header photo

Sunday, September 20, 2009

ஞானும் பேனாவும்.. பின்னே நீவிரும்..

எழுத வந்த வரலாற்றுத் தொடருக்கு என்னை அழைத்த முரளிகுமாருக்கு நன்றி. இதில ரெண்டு விஷயம் இருக்குங்க. ஒண்ணு இன்னைக்கு என்ன எழுதுறதுன்னு மண்டையைப் பிச்சுக்க வேண்டாம். மத்தது.. என்னைப் பற்றி நானே சொல்லலை, கேட்டாங்க சொல்றேன்னு அலட்டிக்கலாம்.. ஹிஹி.


வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது.

ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள். வீட்டில் மட்டும் "கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..! நான் இரக்கப்பட்டு இரண்டு வீடு தள்ளிப் போய் கும்மி அடித்து விட்டு வந்தால், எங்க தொலைஞ்சா? 'சனியன் இருந்தாலும் தொல்லை.. இல்லைன்னாலும் வீடு வெறிச்சோன்னு இருக்கு' என்று அலுத்துக் கொள்வார்கள். பெருசுகள் சூழ்ந்த வீட்டில்.. ஒரேயொரு குட்டிப் பிசாசாக இருந்ததன் விளைவு இது.

கல்கியையும், சுஜாதாவையும் அப்பவே படித்து விட்டு, மணிமேகலையின் அட்சய பாத்திரம் பற்றி சுஜாதா பாணியில் எழுதியது எனக்கே அதிகப் பிரசங்கித் தனமாகத் தோன்றிய போது, "மிகவும் நன்று" என்ற தமிழாசிரியையின் பின்னூட்டம் கண்டு மிதக்க ஆரம்பித்து விட்டேன்.

"என்னய்யா பொன்னையாவின் மகன் சின்னையாவிற்கு.. உன்னையா சின்னையாவின் மகன் பொன்னையா எழுதிக் கொள்வது யாதெனில்" போன்ற கடித ஆரம்பங்கள் எல்லாம் குப்பையாகி பல காலங்கள் ஆகி விட்டன.. புதிதாகச் சிந்தியுங்கள்.. தினமும் எதையாவது எழுதுங்கள்.. சில மாதங்கள் கழித்து எடுத்துப் படித்துப் பாருங்கள்.. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்த ஆங்கில ஆசிரியர் "ஐயா கந்தையா" அவர்கள் எனது இன்னொரு வழி காட்டி.

பள்ளியில்.. சிறுகதைப் போட்டி வந்த போது.. "நீ எழுதுடி".. "yes you can" என்று ஊக்குவித்து.. எழுத வைத்த என்னுடைய பள்ளித் தோழிகளும்.. அந்தக் கதை, போட்டியில் இரண்டாம் இடம் என்று தெரிய வந்த போது ஏற்பட்ட சின்னச் சந்தோஷமும் நினைவுப் பெட்டகத்தின் நிரந்தர சொத்துக்கள்.

அந்த அந்தக் கால கட்டத்தில்.. என்னுடைய 'சின்னச்சின்ன சிந்தனைத் துளிகளில்' சொன்னது போன்று.. கவிதையாகக் கிறுக்கி வைத்தது.. என்னுடைய பரிணாம வளர்ச்சியை நானே பார்க்க உதவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு. இப்படி எல்லாம் இருந்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன்.. என்று அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்து சிறிதாகச் சிரிப்பதும், இப்பொழுதெல்லாம் எனக்கு நானே நிறைய முரண்படுகிறேன் என்று நான் அவற்றைப் பார்த்துப் புன்னகைப்பதும் தொடர் கதை.

எழுத்து பெரும்பாலானவர்களைப் போல் எனக்கும் உணர்ச்சிகளின் ஒரு வடிகால். தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் பொழுது போக்காக ஒன்றிரண்டு இடுகைகள் தெளித்த காலம் ஒன்றுண்டு. இங்கே இடுகை எழுத ஆரம்பித்த வரலாறு வேறு. மற்றவர்களின் அங்கீகாரம் கிடைக்காது.. ஆனால் 'ஈழவர்களின்' (தமிழரின்) அங்கீகாரம் பெற்றிருந்த/பெற்ற 'ஈழம்', அல்லது ஈழவர் தவிர்ந்த மற்றவர்களின் அங்கீகாரம் பெற்ற இன்றைய 'ஐக்கிய இலங்கையில்' நடந்த, நடந்து கொண்டிருக்கும் கொடுமையை சகிக்காது, பிரம்மை பிடித்திருந்த நாட்களில், சகஜ நிலையைப் பிடிவாதமாக்கி, ஆரம்பித்த "ஈழப்ரியா", ஒப்பாரி வைத்தே நாட்கள் ஓடி விடுமோ எனப் பயந்து, "கலகலப்ரியாவாக" மாற எடுத்த முயற்சியே இது.

