header photo

Monday, November 15, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ரெண்டு...

இருங்க... நம்ம சித்தாந்தம் ஒரு பக்கம் கெடக்கு... அது எங்க போகுது கழுத.. இப்போ கௌசல்யா அவங்களோட போஸ்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமா பின்னூட்டிடுறேன்.... 

||அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும்||

இந்த பல ஜாதிக் கொடுமைய வச்சுக்கிட்டு, சக மனுஷன மனுஷனா நினைக்காம தூக்கி எறிஞ்சு பேசிக்கிட்டும் நாம நம்ம கலாச்சாரம் சிறந்ததுன்னு பேசுவோம்.. அது வாங்கொடுமைங்க... நம்ம கலாச்சாரம் பார்த்து பொறாமைப்படற(?) அதே வெளிநாட்டுக்காரன் என்ன கொடுமை இதுன்னு என் கிட்ட கேப்பானுவ... ஐய்யோ நான் இல்ல.. நான் இல்லன்னு அலறணும் போல வரும்.. 

என்னமோ... வெள்ளைக்காரன் கருப்பரயும் மாநிறக்காரனயும் புடிச்சுத் திங்கற மாதிரிப் பேசிட்டிருக்கியளே, இனத் துவேஷம்ன்னு பேரு வேற... நீங்க என்ன புடுங்கிட்டிருக்கீங்க அப்டின்னு கேப்பானுவ... 

அட இவ்ளோ ஏனுங்க... உங்க மாநிறம் எவ்ளோ அழகு... அதுக்காக இங்க இருக்கிற வெள்ளக்காரிங்க எல்லாம்... தேசம் விட்டு தேசம் போய்... வெயில்ல கெடந்து புரண்டு... அய்யோ... ப்ரவுன் ஆவுதில்ல... எல்லாம் ரெட் ஆகி அவிஞ்சு போகுதுன்னு அழாக்குறையா வந்து... சொலாரியத்தில போய்ப் படுத்துக்கிறாங்க.. பக்கத்து வீட்டில இருக்கிற உங்கூரு அம்ணி... வெயிலடிச்சா வெளில போகுதில்ல... புள்ள குட்டியையும் அனுப்புதில்ல... ஏன்னா கருத்துடுவாங்களாம்... ஏன்.. அது உங்களோட அடையாளம் இல்லையா?! என்ன கொடுமை இது..  விண்டருக்கும் வெளில போறதில்ல.. சறுக்கிடுவாங்களாம்... விழுந்துடுவாங்களாம்.. மத்த பசங்க கூடச் சேர்ந்தா.. கெட்டுடுவாங்களாம்... அந்தப் பசங்க வீட்டுக்குள்ளயே கெடந்து பைத்தியம் புடிச்சு சாவப் போறானுங்கன்னு ஏகத்துக்குக் கவலைப் படுவாங்க... 

எனக்கு என்னோட மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறதுன்னு தெரியாம... ஸ்ஸ்ஸபா.. அப்டின்னு என்னோட கவலையையும் தெரிவிச்சுக்குவேன்... 

ஆனா நம்மாளுங்களுக்கு அதில இருக்கிற பெருமை இருக்கே... ய்ய்யப்பா... என்னாங்கிறீங்க.. ச்சே ச்சே... எம்புள்ள வெளில எங்கயுமே போறதில்ல... அங்கன பக்கத்தில இருக்கிறவைங்க "வேற ஆளுங்க".. அப்டின்னு பெர்ர்ர்ருமையா சொல்லிக்குவாங்க... கிரகம்.. இந்தக் கண்றாவிய நான் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டி வரும்.. அப்போ நான் வெளிநாட்டுக் காரங்க கிட்ட வழியற வழிசல் இருக்கே... போதும்டா சாமீ... 

||அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?||

சம்பிரதாயங்கள்... கட்டுப்பாடுகள்... புனிதம்... ம்ம்.. ஆமா... மாப்ள தங்கக்கம்பி... நாப்பது ஏக்கர் நஞ்சை புஞ்சை... எஞ்சீனியருங்க... படிச்சதுன்னு பெருமை கிஞ்சித்தும் கிடையாது... ஜெமினி கணேஷனாட்டம் கிராப்பு... வேற என்ன வேணும்.. நம்ம சுமதிக்கு இத விட நல்ல மாப்ள அமெரிக்கா போனாலும் கிடைக்குமா.. எதுக்கும் சுமதிய ஒரே ஒரு வார்த்த கேட்டுடுவோம்... இன்னாம்மா சொல்றன்னா... பாவம் அந்தப் பொண்ணு... கிராப்பு நல்லாதான் இருக்குன்னு... இளிச்சு வைக்கும்.. ரெண்டுங்கெட்டான் வயசில... அப்புறம் என்ன... கொட்டிடுவாங்க.. மேளத்த... 

அப்புறம் தலையை நிமித்தப்டாது.. அகலிகை நிமிர்ந்து பார்த்துதான் கல்லானா... ஆனா இவங்க கல்லாவே ஆயிடுவாங்க அப்புறம்... சாபவிமோச்சனம் கொடுக்கறதுக்கு எந்த ராமரும் வர மாட்டாரு.. கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கில்ல மக்கா... 

