header photo

Tuesday, September 22, 2009

நக புராணம்..

"புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும்"

மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின. "ஐயோ.. வெள்ளிக்கிழமை!", "நகம் வெட்டலை". "சிவபுராணம் முடிந்ததும், நக புராணம் ஆரம்பிப்பாங்களே". "படிப்பு விஷயத்தில அடி வாங்காத உனக்கு, விதி நக ரூபத்தில வருதேடி".

"ஈசன் 'அடி'போற்றி, எந்தை 'அடி'போற்றி
தேசன் 'அடி'போற்றி, சிவன் சே'வடி'போற்றி
நேயத்தே நின்ற நிமலன் 'அடி'போற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் 'அடி' போற்றி"

நேரம் காலம் தெரியாதவங்கப்பா.. இப்போ போய் எத்தனை 'அடி', புள்ளயோட பிரச்சனை புரியாம.

ப்ரியாவிடம் அப்பவே மாணிக்கவாசகர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 'சிவபுராண'த்தை இவ்வளவு நீட்டி இருக்க மாட்டார்.

நல்ல வேளை இந்த "கரங்குவிவார்" ஆரம்பத்திலேயே வந்திச்சோ, தப்பிச்சோம். இங்கதான் நிக்கறார் நம்ம பரிமேலழகர்.

பாட்டியின் பாசமரத்தில் கட்டிக் காத்த மாங்காயை பழுக்க முன்னாடியே பதம் பார்த்த பரதேசி.. உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி.

அவளின் அசாதாரண உயரத்தின் உபயம், எப்பொழுதும் முதல் வரிசை. வாய் தன் பாட்டுக்கு "கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" பாட, கண் மெதுவே உயர்ந்து, சித்ரா டீச்சரின் பொசிஷன் பார்த்தது. ஆ..! தெய்வம் டீச்சர் நீங்க. கண் மூடி, பக்திப் பழமாக நின்றிருந்தார்கள்.

மெதுவாக அடி அடியாக "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகி" பின்னால் நகர்ந்து.. "செல்லா நின்ற, இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா.

"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் ", ப்ரியா அரவமற்று அவள் நகங்களை, தன் பற்கள் கொண்டு அழிக்க ஆரம்பித்தாள்.

"தயாவான தத்துவனே.. இதோ கடைசிச் சுண்டு விரல் நகம் மட்டும் பாக்கி. "அப்பாடா அதுவும் ஆச்சுடா.. "மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே"! மலர்க்கரங்கள்.

"போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்.. மீட்டிங்கு வந்து,".. வந்துட்டோம்ல முதல் வரிசைக்கு. டீச்சர் கண்ணை திறந்தப்போ, ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, பரவசமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்.

திருச்சிற்றம்பலம்
____/\____

86 ஊக்கம்::

vasu balaji said...

:)). ஆத்தாடி முடியல. சிரிச்சு முடிக்கட்டும்;

vasu balaji said...

/உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி./

அடங்கொன்னியா. இந்த சந்தேகம் வேறயா?

/மெதுவாக அடி அடியாக "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகி" பின்னால் நகர்ந்து.. "செல்லா நின்ற, இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா./

அட சை. இப்படி கூடவா பாடினாங்கன்னு குழம்பிட்டேன். அப்புறம்தான் உன்னோட லொள்ளு புரிஞ்சது.

/ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்./

இதத்தான் சிவனேன்னு சொல்றதோ.

கலாய்ச்சிட்ட கலகலா

vasu balaji said...

:o. மீ த ஃபர்ஸ்ட் போட்லைன்னா எப்படி. தோ போட்டுட்டேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்குங்க சகோதரி!
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..,
(நீங்க எனது கவிதைக்கு இட்ட பின்னூட்டத்திற்கு பிறகு, எதை எழுதனும்னாலும் பத்து தடவை யோசிக்க வேண்டியதாயிருக்கு)

R.Gopi said...

//மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள்,//

அதானே பார்த்தேன்... படித்து கொண்டிருந்தது லகலகவின் விழிகள்... நல்லா நோட் பண்ணுங்க மக்களே... லகலக அல்ல...

