header photo
Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Friday, February 24, 2012

ச்ச்சும்மா... ரீஃப்ரெஷிங்கு...


குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...

இதில வேற ஊர்ல நாலு கழுதை வட்டை போட்டு... பின்னங்காலால உதைச்சுக்கிட்டே போகுது... இதுதான் வெளிநாட்டு யானை அப்டிங்கிறாங்க..  இப்போ லிவிங் டுகெதர்ன்னா என்னன்னு பாடம் எடுக்கணும்னா... நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க... 

எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்.. 

நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்...... உள்ளுக்குள்ள புழுங்கி வெந்து செத்து... அதச் சமாளிக்கிறதுக்கு மத்தவங்கள மட்டம் தட்டி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்... ஓ... அவனா... அந்தக் காலத்தில அவன் பாட்டன் என்ன பண்ணான் தெரியுமா...?!அவன் அப்பனோட மாமனோட மச்சினியோட தங்கச்சி பையன் இருக்கானே... அவன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு ஏதோ சொல்லிக்கிட்டே போவாங்க... இதெல்லாம் ஏன் சொல்றன்னு கேக்க நாதி இருக்காது... 

ஊர்ல ஒருத்தன் உழைச்சுச் சம்பாதிச்சு பங்களா.. கார்ன்னு செட்டில் ஆனான்னு வைங்க... அவனப் பார்க்கறப்போல்லாம்... இளக்காரமாப் பார்த்து... இவன் என்ன ஜாதி தெரியுமா... இவன் அப்பன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு... ஹூம்ன்னு வயித்தெரிச்சலத் தீர்த்துக்கும்.. 

இல்லையின்னா... ஹூம்.. அந்தக் காலத்தில என்னோட பாட்டன் முப்பாட்டன் எப்டி இருந்தான் தெரியுமா... அப்போ உன்னோட தாத்தன் எல்லாம் என்னோட தாத்தன் கிட்ட பிச்சை எடுத்துக்கிட்டிருந்தான்னு ஜம்பமாப் பீத்திக்கிட்டே பிச்சை எடுத்துக்கிட்டிருப்பாங்க.. 

அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது...

இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம்.. உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்... 

காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்...

கண்மணி அன்போடு காதலன் நான்னு... உருகி... உருக்கிட்டு... நான் வேற ஜாதியாம்... எனக்குப் புட்டிப்பால் கொடுத்த அம்மா இப்போதான் ஜாதிப்பால் கொடுத்தாங்க... நானு ஒன்னும் தெரியாத பாப்பா அப்டின்னு யாரும் சொல்லக் காணோம்.. 

ஆனாலும் நம்ம மக்கள் ஆக்ரோஷமாக் கேக்குறாங்க... அவங்க கலாச்சாரம் எல்லாம் நாம கத்துக்கிடணுமாவாம்...

(விதிவிலக்கும்... நல்லது கெட்டதும்... அவங்க கிட்டயும் இருக்கு... ஆனா அந்த 0.001% பிடிச்சு வச்சுக்கிட்டு உதாரணம் காட்டாதீங்கய்யா புண்ணியவான்ஸ்..)

இன்னொண்ணு சொல்றாய்ங்க வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... இத யாரோ ஒருத்தரு சொன்னா... மக்கள் என்னமா கை தட்டுறாங்க தெரியுமா... அமெரிக்காவில ஒரு வயசுக் குழந்தை கூட இங்கிலீசு பேசுதுப்பான்னு சொன்னாக் கை தட்டுற ரேஞ்சுக்கு... 

இங்க மனுஷன்... மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்துட்டு... முடியல... ரொம்ப ஜாஸ்தின்னா... ஓடிப் போய்... இப்டிக் கஷ்டமா இருக்குதுபா... என்ன பண்ண சொல்லுன்னு கேக்கறதுக்கும்... ஒரு குழந்தை இறந்து போச்சுன்னா... மனசு ஒடிஞ்சு செத்துப் போகாம போய்ச் சொல்லி அழுறதுக்கும்... வீட்டில பிக்கல் பிடுங்கல் ஜாஸ்தி ஆயிடிச்சின்னா அதப் பகிர்ந்துக்கிறதுக்கும் கூட... மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க.. நம்மாளுங்கதான் சைக்கியாரிஸ்ட்னு பேரு கேட்டாலே அலர்றாங்க... 

பைத்தியம்னா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு... சட்டையைக் கிழிச்சுக்கிட்டு இளிக்கறதயும்... அய்யோ ஆள விடுங்கடான்னு மத்த நார்மல்ன்னு சொல்லிக்கிட்டிருக்கிற லூசுங்க கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாய்ஞ்சுக்கிட்டு ஓடறதயுமே மனக்கண்ணில வச்சுக்கிட்டிருக்கிற... அறிவாளிங்களால அதுக்கு மேல என்ன பண்ண முடியும்.. 

அட மனநல மருத்துவமனை மட்டுமாங்க இருக்கு இங்க..?! எங்க போனாலும் கை கால் முடியாம... சக்கர நாற்காலில இருக்கிறவங்களுக்கு... பார்க்கிங்க்ல அவங்களுக்கு வசதியா பார்க்கிங்க் இருக்கு.... பஸ்ல அவங்க ஏறி இறங்க வசதியா படிக்கு மேல சறுக்குற வழி இருக்கு... அத பஸ்ஸ விட்டு இறங்கி வந்து இழுத்து விடுற ட்ரைவர்... மனுஷன் இருக்கான்... ஹாஸ்பிட்டல்ல இருந்து... ரெஸ்ட்டாரண்ட் வரைக்கும்... அவங்களுக்கு டாய்லெட் இருக்கு... முக்கியமான இடங்கள்ல எல்லாம்... அவங்க ஏறி இறங்க வசதியா நிறைய வசதி இருக்கு... 

ஏன் அதுக்கும் சொல்றதுதானே..?! அங்க ஊனமுற்றவர்களுக்கான கக்கூஸ் ஜாஸ்தியா இருக்குய்யா.... அங்க இருக்கிறவங்க எல்லாம் ஊனமுற்றவங்கன்னு..?! 

திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க... 

இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!... 