விதவை ஆனா அப்டியே பொட்டு எல்லாம் அழிச்சுட்டு... மூஞ்சூறு மாதிரி சுத்தி வரணும்... அங்கன யாராவது சோக்கு கீக்கு சொன்னாச் சிரிச்சிடப்டாது... அப்புறம் அவங்களோட மூணு தலைமுறைப் பெண்டுகளுக்கு கல்யாணமே மறந்துடணும்... துப்புக்கெட்ட குடும்பம்ல.. 

என்னோட அம்மா இருந்தாங்க... அவங்க வாழ்ந்த வாழ்க்கைய என்னால ஒரு வாரம் கூட வாழ்ந்திருக்க முடியாது... ஆனா அவங்க வாழ்ந்தாங்க... அறுபத்தைஞ்சு மைனஸ் பதினெட்டு = நாப்பத்தியேழு வருஷம்.. நான் அப்பவே சொல்லிட்டேன்.. என்ன எழவு.. இப்டி வாழ்ந்து என்னத்த கிழிக்கப் போறீங்க... வாங்க தனிக்குடித்தனம் போயிடலாம்ன்னு... கேக்கலயே..  அடி உதைன்னு கிடைக்காத நாள் இருந்தா அன்னிக்குதான் அவங்க கொஞ்சம் மூச்சு விடுவாங்க... அவங்க புருஷன் ரொம்ப நல்லவருங்க... ஆனா அந்த பாழாப்போன குடிதான்... என்ன பண்ண... கட்டியாச்சு... 

அந்தாளு போனதும்... கழுத்தில ஒரு செயினுக்கு மேல இருந்தா.. அய்யய்யோ அக்கம் பக்கம் என்ன சொல்லும்ன்னு கழத்தி வச்சிடும்.. ஏன்மா... உங்க ஆசைக்கு நீங்க போட்டுக்கிறீங்க... மத்தவங்களப் பத்தி ஏன் கவலைப்படறீங்க..?! நாளைக்கு நீங்க மேல போறப்போ இவங்க எல்லாம் துணைக்கா வரப்போறாங்க?! அப்டின்னு கேட்டா... என் செல்லம்.. அப்டின்னு கொஞ்சும்.. ஆனா தன் விருப்பத்துக்கு எதுவும் பண்ண முடியல... அதுதான் கட்டுப்பாடு... கலாச்சாரம்... எல்லாம் இருக்கே... அதுவும் நல்ல்ல்ல்ல முறைல.. இப்போ போயிட்டாங்க... வேற எந்தச் சிறுக்கியும் அவ கூட சேர்ந்து போகலை... தனியாத்தான் போயிருக்கா..

யாரோ ஒருத்தரு சொல்லி இருந்தாரு... வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க.. இருப்பாங்கன்னு... அப்டின்னா இப்டி ஒரு அம்மா வளர்த்த நான் எப்டி இருக்கணும்... என்னோட வளர்ப்பு சரியில்லன்னு சொன்னா... உங்க வழக்கப்படி உங்க குலசாமியே உங்க கண்ணைக் குத்தாதோ..?! 

(இருங்க... சாப்பாட்டுக்கு உழைக்கணும்ல... மீதிய அப்புறமா வச்சுக்கறேன்.. ஒரு பத்து பார்ட் தேறும் போலருக்கே..)

59 ஊக்கம்::

vasu balaji said...

//||அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும்||//

தினத்தந்தில அடிக்கடி வரும். அலுவலகத்திலும் பல திருமணங்கள். மாப்பிள்ளை வெளிநாட்டுக்காரர். ஆனால் பிடிவாதமா தமிழ்க் கலாச்சாரப்படிதான் கலியாணம் பண்ணிப்பேன்னு இருந்தார்னு பெருமையா காம்ப்ரமைஸ் பண்ணிப்போம். அது அங்க முன்னாடி 2 வருஷம் லிவிங் டுகெதர்ல இருந்ததை சொல்லாம விட்டாப் போச்சு.

மணமகன்/மகள் தேவையில் மொழி, உட்பிரிவு பரவாயில்லைன்னு வர ஆரம்பிச்சாச்சே.

vasu balaji said...

||அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள், கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும் நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?||

நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு வேற வழியில்லாமன்னு சேர்த்திருக்கலாம். ஆனாலும் அதில ஒரு நேர்மையிருக்கு. ‘நினைத்துத்தான்’ புரிந்தோ விரும்பியோ இல்லை.

பிரபாகர் said...

ம்... தொடர்கிறேன்...

பின்னூட்டங்களைப் பெறுவதற்காக...

பிரபாகர்...

vasu balaji said...

//யாரோ ஒருத்தரு சொல்லி இருந்தாரு... வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க..//

பின்னூட்டம்தானே. அது போடலாம். தனக்கு வரும்போது மாறிடும். போன இடுகையில ஒரு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பத்தி பின்னூட்டம் போட்டிருந்தேன். அதில் கடைசி பத்தி மிக முக்கியம். பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்தவர்களை வல்லுக்கட்டாயமாகப் பிரிக்காமல் பாதுகாப்பு தரவேண்டும் என்பது. அப்படி பண்ணவங்களை அடிச்சி உதைச்சி, தாலியை பிடுங்கி கெடாசி, பெத்தவங்க சவுகரியத்துக்கு கலியாணம் பண்ணி வைக்க வழியிருக்கிறதும் இதே கலாச்சாரத்தில்தான்

குட்டிப்பையா|Kutipaiya said...