//ப்ரியாவிடம் அப்பவே மாணிக்கவாசகர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 'சிவபுராண'த்தை இவ்வளவு நீட்டி இருக்க மாட்டார்.//

ய‌ப்பா..... மாணிக்க‌த்த‌யும் விட‌லியா....

//பாட்டியின் பாசமரத்தில் கட்டிக் காத்த மாங்காயை பழுக்க முன்னாடியே பதம் பார்த்த பரதேசி.. உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி.//

ஹா...ஹா...ஹா... ப‌ழுக்க‌ முன்னாடியே முழுக்க‌...ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

//வாய் தன் பாட்டுக்கு "கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" பாட, கண் மெதுவே உயர்ந்து, சித்ரா டீச்சரின் பொசிஷன் பார்த்தது. ஆ..! தெய்வம் டீச்சர் நீங்க. கண் மூடி, பக்திப் பழமாக நின்றிருந்தார்கள்.//

ம்ம்ம்ம்ம்...... என்னா வில்லித்த‌ன‌ம்.... அப்ப‌வே.....

//இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா.//

முடியலியா....அப்ப‌வேவா...

//டீச்சர் கண்ணை திறந்தப்போ, ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்.//

நானும் இதை ப‌டித்து முடித்து விட்டேன் "திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம்"....... (க‌ணீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

:)). ஆத்தாடி முடியல. சிரிச்சு முடிக்கட்டும்;//

என்ன அவசரம்... நிதானமா சிரிங்க..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி./

அடங்கொன்னியா. இந்த சந்தேகம் வேறயா?//

சந்தேகம் எல்லாம் இல்லை சார்.. அந்த சமயத்தில அது கூட மறந்துடுத்து சார்.. அதான் சந்திரமுகி உலுக்க வேண்டியதா போச்சு..

/மெதுவாக அடி அடியாக "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகி" பின்னால் நகர்ந்து.. "செல்லா நின்ற, இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா./

அட சை. இப்படி கூடவா பாடினாங்கன்னு குழம்பிட்டேன். அப்புறம்தான் உன்னோட லொள்ளு புரிஞ்சது.//

நம்ம Character-a புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்களே சார்..

/ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்./

இதத்தான் சிவனேன்னு சொல்றதோ.

கலாய்ச்சிட்ட கலகலா//

ஓஹோ..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

:o. மீ த ஃபர்ஸ்ட் போட்லைன்னா எப்படி. தோ போட்டுட்டேன்.//

ஆ..! ப்ளாக்கர் ப்ளாக்கர்..!

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்குங்க சகோதரி!
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..,//

ரொம்ப நன்றிங்க..

// (நீங்க எனது கவிதைக்கு இட்ட பின்னூட்டத்திற்கு பிறகு, எதை எழுதனும்னாலும் பத்து தடவை யோசிக்க வேண்டியதாயிருக்கு)//

அப்டி என்ன சொன்னேன்.. ம்ம்..?? நாம யோசிக்காமலே எழுதுற ஆளுங்க.. யோசிச்சா சொதப்பிடும்.. பார்த்துக்குங்க..

கலகலப்ரியா said...

R.Gopi said...

//மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள்,//

அதானே பார்த்தேன்... படித்து கொண்டிருந்தது லகலகவின் விழிகள்... நல்லா நோட் பண்ணுங்க மக்களே... லகலக அல்ல...//

நீங்களும் "கடி"க்க ட்ரை பண்றீங்க போல இருக்கே..

//ப்ரியாவிடம் அப்பவே மாணிக்கவாசகர் ஆழ்ந்த அன்பு வைத்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் 'சிவபுராண'த்தை இவ்வளவு நீட்டி இருக்க மாட்டார்.//

ய‌ப்பா..... மாணிக்க‌த்த‌யும் விட‌லியா....//

gem gem-ஐ சேரும்..

