(பேக் டு த காஷுவல் மூட்... ம்ம்...)
நம்மாளுங்க புத்திசாலித்தனம் யாருக்கும் வராதுங்க... செண்டிமெண்ட சும்மா சக்கையாப் புழிஞ்சே காரியத்த சாதிப்பாங்க...
ஒரு படம் காட்டணும்னாக்க... கரீக்ட்டா.. காலேஜ் டைம்ல ஆரம்பிச்சு... கல்யாண மேடைல மலர்கள் புடைசூழ ஏறி அமர்ந்து... தாலிய அப்டியே தூக்கி... டமடமடமன்னு மேளத்தக் கொட்டோ கொட்டுன்னு உச்சஸ்தாயில கொட்டி... சுபம் போட்டுடுவாங்க...
மனுஷன் எப்டி எல்லாம் வாழணும்னுட்டு... எறும்புல இருந்து கழுதை வரைக்கும் ஏதோ ஒரு குணாதிசயத்த பச்சக்குன்னு புடிச்சு மேற்கோள் காட்டுவாங்க... சபைல கைதட்டல் காதைப் பொளக்கும்...
கற்புநெறி பத்திப் பேசுறப்போ... மாடப்புறாவையும்... அன்றில் பறவையையும் உதாரணம் காட்டுவாங்க.... ஜோடிப் பறவை போயிட்டா... பச்சத் தண்ணி கூட முழுங்காம செத்துப் போகுமாம் அன்றில்... மாடப்புறா கல்லை முழுங்கிட்டுப் போய் மண்டையப் போடுமாம்.. (வழி காட்டல்... பண்பாடூஸ்..)
ஹூம்... நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே செத்துப் போயிட்டா... போர்க் கடவுள்கள் எல்லாம் பூமில பாரம் ஏறுதேப்பான்னு கவலைப்படாம... ராக்கெட்டயும்.. அணுகுண்டையும் கண்டுபுடிக்க வழியில்லாம செய்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்... புள்ள குட்டிய யாரு பார்க்கறதுன்னு எல்லாம் கவலைப்படாம... அம்மா போயிட்டா அப்பாவும்... அப்பா போயிட்டா அம்மாவும்ன்னு மாத்தி மாத்திக் கல்ல முழுங்கிக்கலாம்..
எந்தப் பறவையும்... குஞ்சு பொரிச்சு... நம்மாளுங்க மாதிரியே பொத்திப் பொத்தி சாப்பாடு ஊட்டி வளர்க்கும்... சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல...
நம்மாளுங்க.. அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க... அங்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு பயம்... அங்க ஆரம்பிக்கும் அடக்குமுறை... அங்க குழந்தையும் கத்துக்கும்... முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்..
குழந்தைங்க ஆரம்பத்ல.. பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்க அழ ஆரம்பிச்சு... அப்புறம்.. அதுக்கு ஏதாவது தேவைன்னா அழ ஆரம்பிக்கும்... உடனயே தூக்கி வச்சுக்கிட்டு ஓஓஓன்னு சீராட்டுவாங்க... அட விடுங்கம்மான்னா கொஞ்ச நேரம் அழட்டும்னா.. மூச்சடைச்சு செத்துப் போயிடும்பாங்க... அழுறப்போ எல்லாம் எதயாவது கைல திணிப்பாங்க... இது வேணுமாடா ராஜா... இங்க பாரு.. கீ... அச்சச்சோ... அது வேணாமா... இங்க பாரு.. இங்க பாருன்னு.. கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து நீட்டுவாங்க...
எம் புள்ளைக்கு கீரைன்னா கண்ல காட்டப்டாது... நம்ம வீட்ல கீரையே சமைக்கறதில்லைம்பாங்க... அது என்ன வேணும்னு சொல்லுதோ அத செய்து கொடுப்பாங்க..
அவங்க வளர்ற வரைக்கும்.. புள்ளதான் ராஜா... அப்புறம் புள்ளய அடிமையாக்கிட்டு.. அப்பவும் ராஜான்னு கொஞ்சிக்கிட்டிருப்பாங்க.. புள்ளை சட்டை.. செருப்பு எல்லாம் தானாவே மாட்டச் சொல்லித் தர்றதில்ல.. அவங்களாவே மாட்டி விடுவாங்க... அப்போதானே அப்பாலிக்க செண்டிமெண்ட் டயலாக் விடலாம்... உன்னை நான் எப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் வளர்த்தேன்னு..