//அங்கன யாராவது சோக்கு கீக்கு சொன்னாச் சிரிச்சிடப்டாது... அப்புறம் அவங்களோட மூணு தலைமுறைப் பெண்டுகளுக்கு கல்யாணமே மறந்துடணும்... துப்புக்கெட்ட குடும்பம்ல..///

eaan velinaatukarainga kaari thuppa maatainga!! cheii!!

dheva said...
This comment has been removed by the author.
dheva said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

நீங்கள் கலாச்சாரம் என்று சொல்வது உங்கள் புரிதல் ஆனால் அதுவே இறுதி உண்மை இல்லை....

மொத்த பதிவில் என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்????!!!!

எல் கே said...

கருத்திற்கு எதிர் கருத்து சொல்லுவது சரி. ஆனால். எழுதியவரை தாகும் வகையில் பின்னூட்டம் இடுவது எந்த விதத்தில் நல்லது என்று தெரியவில்லை ப்ரியா. உங்களுக்கு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சரியாகப் படலாம். அது உங்கள் கருத்து. அது போன்றதுதான் அவர்கள் அவர்கள் கருத்தையும் கவலையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் அவர்கள் எந்த இடத்திலும் இவ்வாறு வாழ்பவர்களை பற்றி தவறாக சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ?

எதிர் கருத்து சொல்வதோடு நிற்போம் . எழுதியவர்களை பற்றி விமர்சிக்க வேண்டாம்

உண்மைத்தமிழன் said...

அது ஏன் இந்தப் பதிவிக்கு இத்தனை எதிர் ஓட்டுக்கள்..?

கலகலப்ரியா said...

உண்மைத் தமிழன் சார்.. அப்டி மைனஸ் போடலைன்னா நாம உண்மைத் தமிழர்கள் இல்லயே...

http://kalakalapriya.blogspot.com/2010/11/blog-post_4248.html

இது பாருங்க புரிஞ்சிடும்...

VJR said...

அருமையான நகர்வு. தொடர்ந்து எதிர் நோக்கி.

Thekkikattan|தெகா said...

அடிச்சிக்காம ஆரோக்கியமா விவாதம் பண்ணுங்கப்பா... இங்க நடந்திட்டு இருக்கிறது ஒரு எதிர்கால ‘ஆரோக்கிய வாழ்விற்கான’ அடிக்கல் நாட்டு விழாதான். தனிமனிதானக சிந்திச்சு ஆமா/இல்ல; நல்லது/கெட்டதுன்னு புரிஞ்சிக்க முன்னெ எல்லாம் இந்த வசதி இல்ல.

இப்போ உலகம் பூராவும் மூளைகள் பல சூழல்கள பார்த்து, விரிஞ்சு கெடக்கு - பகிர்ந்துப்போம், ஒரு குளோபல் குடிமக்களா பரிணமிப்போம். ரொம்ப அவசியமிது, காலத்தின் கட்டாயம், இல்லன்னா தலீபான் ரேஞ்சிற்கு நகர்ந்திருவோம் எதிர்காலத்தில.

Unknown said...

இந்தப் பதிவில் நீங்க சொல்லியுள்ளது பற்றி பல மகளிருக்காக போராடும் பெண்கள் அமைப்புகள் கடந்த 40 , 50 வருடமாக சொல்லி வருகிறார்கள். இது நம்ம கலாசாரத்தின் குறைபாடுகள் என்பது பலரும் அறிந்தது. இது மாறுவதற்கு பலரும் போராடுகின்றனர்.

வேற்று கலாசாரதினருடன் வாழ்ந்து வரும் நாம், இங்குள்ள சமூகத்தின் நிறை குறைகளையும் நன்கு அறிவோம். நமது இந்திய கலாசாரத்தில் உள்ள குறைபாடுகளை இன்னொரு கலாசாரத்தை பார்த்து சரியா தவறா என்று பார்க்க ஆரம்பித்தால், இங்குள்ள குறைகளைப் பார்த்து, இந்திய கலாசாரம் எவ்வளவோ மேல் என்று திசை திரும்பி விடும்.

நீங்கள் அடிக்கடி இந்தப் பதிவில் குறிப்பிடுகின்ற விஷயம், நம்ம குறைகளை கேட்கிற இந்தியரல்லாதவரிடம்/தமிழ் கலாசாரத்தில் இல்லாதவரிடம், அது நானல்ல என்று சொல்லுவதினால், அவர்கள் நம்மை உயர்த்தி வைத்து விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒவ்வொரு சமுதாயத்திலும், நிறை குறைகள் இருக்கும். அது அந்த அந்த நாடு மக்கள் அவர்கள் அமைப்புக்குள் தான் போராட முடியும். இவர்கள் கேட்கும் இந்தியா கலாசாரத்தின் குறை பாடுகள் பற்றிய கேள்விக்கு சொல்ல வேண்டிய பத்தி வேறு மாதிரியாக இருக்க வேண்டும்.

அமெரிக்கப் பெண்களுக்கு, இந்தியப் பெண்களை விட பல மடங்கு சுதந்திரம் உண்டு. ஆனால் இங்கு பெண்களுக்குப் பிரச்சனையே இல்லையா? அது இங்குள்ள பெண்கள் கலாசாரத்தை ஒட்டி அவர்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்.