Sunday, November 21, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ஆறு...

(பேக் டு த காஷுவல் மூட்... ம்ம்...)

நம்மாளுங்க புத்திசாலித்தனம் யாருக்கும் வராதுங்க... செண்டிமெண்ட சும்மா சக்கையாப் புழிஞ்சே காரியத்த சாதிப்பாங்க... 


ஒரு படம் காட்டணும்னாக்க... கரீக்ட்டா.. காலேஜ் டைம்ல ஆரம்பிச்சு... கல்யாண மேடைல மலர்கள் புடைசூழ ஏறி அமர்ந்து... தாலிய அப்டியே தூக்கி... டமடமடமன்னு மேளத்தக் கொட்டோ கொட்டுன்னு உச்சஸ்தாயில கொட்டி... சுபம் போட்டுடுவாங்க... 

மனுஷன் எப்டி எல்லாம் வாழணும்னுட்டு... எறும்புல இருந்து கழுதை வரைக்கும் ஏதோ ஒரு குணாதிசயத்த பச்சக்குன்னு புடிச்சு மேற்கோள் காட்டுவாங்க... சபைல கைதட்டல் காதைப் பொளக்கும்... 

கற்புநெறி பத்திப் பேசுறப்போ... மாடப்புறாவையும்... அன்றில் பறவையையும் உதாரணம் காட்டுவாங்க.... ஜோடிப் பறவை போயிட்டா... பச்சத் தண்ணி கூட முழுங்காம செத்துப் போகுமாம் அன்றில்... மாடப்புறா கல்லை முழுங்கிட்டுப் போய் மண்டையப் போடுமாம்.. (வழி காட்டல்... பண்பாடூஸ்..)

ஹூம்... நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே செத்துப் போயிட்டா... போர்க் கடவுள்கள் எல்லாம் பூமில பாரம் ஏறுதேப்பான்னு கவலைப்படாம... ராக்கெட்டயும்.. அணுகுண்டையும் கண்டுபுடிக்க வழியில்லாம செய்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்...  புள்ள குட்டிய யாரு பார்க்கறதுன்னு எல்லாம் கவலைப்படாம... அம்மா போயிட்டா அப்பாவும்... அப்பா போயிட்டா அம்மாவும்ன்னு மாத்தி மாத்திக் கல்ல முழுங்கிக்கலாம்.. 

எந்தப் பறவையும்... குஞ்சு பொரிச்சு... நம்மாளுங்க மாதிரியே பொத்திப் பொத்தி சாப்பாடு ஊட்டி வளர்க்கும்... சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... 

நம்மாளுங்க.. அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க... அங்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு பயம்... அங்க ஆரம்பிக்கும் அடக்குமுறை... அங்க குழந்தையும் கத்துக்கும்... முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்.. 

குழந்தைங்க ஆரம்பத்ல.. பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்க அழ ஆரம்பிச்சு... அப்புறம்.. அதுக்கு ஏதாவது தேவைன்னா அழ ஆரம்பிக்கும்...  உடனயே தூக்கி வச்சுக்கிட்டு ஓஓஓன்னு சீராட்டுவாங்க... அட விடுங்கம்மான்னா கொஞ்ச நேரம் அழட்டும்னா.. மூச்சடைச்சு செத்துப் போயிடும்பாங்க... அழுறப்போ எல்லாம் எதயாவது கைல திணிப்பாங்க... இது வேணுமாடா ராஜா... இங்க பாரு.. கீ... அச்சச்சோ... அது வேணாமா... இங்க பாரு.. இங்க பாருன்னு.. கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து நீட்டுவாங்க... 

எம் புள்ளைக்கு கீரைன்னா கண்ல காட்டப்டாது... நம்ம வீட்ல கீரையே சமைக்கறதில்லைம்பாங்க... அது என்ன வேணும்னு சொல்லுதோ அத செய்து கொடுப்பாங்க.. 

அவங்க வளர்ற வரைக்கும்.. புள்ளதான் ராஜா... அப்புறம் புள்ளய அடிமையாக்கிட்டு.. அப்பவும் ராஜான்னு கொஞ்சிக்கிட்டிருப்பாங்க.. புள்ளை சட்டை.. செருப்பு எல்லாம் தானாவே மாட்டச் சொல்லித் தர்றதில்ல.. அவங்களாவே மாட்டி விடுவாங்க... அப்போதானே அப்பாலிக்க செண்டிமெண்ட் டயலாக் விடலாம்... உன்னை நான் எப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் வளர்த்தேன்னு.. 

கலாச்சாரம் சீரழிஞ்சு... கால்வாயில வழிஞ்சு வழிஞ்சு கரைய உடைச்சுக்கிட்டு.. சந்து பொந்தெல்லாம் ஓடுதுப்பான்னு நம்மாளுங்க மூக்கப் பொத்திக்கிற நாட்டில.. குழந்தைங்கள எப்டின்னு வளர்க்கிறாங்கன்னு நானும் மூக்கில கைய வச்சுக்கிட்டுதான் பார்த்தேன்... ஆனா நாத்தம் தாங்காம இல்ல... ஆச்சரியமா...

அவங்க குழந்தைய குழந்தையா வளர்ப்பாங்க... நாம உன்னைப் பெத்தவங்க.. உனக்கு இப்போ நாமதான் ராஜா அண்ட் ராணி... அப்டின்னு வளர்த்து... அந்தப் புள்ள வளர்ந்ததும்... ஓக்கே... இனிமே நீ பார்த்துக்கோ ராஜான்னு விட்டுடுவாங்க.. .

அட என்னங்க... ஒரு புள்ள அழுறதுக்கு அதுக்கு உரிமை இல்லையா... அழ விடுவாங்க... விழுந்து கெடந்து அடம் புடிச்சா... கண்டுக்கவே மாட்டாங்க... புள்ள ஆட்டோமேட்டிக்கா பாடம் கத்துக்கும்... 