வரலாறு தொடரும்.. (ச்சோ.. நில்லுங்க.. ஏன் ஓடுறீங்க..இப்போ..?)

வானம்பாடி, கதிர், ராகவாச்சார்யா, ஜோதி , வசந்து , துபாய் ராஜா , கோபி மற்றும் அனைத்து உள்ளங்களின் கதைகளும் வரலாறாக என்னுடைய ஆசீர்வாதங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

___/\___

63 ஊக்கம்::

அன்பேசிவம் said...

அட அங்கதாங்க சொன்னேன். உங்க மாடரேஷனுக்கு பிறகுதான் அந்த கமெண் பப்ளிஷ் ஆகும்ன்னு சொல்லிச்சே, உங்க வீடு.
:-)

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

அட அங்கதாங்க சொன்னேன். உங்க மாடரேஷனுக்கு பிறகுதான் அந்த கமெண் பப்ளிஷ் ஆகும்ன்னு சொல்லிச்சே, உங்க வீடு.
:-)//

அப்டி எதுவும் இருந்ததா எனக்கு கவனமில்லையே.. ம்ம்.. எப்டியோ.. வரலாறு போட்டுட்டோம்ல..

vasu balaji said...

ச்சோ.. நில்லுங்க.. ஏன் ஓடுறீங்க..இப்போ... இது படிச்சிட்டு த்தோ நாங்க ஏன் ஓடுறோம்னு சொல்ல வந்து அப்புறம் பார்க்குறேன், மாட்டி விட்டுட்டியே கலகலா.அவ்வ்வ்வ்வ்.

அன்பேசிவம் said...

அடேங்கப்பா, வரலாறு தொடருமாமே :-)

அன்பேசிவம் said...

சரிதாங்க வரலாறுன்னாலே தொடர்ந்துதானே ஆகனும், தொடருங்கள்.
//ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்// என்ற தப்பை தெரிந்தே செய்யும், நண்பன் முரளி
ஹி ஹி ஹி

vasu balaji said...

/ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள்./

அப்போவே லகலகவா

/அந்தக் கதை போட்டியில் இரண்டாம் இடம் என்று தெரிய வந்த போது ஏற்பட்ட சின்னச் சந்தோஷமும் நினைவுப் பெட்டகத்தின் நிரந்தர சொத்துக்கள்./

அது ஒரு இடுகை போடும்மா.

/கவிதையாகக் கிறுக்கி வைத்தது.. என்னுடைய பரிணாம வளர்ச்சியை நானே பார்க்க உதவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு./

இது ரொம்ப நாளாச்சே. போடுங்கன்னு கேட்டு.

/தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்./

இது உனக்கே ஓவரா தெரியல. ஆஹா ஓஹோன்னு பாராட்டிட்டு ஓட்டுக் கூட போடாம போற உலகத்தில ஓட்டும் போட்டு பின்னூட்டமும் போடுற தீவிர தொண்டர்களம்மா நாம.

இப்புடியெல்லாம் எழுத எண்ட சரக்கே இல்லையே நான் என்ன பண்ணுவேன். அவ்வ்வ்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள்.//

அப்போ வீட்ல மந்திரவாதிகள் நிறைய இருக்காகளோ....

ப்ரியமுடன் வசந்த் said...

//வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு.//

அதெப்பிடி கை வந்த கலை

வாய் வழி வந்த கலைன்னு சொல்லுங்க தாயீ

ப்ரியமுடன் வசந்த் said...

//"ஐயா கந்தையா" அவர்கள் எனது இன்னொரு வழி காட்டி.//

சார் நீங்க இப்போ எங்க இருக்கீங்க

கொஞ்சம் அட்ரஸ் கொடுக்க முடியுமா? :)

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்தக் கதை, போட்டியில் இரண்டாம் இடம்//

வாத்தியார மிரட்டுனீங்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

//எழுத்து பெரும்பாலானவர்களைப் போல் எனக்கும் ஒரு உணர்ச்சிகளின் வடிகால். தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.//

டம் டமார் டப் டப் கம்யூட்டர் கண்ணாடி உடைஞ்சுபோச்சுக்கா......

