன்னா மன்னிக்கணும்..)
@அது சரி(18185106603874041862)
அதே..
@அது சரி(18185106603874041862)
ஓ... இத நான் கிட்டத் தட்டக் காப்பி அடிச்சிட்டேன்...
@அது சரி(18185106603874041862)
அவரது கொள்கையால் மன அழுத்தம் வந்தாலும்.. அதை அவர் தலையில் அரைப்பதற்கு எதுவுமில்லை.. பாழாப் போன தட்டை உலகத்தில் வைத்து அரைக்கலாம்..
@அது சரி(18185106603874041862)
முத்துவிற்குப் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி... அவங்க ஏனோ ஒரே விஷயத்தைப் பற்றிக் கொண்டு பேசிக் கொண்டிருக்காங்க... என்ன ப்ரச்சனையோ... அதுதான் விட்டுவிட்டேன்...
அயன் ராண்ட் போய்... தன்னார்வம் போய்... சுயம் போய்... ஜெ. போய்.... இவர் சொல்லிக் கொண்டிருக்கும் உறவு பற்றியே விவாதம் நீண்டு கொண்டு போகும் அபாயம் இருப்பதால்... ஃபுல் ஸ்டாப்...
@அய்யனார்
ரொம்ப நன்றி அய்யனார்... ஐ லைக் இட்..
@ரோகிணிசிவா
ம்க்கும்.. இதுக்கு என்ன அர்த்தம்னு நான் எங்க போய்ப் படிக்கிறது...
@கல்வெட்டு
:))... ம்ம்... ஐ லைக் இட் வெரி மச்...
மார்கழி மகோற்சவம் கச்சேரில பாடுறவங்கள எல்லாம் இப்டித்தான் கேள்வியாக் கேப்பாங்க... அவங்களும் பதில் சொல்லுவாங்க... அநேகமா துறை சார்ந்தே இருந்தாலும்... எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு இல்ல...
ஒரு வாட்டி ஜெயஸ்ரீ கிட்ட ஒருத்தங்க கேள்வி கேட்டாங்க... ஜாவளிக்கும் பதத்திற்கும் இடைல இருக்கிற வித்யாசத்த டெமொன்ஸ்ட்ரேட் பண்ண முடியுமான்னு...
ஒரு செகண்ட் கூட யோசிக்காம லேசாச் சிரிச்சுக்கிட்டே ஜெயஸ்ரீ சொன்னாங்க.. என்னால பேச முடியாது.. எனக்கு அதைப் பற்றிப் பேசும் அதிகாரம் இல்லைன்னு... அப்புறமும் இல்ல படிச்சத வச்சுக்கிட்டு சொல்லுங்கன்னா இல்ல... எனக்குத் தெரிஞ்சு ரெண்டும் சிருங்கார ரசம்... அதுக்கு மேல எனக்கு எதுவுமே தெரியாது அப்டின்னுட்டாங்க... i just luved her for that...
@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
:))... ம்ம்.. சரி சரி... அண்ட் சரி..
@Thekkikattan|தெகா
நன்றி தெகா... பூராபயலையும்...=))... ஆமா...
@முகிலன்
உங்க நேர்மை பாஸு... பாஸு..
@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி நித்திலம்.. ம்ம்.. டயானாவ அவங்க விமர்சிக்கல அது நான் உதாரணத்துக்குப் போட்டது... ம்.. படிங்க..
@|கீதப்ப்ரியன்|Geethappriyan|
அவ்வ்வ்... எனக்கு இம்பூட்டு அறிவு லேது.... அவங்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க அப்டிங்கிறத மட்டும் இப்போதைக்கு என்னோட பொது அறிவில சேர்த்துக்கறேன்...
@Arangasamy.K.V
அவங்க எதுவுமே பேசக் கூடாதுன்னு யாரும் சொல்லல... ம்.. அம்புட்டுதேன்..
@Arangasamy.K.V
படிக்கலாம்... நன்றிங்க..