சாப்பாடு வீட்டில கொடுக்கிற சாப்பாடுதான்... விருப்பம்னா சாப்டலாம்... இல்லைன்னா விடலாம்.. இஷ்டமில்லைன்னா புள்ள ரெண்டு நாள் சாப்டாம இருக்கும்... இருக்கலாம்.. ஒண்ணும் ஆயிடாது.. மூணாவது நாள் வேற வழியில்லாம சாப்டும்.. நம்மாளுங்க அதையும் திணிப்பாங்க... செல்லம்ல... புஜ்ஜில்லன்னு... அது வாந்தி எடுக்க எடுக்கத் திணிப்பாங்க... இல்லைனா அடிச்சுத் திணிப்பாங்க.. (அத மட்டுமா..ஹூம்..)

அவங்க அழுதா கண்டதயும் எடுத்து நீட்டறதில்ல... கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க... 

மத்தப் பசங்க கூடப் ப்ரச்சனைன்னா... அம்மா வா.. அப்பா வா... மாமா வா... மச்சான் வான்னு ஊரைக் கூட்டக் கத்துக் கொடுக்கறதில்ல... ப்ரச்சனைன்னா அந்தப் புள்ளையே பார்த்துக்கணும்... அடிச்சா அடிக்கறதில்ல... ஆனா ஸ்டாப் இட்... அப்டின்னு உறுதியா சொல்லக் கத்துக் கொடுப்பாங்க... யார்ட்டயும் பிரச்சனையே பண்ணக் கூடாதுப்பா... உலகம் அன்பு மயமானது.. அன்பால் எதயும் வெல்லலாம்... அடிச்சா கேன மாதிரி மத்தக் கன்னத்தையும் காண்பின்னு சொல்லிக் கொடுக்கறதில்ல... பிரச்சன வரத்தான் செய்யும்.. அத எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக் கொடுப்பாங்க.. 

ஏய் மொக்கைன்னு யாராவது கூப்ட்டா... யெஸ் ஐயாம் த க்ரேட்டஸ்ட் மொக்கைன்னு நக்கலா சொல்லிட்டு நகரக் கத்துக் கொடுப்பாங்க... இல்லாம சீண்டினா... ஸ்டாப் இட்... அங்கேயே நில்... அதுக்கு மேல வராத... தேர் இஸ் அ லிமிட்..  என்னை எனக்குத் தெரியும்... என்னைப் பத்தி நீ சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்லைன்னு சொல்லக் கத்துக் கொடுப்பாங்க.. (:o))... 

குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ... அந்தக் குழந்தை ஆரம்ப பள்ளிக்குப் போறப்பவே வாழ்க்கையோட அடிப்படையக் கத்துக்கும்... அங்க போயும் கத்துக்கும்.. க்யூல நிக்கிறத கத்துக்கும்.. க்யூல நிக்கறப்போ ஒரு நாள் நான் முன்னாடி நிக்கலாம்... மறு நாள் நான் பின்னாடி நின்னு மத்தவன முன்னாடி போக வழி செய்யலாம்.. அதயும் கத்துக்கும்.. 

ஒரு புள்ளைக்கு இன்னொரு புள்ள ஹெல்ப் பண்ணக் கத்துக் கொடுப்பாங்க.. ஆனா ரொம்ப அவசியம்னாதான்.. கைல கத்தரிக்கோல வச்சுக்கிட்டு பேப்பர நேரா எப்டி வெட்டறதுன்னு தெரியலைன்னா... மத்தவங்க ஹெல்ப் பண்ணக் கூடாது... அந்தக் குழந்தைய கத்துக்க விடனும்... சுயமா.......

படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... என்னடா எந்த நேரமும் விளையாட்டு.. ஃப்ரண்ட்ஸு... அதுவும் கண்டகண்ட ஃப்ரண்ட்ஸுன்னு தலைல அடிச்சுக்கிட்டு அலர்றதில்லை.. 

படிம்மா.. படிப்பா.. உன்னால முடியும்.. உன்னால எவ்ளோ முடியுதோ.. மாக்ஸிமம் ட்ரை பண்ணு.. போதும்.. அதுக்கு மேல வேணாம்... வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..! விளையாட்டு ஒன்ன தேர்ந்து எடுத்துக்கோ... அது முக்கியம்... ஃப்ரண்ட்ஸ் யார் யாரெல்லாம் இருக்காங்க.. என்னது இல்லையா... ஏன் இல்ல... என்ன ப்ரச்சனன்னு உக்காந்து ஃப்ரண்ட்ஸ் கிடைக்க எந்த ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பலாம்னு யோசிப்பாங்க... 

குழந்தை ஒரு தப்பு செய்துட்டா... போச்சு... போச்சு... நான் செத்துப் போறேன்... உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... அடிச்சே சாவடிச்சிடுவேன்... குடும்பத்தோட செத்துடுவோம்னு சொல்லிச் சொல்லி.. தன் மார்ல தாம் தீம்னு குத்தி... குழந்தைய குற்ற உணர்வு பிடுங்கித் திங்கச் செய்யறதில்லை... குற்றவாளிக் கூண்டில நிக்க வச்சுக் கடிச்சுக் குதர்றதில்லை... (அது வயசுக்கு வந்து தன்னோட வாழ்க்கையத் தேடிக்கிறப்பவும் செய்யறதில்ல..).. 

நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு.. 

பரீட்சைல ஃபெயில் ஆயிட்டோம்ன்னு தற்கொலை பண்ணிக்கிற ரேஞ்சுக்கு ஒரு பையனோ... பொண்ணோ போறாங்கன்னா.. அது நம்ம கலாச்சாரத்திலதாங்க நடக்கும்... அதே குற்ற உணர்வுதான்... அய்யயோ... செய்யக் கூடாத தப்பு பண்ணிட்டோமே... இனிமே அம்மா அப்பா மூஞ்சில எப்டி முழிப்போம்... நம்ம நாசமாப் போன வீதில எப்டி மூஞ்சியக் காட்டுவோம்னு... 

இப்டி ஒரு மனநிலைல ஒரு புள்ளைய வளர்த்துட்டு... இப்டி ஒரு மனோபாவத்துக்கு அந்தப் புள்ளையத் தள்ளிட்டு... நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க... நம்ம புள்ளைங்க புனிதமானவங்க (சில பேரு.. corrupted mind ... மாசு மடிஞ்ச மனசுள்ளவங்களுக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க..)ன்னும் பெருமையா சொல்லிக்கிறாங்க... 

