header photo

Friday, December 2, 2011

சுணக்கம்























மழையில்லாக் கார்த்திகை 
இத்தனை வருடங்களில் 
இந்தத் தடவைதானாம் 
உயிரை வாங்குவதாகக் கரித்துக் கொட்டியவர்கள்
உச்சுக் கொட்டியபடி சென்றார்கள் 
கனவிலிருந்து விழிப்பது போல் விழித்தேன் - ஆமாம்
கை பிடித்து வந்து கொண்டிருந்த மழை 
நின்று விட்டதைக் கூட உணராது 
நடந்து கொண்டே இருந்திருக்கிறேன் 

அதனதன் நிமித்தம் எதுவெதுவோ 
நடந்தபடிதான் இருக்கின்றன 
மழையில்லாது நான் நின்றுவிடவில்லை
நானில்லாதும் மழை எங்கோ பெய்து கொண்டுதானிருக்கும்
நீர்வீழ்ச்சியில் விழுவது கூடத் தெரியாது விழும் தூவானமும் 
புவியீர்ப்பு உணராத என்னிரு பாதங்களும் - இன்னும் 
வெறுமனே நடந்து கொண்டிருக்கும் பிற பலவும் போல
இந்த மழையும் மருகி மருகி 
எங்கெங்கோ கரைந்து கொண்டிருக்கிறது

என் நாசியுணர்த்தும் வாசனையில் 
காற்றின் கைகளில் கொடுத்தனுப்பப்பட்ட 
வாசிக்கப்படாத மடலொன்று படபடக்கிறது 
பிரித்துப் பார்க்க அவசியமெதுவுமில்லை 
தெரிந்த செய்திதான் இது 
மடங்கியிருக்கும் குடையை மறக்காது 
மறந்து விட்டுச் செல்ல வேண்டும் 
மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம் 

19 ஊக்கம்::

முனைவர்.இரா.குணசீலன் said...

நானும்


ழை
யில்...

வானம்பாடிகள் said...

எப்பவும் போல அற்புதமான புகைப்படம். சாரல் மாதிரி கவிதை.
/அதனதன் நிமித்தம் எதுவெதுவோ நடந்தபடிதான் இருக்கின்றன மழையில்லாது நான் நின்றுவிடவில்லைநானில்லாதும் மழை எங்கோ பெய்து கொண்டுதானிருக்கும்நீர்வீழ்ச்சியில் விழுவது கூடத் தெரியாது விழும் தூவானமும்/

/என் நாசியுணர்த்தும் வாசனையில் காற்றின் கைகளில் கொடுத்தனுப்பப்பட்ட வாசிக்கப்படாத மடலொன்று படபடக்கிறது பிரித்துப் பார்க்க அவசியமெதுவுமில்லை தெரிந்த செய்திதான் இது மடங்கியிருக்கும் குடையை மறக்காது மறந்து விட்டுச் செல்ல வேண்டும்/

மருகி மருகி கவிதையை திரும்ப வாசிக்க வைக்கிறது.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
என் நாசியுணர்த்தும் வாசனையில்
காற்றின் கைகளில் கொடுத்தனுப்பப்பட்ட
வாசிக்கப்படாத மடலொன்று படபடக்கிறது
பிரித்துப் பார்க்க அவசியமெதுவுமில்லை
தெரிந்த செய்திதான் இது
மடங்கியிருக்கும் குடையை மறக்காது
மறந்து விட்டுச் செல்ல வேண்டும்
மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம் /




அருமையான வரிகள்

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

முரளிகுமார் பத்மநாபன் said...

//வாசிக்கப்படாத
மடலொன்று படபடக்கிறது
பிரித்துப் பார்க்க
அவசியமெதுவுமில்லை
தெரிந்த செய்திதான் இது
மடங்கியிருக்கும் குடையை
மறக்காது மறந்து விட்டுச்
செல்ல வேண்டும்
மற்றதை நேரில்
பேசிக் கொள்ளலாம் //

அருமை, எனக்கு இந்த டச் ரொம்ப பிடிச்சிருக்கு

தமிழரசி said...