ப்ரியமுடன் வசந்த் said...

//
வானம்பாடி, கதிர், ராகவாச்சார்யா, ஜோதி , வசந்து , துபாய் ராஜா , கோபி மற்றும் அனைத்து உள்ளங்களின் கதைகளும் வரலாறாக என்னுடைய ஆசீர்வாதங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..//

என் வாயால் வரலாறுன்னு சொல்லக்கூட மாட்டேன் வேணும்னா வேற எதுனா பேர் வச்சுக்கிடலாம்..

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போ மாத்திருக்குற இந்த க்ரீன் கலர் ஃபாண்ட் கலகலன்னு இருக்குதுங்கோ...செம மாட்ச் ஃபார் திஸ் டெம்ப்லேட்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

ச்சோ.. நில்லுங்க.. ஏன் ஓடுறீங்க..இப்போ... இது படிச்சிட்டு த்தோ நாங்க ஏன் ஓடுறோம்னு சொல்ல வந்து அப்புறம் பார்க்குறேன், மாட்டி விட்டுட்டியே கலகலா.அவ்வ்வ்வ்வ்.//

அது சரி.. சும்மா நறுக்கிட்டு திரியறதுக்கு உருப்படியா ஏதாவது எழுதலாமேன்னு ஹெல்ப் பண்ண வந்ததோட வினை..

Unknown said...

ஜெயிச்சவன் எழுதுறதுதான் வரலாறு.. தோத்தவன் அத படிக்க உயிரோட இருக்க மாட்டான்னு கிரேக்க அறிஞர் சொல்லிருக்காப்ள. ( இப்படி சொன்னாத்தான் நம்புவாய்ங்க.. ).. ஆத்தா.. நீங்க ஜெயிச்ச்சவரா?.. ஜெயிக்கப்போறவரா?..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

அடேங்கப்பா, வரலாறு தொடருமாமே :-)//

எழுதுறதா சொன்னேன்பா..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

சரிதாங்க வரலாறுன்னாலே தொடர்ந்துதானே ஆகனும், தொடருங்கள்.
//ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்// என்ற தப்பை தெரிந்தே செய்யும், நண்பன் முரளி
ஹி ஹி ஹி//

அவ்வ்வ்வ்வ்வ்.....

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள்./

அப்போவே லகலகவா//

அட அத ஏன் சார் கேக்குறீங்க... கருவிலேயே பிசாசுதான்..

/அந்தக் கதை போட்டியில் இரண்டாம் இடம் என்று தெரிய வந்த போது ஏற்பட்ட சின்னச் சந்தோஷமும் நினைவுப் பெட்டகத்தின் நிரந்தர சொத்துக்கள்./

அது ஒரு இடுகை போடும்மா.//

அட நீங்க வேற சார்.. அதெல்லாம் "அசையாச் சொத்துக்கள்"..

/கவிதையாகக் கிறுக்கி வைத்தது.. என்னுடைய பரிணாம வளர்ச்சியை நானே பார்க்க உதவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு./

இது ரொம்ப நாளாச்சே. போடுங்கன்னு கேட்டு.///

பரிணாம வளர்ச்சின்னு சொன்னதால கன்பீஸ் ஆயிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. என்னோட பரிணாம வளர்ச்சியில்.. டார்வின் தியரிக்கு மாறாக.. வால் வளர்ந்து கொண்டிருக்கிறது.. ஐயா..

/தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்./

இது உனக்கே ஓவரா தெரியல. ஆஹா ஓஹோன்னு பாராட்டிட்டு ஓட்டுக் கூட போடாம போற உலகத்தில ஓட்டும் போட்டு பின்னூட்டமும் போடுற தீவிர தொண்டர்களம்மா நாம.//

ஓ...! பிங்க் கலர் சட்டையும்.. கிரீன் கலர் வேஷ்டியும் கட்டிண்டு அலையும் தொண்டர் நீர்தானா ஐயா.. ரொம்ப சந்தோஷம்.. (ஹ..ஹ..ஹச்சூ...)