எனக்கு ஒன்று புரியவில்லை. தமிழ் கலாசாரம், பண்பாடு என்ற அடிப்படையில் லிவிங்-இன் before marriage ய் எதிர்ப்பவர்களை, ஏன் பண்ணை அடிமை கலாசாரத்தை தூக்கி நிறுத்துபவர்கள் என்று முத்திரை குத்த வேண்டும்.

பதினெட்டு வயதிற்கு மேல் ஆண்/பெண் இருவரும் பெற்றோருடன் இருப்பது குறை என்று சொல்வது ஒரு கலாசாரம். சேர்ந்து இருப்பது பெருமை என்று சொல்வது ஒரு கலாசாரம்.

வயதில் முதிர்ந்தொரை retirement home -இல் வைத்துக் காக்கும் கலாசாரம் இங்கு. அது இழிவு என்று நினைக்கும் இந்தியா கலாசாரம் வேறு.

To All
இந்த விவாதத்தில் யாரையும் மனம் நோகாமல் விவாதம் செய்ய வேண்டிக் கொள்கிறேன். சில வார்த்தைப் ப்ரோயோகங்களும் அவ்வாறு இருக்கவே வேண்டுகோள்.

Priya,
Please don't worry about votes + or -.

Vaanambadi Sir,
Thanks for clarifying supreme court's order.

Unknown said...

"34. In our opinion not all live in relationships will amount to a

relationship in the nature of marriag8e to get the benefit of the Act of 2005.

To get such benefit the conditions mentioned by us above must be satisfied, and this has to be proved by evidence. If a man has a `keep’ whom he maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage’"

See this. இது ஒரு பெண்ணுக்கு உதவக்கூடிய விஷயமா இல்லை போல் தோன்றுகிறது. உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய விஷயம் இது

Unknown said...

Part 1
இந்தப் பதிவில் நீங்க சொல்லியுள்ளது பற்றி பல மகளிருக்காக போராடும் பெண்கள் அமைப்புகள் கடந்த 40 , 50 வருடமாக சொல்லி வருகிறார்கள். இது நம்ம கலாசாரத்தின் குறைபாடுகள் என்பது பலரும் அறிந்தது. இது மாறுவதற்கு பலரும் போராடுகின்றனர்.

வேற்று கலாசாரதினருடன் வாழ்ந்து வரும் நாம், இங்குள்ள சமூகத்தின் நிறை குறைகளையும் நன்கு அறிவோம். நமது இந்திய கலாசாரத்தில் உள்ள குறைபாடுகளை இன்னொரு கலாசாரத்தை பார்த்து சரியா தவறா என்று பார்க்க ஆரம்பித்தால், இங்குள்ள குறைகளைப் பார்த்து, இந்திய கலாசாரம் எவ்வளவோ மேல் என்று திசை திரும்பி விடும்.

நீங்கள் அடிக்கடி இந்தப் பதிவில் குறிப்பிடுகின்ற விஷயம், நம்ம குறைகளை கேட்கிற இந்தியரல்லாதவரிடம்/தமிழ் கலாசாரத்தில் இல்லாதவரிடம், அது நானல்ல என்று சொல்லுவதினால், அவர்கள் நம்மை உயர்த்தி வைத்து விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒவ்வொரு சமுதாயத்திலும், நிறை குறைகள் இருக்கும். அது அந்த அந்த நாடு மக்கள் அவர்கள் அமைப்புக்குள் தான் போராட முடியும். இவர்கள் கேட்கும் இந்தியா கலாசாரத்தின் குறை பாடுகள் பற்றிய கேள்விக்கு சொல்ல வேண்டிய பத்தி வேறு மாதிரியாக இருக்க வேண்டும்.

அமெரிக்கப் பெண்களுக்கு, இந்தியப் பெண்களை விட பல மடங்கு சுதந்திரம் உண்டு. ஆனால் இங்கு பெண்களுக்குப் பிரச்சனையே இல்லையா? அது இங்குள்ள பெண்கள் கலாசாரத்தை ஒட்டி அவர்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்.

(contd)

Unknown said...

Part 2
எனக்கு ஒன்று புரியவில்லை. தமிழ் கலாசாரம், பண்பாடு என்ற அடிப்படையில் லிவிங்-இன் before marriage ய் எதிர்ப்பவர்களை, ஏன் பண்ணை அடிமை கலாசாரத்தை தூக்கி நிறுத்துபவர்கள் என்று முத்திரை குத்த வேண்டும்.

பதினெட்டு வயதிற்கு மேல் ஆண்/பெண் இருவரும் பெற்றோருடன் இருப்பது குறை என்று சொல்வது ஒரு கலாசாரம். சேர்ந்து இருப்பது பெருமை என்று சொல்வது ஒரு கலாசாரம்.

வயதில் முதிர்ந்தொரை retirement home -இல் வைத்துக் காக்கும் கலாசாரம் இங்கு. அது இழிவு என்று நினைக்கும் இந்தியா கலாசாரம் வேறு.