ஸோ... அந்தப் புள்ள காதலிச்சா என்னாகும்... வேற வழியில்ல ஆள விடுங்கப்பான்னு ஓடச் செய்யும்.. இல்லைன்னா.. அம்மா அப்பா சவத்துக்கு மேல எப்டி வாழ்றதுன்னு... உரோமபுரி அடிமைகளாயிடுவாங்க.. அதாவது உயிர்.. உணர்வு எல்லாம் இருக்கிற மனுஷங்களா இருக்காம... ஒரு பொருளா... கழுத்தில இவள் இவனின் அடிமை... அப்டின்னு தகடு மாட்ட விட்டு வலம் வர வைப்பாங்க... அது அந்தப் புள்ள நாண்டுக்கிட்டுச் செத்துப்போனா... மானம் காப்பாத்தியாச்சுன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே திரும்ப மார்ல அடிச்சுக்கிட்டு அழுது தீர்ப்பாங்க... சமூகம்... பாவம் அவங்க தலையெழுத்துன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரித் தலைல அடிச்சுக்கிட்டு போகும்... 

அதே மாதிரி... அது பையன்னா... பொண்ணைக் காதலிச்சிட்டோம்... கர்ப்பமாயிட்டா... மத்தவங்க மூஞ்சில முழிக்க முடியாதுன்னு ஓடத்தான் முடியும்.. வேற வழி... சொல்லிப் புரிய வைக்கற மாதிரியாய்யா வளர்ந்திருக்கோம்.. கலாச்சாரத்த இம்பூட்டு மொத்தக் கயிறாப் போட்டு இறுக்கக் கட்டியில்ல காப்பாத்துறோம்... மொன்னையாவே இருக்கட்டும்ன்னு... 
கலாச்சாரத்த அவுத்து விட்டிருக்கிறதா நம்மாளுங்க சொல்லிக்கிட்டிருக்கிற ஊர்ல... ஒருத்தன் ஒருத்தியோட சேர்ந்துட்டு.. புள்ள கிடைச்சதும் விட்டுட்டு கம்பிய நீட்ட முடியாது... 

அதே மாதிரி கல்யாணம் கட்டிட்டு... அப்புறம் சரியா வரலைன்னா பிரிஞ்சுட்டு... கட்டினவன் கிட்ட இருந்து ஒண்ணும் வேணாம்ன்னு ரோஷமா வேணா இருந்துக்கிடலாம்... ஆனா எம்புள்ளைக்கும் எதுவும் வேணாம்.. புள்ள மூஞ்சில முழிக்கப்டாதுன்னு எல்லாம்... வீட்டுக்கார அய்யாக்கு தண்டனைய கொடுக்கிற மாதிரிப் புள்ளைங்கள தண்டிச்சிட முடியாது...   Sole legal custody... Sole physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. அப்டின்னு ஒன்னு இருக்கு... (உடன எல்லாரும் புள்ளைய பெத்து அவங்க காலடில கொண்டு போய்ப் போட்டு முக்காடு போட்டுக்கிட்டுப் போற மாதிரிக் கற்பனை பண்ணிக்க வேணாம்..).. 

அவங்க அவங்களுக்கு... அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி... ஆலோசனை கொடுக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு மையம் இருக்கு... சட்டமும் சரி... மையமும் சரி..  தனி ஒரு மனிதனை... அவனோட அபிலாஷைகளை... அவமதிச்சிடக் கூடாது... அப்டின்னு ரொம்ப மரியாதை கொடுத்து.. அவனுக்கு எப்டி எப்டி எல்லாம் வழி காட்டலாம்ன்னு உருவாக்கி வச்சதுதான்...  

நம்மாளுங்க தூக்கில தொங்குவோம்ன்னு மிரட்றாப்ல... போடி போடி... மூஞ்சிலயே முழிக்காத... என்னளவில நீ செத்துப் போயிட்டா... தனியா நின்னு சாவுடின்னு... பண்பாட்டோடயும்.. நல்ல பண்போடயும் வாழ்த்தி வழியனுப்புவாங்க... அந்தப் பொண்ணும் ஏதாவதுன்னா... எங்க போறதுன்னு தெரியாம நட்ட நடு வீதில நின்னு... திக்குத் தெரியாத காட்டில்ன்னு செண்டியா பாட்டுப் பாட வேண்டியதுதான்... அப்புறம் என்ன... நான் சொன்னேன்ல... கேட்டியா.. கேட்டியா... இப்போ பார்த்தியா பார்த்தியா.. (வின் பண்ணிட்டாய்ங்களாம்..) அப்டின்னு குதிப்பாங்க... 

இங்க... சட்டப்படி கல்யாணமான... "ஆகாத"... அம்மா.. அப்பா.. யாரும் அப்டி தொரத்தி விட மாட்டாங்க.. (புள்ளைங்கள துரத்தி தண்ணி தெளிச்சு விடுறதெல்லாம் ஒரு கலாச்சாரமான்னு யாரோ கேட்ட ஞாபகம்..).. ஒரு வேளை பெத்தவங்க உதவ முடியலன்னா... நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு... 

நம்மாளுங்க இங்க வந்து.. ஒரு புள்ளய... அது கூடாது.. இது கூடாது... சாவோம்.. குடும்பத்தோட கொளுத்திட்டு நானும் சாவேன்.. இத்யாதி இத்யாதின்னு எல்லாம் மிரட்டி வச்சும்... அந்தப் புள்ள மூச்சடக்கி சாவற கட்டத்தில வெளில வந்திச்சின்னா... அதைக் கை நீட்டி அழைச்சு வழி காட்ட ஆள் இருக்காங்க... அதுக்கும் சொல்லிக்குவாங்க நம்மாளுங்க பெருமையா... என்ன ........ரு... என் புள்ளய நான் அடிக்கறேன்... என் புள்ளைய நான் கொல்றேன்.. (ராஜபக்சே ஃபார்முலா... நம் நாட்டு மக்களை நான் கொல்றேன் உனக்கென்னடா போச்சுன்னு..).. நீ யாருய்யா காப்பாத்த... நம்மூர்ல இப்டி எல்லாம் வழி காட்ட எந்த நா(தி)யும் இருக்காது... வேற வழி இல்ல புள்ள நம்ம கிட்டதான் வந்தாவணும்... இங்க இப்டிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிறீங்களேடான்னு.... பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க... 