//பாட்டியின் பாசமரத்தில் கட்டிக் காத்த மாங்காயை பழுக்க முன்னாடியே பதம் பார்த்த பரதேசி.. உனக்கு பல்லு இருக்கா இல்லையாடி.//

ஹா...ஹா...ஹா... ப‌ழுக்க‌ முன்னாடியே முழுக்க‌...ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

நான் அப்போ சாப்ட்டதுக்கு நீங்க இப்போ ஏப்பம் விடுறீங்களா... வில்லங்கமான மாங்காய்டா சாமி..

//வாய் தன் பாட்டுக்கு "கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி" பாட, கண் மெதுவே உயர்ந்து, சித்ரா டீச்சரின் பொசிஷன் பார்த்தது. ஆ..! தெய்வம் டீச்சர் நீங்க. கண் மூடி, பக்திப் பழமாக நின்றிருந்தார்கள்.//

ம்ம்ம்ம்ம்...... என்னா வில்லித்த‌ன‌ம்.... அப்ப‌வே.....//

ஹெஹெஹெ...

//இத்தாவர சங்கமத்துள்" கலந்து மறைந்து இளைத்தேன், பெருமானே முடியலடா.//

முடியலியா....அப்ப‌வேவா...//

நக்கலு..ம்ம்.. திருடறவங்களுக்கு தெரியும் இந்த கஷ்டம்.. உங்களுக்கு தெரியாதா..

//டீச்சர் கண்ணை திறந்தப்போ, ப்ரியா கண்ணை மூடி, பக்திப் பழமாகி, கையை தைரியமாகக் கூப்பி, கண்ணீரென்று "திருச்சிற்றம்பலம்" சொல்லி முடித்தாள்.//

நானும் இதை ப‌டித்து முடித்து விட்டேன் "திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம்"....... (க‌ணீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............)//

ஆஹா.. இவருதான் அங்க ஸ்கூல் பெல் அடிச்சிட்டிருந்தார் போல.. சும்மா சொல்லக் கூடாதுப்பா.. கணீர்னு இருக்கு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மிக அருமை. நகைச்சுவையை நகையாகக் கொண்டு பிறந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

மிக அருமை. நகைச்சுவையை நகையாகக் கொண்டு பிறந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.//

நன்றிங்க.. ஜெஸ்வந்தி..

க.பாலாசி said...

நகையும், சுவையும் எழுத்தின் ஓட்டமதில் இயல்பாய் இழையோடுகிறது...ரசனைமிகுந்த பதிவு....

ஆயில்யன் said...

:)))

ஈரோடு கதிர் said...

என்ன ப்ரியா இது..

நகத்தை இப்படியா வெறித்தனமா சாப்பிடறது... தொண்டியில குத்தாதோ...

என்னமோ போங்க

பார்த்து சூதானமா சாப்டுங்க

கலகலப்ரியா said...

//க.பாலாஜி said...

நகையும், சுவையும் எழுத்தின் ஓட்டமதில் இயல்பாய் இழையோடுகிறது...ரசனைமிகுந்த பதிவு....//

ரொம்ப நன்றிங்க..

கலகலப்ரியா said...

//ஆயில்யன் said...

:)))//

பேச முடியாம சிரிக்கறாங்கன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

என்ன ப்ரியா இது..

நகத்தை இப்படியா வெறித்தனமா சாப்பிடறது... //

உங்க கரிசனத்தில எனக்கு கண் கலங்குது கதிர்..

//தொண்டியில குத்தாதோ...//
எந்த தொண்டி..? குத்தினாலும்.. நீங்க தொண்டன்தானே.. கவலைய விடுங்க..

//என்னமோ போங்க

பார்த்து சூதானமா சாப்டுங்க//

ஆகட்டும் நைனா..

இராகவன் நைஜிரியா said...

சூப்பருங்கோ...

நகத்தை வச்சு கூட இவ்வளவு எழுதமுடியுங்களா...

திருச்சிற்றம்பலம்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

சூப்பருங்கோ...

நகத்தை வச்சு கூட இவ்வளவு எழுதமுடியுங்களா...

திருச்சிற்றம்பலம்.//

நன்றிங்கோ...