To All:
இந்த விவாதத்தில் யாரையும் மனம் நோகாமல் விவாதம் செய்ய வேண்டிக் கொள்கிறேன். சில வார்த்தைப் ப்ரோயோகங்களும் அவ்வாறு இருக்கவே வேண்டுகோள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதுக்குத் தான் அப்புறம் வாரேன்னு சொன்னேன்.. என்னால ஓட்டுப் போட முடியாது.. ஆனா கணக்குல வச்சுக்கோங்க.. 1+

புடிச்சிருக்கு..

vasu balaji said...

Sethu said

/If a man has a `keep’ whom he maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage’"/

This is not living together.

this is

33. In our opinion a `relationship in the nature of marriage’ is akin to a common law marriage. Common law marriages require that although not being formally married :-

(a) The couple must hold themselves out to society as being akin to spouses.

(b) They must be of legal age to marry.

(c) They must be otherwise qualified to enter into a legal marriage, including being unmarried.

(d) They must have voluntarily cohabited and held themselves out to the world as being akin to spouses for a significant period of time.

(see `Common Law Marriage’ in Wikipedia on Google)

In our opinion a `relationship in the nature of marriage’ under the 2005 Act must also fulfill the above requirements, and in addition the parties must have lived together in a `shared household’ as defined in Section 2(s) of the Act. Merely spending weekends together or a one night stand would not make it a `domestic relationship’.

Unknown said...

///"/If a man has a `keep’ whom he maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage’"/

This is not living together.///
-------

Exactly. This is what I am referring to. Since this is not considered as living together relationship, very sorry to say this deprived women as 'keep' is ineligible for the benefit.

இது ஒரு பெண்ணுக்கு உதவக்கூடிய விஷயமா இல்லை போல் தோன்றுகிறது. உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய விஷயம் இது.

vasu balaji said...

Sethu said...

//இது ஒரு பெண்ணுக்கு உதவக்கூடிய விஷயமா இல்லை போல் தோன்றுகிறது. உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய விஷயம் இது.//

இல்லைங்க சேது. இது அப்பீல்ல வராது. ஏன்னா இது பரஸ்பர புரிதலின் பேரிலான எழுதப்படாத ஒப்பந்தம். செக்ஸுக்காக அல்லது வேலை செய்வதற்காக என்ற புரிதலுடன் மட்டுமேயான ஒப்பந்த உறவு. விளக்கத்துல என்னல்லாம் கண்டிஷன்னு கொடுத்திருக்காங்க இல்லையா. அதுக்குள்ள இது வராதப்போ அப்பீலுக்கு இடமில்லை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

@வானம்பாடிகள்

பாலா சார்.. டவுட்டு.. domestic violence act பத்தி மேலோட்டமா படிச்சேன்.. abuse பத்தி சொல்லியிருக்கறது புரியுது.. அது living together ஜோடியளுக்கும் செல்லுபடியாகும்ன்னு புரியுது..

அதுல, living together ல வாழ்ந்த பொண்ணுக்கு, சட்ட ரீதியான திருமணங்களுக்கான protection இருக்குன்னு சொல்லியிருக்காங்களா? அதாவது, ஜீவனாம்சம், wife or child's ability to inherit property after the spouse's death.. இந்த மாதிரி..

vasu balaji said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

ஆமாம். ஜீவனாம்சம் கண்டிப்பா இருக்கும். சொத்து மத்த சட்ட விதிகளையும் பார்த்து சுய சம்பாத்தியம்னா கண்டிப்பா பங்கிருக்கும். மற்றபடி கருணை அடிப்படையில் வேலை, இதர செட்டில்மெண்டுகளுக்கு சட்ட திருத்தம் வரணும். அது வரைக்கும் கோர்ட்டுக்கு அலையத்தான் வேணும்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

@வானம்பாடிகள்

ம்ம்.. நன்றி..

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்
¨
நன்றி சார்.. (ஸாரி சார்.. எப்பவும் டெம்ப்ளேட் நன்றிக்கு... வேற என்னத்த சொல்றது..)

கலகலப்ரியா said...

@பிரபாகர்

நன்றிண்ணா..

கலகலப்ரியா said...

@kutipaiya

துப்புறாங்கன்னு உங்களுக்காவது தெரியுதே.. =)))..

கலகலப்ரியா said...

@சௌந்தர்

உண்மை... பொய்யா..?!

ஆமாம் காலைல எழுந்திரிச்சு எப்டி எல்லாம் பொய் சொல்லலாமின்னு யோசன பண்ணி இத எல்லாம் எழுதிக்கிட்டிருக்கேன்...

இது என்ன மாத்ஸா.. ஒன்னும் ஒன்னும் ரெண்டு... உண்மையா இல்லையான்னு பேசிட்டிருக்க...

முடியல சார்.. ஓ.. நீங்கதானே விடைபெற்றவங்க... ஸாரி..

கலகலப்ரியா said...

@LK

:-)

கலகலப்ரியா said...

@VJR

நன்றி VJR..

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

ம்ம்... இந்தப் புரிதல் ஒரு 0.001% -க்காவது வந்திச்சின்னா எவ்ளோ நல்லாருக்கும்... "SIGH"

கலகலப்ரியா said...

@Sethu

சேது... உங்க கருத்துக்கு நன்றி..