(மீதி அப்பாலிக்கா..)

Friday, November 19, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் அஞ்சு...

பூச்செடி ஒன்றின் தண்டின் வளர்ச்சியில் ஆங்காங்கே தோன்றும் முட்கள் போன்று..  எண்ண ஓட்டத்தில் முட்டி மோதும் சொற்களை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை... தண்டின் முள்ளைத் தோன்றத் தோன்றச் சிராய்த்துக் கொண்டிருந்தால்... அந்தச் செடியின் சுயம் என்னவாகும்..?!... பூவின் ஆதாரம் என்னவாகும்..?! 

தளுக்கும்.. பாசாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை...  அவசியப்படவுமில்லை... 

என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... 

___________________________

நான் இங்கு பேசிக் கொண்டிருப்பது குறிப்பிட்ட ஒரு விடயம் மட்டுமல்ல... பொதுவான மனித உணர்வுகள் சம்மந்தப் பட்டது.... சுற்றிச் சுற்றி வரும் விடயங்களைப் பார்த்துத் துணுக்குறாது... கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்க முடிந்தால்... அதுதான் மனித இனத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம்.. 

பேச ஆரம்பித்த பின்... இதைப் பேசலாமா... இதை விடலாமா என்று யோசிக்க முடியாது... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.... 

சில விஷயங்கள் பேசினால்... திருமணம்... சேர்ந்து வாழ்தல் எல்லாம் மிக மிக அற்பமாக... மிக மிகச் சாதாராணமான விடயமாகத் தோன்றலாம்... 

இல்லை... இல்லை... இது தப்பு... இது தப்பு... இது தப்பு...  நாங்கள் யோசிக்கவே மாட்டோம்.. கண்ணைத் திறக்க மாட்டோம்... காதைத் திறக்க மாட்டோம்... இப்படி ஒரு சொல்லை உச்சரிப்பதே பாவம்... வைகுண்டம் தூரம்.. கைலாசம் நாசம்..  என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள்... தயவு செய்து போய்... உங்கள் வலைமனையிலோ... அல்லது சுற்றாடலிலோ... உங்கள் சேவையைத் தொடரவும்... 

ஆமாம்... இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்னு தோன்றினா... ஆரோக்கியமா பேச முடியும்னா... அவங்க இங்க பேசுங்க...  
_____________________

சிலபல மனிதர்களின் மனப்போக்கை நினைத்தால்... கஞ்சி தண்ணியை வாயில் வைக்க முடியவில்லை... நம் கலாச்சாரம்.. நம் பண்பாடு... நல்ல குடும்பத்தில பிறந்தேன்... நல்ல அம்மா அப்பாவிடம் வளர்ந்தேன் என்றெல்லாம் ஏன் பீற்றிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை... அப்படிச் சொல்லிக் கொண்டே... அவர்களின் மனம் வெளிப்படுத்தும் வக்கிரம்... வார்த்தைகளில் வடிக்கத் தகுந்ததன்று... இதொன்றும் யாருக்கும் பெருமையான விடயமென்று எனக்குத் தோன்றவில்லை... 

தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.. என்ற ஒரு விடயத்தைக் கூறிச் சவர்க்காரம் விற்பதற்கு..  சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... தேகம் பளபளப்படையும்... ஆயுள் நீடிக்கும்... ஐஸ்வர்யம் கூடுமென்றெல்லாம் போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?! 

விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... அல்லது அவளிடம் படுத்து எழும்புபவன்... ஆண் ஆணுடனும்.. பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழ்வதை ஆதரித்தால்... அந்தந்தப் பாலுக்கு ஏற்றவாறு நீயும் அவ்வாறே... திருநங்கைகளுக்கு ஆதரவெனில் நீயும் திருநங்கை... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)

பதின்ம வயதில் நான் படித்த சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி (கற்பனைக் கதையொன்றுமல்ல..) ஏற்படுத்திய வெட்டுக்காயம்... மிக ஆழமாக.. இன்னும் ரணமாக அப்படியே இருக்கிறது... சுயம்புவின் சுயம் வெளிப்பட முடியாது... சுற்றிச் சுற்றியிறுக்கும் சமூகம்... கட்டுப்பாடு..  சுயம்புவை உணர்ந்தும்.. ஊர் உலகத்திற்கு மறைத்து... விழுங்கி விழுங்கி... சுயம்புவான "அவளை"... சுயம்புவிலுள்ள கொஞ்சமே கொஞ்சமான "அவனுக்குள்" உயிருடன் சமாதி கட்டிப் புதைக்கும் பெற்றவள்... பொறுத்துப் பொறுத்து... முடியாது... முடியாதென்று அலறியபடி சுயத்தைத் தேடி... ஓடி... திருநங்கைகளின் கூட்டத்தில் சேர்ந்து... தானாகி... மேகலாவாகிப் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் வரை... அதன் பின்னர் கூட எத்தனை எத்தனையோ சித்திரவதைகள் காத்திருப்பினும்... அதற்கு முன்னர் அவள்... அந்தத் திருநங்கை அனுபவிக்கும் வேதனையை... கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் புண்ணியவான்கள் ஒரு பாதி நாள் அனுபவிக்க முடியுமா... உமக்கு மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அருகதை இருக்கிறதா..?! 

காதல் என்றால்... கண்ணே மணியே... கண்ணாளனே... என்னை விட்டுப் போய் விட்டாய்... இருக்க முடியவில்லை... படுக்க முடியவில்லையென்று அலறுவதல்ல... அந்த அலறலில் எங்கோ ஒரு இடுக்கில் சிறு துளி காதல் இருக்கலாம்... 

அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...  மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்.. 

தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து... 

Annie Proulx இன் Brokeback Mountain.. (இதுவும் கற்பனையல்ல..) படித்தால்.. இரு ஆண்களுக்கிடையில் தோன்றும் காதலும்... சமூகத்தில் அதை வெளிப்படுத்த முடியாத அவலமும்... அவர்களின் முடிவும்... அய்யோ என்று அலறச் செய்யும்... அவர்களின் இயலாமை எம்மையும் தொற்றிக் கொண்டு... உருகி உருகி அழ வைக்கும்... 

