header photo

Wednesday, December 1, 2010

ஒய்யாரப் பின்னல்...

மூலை மழுங்கிப் 
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்
குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன
மயிலிறகுகள்

வெள்ளியன்று 
வெளிவந்த முட்டைக்குள்
வைரமாகிக் கொண்டிருந்தன 
பொன் கருக்கள்

உயிர்த்த ஞாயிறில்
மரித்த பறவைக் கோதில்
வானவில்லின் வர்ண ஜாலம்
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது

வர்ணப் பூச்சை - விட
சுண்ணாம்பின் 
வெண்ணிறமே விருப்பாயிருந்தது..  

ஆட்காட்டி விரலில் 
அமிலம் தொட்டுத் 
தடவ ஆரம்பித்தேன்

சிறு கிள்ளையொன்று
எட்டி நின்று முடியென்று 
எதையோ பிடித்திழுத்து  
வித்தை காட்டியது 

கையிலிருந்ததை நழுவ விட்டு
குட்டையில் கை நனைத்துதறித்
திரும்பிப் பார்த்தேன்

சிறுமியொருத்தி 
கற்றையாக எதையோ 
பின்னிக் கொண்டிருந்தாள்

ஊர்ந்து கொண்டிருந்த 
பேன்கள் எதையோ உறுதி செய்தன

பார்த்துக் கொண்டிருக்கும்போதே 
பேன் முட்டைகள் பெருகலாயின 

வைரக் கனவுகளுடனான 
கருவை விட 

முட்டையில் வளரும் 
முடிக்குத்தான் எத்தனை
வீரியம்...!

_______________________________

18 ஊக்கம்::

எஸ்.கே said...

வித்தியாசமான கவிதை! அருமை!

வானம்பாடிகள் said...

ம்ம்.
தூக்கம் போச்.
/மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தனமயிலிறகுகள்/

ம்ம்ம். பஸ்ல பார்த்த கவிதை கவனம் வருது.

/உயிர்த்த ஞாயிறில்மரித்த பறவைக் கோதில்வானவில்லின் வர்ண ஜாலம்என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது/

ம்ம். எனக்கு புரிஞ்சிடுத்து. ஒற்றை வார்த்தையை இவ்வளவு அழகா சொன்னது.:)

/பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேன் முட்டைகள் பெருகலாயின
வைரக் கனவுகளுடனான கருவை விட
முட்டையில் வளரும் முடிக்குத்தான் எத்தனைவீரியம்...!/

இது ஹோம் வொர்க்..அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

//வைரமாகிக் கொண்டிருந்தன பொன் கருக்கள்//

ஆஹா.

வானம்பாடிகள் said...

/மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்
குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன
மயிலிறகுகள்/

இன்னமும் பரணிலிருக்கும் என்னுடைய புத்தகம் ஒன்றில் அந்த மயிலிறகிருக்கலாம்.

அது சரி(18185106603874041862) said...

//

உயிர்த்த ஞாயிறில்
மரித்த பறவைக் கோதில்
வானவில்லின் வர்ண ஜாலம்
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது
//

ஆஹா...

இந்த வர்ணணை நல்லாருக்கு...

அது சரி(18185106603874041862) said...

//

பார்த்துக் கொண்டிருக்கும்போதே
பேன் முட்டைகள் பெருகலாயின

வைரக் கனவுகளுடனான
கருவை விட

முட்டையில் வளரும்
முடிக்குத்தான் எத்தனை
வீரியம்...!
//

அள்ளி விழுங்கும் காலத்தையும்
காலால் எட்டி உதைக்கும் வைரங்கள்
முட்டையில் வளரும் முடி
இன்று உதிர்த்து நாளை உதிரும்.

Sethu said...
This comment has been removed by the author.
முகிலன் said...

Ethir kavuja eluthi naalaachu. Kai arikkuthu

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல அருமைங்க ப்ரியா

பூங்குழலி said...

எட்டி நின்று முடியென்று
எதையோ பிடித்திழுத்து
வித்தை காட்டியது

நல்லாயிருக்குங்க

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஒவ்வொரு வார்த்தையும் அழகு ப்ரியா. நிறைய புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்ள......நன்று.

Sethu said...

நன்றாக இருக்குங்க.

கலகலப்ரியா said...

நன்றி எஸ்.கே...

நன்றி பாலா சார்...

நன்றி அதுசரி...

நன்றி முகிலன்.. எழுதுங்க...

நன்றி ஞானசேகரன்..

நன்றி பூங்குழலி..

நன்றி நித்திம்மா...

நன்றி சேது..

பார்வையாளன் said...

அருமையான எழுத்து

சிங்கக்குட்டி said...

:-) .

சூப்பர்...!குண்டுகுண்டா என்னமா இருக்கு எழுத்தெல்லாம்...!

ஆனா, எப்பவும் போல என் மர மண்டைக்கு எதுவும் புரியவில்லை.

ஏதாவது உள்குத்து இருக்கா :-) ?

கலகலப்ரியா said...

@பார்வையாளன்

நன்றி பார்வையாளன்..

கலகலப்ரியா said...

@சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி... என்னதான் புரியலைன்னாலும்... அப்ப அப்ப இப்டி வந்து அக்கறையா சூப்பர் சொல்லிட்டுப் போறீங்க பாருங்க... ஐ லைக் இட்...

உட்குத்து இல்லாத கவுஜையும்... உள்ளீடு இல்லாத கொழுக்கட்டையும்.. வேஸ்ட்டு... தத்துபித்துவம்ஸ்..

பாரத்... பாரதி... said...

//மூலை மழுங்கிப்
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்//
//வெள்ளியன்று வெளிவந்த//
//ஆட்காட்டி விரலில் அமிலம் தொட்டுத் தடவ ஆரம்பித்தேன்//

வார்த்தைகளின் கோர்வை ரசிக்க வைக்கிறது..