நகத்த பத்தி ரொம்ப குறைச்சு மதிச்சிட்டீங்களே ஐயா.. (என்னமோ அழகு குறிப்பு எழுதின மாதிரி..பில்ட் அப்)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/நகத்தை வச்சு கூட இவ்வளவு எழுதமுடியுங்களா.../

ராஜா காலத்துல நகம், தலைமுடியெல்லாம் வெச்சி ஓவியமே வரைவாங்களாமே. இந்தம்மா இடுகை போடுறது பெருசே இல்லை சார். :))

Sanjai Gandhi said...

முதல் 2 வரியும் திருக்குறள்னு நினைச்சென்.. நல்ல வேளை அடுத்த வரியிலையே சொல்லிட்டிங்க. :)

...திருச்சிற்றம்பலம்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/நகத்தை வச்சு கூட இவ்வளவு எழுதமுடியுங்களா.../

ராஜா காலத்துல நகம், தலைமுடியெல்லாம் வெச்சி ஓவியமே வரைவாங்களாமே. இந்தம்மா இடுகை போடுறது பெருசே இல்லை சார். :))//

அட அது என்ன சார் பெரிய மேட்டரு .. இந்தக் காலத்தில நகத்திலயும்.. முடிலையும்.. படம் வரையுறாங்க தெரியுமா.. இத பத்தி யார் பேசுறது.. அது மட்டுமா.. அந்தக் காலத்து மாமல்லன்.. மகேந்திரவர்மனுக்கு போட்டியா.. தலைமுடில கலர் கலரா சிற்பமே செதுக்குறாய்ங்கையா.. அந்தக் காலம் அந்தக் காலம்னு என்னய்யா பேசிக்கிட்டிருக்கீக.. சுத்த வெவரங் கெட்டத்தனமால்ல இருக்கு..

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

முதல் 2 வரியும் திருக்குறள்னு நினைச்சென்.. நல்ல வேளை அடுத்த வரியிலையே சொல்லிட்டிங்க. :)

...திருச்சிற்றம்பலம்...//

பரவால்ல சஞ்சய்.. எதுவும் குத்துப் பாட்டுன்னு நினைக்கலையே.. அது வரைக்கும் ஓகே.. வள்ளுவரும்.. மாணிக்கவாசகரும் உங்களை மன்னித்து விட்டார்கள்.. இப்போதான் மெயில் வந்திச்சி..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/தலைமுடில கலர் கலரா சிற்பமே செதுக்குறாய்ங்கையா.. அந்தக் காலம் அந்தக் காலம்னு என்னய்யா பேசிக்கிட்டிருக்கீக.. சுத்த வெவரங் கெட்டத்தனமால்ல இருக்கு../

இப்புடியெல்லாம் வேற நடக்குதா? இத ஒரு இடுகையா போட்டிருக்கலாம்ல.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/தலைமுடில கலர் கலரா சிற்பமே செதுக்குறாய்ங்கையா.. அந்தக் காலம் அந்தக் காலம்னு என்னய்யா பேசிக்கிட்டிருக்கீக.. சுத்த வெவரங் கெட்டத்தனமால்ல இருக்கு../

இப்புடியெல்லாம் வேற நடக்குதா? இத ஒரு இடுகையா போட்டிருக்கலாம்ல.//

எங்க சார் விடுறீங்க.. எல்லாம் கேள்வி பதிலாவே போயிடுறது.. இதெல்லாம் மதனின் கேள்வி பதில்கள் மாதிரி.. ப்ரியாவின் பதில்கள்னு ஒரு தொகுப்பு போடலாம்னு இருக்கேன்..

Sanjai Gandhi said...

பார்த்தேன் ப்ரியா.. எனக்கும் சிசி போட்டிருக்காங்க.. 2வது வரிக்கு நேரா ஒரு கோடு போட்டு குறிப்பு சொல்லாம விட்டதுக்கு உங்க தலைல நாலே முக்கால் குட்டு வைக்க சொன்னதை சொல்லாம விட்டுட்டிங்களே.. :)

உங்க மெயில் ஐடி சொல்லுங்க.. சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன். :)

Sanjai Gandhi said...

