header photo
Showing posts with label தொடர் இடுகை. Show all posts
Showing posts with label தொடர் இடுகை. Show all posts

Thursday, July 29, 2010

பதிவுலகை(கில்) அளந்த மேதை மீ...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


கலகலப்ரியா.. (ஸ்ஸ்ஸபா ஆரம்பத்ல ஈஸியான கேள்வியா கேக்கறாய்ங்கப்பு..)
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம்.. இல்லை... ஹரஹரப்ரியாவ தப்பா டைப்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க... 


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


ஐய்யயோ... இது என்ன மஹாவிஷ்ணு உலகை அளந்த லெவலுக்கு கேக்கறீங்க... நான் கம்ப்யூட்டர்ல கால் எல்லாம் வைக்கறதில்ல.. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒசாமாவ ரெட் ஹாண்டட்டா புடிக்கறப்போ சி.என்.என்.ல ப்ரேக்கிங் நியூஸ் போடற இடைவேளைல வெளம்பரம் போடலாமின்னு யோசித்தேன்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆமா... ஆமா... வினை விதச்சா விளைவு என்ன... அதேதான்... வினை... 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என்னது... சம்பாதிக்.....அடங்..  இத இப்பதான் சொல்றதாங் கொக்கமக்கா.... ஒண்ணர வருஷம் வேஸ்ட் பண்ணீட்டன் போலருக்கே.. 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு... 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


கோபமா.. எனக்கா... ச்சே ச்சே... அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்... 

பொறாமையா.. ஆமாம்... நான் பாட்டுக்கு கேம் ஆடிக்கிட்டிருக்கேன்... இவங்க எல்லாம் டெய்லி போஸ்ட் போடறாங்களே... நறநறநறன்னு பல்ல செல்லமா கடிச்சிருக்கேன்... ஹிஹி... 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


வேற யாரு.. நாந்தேன்... ஒவ்வொரு வாட்டியும் போஸ்ட் போட்டு தோள்ல தட்டி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிப்பேன்... 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம்... நேத்து முடி வெட்டினேன்... நெக்ஸ்ட் வீக் டென்டிஸ்ட் கிட்ட போகனும்... நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் (என்னோடதுதான்..)... ஏ டி எம் ல ஃப்ளாக்ஸ் பார்த்தா... ஃபீட்ஜிட் ட்ராஃபிக்ன்னு ஆர்வமா பார்த்துட்டிருக்கேன்... அமௌண்ட் எவ்ளோன்னு கொடுத்துட்டு... ஜஸ்ட் 100 விசிட்டர்ஸ் டுடேன்னு நினைச்சுக்கறேன்...  மீதி அப்புறம் அப்டேட் பண்றேனே.. 


இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்...

பராக் ஒபாமா 
ஒஸாமா பின் லேடன்
ரணில் விக்ரமசிங்க
கனிபல் கடாஃபி 
ஸ்பான்ஜ் பாப் (ஓ சாரி... ஆட்கள் மட்டுமா..)

முகிலனின் பிதற்றல்கள் பதிவருக்கு நன்றி... (அவங்க ஸ்டைல்ல இப்டித்தான் சொல்லுவாய்ங்க..)
_______________________________________________________________

Monday, May 10, 2010

ஆசாமி(யாரிணி)யும்.. சாமி(யாரிணி)யும்.. நானாகிய கடவுளும்..



தேவாரத்தில் ஆரம்பித்து, "உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியன், அ'ழ'கில் சோதியன் அம்பலத்தாடுவான், மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.. "
வான்முகில்... கோன்முறை.. நான்மறை.. மேன்மைகொள் "சைவநீதி" விளங்குக வுலகமெல்லாம்...... 'திருச்சிற்றம்பலமி'ல் முடித்துக் கண்ணைத் திறக்கும் தாத்தாவிடம்.. "தாத்தா அது "அ'ல'கில் சோதியன்"..  டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க" எல்லாம் தெரிந்த தோரணையில் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு வயது ஏழோ, எட்டோ இருந்திருக்கலாம்... 

"அலகில் சோதியன் என்றுதான் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள்... ஆனால் அழகில் சோதி வடிவானவன் என்று நான் விளங்கிக் கொண்டு இப்படிப் பாடிக் கொண்டிருக்கிறேன்.." என்ற தாத்தாவின் பொறுமையான விளக்கத்திற்கு.. 

"இல்லை அலகுதான்.. அவனை அளக்கும் அலகு சோதியாம்.." டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க... 