//இப்புடியெல்லாம் எழுத எண்ட சரக்கே இல்லையே நான் என்ன பண்ணுவேன். அவ்வ்வ்.//

இதுதான் சா(ர)க்குன்னு... குவாட்டர் .. கட்டிங்-ன்னு ஆரம்பிச்சிடாதீங்கையா...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள்.//

அப்போ வீட்ல மந்திரவாதிகள் நிறைய இருக்காகளோ....//

ஆமாம்.. அடிக்கடி திருஷ்டி எடுக்கறோம்னு பொய் சொல்லி வேப்பிலை அடிப்பாங்க.. நாம அதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்கிற ஆளா.. ஹெஹே..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு.//

அதெப்பிடி கை வந்த கலை

வாய் வழி வந்த கலைன்னு சொல்லுங்க தாயீ//

என்னுடைய தொண்டர்கள் என்னை மாதிரியே சிந்திப்பார்கள் என்று நான் எழுதும்போதே தோணிச்சு.. ஆனாலும் எழுவது கையால் என்பதாலும்.. நான் பேசும்பொழுது.. வாயை விட கை அதிகம் பேசுவதாலும்.. இது கை வந்த கலை என்றிருப்பதே சரி என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்..

கலகலப்ரியா said...

ச்சே ச்சே.. பயப்டாதீங்கோ.. அடிக்க எல்லாம் மாட்டேன்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//"ஐயா கந்தையா" அவர்கள் எனது இன்னொரு வழி காட்டி.//

சார் நீங்க இப்போ எங்க இருக்கீங்க

கொஞ்சம் அட்ரஸ் கொடுக்க முடியுமா? :)//

அவர் சொன்னத நான் இங்க சொல்லிட்டேனே.. அவர எதுக்கு தொல்லை பண்ணிக்கிட்டு.. (என்னுடைய வாத்யாரை சத்யமா நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்..)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//அந்தக் கதை, போட்டியில் இரண்டாம் இடம்//

வாத்தியார மிரட்டுனீங்களா?//

ஆமாம்.. முதலாவது இடத்தை யாருக்கு கொடுத்தீகன்னு மிரட்டினேன்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...


டம் டமார் டப் டப் கம்யூட்டர் கண்ணாடி உடைஞ்சுபோச்சுக்கா......//

க்ளோஸ் த விண்டோஸ்.. அண்ட் ஓபன் இட் எகேன் .. (செரி ஆயிருக்கும்..)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...


என் வாயால் வரலாறுன்னு சொல்லக்கூட மாட்டேன் வேணும்னா வேற எதுனா பேர் வச்சுக்கிடலாம்..//

அதுக்கென்ன கையால் எழுதலாமே...(உங்க பிட்ட உங்களுக்கே போட வச்சிட்டீங்களே..)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

இப்போ மாத்திருக்குற இந்த க்ரீன் கலர் ஃபாண்ட் கலகலன்னு இருக்குதுங்கோ...செம மாட்ச் ஃபார் திஸ் டெம்ப்லேட்...//

ஹிஹி.. ரொம்ப டாங்க்ஸ்..

கலகலப்ரியா said...

//rajesh said...

ஜெயிச்சவன் எழுதுறதுதான் வரலாறு.. தோத்தவன் அத படிக்க உயிரோட இருக்க மாட்டான்னு கிரேக்க அறிஞர் சொல்லிருக்காப்ள. ( இப்படி சொன்னாத்தான் நம்புவாய்ங்க.. ).. ஆத்தா.. நீங்க ஜெயிச்ச்சவரா?.. ஜெயிக்கப்போறவரா?..//

தம்பி.. கிரேக்க அறிஞர் சொல்லுறது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது..

என்னைப் பத்தி நான் எழுதறது சுயசரிதை.. அத பில் கிளிண்டனும் .. புஷ்ஷும்.. இன்ன பிற ஆளுங்களும் எழுதுறாய்ங்க.. அவங்க மண்டையைப் போட்டதும்.. அவங்கள பத்தி என்னைப் போன்றவர்கள் எழுதுறதுதான் வரலாறு..

இப்போ பாருங்க.. நூறு டியூப் லைட்ட சாப்டு உயிரோட இருந்தும் சரித்திரம் படைக்கிறாங்க.. நூறு பேர காப்பாத்திக்க போயி உசிர விட்டும் சரித்திரம் படைக்கிறாங்க.. (ஐ ரியலி வான்ட் டு ஸீ தட் கிரேக்க அறிஞர்..)

நாமளும் நாளைக்கு நாலு டியூப் லைட் சாப்டலாம் யாருக்கு தெரியும்.. ஹிஹி..

Unknown said...

ட்யூப் லைட் திங்கிறவர் தங்கம்க்கா.. இந்த பயளுவளோட ( கிளிண்டே, புஷ்ஷு ) கம்பேர் பண்ணாதீய..

