header photo

Monday, December 19, 2011

நிர்ப்”பந்த”மற்ற “நிலை”


குழம்பியிருந்த குட்டையொன்று
மெல்ல நிதானிக்கிறது 
ஒடிந்த இலையொன்று 
ஆடியாடி மெதுவே விழுகிறது
சரசரவென அதை முந்துகிறது
சருகிச் சுருண்டிருந்த ஒன்று 
அடுத்து விழப்போகும் கிளைக்காக
ஆரவாரமின்றித் தயராகிறது குளம் 
காலடியில் வருடிய நீர்க்கரம் பார்த்துச்
சலனமற்றுச் சிரிக்கிறது மரம் 

10 ஊக்கம்::

க ரா said...

ஜென் கவிதை :)))

கலகலப்ரியா said...

நன்றி க ரா:) யென் கவிதைனு படிச்சு பேஜாராயிட்டேன்.. :p

பிரபாகர் said...

நிறைய பொருள் பொதிந்த கவிதை... என்னன்னு கேட்டுடாதீங்க சகோ, ரொம்பவும் யோசிக்கனும். குட்டியாய், அழகாய், அருமையாய்...

பிரபாகர்...

ராம்ஜி_யாஹூ said...

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்

பிடித்திருக்கிறது

அசைந்து மிதந்துவரும் பூவை.

அது தங்களுக்கு என்று

நினைத்து நீந்துகிறார்கள்

அதன் திசையில்.

பூவோ நகர்கிறது

நீச்சல் தெரியாது

ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்

சிறு பெண் நோக்கி.

……………………………………………………………………..கல்யாண்ஜி

Share this:

வானம்பாடிகள் said...

ம்ம். நல்லாருக்கு.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஹலோ ப்ரியா, நல்ல கவிதை...

கலகலப்ரியா said...

@பிரபாகர்

நன்றிண்ணா.. :)).. கேக்கலை.. பயப்டாதீங்க..

கலகலப்ரியா said...

@ராம்ஜி_யாஹூ

நன்றி ராம்... ரொம்ப நல்லாருக்கு...

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி சார்

கலகலப்ரியா said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி நித்திம்மா