//அதனதன் நிமித்தம் எதுவெதுவோ
நடந்தபடிதான் இருக்கின்றன
மழையில்லாது நான் நின்றுவிடவில்லை
நானில்லாதும் மழை எங்கோ பெய்து கொண்டுதானிருக்கும்
நீர்வீழ்ச்சியில் விழுவது கூடத் தெரியாது விழும் தூவானமும்
புவியீர்ப்பு உணராத என்னிரு பாதங்களும் - இன்னும்
வெறுமனே நடந்து கொண்டிருக்கும் பிற பலவும் போல//


எதார்த்தம் கவிதையாய் வெளிப்பட்ட வார்த்தைகள் மிகச் சரியான தேர்வு..பிடிச்சிருக்கு ப்ரியா இந்த வரிகள் ரொம்ப ரொம்ப..

Muruganandan M.K. said...

"..மழையில்லாக் கார்த்திகை
இத்தனை வருடங்களில்
இந்தத் தடவைதானாம் .."

எனக்கும் அத்தகைய அனுபவம் கிட்டியது. அருமையான கவிதையால் மறக்க முடியாமல் செய்துவிட்டீர்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் கலகல்ப்ரியா,

முத்து முத்தான வார்த்தைகளின் குவியல் தங்கள் கவிமாலை. வாழ்த்துகள்.

ஒரு அன்பான வேண்டுகோள். நான் ஆசிரியராக இருக்கும் வல்லமை மின்னிதழுக்கு தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனுப்ப வேண்டிய முகவரி vallamaieditor@gmail.com

www.vallamai.com is our site.

அது சரி(18185106603874041862) said...

||இந்த மழையும் மருகி மருகி
எங்கெங்கோ கரைந்து கொண்டிருக்கிறது||

ம்ம்....நல்லாருக்கு..என்னவோ அடர்த்தியா பெய்ற மழைல தனியா நடந்து போற மாதிரி ஒரு உணர்வும் வருது...

அது சரி(18185106603874041862) said...

||இந்த மழையும் மருகி மருகி
எங்கெங்கோ கரைந்து கொண்டிருக்கிறது||

ம்ம்....நல்லாருக்கு..என்னவோ அடர்த்தியா பெய்ற மழைல தனியா நடந்து போற மாதிரி ஒரு உணர்வும் வருது...

கலகலப்ரியா said...

@முனைவர்.இரா.குணசீலன்

நன்றி குணசீலன்

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி பாலா சார்..

கலகலப்ரியா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றிங்க ராஜா..

கலகலப்ரியா said...

@முரளிகுமார் பத்மநாபன்

நன்றி முரளி... உங்க கவிதையும் ரொம்ப நல்லாருந்தது..

கலகலப்ரியா said...

@தமிழரசி

நன்றி தமிழரசி..

கலகலப்ரியா said...

@Muruganandan M.K.

நன்றி டாக்டர்.. :).. ஒரே மாதிரியான அனுபவங்கள் ஏற்படுவதும்... அதை அவரவரிலிருந்து வெளிப்படுத்துவதும்... பகிர்ந்து கொள்வதும்.. பரிமாறிக் கொள்வதும்... இதுவும் ஒரு அனுபவம்தான் இல்லையா..

கலகலப்ரியா said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி நித்திம்மா... அது என்ன நீட்டி முழக்கி கலகலப்ரியா... அப்புறம் ரொம்ப ஃபார்மல் மொழி.. சும்மா நேர்ல பாக்கறாப்லயே பேசுங்க.. =))..

படைப்புகள்... அனுப்ப முயற்சிக்கறேன்... பிரத்தியேகமா ஏதாவதுன்னா.. மெயில் அனுப்புங்க...

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

நன்றி அது சரி... ம்ம்...

Mahi_Granny said...

கவிதை ரசிக்க தெரிந்த ரகம் இல்லை நான் ஆனாலும்' தெரிந்த செய்தி ' கவிதையை அழகாக்கியது

கலகலப்ரியா said...

@Mahi_Granny

நன்றி மஹி க்ரான்னி.. :)