கீறலாகவோ
கன்றலாகவோ
பிளவாகவோ
பொசுங்கியதாகவோ
பொங்கியதாகவோ
எவ்விதமாகவுமிருக்கலாமவை
மணிக்கட்டில்
கால்விரலிடுக்கில்
தாடை நுனியில்
கண்ணோரத்தில்
முதுகுப்புறத்தில்
எங்கானாலுமிருக்கலாமவை
அதிகார விறைப்பால்
ஆதங்கத்தால்
இயலாமையால்
வெஞ்சினத்தால்
பொறாமைத்தீயால்
எதுக்கானாலுமிருக்கலாமவை
எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
______________________
கன்றலாகவோ
பிளவாகவோ
பொசுங்கியதாகவோ
பொங்கியதாகவோ
எவ்விதமாகவுமிருக்கலாமவை
மணிக்கட்டில்
கால்விரலிடுக்கில்
தாடை நுனியில்
கண்ணோரத்தில்
முதுகுப்புறத்தில்
எங்கானாலுமிருக்கலாமவை
அதிகார விறைப்பால்
ஆதங்கத்தால்
இயலாமையால்
வெஞ்சினத்தால்
பொறாமைத்தீயால்
எதுக்கானாலுமிருக்கலாமவை
எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
______________________
26 ஊக்கம்::
m , very true
//வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
//
ஆம் சகோதரி!... வடுக்கள்தான் என்றும் நடந்தவைகளை நினைவுப் படுத்துபவை!...
பிரபாகர்...
//வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை... //
pain...
இந்த வடுக்களில்லாதோர் யார். காரணத்துடன்,காரணமின்றி, பகையால் மிகு அன்பால், எதற்கானாலும் ரணமின்றி வலியும், வலியற்ற ரணமுமாய் அமைந்துவிடும் சிலநேரம்.
/எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை.../
அம்ம்ம்மா:((வார்த்தைகள் காய்ந்த வடுக்களை வருடிச் செல்லலாம்..வலியோடு இனிக்கவும் செய்யலாம் சில. வடுவாகக் காத்திருப்பவை சிலவென்று எதையும் விடுவதில்லை.
சில வடுக்களை வருடிப் போகிறது கவிதை. சூப்பர்ப்
ஞாபகங்களை இறக்க விடாததுதான்
வடுக்களின் நியதியே!
வடுக்கள் நடந்த வந்த பாதையின் அடையாளக் கையேடு...
கவிதை நன்று! :)
என் வடுக்களை வருடிக்கொடுத்தது போல இருந்தது..
வடுக்கள் எனக்கு மட்டும் சொந்தமில்லை என்ற யதார்த்தமும் புரிகிறது
very nice and 100% true.
//
எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
//
உண்மை தான்....
நடந்து வந்த பாதைகளும்
கிழித்து சென்ற வார்த்தைகளும் வாட்களும்...
வடுக்கள் காய்ந்திருக்கலாம்
ஆனால்
ஒரு போதும் மறப்பதில்லை
வாழ்நாள் முழுவதும் கூட.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று.. ஆனால் முடியாது.. சில வடுக்கள் ம(ற)றைந்து போகுதல் நன்று.. சிலது மறையாமல் இருப்பதே நன்று..
ஒரு கத்தியால் ஏற்படும் காயத்தின் ஆழமானது, காயம் ஏற்படுத்தப்படும் பரப்பின் தன்மையைப் பொறுத்தும் வேறுபடும்..
சரிதானுங்க.. எல்லோருக்குமே அப்டித்தான்.
கவிதை சூப்பர்,குறிப்பா ஃபினிஷிங்க் பஞ்ச் லைன்..>>>
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
100% சரி
எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
உண்மை தான் வடுக்கள் இலாவிடினும்
வலியிருக்கும்!!!
உணர்வான வரிகள்.. நல்லா இருக்குங்க ..
இதையும் கொஞ்சம் படிக்கலாமே
பள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்!
http://maattru.blogspot.com/2010/12/blog-post_08.html#more
உண்மை
சத்தியமான வார்த்தை ப்ரியா......
good 1 :)
உங்களின் எழுத்துக்கள் மிக அருமை. நான் இப்போதுதான் எழுதத் துவங்கியிருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.
வடுக்கள் சாவதில்லை ... அதனால் தான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
//
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை.
//
ஆமாம்.........
சத்தியமான வார்த்தை.
ரொம்ப நல்லா இருக்கு கவிதை..!!
எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... கொஞ்சம் வேலைப்பளு... :(
//எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...//பாராட்டுகள் பழங்கால பெண்கள்தான் நல்ல ஆக்கங்களை தந்தார்கள் என இலக்கியம் பேசுகிறது .
உங்களின் நறுக்குகள் புதிய வடிவில் பேசுகிறது நன்றி
தழும்புகள் சுமக்கு வலியின் நினைவுகள்......
கவிதை மிக வீரியம்.
Post a Comment