//ப்ரியாவின் பதில்கள்னு ஒரு தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.. //

என்னா ஒரு வில்லத்தனம்.. எல்லாரும் சீக்கிறம் ஓடிடுங்க... :)

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

பார்த்தேன் ப்ரியா.. எனக்கும் சிசி போட்டிருக்காங்க.. 2வது வரிக்கு நேரா ஒரு கோடு போட்டு குறிப்பு சொல்லாம விட்டதுக்கு உங்க தலைல நாலே முக்கால் குட்டு வைக்க சொன்னதை சொல்லாம விட்டுட்டிங்களே.. :)//

உங்க மெயில் ஐடி சொல்லுங்க.. சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன். :)//

என்னோட மெயில் ஐ டி தெரியலையா.. (அப்பாடா..).. அப்போ அது எனக்கு வந்த மெயில் இல்லீங்க.. இங்க சி சி எல்லாம் வரலைங்க..

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

//ப்ரியாவின் பதில்கள்னு ஒரு தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.. //

என்னா ஒரு வில்லத்தனம்.. எல்லாரும் சீக்கிறம் ஓடிடுங்க... :)//

ரவுண்டு கட்டி அடிப்போம்ல.. யாரங்கே..

Sanjai Gandhi said...

//என்னோட மெயில் ஐ டி தெரியலையா.. (அப்பாடா..).. //

ரொம்ப சந்தோஷப் பட வேணாம்.. எப்போவாச்சும் தெரியும் போது ஒருநாளைக்கு 100 மெயில் அனுப்புவேன்..

Sanjai Gandhi said...

//ரவுண்டு கட்டி அடிப்போம்ல.. யாரங்கே..//

பரவால்லை.. ஆனா அந்த கொலை முயற்சி மட்டும் வேணாம்.. வானம்பாடிகள் தலைமைல டீ குடிச்சிடுவோம்.. :)

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

//என்னோட மெயில் ஐ டி தெரியலையா.. (அப்பாடா..).. //

ரொம்ப சந்தோஷப் பட வேணாம்.. எப்போவாச்சும் தெரியும் போது ஒருநாளைக்கு 100 மெயில் அனுப்புவேன்..//

ஆஹா எச்சரித்தமைக்கு நன்றிப்பா..

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

//ரவுண்டு கட்டி அடிப்போம்ல.. யாரங்கே..//

பரவால்லை.. ஆனா அந்த கொலை முயற்சி மட்டும் வேணாம்.. வானம்பாடிகள் தலைமைல டீ குடிச்சிடுவோம்.. :)//

ஒரு நிமிஷம்.. வானம்பாடிகள் தலை(உருளுதே)லன்னு படிச்சு.. கிரவுண்டு அவ்ளோ பெர்சாவா இருக்குன்னு நினைச்சிட்டேன்... (உங்கள மாதிரி ஒரு தொப்பி வாங்கி கொடுக்கணும்..)

vasu balaji said...

SanjaiGandhi said...

/வானம்பாடிகள் தலைமைல டீ குடிச்சிடுவோம்.. /

ஆஹா. தலைமைல டீ குடிச்சா காசு யாரு தாறது:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஒரு நிமிஷம்.. வானம்பாடிகள் தலை(உருளுதே)லன்னு படிச்சு.. கிரவுண்டு அவ்ளோ பெர்சாவா இருக்குன்னு நினைச்சிட்டேன்.../

அதானே. மைதானம் பார்த்தா மீட்டிங் போட்டுடறதா?:))

(உங்கள மாதிரி ஒரு தொப்பி வாங்கி கொடுக்கணும்..)

டாங்க்ஸ்மா.

R.Gopi said...

//ஆஹா.. இவருதான் அங்க ஸ்கூல் பெல் அடிச்சிட்டிருந்தார் போல.. சும்மா சொல்லக் கூடாதுப்பா.. கணீர்னு இருக்கு..//

ஏரியா உள்ள வந்ததுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா??? யப்பா....

"திருச்சிற்றம்பலம்"..........

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

SanjaiGandhi said...