நல்ல புள்ளைகளுக்கு அது மிக மிக அருவெறுப்பாகத் தோன்றலாம்... அதே நல்ல புள்ளைகள்... ஏதோ ஒரு படத்தில்.. யாராவது முன்னணித் தமிழ்க் கதாநாயகன்.. நாயகியிடம் உன்னிலுள்ள ஆணைக் கொஞ்சம்... என்னிலுள்ள பெண்ணைக் கொஞ்சம்.. என்று பாடினால்... அதைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாது... விசில் அடித்தபடி... கலாச்சாரக் காவலர்களுக்குப் பயந்து தலையைக் கழுத்தில் புதைத்தபடி செல்லும் பெண்ணைச் சுற்றி வரலாம்... 

அசோகர் மரம் நட்டார் அறிந்தோம்... கண்ணப்பநாயனார் மாமிசம் படைத்தார் அறிகிறோம்... புத்தர் ஞானம் பெற்றார் அறிவோம்..  X குரோமோசோம்... Y குரோமோசோம்... ஹரி ஓம்..  என்று எல்லாவற்றையும் கலந்து மனப்பாடம் செய்வார்கள்... ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது... அவர்கள் மனங்களின் கஷ்டம் தெரியாது... அதற்கு அவர்கள் அந்த நிலையில் இருந்தால்த்தான் புரிந்து கொள்வார்களாம்... 

(இதற்கும் யாராவது விழுந்தடிச்சு ஓடி வரலாம்... அப்போ இது சரிங்கிறியா... அப்போ இது தப்புங்கிறியா... ஒரு ஹோமோ... இன்னொரு பையனை ரேப் செய்தான்... அவன் தூக்கு மாட்டிச் செத்தான்... தெரியுமா உனக்கு... அப்டிம்பாங்க...)

அய்யா... அம்மா.. நீங்க புத்திசாலிதான்...  நீங்க சொல்றது சரிதான்..  ஒரு அல்சேஷன் அல்சேஷனைக் கடித்தாலும்... அல்சேஷன்... பொமரேனியனைக் கடித்தாலும்... பொமரேனியன் பூனையைக் கடித்தாலும்... அது வன்முறைதான்... நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்... 

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை... 

ஆனால்.. அவங்களுக்கு அப்படி வாழத்தான் விருப்பம்... மேற் கூறிய ஏதோ ஒரு முறையில்.. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழப் பிடித்திருக்கிறதென்று.. பரஸ்பரம் யாரோ ஒரு துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்... அல்லது தனியே இருக்கிறார்கள்... 

அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ... 

தெரியவில்லையென்றால்.. நானே சொல்கிறேனே... அதுவும்... வன்முறைதான்... வன்புணர்வுக்காகக் கையையும் காலையும் கட்டிப் போடும் மூர்க்கத்தனம்தான்.... உயிருடன் தொங்க விட்டு... சுற்றவரத் தீயிட்டுக் கூடிக் கும்மாளமிட்டுப்.. பறை முழங்கி... மனித மாமிசம் உண்ணும்... காட்டு மிறாண்டித்தனம்தான்..... 

இதை உண்மையில்லையென்று சொல்பவன்... அதே மனித மாமிசத் தசையை ஏதோ ஒரு விதத்தில் பதப்படுத்தி உண்ணும்.. மிக மிக நாகரீகமானவன்தான்.. 

வளர்ப்பு முறை சரியில்லையென்று அலறும் புண்ணியாத்மாக்களுக்கு... வளர்ப்பு என்பது... முடிகிறதோ இல்லையோ... இவளைப் புணர்... இவனைச் சேர்... அழுகிச் சோர்.. செத்துப் போ... என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல... 

(இதைச் சொல்லும்போது... நான் இங்கு பாடம் நடத்துவதாகச் சில அறிவுஜீவிகள் கெக்கலித்தது கவனம் வருகிறது... எனக்குத் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... அதே எண்ண ஓட்டத்தில் சிந்திக்க முடிபவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்... மற்றவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலையல்ல..) 

அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)

அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்... 

அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்களெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது.. 

தான் திருடி பிறரை நம்பாள்... என்பது போல்... எதைப் பார்த்தாலும் பயம்.. யாரைப் பார்த்தாலும் பயம்...  (அட நான் பாம்பு... பல்லி பத்திச் சொல்லலைங்க...).. நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்... பக்கத்து வீட்டில் சமைத்து வந்தால் அதில் செய்வினை இருக்கும் என்பது போன்ற பயம்... நான் இதை ஆதரித்தால்.. என்னுடைய மகனும்... அதயே செய்வான்... என்னுடைய மகளும் அதயே செய்வாள்... என்பது போன்ற... தேவையே இல்லாத பயம்... 

ஏன் என்றால்... மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான்.. எம்முடைய தேவையை நாம் முடிவு செய்கிறோம்.. அப்படிப் பழகி வைத்திருக்கிறோம்... பழக்கி வைத்திருக்கிறோம்... தன்னைத் தானே பார்த்து... எனக்கு இது தேவையா... ஏற்புடையதா... இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. 

மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்... அந்த சமூகம் என்ன சாதித்து விட முடியும்... உனக்கு என்ன முடிகிறது என்று பார்... நீ எதைச் செய்தால் அது பூரணமாக மிளிரும் என்று பார் என்று யாரும் கற்றுக் கொடுப்பதாகக் காணோம்... 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறோம்... அவரவர் வாழ்க்கை உட்பட... வாழ்க்கை என்பது வாழப்படாமலே புதைக்கப்படுகிறது... அப்படி என்கிற உண்மையையும் புதைத்துக்கொண்டு... போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வதில்த்தான் எத்தனை எத்தனை (தற்)பெருமைகள்.... 

(இதுக்கு மேலயும் சொல்லுவேன்...)

Wednesday, November 17, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் நாலு...