கலகலப்ரியா said...

//rajesh said...

ட்யூப் லைட் திங்கிறவர் தங்கம்க்கா.. இந்த பயளுவளோட ( கிளிண்டே, புஷ்ஷு ) கம்பேர் பண்ணாதீய..//

பண்ணுவேனாப்பா.. அவிங்களால லைட்டாதான் சாப்ட முடியும்.. லைட்ட சாப்ட முடியுமா.. நோ சான்ஸ்...=)

இராகவன் நைஜிரியா said...

யக்கோவ்... தொடரும் போடும்போது யாரையும் கோத்துவிடக்கூடாது..

வரலாறு எழுதச் சொல்றீங்களே... இங்க வரலாறு, அறிவியல், அவியல், ஒன்னுமே கிடையாதுன்னு தெரியாதுங்களா...

பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டும் என்னை எல்லாம் ஒரு பெரிய ரேஞ்சுக்கு ஆச்சார்யா போட்டு...

இராகவன் நைஜிரியா said...

// ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். //

நீங்க PIN(பின்) வாங்க கூடாதுன்னுதான் நாங்க எல்லாம் ஊக்கு விக்கறோம்...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

யக்கோவ்... தொடரும் போடும்போது யாரையும் கோத்துவிடக்கூடாது..

வரலாறு எழுதச் சொல்றீங்களே... இங்க வரலாறு, அறிவியல், அவியல், ஒன்னுமே கிடையாதுன்னு தெரியாதுங்களா...

பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டும் என்னை எல்லாம் ஒரு பெரிய ரேஞ்சுக்கு ஆச்சார்யா போட்டு...//

உங்க ரேஞ்சு உங்களுக்கே தெரியல... அதில்லாம எழுதலைன்னா நான் ஒண்ணும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். //

நீங்க PIN(பின்) வாங்க கூடாதுன்னுதான் நாங்க எல்லாம் ஊக்கு விக்கறோம்...//

'பின்' வாங்கக் கூடாதுன்னு நினைச்சிண்டு 'பின்' (ஊக்கு) வித்தீங்கன்னா.. வியாபாரம் படுத்து(டு)மே ஐயா...

vasu balaji said...

கலகலப்ரியா said...
/பின்' வாங்கக் கூடாதுன்னு நினைச்சிண்டு 'பின்' (ஊக்கு) வித்தீங்கன்னா.. வியாபாரம் படுத்து(டு)மே ஐயா.../
:)) ரெண்டாவது விக்கட் டவுனா:))

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/பின்' வாங்கக் கூடாதுன்னு நினைச்சிண்டு 'பின்' (ஊக்கு) வித்தீங்கன்னா.. வியாபாரம் படுத்து(டு)மே ஐயா.../
:)) ரெண்டாவது விக்கட் டவுனா:))//

எனக்கு கிரிக்கெட் தெரியாதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...
/பின்' வாங்கக் கூடாதுன்னு நினைச்சிண்டு 'பின்' (ஊக்கு) வித்தீங்கன்னா.. வியாபாரம் படுத்து(டு)மே ஐயா.../
:)) ரெண்டாவது விக்கட் டவுனா:)) //

என்னிக்கு நின்னு விளையாடி ஜெயிச்சு இருக்கோம்... தோற்பதற்காக யாராவது வேணுமில்ல.. அதுக்குத்தான் நீங்களும், நானும் இருக்கின்றோம்... இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா பாலா அண்ணே... :-)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/என்னிக்கு நின்னு விளையாடி ஜெயிச்சு இருக்கோம்... தோற்பதற்காக யாராவது வேணுமில்ல.. அதுக்குத்தான் நீங்களும், நானும் இருக்கின்றோம்... இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா பாலா அண்ணே... :-)/

சரியா சொன்னீங்கசார். :))பவுன்சரா போட்டு தாக்குறாங்க

vasu balaji said...

கலகலப்ரியா said...
/எனக்கு கிரிக்கெட் தெரியாதுங்க../

கிரிக்கட் தெரிஞ்ச ஆள்னா பந்து எங்க எப்புடி வரும்னு தெரியும். இது எங்க எப்புடி வந்து தட்டி விழுத்தும்னு தெரியாது. அவ்வ்வ்.

அது சரி(18185106603874041862) said...

//
தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்
//

இப்படி உண்மையை பேசுறது தான் எல்லாருக்கும் உங்க கிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு :0))))

அது சரி(18185106603874041862) said...