/வானம்பாடிகள் தலைமைல டீ குடிச்சிடுவோம்.. /

ஆஹா. தலைமைல டீ குடிச்சா காசு யாரு தாறது:))//

ரெயில்வே கணக்கில எழுதிடலாம் ஐயா.. லல்லூ பிரசாத்து.. நமஹே

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ஒரு நிமிஷம்.. வானம்பாடிகள் தலை(உருளுதே)லன்னு படிச்சு.. கிரவுண்டு அவ்ளோ பெர்சாவா இருக்குன்னு நினைச்சிட்டேன்.../

அதானே. மைதானம் பார்த்தா மீட்டிங் போட்டுடறதா?:))

(உங்கள மாதிரி ஒரு தொப்பி வாங்கி கொடுக்கணும்..)

டாங்க்ஸ்மா.//

ஓசில தொப்பின்னா.. உடன பாயுறாங்கப்பா.. அதும் ரயில்வே கணக்குதான்..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/ரெயில்வே கணக்கில எழுதிடலாம் ஐயா.. லல்லூ பிரசாத்து.. நமஹே/

தோ. அந்தாளே பாவம் பதவியில்லாம அலைஞ்சிண்டு சோனியா ஜி ய பிரியவே மாட்டேன்னு கெஞ்சுது. இதுல இந்த கணக்கு வேறயா.

கலகலப்ரியா said...

//R.Gopi said...

//ஆஹா.. இவருதான் அங்க ஸ்கூல் பெல் அடிச்சிட்டிருந்தார் போல.. சும்மா சொல்லக் கூடாதுப்பா.. கணீர்னு இருக்கு..//

ஏரியா உள்ள வந்ததுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா??? யப்பா....

"திருச்சிற்றம்பலம்"..........//

ஐயயோ.. நான் என்ன பண்ணேன்.. அவ்வ்வ்வ்வ்.... ஜஸ்ட் எ கெஸ்.. ஐயா.. :((

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ரெயில்வே கணக்கில எழுதிடலாம் ஐயா.. லல்லூ பிரசாத்து.. நமஹே/

தோ. அந்தாளே பாவம் பதவியில்லாம அலைஞ்சிண்டு சோனியா ஜி ய பிரியவே மாட்டேன்னு கெஞ்சுது. இதுல இந்த கணக்கு வேறயா.//

இதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா.. டீக்காப்பே .. டீக்கப்பே மாதிரி.. ரயிலு அண்ட் லல்லு ரைம் தான் மேட்டரு..

ஆரூரன் விசுவநாதன் said...

பல்லோறும் ஏத்தப் பணிந்து......

சான்ஸே இல்ல ப்ரியா.....

அன்புடன்
ஆருரன்

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிச்சு முடியலை..அப்பறம் அடுத்து நகை புராணம்,’

கண் புராணம், இப்பிடி ஆரம்பிக்க போறிகளா?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம்! Su...(per)

ப்ரியமுடன் வசந்த் said...

வெவ்வெவெவெ....ஆசை தோசை அப்பள வடைன்னு நீங்க சொல்றது கேக்குது....ஹெ ஹெ ஹெ

thiyaa said...

உங்கள் நகபுராணம் நல்லாயிருக்கு சகோதரி

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

பல்லோறும் ஏத்தப் பணிந்து......

சான்ஸே இல்ல ப்ரியா.....

அன்புடன்
ஆருரன்//

:-s ethukku chance illaingireenga..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

சிரிச்சு முடியலை..அப்பறம் அடுத்து நகை புராணம்,’

கண் புராணம், இப்பிடி ஆரம்பிக்க போறிகளா?//

தம்பீ உன் கற்பனைக்கு அளவே இல்லையாப்பா..

கலகலப்ரியா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...//

நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

வெவ்வெவெவெ....ஆசை தோசை அப்பள வடைன்னு நீங்க சொல்றது கேக்குது....ஹெ ஹெ ஹெ//

ஐயோ தோசை சாப்டு ரொம்ப நாளாச்சுன்னு சொன்னேன்பா.. அத போயீ.. சின்னப் புள்ளதனமால்ல இருக்கு..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

உங்கள் நகபுராணம் நல்லாயிருக்கு சகோதரி//

நன்றி பேனா / தியா..

vasu balaji said...