கலாச்சாரம் சீரழிஞ்சு... கால்வாயில வழிஞ்சு வழிஞ்சு கரைய உடைச்சுக்கிட்டு.. சந்து பொந்தெல்லாம் ஓடுதுப்பான்னு நம்மாளுங்க மூக்கப் பொத்திக்கிற நாட்டில.. குழந்தைங்கள எப்டின்னு வளர்க்கிறாங்கன்னு நானும் மூக்கில கைய வச்சுக்கிட்டுதான் பார்த்தேன்... ஆனா நாத்தம் தாங்காம இல்ல... ஆச்சரியமா...
அவங்க குழந்தைய குழந்தையா வளர்ப்பாங்க... நாம உன்னைப் பெத்தவங்க.. உனக்கு இப்போ நாமதான் ராஜா அண்ட் ராணி... அப்டின்னு வளர்த்து... அந்தப் புள்ள வளர்ந்ததும்... ஓக்கே... இனிமே நீ பார்த்துக்கோ ராஜான்னு விட்டுடுவாங்க.. .
அட என்னங்க... ஒரு புள்ள அழுறதுக்கு அதுக்கு உரிமை இல்லையா... அழ விடுவாங்க... விழுந்து கெடந்து அடம் புடிச்சா... கண்டுக்கவே மாட்டாங்க... புள்ள ஆட்டோமேட்டிக்கா பாடம் கத்துக்கும்...
சாப்பாடு வீட்டில கொடுக்கிற சாப்பாடுதான்... விருப்பம்னா சாப்டலாம்... இல்லைன்னா விடலாம்.. இஷ்டமில்லைன்னா புள்ள ரெண்டு நாள் சாப்டாம இருக்கும்... இருக்கலாம்.. ஒண்ணும் ஆயிடாது.. மூணாவது நாள் வேற வழியில்லாம சாப்டும்.. நம்மாளுங்க அதையும் திணிப்பாங்க... செல்லம்ல... புஜ்ஜில்லன்னு... அது வாந்தி எடுக்க எடுக்கத் திணிப்பாங்க... இல்லைனா அடிச்சுத் திணிப்பாங்க.. (அத மட்டுமா..ஹூம்..)
அவங்க அழுதா கண்டதயும் எடுத்து நீட்டறதில்ல... கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க...
மத்தப் பசங்க கூடப் ப்ரச்சனைன்னா... அம்மா வா.. அப்பா வா... மாமா வா... மச்சான் வான்னு ஊரைக் கூட்டக் கத்துக் கொடுக்கறதில்ல... ப்ரச்சனைன்னா அந்தப் புள்ளையே பார்த்துக்கணும்... அடிச்சா அடிக்கறதில்ல... ஆனா ஸ்டாப் இட்... அப்டின்னு உறுதியா சொல்லக் கத்துக் கொடுப்பாங்க... யார்ட்டயும் பிரச்சனையே பண்ணக் கூடாதுப்பா... உலகம் அன்பு மயமானது.. அன்பால் எதயும் வெல்லலாம்... அடிச்சா கேன மாதிரி மத்தக் கன்னத்தையும் காண்பின்னு சொல்லிக் கொடுக்கறதில்ல... பிரச்சன வரத்தான் செய்யும்.. அத எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக் கொடுப்பாங்க..
ஏய் மொக்கைன்னு யாராவது கூப்ட்டா... யெஸ் ஐயாம் த க்ரேட்டஸ்ட் மொக்கைன்னு நக்கலா சொல்லிட்டு நகரக் கத்துக் கொடுப்பாங்க... இல்லாம சீண்டினா... ஸ்டாப் இட்... அங்கேயே நில்... அதுக்கு மேல வராத... தேர் இஸ் அ லிமிட்.. என்னை எனக்குத் தெரியும்... என்னைப் பத்தி நீ சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்லைன்னு சொல்லக் கத்துக் கொடுப்பாங்க.. (:o))...
குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ... அந்தக் குழந்தை ஆரம்ப பள்ளிக்குப் போறப்பவே வாழ்க்கையோட அடிப்படையக் கத்துக்கும்... அங்க போயும் கத்துக்கும்.. க்யூல நிக்கிறத கத்துக்கும்.. க்யூல நிக்கறப்போ ஒரு நாள் நான் முன்னாடி நிக்கலாம்... மறு நாள் நான் பின்னாடி நின்னு மத்தவன முன்னாடி போக வழி செய்யலாம்.. அதயும் கத்துக்கும்..
ஒரு புள்ளைக்கு இன்னொரு புள்ள ஹெல்ப் பண்ணக் கத்துக் கொடுப்பாங்க.. ஆனா ரொம்ப அவசியம்னாதான்.. கைல கத்தரிக்கோல வச்சுக்கிட்டு பேப்பர நேரா எப்டி வெட்டறதுன்னு தெரியலைன்னா... மத்தவங்க ஹெல்ப் பண்ணக் கூடாது... அந்தக் குழந்தைய கத்துக்க விடனும்... சுயமா.......
படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... என்னடா எந்த நேரமும் விளையாட்டு.. ஃப்ரண்ட்ஸு... அதுவும் கண்டகண்ட ஃப்ரண்ட்ஸுன்னு தலைல அடிச்சுக்கிட்டு அலர்றதில்லை..
படிம்மா.. படிப்பா.. உன்னால முடியும்.. உன்னால எவ்ளோ முடியுதோ.. மாக்ஸிமம் ட்ரை பண்ணு.. போதும்.. அதுக்கு மேல வேணாம்... வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..! விளையாட்டு ஒன்ன தேர்ந்து எடுத்துக்கோ... அது முக்கியம்... ஃப்ரண்ட்ஸ் யார் யாரெல்லாம் இருக்காங்க.. என்னது இல்லையா... ஏன் இல்ல... என்ன ப்ரச்சனன்னு உக்காந்து ஃப்ரண்ட்ஸ் கிடைக்க எந்த ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பலாம்னு யோசிப்பாங்க...
குழந்தை ஒரு தப்பு செய்துட்டா... போச்சு... போச்சு... நான் செத்துப் போறேன்... உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... அடிச்சே சாவடிச்சிடுவேன்... குடும்பத்தோட செத்துடுவோம்னு சொல்லிச் சொல்லி.. தன் மார்ல தாம் தீம்னு குத்தி... குழந்தைய குற்ற உணர்வு பிடுங்கித் திங்கச் செய்யறதில்லை... குற்றவாளிக் கூண்டில நிக்க வச்சுக் கடிச்சுக் குதர்றதில்லை... (அது வயசுக்கு வந்து தன்னோட வாழ்க்கையத் தேடிக்கிறப்பவும் செய்யறதில்ல..)..
நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு..
பரீட்சைல ஃபெயில் ஆயிட்டோம்ன்னு தற்கொலை பண்ணிக்கிற ரேஞ்சுக்கு ஒரு பையனோ... பொண்ணோ போறாங்கன்னா.. அது நம்ம கலாச்சாரத்திலதாங்க நடக்கும்... அதே குற்ற உணர்வுதான்... அய்யயோ... செய்யக் கூடாத தப்பு பண்ணிட்டோமே... இனிமே அம்மா அப்பா மூஞ்சில எப்டி முழிப்போம்... நம்ம நாசமாப் போன வீதில எப்டி மூஞ்சியக் காட்டுவோம்னு...
இப்டி ஒரு மனநிலைல ஒரு புள்ளைய வளர்த்துட்டு... இப்டி ஒரு மனோபாவத்துக்கு அந்தப் புள்ளையத் தள்ளிட்டு... நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க... நம்ம புள்ளைங்க புனிதமானவங்க (சில பேரு.. corrupted mind ... மாசு மடிஞ்ச மனசுள்ளவங்களுக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க..)ன்னும் பெருமையா சொல்லிக்கிறாங்க...
ஸோ... அந்தப் புள்ள காதலிச்சா என்னாகும்... வேற வழியில்ல ஆள விடுங்கப்பான்னு ஓடச் செய்யும்.. இல்லைன்னா.. அம்மா அப்பா சவத்துக்கு மேல எப்டி வாழ்றதுன்னு... உரோமபுரி அடிமைகளாயிடுவாங்க.. அதாவது உயிர்.. உணர்வு எல்லாம் இருக்கிற மனுஷங்களா இருக்காம... ஒரு பொருளா... கழுத்தில இவள் இவனின் அடிமை... அப்டின்னு தகடு மாட்ட விட்டு வலம் வர வைப்பாங்க... அது அந்தப் புள்ள நாண்டுக்கிட்டுச் செத்துப்போனா... மானம் காப்பாத்தியாச்சுன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே திரும்ப மார்ல அடிச்சுக்கிட்டு அழுது தீர்ப்பாங்க... சமூகம்... பாவம் அவங்க தலையெழுத்துன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரித் தலைல அடிச்சுக்கிட்டு போகும்...
அதே மாதிரி... அது பையன்னா... பொண்ணைக் காதலிச்சிட்டோம்... கர்ப்பமாயிட்டா... மத்தவங்க மூஞ்சில முழிக்க முடியாதுன்னு ஓடத்தான் முடியும்.. வேற வழி... சொல்லிப் புரிய வைக்கற மாதிரியாய்யா வளர்ந்திருக்கோம்.. கலாச்சாரத்த இம்பூட்டு மொத்தக் கயிறாப் போட்டு இறுக்கக் கட்டியில்ல காப்பாத்துறோம்... மொன்னையாவே இருக்கட்டும்ன்னு...