@பாலா அறம்வளர்த்தான்
நன்றி பாலா... ம்ம்... கண்ணை மூடிக் கொண்டு தத்துவது என்னால் முடியாமலே இருக்கிறது... அதான் இப்டி புலம்பல்... :(
@ஆ.ஞானசேகரன்
நன்றி ஞானசேகரன்..
@நர்சிம்
நன்றி நர்சிம்..
@சே.குமார்
நன்றி குமார்..
@கல்வெட்டு
ஆரோக்யமாக வாதத்தை முன்னெடுத்துச் சென்ற உங்களுக்கும் நன்றி...
சோடாவா... சோடாப் பாட்டில் தலைக்கு வராததே தம்பிரான் புண்ணியம்...
@ஸ்ரீதர் நாராயணன்
உங்க கருத்துகளுக்கும் ரொம்ப நன்றிங்க ஸ்ரீதர்...
//பிராண்டனுடன் அயன் ராண்டுக்கு உறவு இருந்தபோது அது எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது. பிராண்டன் தன்னை பொருளியல் ரீதியாக சுரண்டுகிறார் என அயன் ராண்ட் குற்றம் சாட்டியபின்புதான் பிராண்டனால் அந்த உறவு வெளிப்படுத்தப்பட்டது. அந்த கசப்பே அயன் ராந்ட்டை மனநிலம் குன்றச் செய்தது. இதெல்லாம் சும்மா இணையத்தை தட்டினாலே கிடைக்கும் தகவல்கள்.
அந்தத் தகவல் ஏன் அங்கே சொல்லபப்டுகிறது? எனக்கு அயன் ராண்ட் அல்ல எவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. ஆனால் திரள்வாதத்தால் முன்வைக்கப்படும் தியாகம் ,கருணை போன்ற விழுமியங்களை நம்புகிறவர்கள் திரிந்து இரட்டைவாழ்க்கை வாழ்ந்து சிதைவுறுவார்கள் என வாதிட்டு அதற்கு எதிராக சமநிலையையும் வெற்றியையும் அளிக்கும் கொள்கையாக புறவய வாதத்தை முன்வைத்த அயன் ராண்டின் இரட்டை வாழ்க்கையும் மனமுறிவும் முக்கியமான ஒரு தத்துவப்பிரச்சினை. அதற்காகவே அந்த விஷயம் பேசப்படுகிறது அங்கே. அயன் ராண்டின் உறவுச்சிக்கல்களில் எனக்கு ஆர்வம் இல்லை.//
http://www.jeyamohan.in/?p=3467
@Arangasamy.K.V
ஆச்சரியப்படுத்துறீங்க அரங்கசாமி... இப்படி ஒரு வாசகர் அல்லது நண்பர் கிடைக்க ஜெயமோகன் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஆரோக்கியமான சுட்டல்களுக்கும்.. சுட்டிகளுக்கும் முதல்ல நன்றி சொல்லிக்கறேன்...
நல்ல வேளையாக அப்போதே இதைப் படித்து விட்டுதான்... கட்டுரை எழுதினேன்...
விளக்கமா எழுத முயற்சிக்கறேன்.. >>>
||Arangasamy.K.V said...
//பிராண்டனுடன் அயன் ராண்டுக்கு உறவு இருந்தபோது அது எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது.||
இருக்கட்டும்...
||பிராண்டன் தன்னை பொருளியல் ரீதியாக சுரண்டுகிறார் என அயன் ராண்ட் குற்றம் சாட்டியபின்புதான் பிராண்டனால் அந்த உறவு வெளிப்படுத்தப்பட்டது.||
இதுவும் இருக்கட்டும்..
||அந்த கசப்பே அயன் ராந்ட்டை மனநிலம் குன்றச் செய்தது.||
சரி... அதுவும் ஒரு காரணமா இருக்கட்டும்..
||இதெல்லாம் சும்மா இணையத்தை தட்டினாலே கிடைக்கும் தகவல்கள்.||
சரி...