//
"என்னய்யா பொன்னையாவின் மகன் சின்னையாவிற்கு.. உன்னையா சின்னையாவின் மகன் பொன்னையா எழுதிக் கொள்வது யாதெனில்" போன்ற கடித ஆரம்பங்கள் எல்லாம் குப்பையாகி பல காலங்கள் ஆகி விட்டன..
//

ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா....படிக்கும் போதே தலையை சுத்துது...கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருதே.....

தப்பிச்சோம்டா ஸாமீய்ய்ய்ய்ய்ய் :0))))

Sanjai Gandhi said...

ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆய்.. ரொம்ப நாள் கழிச்சி வந்தேன்.. அதான் சும்மா ஒரு அட்டெண்டன்ஸ்.. வர்ட்டா.. :))

ஈ ரா said...

//மணிமேகலையின் அட்சய பாத்திரம் பற்றி சுஜாதா பாணியில் எழுதியது//

என்னங்க, சின்னப்புள்ளையிலேயே கலக்கி இருக்கீங்க....அசையா சொத்துன்னுல்லாம் சொல்லி வளையாபதி குண்டலகேசி மாதிரி மறைச்சுப்புடாதீங்க... பிற்கால சமூகம் மண்டையப் பிச்சிக்கும்....

அதையும் இங்கே போட்டுருங்களேன்....

ஈரோடு கதிர் said...

//"கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..//

ஓ எப்பவுமே இப்படித்தானா!!

அதுசரி... கடைசி வரியில நானுமா!!!???

Anonymous said...

:):):)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

என்னிக்கு நின்னு விளையாடி ஜெயிச்சு இருக்கோம்... தோற்பதற்காக யாராவது வேணுமில்ல.. அதுக்குத்தான் நீங்களும், நானும் இருக்கின்றோம்... இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா பாலா அண்ணே... :-)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுதுங்க..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said..

சரியா சொன்னீங்கசார். :))பவுன்சரா போட்டு தாக்குறாங்க//

அட ஏன் சார்.. கிரிக்கெட் தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கிரிக்கட் தெரிஞ்ச ஆள்னா பந்து எங்க எப்புடி வரும்னு தெரியும். இது எங்க எப்புடி வந்து தட்டி விழுத்தும்னு தெரியாது. அவ்வ்வ்.//

தோடா.. பந்து எப்டி வரும்னு தெரிஞ்சா ஏன் இப்டி.. ஹிஹி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

படித்தேன்.ரசித்தேன். உங்கள் கலலலப்பு உங்கள் வீட்டுக் காரர்களுக்குக் கிடைத்த ஒரு வரம். உணர்ந்திருப்பார்கள். யார்தான் வெளியே உண்மையைச் சொல்லுகிறார்கள்.?

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்
//

இப்படி உண்மையை பேசுறது தான் எல்லாருக்கும் உங்க கிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு :0))))//

ஹிஹி.. இந்த உண்மைய சொன்னதுக்கு தாங்க்ஸ்ங்க..

கலகலப்ரியா said...

//அது சரி said...

தப்பிச்சோம்டா ஸாமீய்ய்ய்ய்ய்ய் :0))))//

நம்ம வாத்யாரும்தான்... :-s

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆய்.. ரொம்ப நாள் கழிச்சி வந்தேன்.. அதான் சும்மா ஒரு அட்டெண்டன்ஸ்.. வர்ட்டா.. :))//

பாவம்பா... ரொம்ப நாள் தூங்கினா இப்டித்தான் நிக்காம கொட்டாவி விடணும்..

அது என்ன சும்மா அட்டெண்டன்ஸ்.. மத்தபடி பில் அனுப்புவியளோ..

வாங்க வாங்க..

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

//மணிமேகலையின் அட்சய பாத்திரம் பற்றி சுஜாதா பாணியில் எழுதியது//

என்னங்க, சின்னப்புள்ளையிலேயே கலக்கி இருக்கீங்க....அசையா சொத்துன்னுல்லாம் சொல்லி வளையாபதி குண்டலகேசி மாதிரி மறைச்சுப்புடாதீங்க... பிற்கால சமூகம் மண்டையப் பிச்சிக்கும்....

அதையும் இங்கே போட்டுருங்களேன்....//

அட நல்ல ஐடியாவா இருக்கே... டீச்சர் ப்ளீஸ் அந்த கட்டுரைய கொஞ்சம் மெயில் பண்ணுங்க.. அவ்வ்வ்வ்..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//"கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..//

ஓ எப்பவுமே இப்படித்தானா!!