டீச்சர் யார், என்ன அனுபவம் எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை... அடுத்த நாள் காலையில்... "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்று மறக்காமல் பாடிக் கொண்டிருந்தார்கள்... 

யார் சொல்லிக் கொடுத்ததையோ அப்படியே பின்பற்றிப் பாடிக் கொண்டிருப்பது எளிதாக இருக்கிறதோ..? 

உலகத்தின் கருத்தா யார்? சிவபெருமான். 

சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் செய்யும் தொழில்கள் யாவை? படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமாம். 

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினாவிடையை  பாட்டி சத்தமாகப் படித்துக் கொண்டிருப்பதைக் கேட்டே எனக்கு மனப் பாடமாகி விட்டிருந்தது. பதிலுக்கு கேள்வியையும், கேள்விக்குப் பதிலையும் வினாடி வினா நேரத்திற்கும் குறைவான நேரத்தில் புரட்டிப் புரட்டிச் சொல்லக் கற்று வைத்திருந்தேன். 

பத்தாம் ஆண்டின் இறுதிப் பரீட்சைக்கு ஒரு தாத்தாவின் சிபார்சின் பேரில் இன்னொரு தாத்தா இராமாயணம் முதல் திருவாசகம் வரை வீட்டில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். பரீட்சைக்கு முதல் நாள் என்ன தோன்றிற்றோ பிரசங்கக் கூட்டங்களிலும், உலக இந்து மாநாட்டிலும் மிளிர்ந்து கொண்டிருந்த தாத்தா சைவ சித்தாந்தம் பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு.. "இதெல்லாம் ஒன்றுமில்லையென்று அப்புறம் கற்றுக் கொள்வாய்"... என்ற பொழுது... கடவுள் இல்லையென்றா... சமயம் இல்லையென்றா.. என்று குழப்பம் ஒரு புறம்.. விஞ்ஞானம் கற்றுக்கொள்ளப் போகிறோம்... இந்து நாகரிகம், சைவ சமயம் எல்லாம் படிக்கச் சந்தர்ப்பம் இராதே... இதை எவ்வாறு தெரிந்து கொள்வதென்ற கவலை மறு பக்கமாக அல்லாட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது. 

வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் ஏதோ ஒரு விரதத்தைக் கண்டு பிடித்துப் பிடித்துக் கொண்டிருந்த பாட்டியையும் அம்மாவையும் பின்பற்றி நவராத்திரி விரதம் இருந்து பார்த்தேன். சரஸ்வதி சலுகை கிடைக்கலாமென்ற உள்நோக்கம் அம்மாவும் அறிந்ததே. கோயிலுக்குக் கட்டும் மாலையிலும் அதே லஞ்சம் வழங்கும் உள்நோக்கம் இருந்தது. 

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையை வழிபட்டனர். உருவ வழிபாடு அதன் பிற்பாடே தோன்றியது.. இருப்பினும் முருகக் கடவுளைப் பிடித்திருக்கிறது. பார்க்கும் பொழுதே ஏதோ ஒரு அமைதி வந்து உட்கார்ந்து கொள்கிறது. மற்றைய கடவுள்களைப் பிடிக்கவில்லையென்று சொல்ல இன்னும் கற்கவில்லை. பூஜை செய்யா விட்டாலும் பூஜை அறையில் ராமரும், ஹனுமரும், சிவனும், சரஸ்வதியும் இன்ன பிற கடவுள்களும் ப்ரேமில் இருக்கிறார்கள். சிட்னி ஷெல்டன் புத்தகத்தின் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் சிலையும்... பாலகுமாரன் புத்தகத்தின் பக்கத்தில் ஏசுநாதர் சிலையும்... இடையில் எங்கோ கால் நீட்டிச் சயனித்திருக்கும் புத்தரும் இருக்கிறார்கள். 

நிற்க... 

சென்ற வருடம் கோயிலுக்குப் போயிருக்கிறேன்... பிறந்தநாள் தொட்டு இது வரைக்கும் ஏதோ ஒன்றின் நிமித்தம் கோயிலுக்கு அவ்வப்போது போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன்... 

ஆனால்... கோயிலுக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் என்னை அல்லது கடவுளை எங்கேயோ தொலைத்துவிட்டே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது... 