அது எப்படிப்பட்ட விஷயம்னாலும்... மத்தவன் சொல்றததான் ஒருத்தன் கேட்டு... அது படி வாழணும்.. சொந்த மூளைய உபயோகிக்கக் கூடாது... பிராணன் போனாலும் விருப்பமில்லாத ஒன்றைச் செய்து அழுது அழுதே பிராணன் போனா வைகுண்டம்.. கைலாஷம்...

நீ இது பண்ற... தப்பு...

நீ இது பண்ற... சரி...

இத செய்...

இத செய்யாத...

இப்டியான விஷயத்த.. ரோட்ல ஸ்பீடா போகாத... குப்பை போடாத... எச்சி துப்பாத.. மத்தவன் மூக்கில கைய வைக்காத... இப்டியான விஷயத்துக்கு சொன்னா போதும்...

இவள கட்டு... இவன வீட்டுக்குள்ள விடாத... புடிக்கலைன்னாலும் கல்லு மாதிரி கட்டினவனோட/ளோட கட்டில பகிர்ந்துக்க... இல்லைன்னா பாவம் பீடிச்சு.. நரகத்துக்கு போவன்னு சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு.. தலைய பூம் பூம் மாடு மாதிரி ஆட்டிக்கிட்டு சும்மா இருக்க முடியாது...

பை த வே... நீங்க பேசறது ரொம்ப மேலோட்டமான விஷயம்.. இது அது மட்டுமில்ல... நீங்க இன்னும் ரொம்ப தூரம் போகணும்..

கலகலப்ரியா said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நன்றி சந்தனா.. :-)... i knw that..

அது சரி(18185106603874041862) said...

+1

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

:(((((... ty..

அது சரி(18185106603874041862) said...

குறிப்பிட்ட பதிவு குறித்து அல்ல, ஆனால், அய்யகோ தமிழ் கலாச்சாரம் கெட்டு போச்சே என்று அங்கலாய்ப்பவர்கள், புனித கலாச்சாரம் என்று கொடி பிடிப்பவர்கள் முதலில் கலாச்சாரத்தை வரையறுப்பது நல்லது.

இதே தமிழ்நாட்டில் தான் பெண்கள் மேல்சட்டை அணியக்கூடாது என்று ஒரு கலாச்சாரம் இருந்தது. பெண்கள் வேலைக்கு போனாலே கெட்டுப் போனவள் என்று பேசும் ஒரு கலாச்சாரம் இருந்தது. இன்றைக்கும் அதே புனித கலாச்சாரத்தை பிடித்து தொங்க இவர்கள் தயாரா?

அஞ்சு பவுன் கொறைஞ்சா வேற மாப்பிள்ளை பாருன்னு கல்யாண மேடையில இருந்து எழுந்து போற விபச்சாரம் தமிழ்கலாச்சாரம் தான். (ஓகே, இந்திய கலாச்சாரம்!) இதுவும் புனிதமான கலாச்சாரம் என்பார்களோ என்னவோ?

அது சரி(18185106603874041862) said...

//

இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும் 'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.
//

இந்த வரிகள் கவுசல்யா அவர்களின் பதிவில் இருந்து எடுத்தது.

தான் யாருடன் வாழ வேண்டியது கூட தனிமனித சுதந்திரம் இல்லையெனில் வேறு என்ன எழவுக்கு தான் வாழ்வது? உண்டு உடுத்தி செத்து போவதற்கா? இல்லை பக்கத்து வீட்டுக்காரர்களையும், எதிர் வீட்டு காரர்களையும், தெருவையும், தாத்தா, பாட்டியையும் சந்தோஷமாக வைத்திருப்பதற்கா?

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

அப்டிப் போடுங்... எனக்கு ஒரு கை குறைஞ்ச மாதிரியே இருந்திச்சு... இது போதும்... இன்னும் முப்பது பார்ட் தேத்துவோம்ல =)))

அது சரி(18185106603874041862) said...

//

LK said...
கருத்திற்கு எதிர் கருத்து சொல்லுவது சரி. ஆனால். எழுதியவரை தாகும் வகையில் பின்னூட்டம் இடுவது எந்த விதத்தில் நல்லது என்று தெரியவில்லை ப்ரியா. உங்களுக்கு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சரியாகப் படலாம். அது உங்கள் கருத்து. அது போன்றதுதான் அவர்கள் அவர்கள் கருத்தையும் கவலையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் அவர்கள் எந்த இடத்திலும் இவ்வாறு வாழ்பவர்களை பற்றி தவறாக சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ?

எதிர் கருத்து சொல்வதோடு நிற்போம் . எழுதியவர்களை பற்றி விமர்சிக்க வேண்டாம்

November 15, 2010 12:24 PM
//

எழுதியவர்களை யார் விமர்சித்தது?

அவர் எழுதியது அவர் கருத்து, இங்கே எழுதியிருப்பது மாற்று கருத்து. இதில் எங்கே அவரை பற்றிய விமரசனம் இருக்கிறது?

அது சரி(18185106603874041862) said...