அதுசரி... கடைசி வரியில நானுமா!!!???//

ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு...ஹிஹி..

ஆமாங்க.. "அது சரி"யை மறந்து விட்டேன்.. ஐயா "அது சரி" நீங்களும் வரலாறு எழுத வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

//manippakkam said...

:):):)//

:)....!

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

படித்தேன்.ரசித்தேன். உங்கள் கலலலப்பு உங்கள் வீட்டுக் காரர்களுக்குக் கிடைத்த ஒரு வரம். உணர்ந்திருப்பார்கள். யார்தான் வெளியே உண்மையைச் சொல்லுகிறார்கள்.?//

ரொம்ப நன்றிங்க.. ! இல்லீங்க.. அவங்க உணர்ந்திருந்ததை நானும் உணர்ந்திருந்தேன்..! கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களுங்க அவங்க.. உண்மைய மறைக்க தெரியாது.. ஹிஹி..!

ச.ஜெ.ரவி said...

\\\\\\\ வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது /////////


எங்களுக்கும் தான்

Radhakrishnan said...

ஈழப்ரியா கலகலப்ரியா ஆன கதையை அறிந்தேன். தொடரட்டும்.

எழுதத் தூண்டியவர்களை நினைவுபடுத்திய விதம் அருமை.

பரிசு வென்றமைக்கு வாழ்த்துகள். உங்கள் எழுத்து அல்லவா ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி.

கலகலப்ரியா said...

//ச.ஜெ. ரவி said...

\\\\\\\ வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது /////////


எங்களுக்கும் தான்//

நன்றி ரவி..

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

ஈழப்ரியா கலகலப்ரியா ஆன கதையை அறிந்தேன். தொடரட்டும்.

எழுதத் தூண்டியவர்களை நினைவுபடுத்திய விதம் அருமை.

பரிசு வென்றமைக்கு வாழ்த்துகள். உங்கள் எழுத்து அல்லவா ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி.//

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க..

R.Gopi said...

அட‌டே...

இப்போ, இந்த‌ டைப்புல‌ டைட்டில் வைக்க‌ற‌து ஃபேஷ‌ன் போல‌ இருக்கிற‌து...

ம்ம்ம்.... நடத்துங்க... நடத்துங்க...

//ஒண்ணு இன்னைக்கு என்ன எழுதுறதுன்னு மண்டையைப் பிச்சுக்க வேண்டாம். மத்தது.. என்னைப் பற்றி நானே சொல்லலை, கேட்டாங்க சொல்றேன்னு அலட்டிக்கலாம்.//

ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே லகலக...

//வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது.//

அதானே... இதெல்லாம் இல்லேன்னா ல‌க‌ல‌க‌வுக்கு என்ன‌ ம‌திப்பு... ஆனாலும், எல்லாரையும் ரொம்ப‌ தான் ஓட்டாதீங்கோ...

//ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள். வீட்டில் மட்டும் "கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..! நான் இரக்கப்பட்டு இரண்டு வீடு தள்ளிப் போய் கும்மி அடித்து விட்டு வந்தால், எங்க தொலைஞ்சா? 'சனியன் இருந்தாலும் தொல்லை.. இல்லைன்னாலும் வீடு வெறிச்சோன்னு இருக்கு' என்று அலுத்துக் கொள்வார்கள். பெருசுகள் சூழ்ந்த வீட்டில்.. ஒரேயொரு குட்டிப் பிசாசாக இருந்ததன் விளைவு இது.//

பேயும், பிசாசும் பின்னே ல‌க‌ல‌க‌வும்... அட‌... இந்த டைட்டில் கூட ந‌ல்லா இருக்கே... (இதுக்கு என்ன‌ வாங்கி க‌ட்டிக்க‌ போறேனோ தெரிய‌ல‌....)

//"என்னய்யா பொன்னையாவின் மகன் சின்னையாவிற்கு.. உன்னையா சின்னையாவின் மகன் பொன்னையா எழுதிக் கொள்வது யாதெனில்"//

ம்ம்ம்ம்ம்.... லொள்ளு ரெம்ப‌ சாஸ்தி....

//இப்படி எல்லாம் இருந்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன்.. என்று அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்து சிறிதாகச் சிரிப்பதும், இப்பொழுதெல்லாம் எனக்கு நானே நிறைய முரண்படுகிறேன் என்று நான் அவற்றைப் பார்த்துப் புன்னகைப்பதும் //

பேஷ்... பேஷ்...