கலாச்சாரத்த அவுத்து விட்டிருக்கிறதா நம்மாளுங்க சொல்லிக்கிட்டிருக்கிற ஊர்ல... ஒருத்தன் ஒருத்தியோட சேர்ந்துட்டு.. புள்ள கிடைச்சதும் விட்டுட்டு கம்பிய நீட்ட முடியாது...
அதே மாதிரி கல்யாணம் கட்டிட்டு... அப்புறம் சரியா வரலைன்னா பிரிஞ்சுட்டு... கட்டினவன் கிட்ட இருந்து ஒண்ணும் வேணாம்ன்னு ரோஷமா வேணா இருந்துக்கிடலாம்... ஆனா எம்புள்ளைக்கும் எதுவும் வேணாம்.. புள்ள மூஞ்சில முழிக்கப்டாதுன்னு எல்லாம்... வீட்டுக்கார அய்யாக்கு தண்டனைய கொடுக்கிற மாதிரிப் புள்ளைங்கள தண்டிச்சிட முடியாது... Sole legal custody... Sole physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. அப்டின்னு ஒன்னு இருக்கு... (உடன எல்லாரும் புள்ளைய பெத்து அவங்க காலடில கொண்டு போய்ப் போட்டு முக்காடு போட்டுக்கிட்டுப் போற மாதிரிக் கற்பனை பண்ணிக்க வேணாம்..)..
அவங்க அவங்களுக்கு... அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி... ஆலோசனை கொடுக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு மையம் இருக்கு... சட்டமும் சரி... மையமும் சரி.. தனி ஒரு மனிதனை... அவனோட அபிலாஷைகளை... அவமதிச்சிடக் கூடாது... அப்டின்னு ரொம்ப மரியாதை கொடுத்து.. அவனுக்கு எப்டி எப்டி எல்லாம் வழி காட்டலாம்ன்னு உருவாக்கி வச்சதுதான்...
நம்மாளுங்க தூக்கில தொங்குவோம்ன்னு மிரட்றாப்ல... போடி போடி... மூஞ்சிலயே முழிக்காத... என்னளவில நீ செத்துப் போயிட்டா... தனியா நின்னு சாவுடின்னு... பண்பாட்டோடயும்.. நல்ல பண்போடயும் வாழ்த்தி வழியனுப்புவாங்க... அந்தப் பொண்ணும் ஏதாவதுன்னா... எங்க போறதுன்னு தெரியாம நட்ட நடு வீதில நின்னு... திக்குத் தெரியாத காட்டில்ன்னு செண்டியா பாட்டுப் பாட வேண்டியதுதான்... அப்புறம் என்ன... நான் சொன்னேன்ல... கேட்டியா.. கேட்டியா... இப்போ பார்த்தியா பார்த்தியா.. (வின் பண்ணிட்டாய்ங்களாம்..) அப்டின்னு குதிப்பாங்க...
இங்க... சட்டப்படி கல்யாணமான... "ஆகாத"... அம்மா.. அப்பா.. யாரும் அப்டி தொரத்தி விட மாட்டாங்க.. (புள்ளைங்கள துரத்தி தண்ணி தெளிச்சு விடுறதெல்லாம் ஒரு கலாச்சாரமான்னு யாரோ கேட்ட ஞாபகம்..).. ஒரு வேளை பெத்தவங்க உதவ முடியலன்னா... நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு...
நம்மாளுங்க இங்க வந்து.. ஒரு புள்ளய... அது கூடாது.. இது கூடாது... சாவோம்.. குடும்பத்தோட கொளுத்திட்டு நானும் சாவேன்.. இத்யாதி இத்யாதின்னு எல்லாம் மிரட்டி வச்சும்... அந்தப் புள்ள மூச்சடக்கி சாவற கட்டத்தில வெளில வந்திச்சின்னா... அதைக் கை நீட்டி அழைச்சு வழி காட்ட ஆள் இருக்காங்க... அதுக்கும் சொல்லிக்குவாங்க நம்மாளுங்க பெருமையா... என்ன ........ரு... என் புள்ளய நான் அடிக்கறேன்... என் புள்ளைய நான் கொல்றேன்.. (ராஜபக்சே ஃபார்முலா... நம் நாட்டு மக்களை நான் கொல்றேன் உனக்கென்னடா போச்சுன்னு..).. நீ யாருய்யா காப்பாத்த... நம்மூர்ல இப்டி எல்லாம் வழி காட்ட எந்த நா(தி)யும் இருக்காது... வேற வழி இல்ல புள்ள நம்ம கிட்டதான் வந்தாவணும்... இங்க இப்டிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிறீங்களேடான்னு.... பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க...
(மீதி அப்பாலிக்கா..)