//
Sethu said...
நீங்கள் அடிக்கடி இந்தப் பதிவில் குறிப்பிடுகின்ற விஷயம், நம்ம குறைகளை கேட்கிற இந்தியரல்லாதவரிடம்/தமிழ் கலாசாரத்தில் இல்லாதவரிடம், அது நானல்ல என்று சொல்லுவதினால், அவர்கள் நம்மை உயர்த்தி வைத்து விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒவ்வொரு சமுதாயத்திலும், நிறை குறைகள் இருக்கும். அது அந்த அந்த நாடு மக்கள் அவர்கள் அமைப்புக்குள் தான் போராட முடியும். இவர்கள் கேட்கும் இந்தியா கலாசாரத்தின் குறை பாடுகள் பற்றிய கேள்விக்கு சொல்ல வேண்டிய பத்தி வேறு மாதிரியாக இருக்க வேண்டும்.
//

அவர்கள் உயர்த்துவார்களா இல்லையா என்று யார் கவலைப்பட்டது? ஆனால், இந்த மாதிரி அஞ்சு பவுன் குறைஞ்சா மாப்பிள்ளை எழுந்து போய்டுவானாமே? லவ் மேரேஜ் பண்ணா பெத்தவங்களே எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொன்னுடுவாங்களாமே என்று விவாதம் வரும்போது அய்யோ, அது நானில்லை என்று தான் சொல்ல முடியும்.

ரோகிணிசிவா said...

//வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க..//

குட் ஜோக்,எத்தன கட்டுப்பாடு போட்டு வளர்ந்தாலும்,வளர்த்தாலும் ஒரு தாலிய கட்டி/கட்டிக்கிட்டு கோர்ட் கேஸ் பிரச்சினை அனுபவிக்கும் போது புரியும்,
தாலி கட்டிக்காம கோர்ட் கேஸ்ன்னு அலையாம ஒரு புரிதலோட வாழ்றது ஒரு வரம்னு.

இது அவங்க அவங்க முடிவு செய்யற விஷயம்,எனக்கு பிடிக்கல இல்ல எனக்கு இது பழக்கம் இல்ல அப்படின்னு அடுத்தவங்க செய்றது காட்டுமிராண்டித்தனமான ஒண்ணுன்னு சொல்றது தான் காட்டுமிராண்டித்தனம்.

பேருக்கு தாலிய கட்டிட்டு ஊரு மேயறது விட,தாலி வெறும் சடங்குக்காக இல்லம உண்மையா வாழ்றது எவ்வளவோ பெட்டர்.

let the individual decide what they need , who are we to decide wat's right for every one and make it a thumb rule , and criticize others as barbarians.

அது சரி(18185106603874041862) said...

//

எனக்கு ஒன்று புரியவில்லை. தமிழ் கலாசாரம், பண்பாடு என்ற அடிப்படையில் லிவிங்-இன் before marriage ய் எதிர்ப்பவர்களை, ஏன் பண்ணை அடிமை கலாசாரத்தை தூக்கி நிறுத்துபவர்கள் என்று முத்திரை குத்த வேண்டும்.
//

கலாச்சாரம், பண்பாடு என்பதை விடுங்கள். கல்யாணம் அவசியம் என்று கருதுபவர்களை பற்றி ஒன்றும் இல்லை. அது அவர்கள் கருத்து.

ஆனால், லிவிங்க் டுகெதர் கலாச்சாரத்தின் புனிதத்தை கெடுக்கிறது போன்ற கருத்துகளை விவாதிக்காமல் இருக்க முடியாது.

அது சரி(18185106603874041862) said...

//
யாரோ ஒருத்தரு சொல்லி இருந்தாரு... வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க.. இருப்பாங்கன்னு...
//


இது ஒரு கோரமான மனநிலை. இதற்கும் தலிபான் தறுதலைகளுக்கும், பெற்ற பெண்ணையே உயிருடன் எரிக்கும் கொடூரர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

யார் வளர்ப்பை பற்றி யார் பேசுவது? என்னவோ போய் உலகமெல்லாம் ஆராய்ச்சி செஞ்ச மாதிரி உளறிக் கொட்டியது இது.

குடுகுடுப்பை said...

//let the individual decide what they need , who are we to decide wat's right for every one and make it a thumb rule , and criticize others as barbarians.//

டாக்டர் நல்ல மருந்தா கொடுத்திருக்கார், விருப்பட்டவங்க /தேவைப்பட்டவங்க சாப்பிடலாம், சாப்பிடலாமலும் இருக்கலாம் அது அவங்க அவங்க விருப்பம்.

Thekkikattan|தெகா said...

சாப்பிடலாமலும் இருக்கலாம் அது அவங்க அவங்க விருப்பம்//

அப்பாடா கடைசியா குடுகுடுப்பைய்ய்யா...

அல்லோ, சாப்பிடலன்னா குடும்பத்தோட நடுவீட்டில உட்கார்ந்து மருந்து குடிச்சு செத்துப் போயிடுறாய்ங்கய்ங்க... ஏதாவது பிடிச்சி கிடிச்சி புடிச்சவனோட வாழுறேன்னு பொயிட்டா, சம்மூகம் வெரட்டி வெரட்டி கொன்னு போட்டுடுதுன்னு தினத்தந்தி சொல்லுதுப்பா... நானில்லை!

Unknown said...

//எழுதியவர்களை யார் விமர்சித்தது?

அவர் எழுதியது அவர் கருத்து, இங்கே எழுதியிருப்பது மாற்று கருத்து. இதில் எங்கே அவரை பற்றிய விமரசனம் இருக்கிறது?//

ரிப்பீட்ட்ஸ்..