//எழுத்து பெரும்பாலானவர்களைப் போல் எனக்கும் உணர்ச்சிகளின் ஒரு வடிகால். தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.//

ல‌க‌ல‌க‌... நீங்க‌ சொன்ன‌துதான்... "வேற‌ வ‌ழி"...

//வானம்பாடி, கதிர், ராகவாச்சார்யா, ஜோதி , வசந்து , துபாய் ராஜா , கோபி மற்றும் அனைத்து உள்ளங்களின் கதைகளும் வரலாறாக என்னுடைய ஆசீர்வாதங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..//

அதானே... ல‌க‌ல‌க‌வோட‌ லிஸ்ட்ல‌ எம்பேரு இல்லாமையா?? ந‌ன்றிங்கோ... என்னையும் நினைவில் வைத்து கொண்ட‌த‌ற்கு...

உங்க‌ளின் ப‌ழைய‌ன‌ க‌ழித‌லும் (ஈழ‌ப்ரியா), புதிய‌ன‌ புகுத‌லும் (க‌ல‌க‌ல‌ப்ரியா) எங்க‌ளுக்கு அறிவித்த‌மைக்கு ந‌ன்றி...

மெருகேறுது உங்க‌ள் எழுத்து... வாழ்த்துக்க‌ள்... க‌ல‌க‌ல‌...ப்ரியா....

கலகலப்ரியா said...

R.Gopi said...

// அட‌டே...

இப்போ, இந்த‌ டைப்புல‌ டைட்டில் வைக்க‌ற‌து ஃபேஷ‌ன் போல‌ இருக்கிற‌து...//

அப்டியா... சொல்லவே இல்ல...

//ம்ம்ம்.... நடத்துங்க... நடத்துங்க...//
அது நடந்துக்கிட்டேதான் இருக்குதுங்க..

// ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே லகலக...//
இல்லைன்னா பஞ்ச் போதலைன்னு சொல்லிடுறீங்களே..

//அதானே... இதெல்லாம் இல்லேன்னா ல‌க‌ல‌க‌வுக்கு என்ன‌ ம‌திப்பு... ஆனாலும், எல்லாரையும் ரொம்ப‌ தான் ஓட்டாதீங்கோ...//
ச்சே ச்சே..

//பேயும், பிசாசும் பின்னே ல‌க‌ல‌க‌வும்... அட‌... இந்த டைட்டில் கூட ந‌ல்லா இருக்கே... (இதுக்கு என்ன‌ வாங்கி க‌ட்டிக்க‌ போறேனோ தெரிய‌ல‌....)//
பேயாகி பிசாசாகி.. ப்ரியாவாகி... (வாங்கி கட்டிக்கிறதில இருக்கிற ஆர்வம் இருக்கே.. யப்பா..)

//ம்ம்ம்ம்ம்.... லொள்ளு ரெம்ப‌ சாஸ்தி....//
வாத்யாருக்குதானே..? ஆமாங்க..

//
பேஷ்... பேஷ்...//
ஹிஹி...

// ல‌க‌ல‌க‌... நீங்க‌ சொன்ன‌துதான்... "வேற‌ வ‌ழி"...//
அது..!

// அதானே... ல‌க‌ல‌க‌வோட‌ லிஸ்ட்ல‌ எம்பேரு இல்லாமையா?? ந‌ன்றிங்கோ... என்னையும் நினைவில் வைத்து கொண்ட‌த‌ற்கு...//
ச்சே ச்சே.. டயரில இல்ல எழுதி வச்சிருக்கேன்.. மறக்க மாட்டேன்..

// உங்க‌ளின் ப‌ழைய‌ன‌ க‌ழித‌லும் (ஈழ‌ப்ரியா), புதிய‌ன‌ புகுத‌லும் (க‌ல‌க‌ல‌ப்ரியா) எங்க‌ளுக்கு அறிவித்த‌மைக்கு ந‌ன்றி...

மெருகேறுது உங்க‌ள் எழுத்து... வாழ்த்துக்க‌ள்... க‌ல‌க‌ல‌...ப்ரியா....//

நன்றி நன்றி நன்றி..

தமிழ் அஞ்சல் said...

ஒரே கலகலப்பு தான் போங்க.....!

கலகலப்ரியா said...

//திருப்பூர் மணி Tirupur mani said...

ஒரே கலகலப்பு தான் போங்க.....!//

நன்றி மணி.. !