கை கூப்பி நிற்கும்போதும்... கற்பூர தீபம் கண்களில் ஒற்றும்போதும்... சிவசிவ என்று சொல்லி நிமிர்ந்து திருநீறு அணியும்போதும்... யாரோ எப்பவோ சொல்லிக் கொடுத்ததைப் பிசகாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்... போலியாக.. எதற்கென்றே தெரியாது... சில நேரம் கேள்விகளுடனேயே நவக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்... 

எங்கேயோ வழி தொலைந்து நிற்கும் பொழுது பக்கத்தில் நிறுத்தப்படும் வண்டியிலிருந்து எட்டிப் பார்க்கும் எங்கோ பார்த்த முகமும்... கீரைக் கடையில் வாங்கிய கீரைக்குப் பணம் கொடுக்க நினைக்கையில் பணத்தை மறந்து வந்து விட்டது நினைவு வந்து நிமிரும்போது சிரித்தபடி எதிரிலிருக்கும் பக்கத்து வீட்டுப் பாட்டியும்.. வாழ்க்கையில் இனி என்ன என்று விழிக்கும் பொழுது கை பிடித்து அழைத்துச் செல்லும் எதுவோ ஒன்றில்... பிடித்த முருகக் கடவுளின் பெயர் சொல்லிக் கண் மூடி என் உள்ளேயே பார்த்துக் கொள்கிறேன்... 

உடலிலிருந்து ஆத்மா விலகிச் செல்கையில்... எங்கோ முருகன் வேலும்... மயிலும் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கலாம் என்ற கற்பனை எனக்கில்லை... 

மதங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... சமயங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... பூசாரிக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... ஏசுவுக்கும்... புத்தருக்கும்... முருக.. வள்ளி.. தேவயானை சமேதருக்கும்... இன்ன பிறருக்கும்... கடவுளுக்கும் கூடச் சம்மந்தமில்லை... 

கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்.. 

காற்றைக் காண்பிக்க முடியுமா... மூச்சைக் காண்பிக்க முடியுமா இதயாதிகள்... அதி மேதாவிகள் அளிக்கும் பதில்கள்... 

என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...! தலையில் இரு கொம்பு மற்றும் உதடு தாண்டிய  கோரப்பல் முளைக்கும் சந்தர்ப்பங்களும்... முதுகில் சிறகு முளைக்கும் சந்தர்ப்பங்களும்... நிறையவே உண்டு... அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும்... தெரியாத சந்தர்ப்பங்களும் உண்டு... 

முருகன் எனக்குப் பிடிக்கும்... முருகு என்றால் அழகு.. ஒரு மனிதனோ... விலங்கோ.. தாவரமோ... ஜடப் பொருளோ.. மற்றவர்களுக்கு அவரவர் பார்வைக்கேற்ப அழகாகவும்.. அசிங்கமாகவும் தோன்றுவது போன்று.. என்னுடைய பார்வையில் நான் அழகாகத் தெரியும் சந்தர்ப்பங்களும் உண்டு.. (நம்புங்க..)..  அப்போ.. நான் முருகு... அஹம் ப்ரம்மாஸ்மி..! 

(இங்க கடவுள் பத்தித்தான் பேச்சு... இதில நீயே பிசாசு.. நீயே பேய்ன்னு உங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போனா எப்பூடி...)

தொடர் இடுகைக்கு அழைத்த முகிலனுக்கு நன்றி... யாருக்காவது இது பத்தி எழுதணும்னு தோணினா எழுதுங்கம்மா...ய்யா... 

Monday, March 29, 2010

உயிரே நீதான்.. (காதற்கவிதை அல்ல..)

தொடர் இடுகை எழுத அழைத்த ஜெஸ்வந்தியின் அன்புக்காக இந்தப் பதிவு...

தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது அதன் அழிவில் என்னுடைய பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்கிற பிரக்ஞை கூட இல்லாத எனக்கு இது பற்றி எழுதும் அருகதை இருக்கிறதா என்பது ஒரு புறம்... இதனால் என்ன ஆகி விடப்போகிறது என்கிற சிறு சலிப்பு மறுபுறம்.. ஒன்றை ஒன்று விஞ்ச..

இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்

வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..

மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்

வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....

ஆ.. இந்த்....!

பின்...

அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!

______________________

எல்லாம் சரி.. என்னால் இப்போதைக்கு என்ன செய்ய முடியும்.. இன்றைக்கு நான் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்.. நான் இப்போதைக்கு தண்ணீரில் கல்லெறிய மாட்டேன்... அவ்ளோதான்... மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்.. நான் தெய்வமல்ல..

உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..




அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !

(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)

உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!