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

//டாக்டர் நல்ல மருந்தா கொடுத்திருக்கார், விருப்பட்டவங்க /தேவைப்பட்டவங்க சாப்பிடலாம், சாப்பிடலாமலும் இருக்கலாம் அது அவங்க அவங்க விருப்பம்./

ரிப்பீட்ட்ட்ட்

மார்கண்டேயன் said...

//குட் ஜோக்,எத்தன கட்டுப்பாடு போட்டு வளர்ந்தாலும்,வளர்த்தாலும் ஒரு தாலிய கட்டி/கட்டிக்கிட்டு கோர்ட் கேஸ் பிரச்சினை அனுபவிக்கும் போது புரியும், தாலி கட்டிக்காம கோர்ட் கேஸ்ன்னு அலையாம ஒரு புரிதலோட வாழ்றது ஒரு வரம்னு.

இது அவங்க அவங்க முடிவு செய்யற விஷயம்,எனக்கு பிடிக்கல இல்ல எனக்கு இது பழக்கம் இல்ல அப்படின்னு அடுத்தவங்க செய்றது காட்டுமிராண்டித்தனமான ஒண்ணுன்னு சொல்றது தான் காட்டுமிராண்டித்தனம். //

இதச் சொன்னாலே, கலாசாரக் காவலர்கள், வரிஞ்சு கட்டிக்கிட்டு நிப்பாங்களே . . .

சுருக்கமா சொல்லனும்னா . . .

பொழுது சாஞ்சா பொத்திப் படுக்குறதுக்கு பல பொம்பளைங்களும், படுத்து முடிச்சிட்டு களைச்சி போயி வீட்டுக்கு வந்தா, சாப்பாடு போட்டு, அசதி தீத்து வக்குரதுக்கு எப்பவுமே இன்னொருத்தியும் இருந்தா கலாசாரம் காப்பாத்தப்படுதுன்னு அர்த்தம் . . .

அத மீறி, பொம்பள ஏதும் பேசிட்டா . . . அவங்கப்பன், ஆத்தா, பரம்பர, வளப்பு அம்புட்டும் சரியில்ல . . .

இன்னும் சொல்லப் போனா, அவ ஒருத்தி நால தான், அவ புருஷன் இப்டி ஆயிர்க்கான்,

நல்லாக் காப்பாத்துங்கப்பு இந்த கலாச்சாரத்த . . .

ப்ரியா, உங்கள் புரிதலுக்கு வாழ்த்துகள்,

அது சரி உங்கள் தேர்ந்த சிந்தனைக்கு நன்றி.

கருடன் said...

@கலகலப்ரியா

பொது வெளியில் கருத்து சொல்ல எல்லாறுக்கும் உரிமை இருக்கு. So, நானும் கருத்து சொல்றேன்.

”இது ஐம்பதாவது கமெண்ட்”

கோவபட்டு திட்டிபுடாதிங்க சாமிகளா.. :))

கலகலப்ரியா said...

@TERROR-PANDIYAN(VAS)

மீ த அம்பத்தியொன்னு... ஒன்னியும் கவலைப்படாதீங்க..

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

ம்ம்... இதுக்கெல்லாம் நன்றி சொல்றதா என்னன்னு யோசிச்சு சொல்றேனே... :o)

கலகலப்ரியா said...

@ரோகிணிசிவா

ரோகிணி... ஐ லைக் இட்... ரொம்ப தாங்க்ஸ்..

கலகலப்ரியா said...

@குடுகுடுப்பை

நன்றி குடுகுடுப்ஸ்..

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

:)))...

கலகலப்ரியா said...

@முகிலன்

ஒரே ரிப்பீட்ஸா... ம்ம்... நன்றி நன்றி..

கலகலப்ரியா said...

@பாத்திமா ஜொஹ்ரா

நன்றி பாத்திமா... உங்களுக்கும் வாழ்த்துகள்..

கலகலப்ரியா said...

@மார்கண்டேயன்

மார்க்கண்டேயன்... உங்க புரிதலுக்கு வந்தனம்..

ரோகிணிசிவா said...

@குடுகுடுப்பை said...
//டாக்டர் நல்ல மருந்தா கொடுத்திருக்கார், விருப்பட்டவங்க /தேவைப்பட்டவங்க சாப்பிடலாம், சாப்பிடலாமலும் இருக்கலாம் அது அவங்க அவங்க விருப்பம்.//
:))

@மார்கண்டேயன் ,உங்கள் ஆதரவுக்கு நன்றிஸ் .
//இதச் சொன்னாலே, கலாசாரக் காவலர்கள், வரிஞ்சு கட்டிக்கிட்டு நிப்பாங்களே . . .//

யாரோ என்னமோ சொல்லட்டும் வாழ்த்து பார்க்கிற ஆணுக்கும் பொண்ணுக்கும் தெரியும் எது செய்யலாம் , செய்ய கூடாதுன்னு, எல்லா விசயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் , எப்பவும் தப்ப தான் பார்பேன்னு சொல்லற நாம கண்ணாடி இல்ல கண்ணையே மாத்தணும்.

@ ப்ரியா
//ரோகிணி... ஐ லைக் இட்... ரொம்ப தாங்க்ஸ்..//

its my pleasure :)