நீரற்றுப் பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலப் பரப்பின் மேற்குப் பகுதியில் சிற்றாறொன்று ஓடுகிறது, சுற்றி ஈரப்பசையிருக்கிறது என்றபடி கையில் சிறு மண்வெட்டியுடனும், வெண் தாமரைச் செடியுடனும் நகர்ந்து கொண்டிருக்கும் என்னிடம், எங்கோ புதைந்திருக்கும் சேறு பற்றியும், ஆங்காங்கே அருகில் தேங்கியிருக்கும் குட்டை நீர் பற்றியும், அதில் நெளியும் புழுக்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை நிராகரித்து மேற்குப் பகுதி நோக்கி முன்னேறுவது தவிர்க்க முடியாதது. என் கையில் மண்வெட்டி தூக்குவதற்குண்டான பலமிருக்கும் மணித்துளிகளும், நீரற்றுத் துவண்டிருக்கும் தாமரையின் உயிராதாரமுமே பிரதானம். மற்றவை வீண்... அந்த நிராகரிப்பு இங்கு அவசியம்... அதைத் தாங்கவியலாதவர்.. தூற்றும் மண்... அடுத்த சூறாவளிக்கு அவர் கண்களிலேயே விழும் என்பது... இயற்கையின் விதி.. மற்றும்.. நியதி!

நிற்க.


மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது... அவர்களை நிராகரிப்பது மட்டுமல்லாது நிந்திக்கவும் செய்பவர்களை... என் காற்தூசிக்கும் மதியேன்...!!!! ... அது ஒட்டு மொத்த உலகமாக இருந்தால்... எனக்கு இந்த உலகமே தூசி..!!!!!! யாதும் ஊரே... யாவரும் கேளீர்..!!!!

________________________________________________________________

நல்ல பிள்ளைங்களுக்கு... என்னென்ன வரைவிலக்கணங்கள் கொடுத்து வைத்திருக்கிறார்களோ.. மெச்சுவதற்கு எத்தனை வார்த்தைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ, அதே போல் கெட்ட பிள்ளைகளுக்கும் வைத்திருக்கிறார்கள்.

நான் பெண்ணீயவாதியல்ல... பாலைப் பொதுவில் வைக்கலாம்.... ஆனால் விபச்சாரி என்ற பதத்திலிருந்து... பற்பல சொற்கள் பெண்களைக் குறி வைத்தே பிறந்திருப்பதனால்...

அடங்காப்பிடாரி, தேவடியா, வேசி, திமிர் பிடிச்சவ, மானங்கெட்டவ, கூறு கெட்டவ, விவஸ்த கெட்டவ, ஓடுகாலி, அறுதலி, வாழாவெட்டி (இதுவும் கேவலமான வார்த்தைதான்)... இத்யாதி... இத்யாதி...

பசங்கள நிமிர்ந்தே பார்க்காத பொண்ணு... பசங்களுக்கு திமிர் புடிச்சவ... வீட்ல உள்ளவங்களுக்கு... தங்கம்... & VICE VERSA. மனதுக்குப் பிடித்தவனோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது (அதுக்கு ஜாதி, ஜாதகம், குலம், கோத்திரம், புண்ணாக்கு, புடலங்கா ... எது வேணா காரணமா இருக்கலாம்..) மனதுக்குப் பிடிக்காத ஒரு திருமண பந்தத்தில், கட்டிலில் கல்லாகச் சமையச் செய்து, கூடி எழுபவன் உத்தம புத்திரன்... அந்த அடிமைப் பெண் உத்தமி... உத்தமம் என்பதற்கு நாம் சொல்லி வைத்திருக்கும் விளக்கம் இதுதான்.

அதே பெண் பிடித்தவனுடன் சென்று விட்டால் ஓடுகாலி. அவனுடன் சென்று விட்டு அவன் நண்பனிடம் சிரித்துப் பேசினால் தேவடியா... சிரித்துப் பேசவில்லையெனில் திமிர் பிடிச்சவ... நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.. மற்றவன் சொல்வதற்குத் தலை வணங்கி... அதன்படி நடக்காவிட்டால்.. உங்களுக்கு இதில் ஏதோ ஒரு பட்டம் கண்டிப்பாக உண்டு. ஆமாம்... ஆமாம்... சரி... சரி... என்று கூறிக் கொண்டிருப்பதே... கூறுகெட்ட... இல்ல கூறுகெடாத தனம். உடன்பாடில்லையெனில்... வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்... வாயைத் திறக்கப்டாது.



வீட்டில் கட்டிய மனைவியை விட்டு ஒரு ஆண் வேறொரு பெண்ணை நாடுவானானால், அவன் வீட்டிலிருக்கும் பெண்ணை விட்டுப் போன பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் சுத்துமென்று... கட்டியவளையும் விட முடியாது.. இரண்டு பேரையும் வைத்திருப்பான். இதில் இரண்டாவதாக இருப்பவள்... வைப்பாட்டி... அடடா.. என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்.... அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகம். முதல் மனைவிக்கு இவந்தான்... வேற வழியே இல்லையென்று ஆக்கி விடுவார்கள்... அந்தப் பெண்ணுக்கும் நரகம்... நடுவில் மாட்டிக் கொண்டிருப்பவனுக்கும் நரகம்.

ஒரு வேளை அந்தப் பெண்ணை விட்டு இவன் போனால்... அந்தப் பெண் நடுத்தெருவில்... அந்தோ பரிதாபம்.. ச்சு ச்சு... அவ தலையெழுத்து அப்டி... என்று உச்சு கொட்டிக் கொள்வார்கள்.. நம் இரக்க சுபாவம் நிறைந்த மாந்தர். பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..?! ... ஏனம்மா... உனக்கு கையும் காலும் இருக்கு... சொந்தக் கால்ல நின்னு பொழைக்க கைல வலு இருக்கு... உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுக்கிற உரிமை உனக்கு இருக்கு.... அப்டின்னு சொல்ல யாராவது இருக்காங்களா..?! இல்ல... அந்தப் பெண்ணை அவளுக்காகவே விரும்பிச் சேர்ந்து வாழ யாராவது வருவாங்களா.... வந்தாலும் விட்டுடுவோமா...?! ஊஹூம்..

தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி... (கமலின் மகாநதியும்... இன்னும் ஒன்றிரண்டும் விதிவிலக்கு..).. அந்தப் பெண்ணின் கணவன்... முதலிரவு நடக்க ஒரு வினாடி இருக்கும் பொழுதே... பாம்பு கடித்தோ... ரெயில் ஆக்சிடெண்டிலயோ.. (ஹூம்... ரிதம்... என்ன ஒரு அருமையான கருத்த சொல்றாங்க... ஆனா..).. இல்ல ஹார்ட் அட்டாக் வந்தோ மண்டையைப் போட்டிருக்க வேண்டும்... பெண் மாசு படியாதவளா(?) இருந்தா... போனாப் போகுது... கட்டிக்கலாம்ன்னு விட்டுக் கொடுப்பாங்க... இல்லைன்னா... அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு... 

இதை மாறாது போற்றிக் காக்கப் புறப்பட்டிருக்கும் நம் இளைய தலைமுறையை வாழ்த்தியனுப்புவதற்கு... கடப்பாறையை விழுங்கும் பாங்கினை நான் கற்றுக் கொள்ள வேண்டும்...

(இன்னும்... நகர்ந்து கொண்டே இருப்பேன்...)

Sunday, September 5, 2010

மனிதம் என்று சொல்லிக் கொள்பவையும்... மாற்றுக் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் லட்சணமும்...

லெட்சணம் நம்.1

தேவையோ, தேவையில்லையோ பெரும்பாலானவர்கள் இன்று குர்ரான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவிற்சர்லாந்தில் ஓரிரு மாநிலங்களில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த குழந்தைகள் முக்காடிட்டு பள்ளிக்குச் செல்வது சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதை மீறி முக்காடிட்டுச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் மணிக்கணக்கில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். 

ஒரு பாடசாலையில் ஒரு அம்மணி மிக மிகப் புத்திசாலித்தனமான ஒரு நிபந்தனையை முன் மொழிந்திருக்கிறார். அதாவது, முக்காடிட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தை, இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஐந்து தடவை தொழுகை செய்ய வேண்டும், வகுப்பு நேரத்திலும். அதற்கான அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். 

பலே! பிரமாதமான விடயம் என்பது போல் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்குப் புரியவில்லை!!! 

அதை எப்படி நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமென்று நான் கேட்டால், “இது கட்டாயப்படுத்தல் அல்ல, அவர்கள் விரும்பாததைச் செய்யச் சொல்லவில்லை, அவர்கள் விரும்புவதைச் செய்யச் சொல்கிறோம்” என்கிறார் ஒருவர் மிக மிகப் புத்திசாலித்தனமாக. எதேச்சையாகப் பார்த்தால் அவர் கையில் ஒரு குர்ரான் இருந்தது.  

கழுத்தில் சிலுவை சுமந்திருக்கும் எல்லாரும் ஞாயிறு தோறும் தேவாலயம் செல்ல வேண்டும். முட்டுக்காலில் உட்கார்ந்து சிலுவையிட்டுத் தொழுகை செய்தல் வேண்டுமென்றால், அதுவும் கட்டாயப்படுத்தல் இல்லையா?!

நான் வருடத்தில் ஓரிரு முறை, (முழுநிலவுக் காலங்களில் மட்டுமாக இருக்கலாம்) காதணி அணிந்து கொள்கிறேன். தலைமுடியை விரித்தே விட்டிருக்கிறேன். ஆனால் பொட்டு மட்டும் அணிந்திருப்பேன். ஏதோ ஒரு அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும் நோக்கமோ... ஆரம்பத்திலிருந்தே... பொட்டில்லாது என்னை நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதிருப்பதோ காரணமாக இருக்கலாம். சில காலங்களில் நேரமின்மை காரணமாகவோ என்னவோ பொட்டின் தேவை இல்லாது போகலாம். ஆனால் யாராவது என்னிடம் வந்து, பொட்டணிந்து கொள்வதானால், அலுவலகத்திற்கு ஜீன்ஸ் தவிர்த்துப் புடவையில் வர வேண்டும், காதணி வேண்டும், குண்டலம் வேண்டும், மூக்குத்தியும், காது மாட்டியும் வேண்டும், இந்துமதச் சடங்குகள் எல்லாம் பின்பற்ற வேண்டுமென்றால், சின்னாபின்னமாகக் கடித்துக் குதறிவிடும் அபாயம் இருக்கிறது. 

அணுகுமுறை... அணுகுமுறை என்று ஒரு இளவு இருக்கிறதென்கிறார்கள்.... ”இளவு” என்ற சொல்லைப் பயன்படுத்தாதே என்று அம்மா சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் என் வசதிக்குச் சொல்லிக்கொள்ள வேற வார்த்தை கிடைக்கவில்லை. என்ன இளவு இது...?!

___________________________________________________________________________

லெட். நம்.2

எரிட்ரியாவிலிருந்து வந்த மூன்று குழந்தைகள் அடங்கிய குடும்பமொன்றிற்கு வசதியான ஒரு நகரசபை வழங்கிய வீட்டில் இரண்டு அறைகள். அதில் ஒரு அறையை எத்தியோப்பியர் ஒருவருக்குக் கொடுத்திருந்தார்கள். அவர் சென்றதும் அந்த அறையை ஆறு மாத காலமாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். வைக்கோற் போர் நாய்கள் எங்கெல்லாம் இருக்கின்றன. இதற்கும் போய் என்ன இளவு இது என்று கேட்டால் ”ஆப்பிரிக்காவில் அடுக்கடுக்காய்ப் படுத்திருப்பது வழக்கம்தானே என்கிறார்கள்” அடடா... மாற்றுக் கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வை மெச்சாதிருக்க முடியவில்லை... 

___________________________________________________________________________

லெட். நம். 3

ஒரு சூடான் நாட்டவர் வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமா இருக்கிறதென்று, வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கூறினால், ஆப்பிரிக்காவில் கரப்பான்பூச்சியுடன் வாழ்ந்த உங்களுக்கு இதிலென்ன கஷ்டம்?! என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்கள்.

___________________________________________________________________________

அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள்ள விழுறது இந்த இளவுதானோ.... 

எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. 

__________________________________________________________________________