||அந்தத் தகவல் ஏன் அங்கே சொல்லபப்டுகிறது? எனக்கு அயன் ராண்ட் அல்ல எவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றியும் எந்த அக்கறையும் இல்லை.||
ரொம்ப நல்லது..
||ஆனால் திரள்வாதத்தால் முன்வைக்கப்படும் தியாகம் ,கருணை போன்ற விழுமியங்களை நம்புகிறவர்கள் திரிந்து இரட்டைவாழ்க்கை வாழ்ந்து சிதைவுறுவார்கள் என வாதிட்டு அதற்கு எதிராக சமநிலையையும் வெற்றியையும் அளிக்கும் கொள்கையாக புறவய வாதத்தை முன்வைத்த அயன் ராண்டின் இரட்டை வாழ்க்கையும் மனமுறிவும் முக்கியமான ஒரு தத்துவப்பிரச்சினை. அதற்காகவே அந்த விஷயம் பேசப்படுகிறது அங்கே. அயன் ராண்டின் உறவுச்சிக்கல்களில் எனக்கு ஆர்வம் இல்லை.//
http://www.jeyamohan.in/?p=3467||
ரொம்ப ரொம்ப நல்லது..... ஜெயமோகன் அவர்களுக்கு அயன் ராண்டின் சொந்த வாழ்க்கை பற்றி அக்கறை இல்லை... உறவுச் சிக்கல்கள் பற்றிய அக்கறை இல்லை.. அத நான் அப்படியே நம்பறேன்...
இப்போ பாருங்க ஒரு பேச்சுக்கு... அரளி விதையை அரைச்சுச் சாப்ட்டா உசிர் போயிடும்னு யாரோ ஒரு அநாமதேயம் சொல்லிட்டாங்க... டெய்லி ஒரு ஆப்பிள் சாப்ட்டா உடம்புக்கு நல்லதுன்னும் சொல்லிட்டாங்க... ஆனாப் பாருங்க... அவங்க தலைவிதி... ஆப்பிள்னா அவங்களுக்கு அலர்ஜின்னு தெரியாம.. ஆப்பிள் சாப்ட்டு அவங்களே இறந்துட்டாங்க... அதனால... ஆப்பிளும் அரளியும் ஒன்னுதான்... இதுக்கு அவங்க அரளியையே சாப்டலாம்னு வாதாடறதாங்க... இல்ல ஆப்பிள் பற்றிச் சொன்னது தப்புங்கிறதா..
நீங்க என்ன வேணா சொல்லுங்க... என்ன காரணம் வேணா சொல்லுங்க... அவங்க இப்படி ஒரு கட்டுரைக்கு அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை... அதைச் சொல்ல வேண்டி வந்திருந்தாலும்.. அவர் சொன்ன முறை ஏற்புடையதாக இல்லவே இல்லை...
சொல்லி விட்டு... அதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுவது... ஜெயமோகன் அவர்களாக இருந்தாலும்... செரிமானம் ஆகாதுங்க... அல்லது எனக்கு ஆகலைங்க..
muthu aka முத்துகுமார் எழுதியது
***அந்த கள்ள உறவு விவகாரத்தை ஏன் குறிப்பிட நேர்ந்தது என்பதற்கும் முன் சொன்ன கட்டுரையிலேயே விளக்கம் உள்ளது. அயன் ராண்ட்-ஐ மட்டம் தட்டவோ கீழ்மைப்படுத்தவோ அல்ல என்பது முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது.***
Sounds like JM himself defending his own writing!!!
I am meeting this * muthu once again. Again defending each and every word written by Jeyamohan as "CORRECT" and "FLAWLESS"!!!
It is unfortunate still he is "profile-less" for his convenience!
-----------------------
***அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?!
சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)***
Loved the sarcasm here! BEAUTIFUL!!!
@வருண்
நன்றி வருண்...
||Sounds like JM himself defending his own writing!!!||
think so... he must've realized da slip...
Post a Comment