:D. இதுவும் யூத்ஃபுல் விகடன்ல தேர்வாகி இருக்கு. பாராட்டுகள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

:D. இதுவும் யூத்ஃபுல் விகடன்ல தேர்வாகி இருக்கு. பாராட்டுகள்.//

nanringo..

+Ve Anthony Muthu said...

நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

//+VE Anthony Muthu said...

நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்.//

Nanri mudhu..!

அது சரி(18185106603874041862) said...

//
மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின
//

இப்ப எந்த க்ளாஸ்???

அது சரி(18185106603874041862) said...

//
அவளின் அசாதாரண உயரத்தின் உபயம்,
//

சுய விளம்பரம் :0)))))

Unknown said...

நல்ல நகச்சுவையா எழுதிருக்கீங்க.. அது சரி.. சுவச்சவுங்களுக்குத்த் தான தெரியும். ஒரு நகம் கடிக்கிற கேப் ல 'மாணிக் வாஷா' வைலாம் இழுத்து பிரேயர் நடத்தியாச்சு.. அடுத்து என்ன எழுதப் போறீங்கன்னு நகம் கடிச்சிட்டு டென்சனா உக்காரவச்சிட்டீயலே..

கலகலப்ரியா said...

////
மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின
//

இப்ப எந்த க்ளாஸ்???//

LKG..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
அவளின் அசாதாரண உயரத்தின் உபயம்,
//

சுய விளம்பரம் :0)))))//

இதுவா..? அது சரி..

கலகலப்ரியா said...

//rajesh said...

நல்ல நகச்சுவையா எழுதிருக்கீங்க.. அது சரி.. சுவச்சவுங்களுக்குத்த் தான தெரியும். ஒரு நகம் கடிக்கிற கேப் ல 'மாணிக் வாஷா' வைலாம் இழுத்து பிரேயர் நடத்தியாச்சு.. அடுத்து என்ன எழுதப் போறீங்கன்னு நகம் கடிச்சிட்டு டென்சனா உக்காரவச்சிட்டீயலே..//

ஆஹா.. உங்க கைவிரல்களைக் கப்பாத்தறதுக்காவது ஏதோ எழுத ட்ரை பண்றேன்..

Sanjai Gandhi said...

//இப்ப எந்த க்ளாஸ்???//

LKG..//

உங்கள கேட்டா உங்க கொழந்தை படிப்பு சொல்றிங்க.

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

//இப்ப எந்த க்ளாஸ்???//

LKG..//

உங்கள கேட்டா உங்க கொழந்தை படிப்பு சொல்றிங்க.//

ஓ.. என்னைத்தான் கேட்டாங்களா..? சாரிங்க.. மிடில் கிளாஸ்ங்க..

ஆரூரன் விசுவநாதன் said...

இப்படி மொக்க போடத்தான்

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

இப்படி மொக்க போடத்தான்//

ஆஹா.. கிளம்பிட்டாய்ங்கையா கிளம்பிட்டாய்ங்க.. (யார்தான் சான்ஸ் கேட்டு மொக்கை போடுறா சொல்லுங்க.. ஹெஹெ)

அது சரி(18185106603874041862) said...

//
"படிப்பு விஷயத்தில அடி வாங்காத உனக்கு, விதி நக ரூபத்தில வருதேடி".
//

//
///
மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின
//

இப்ப எந்த க்ளாஸ்???//

LKG..
//

ஆஹா....க்ளாஸ்ல டாப் இஸ்டூடண்ட் போலருக்கே....நெம்ப நல்லா படிச்சிருக்கீங்க ப்ரியா :0)))))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
:D. இதுவும் யூத்ஃபுல் விகடன்ல தேர்வாகி இருக்கு. பாராட்டுகள்.

September 22, 2009 8:04 PM
//

நான் இன்னும் விகடன் படிக்கலை....வாழ்த்துக்கள் ப்ரியா...

நான் பாட்டுக்கு சும்மா கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா, நீங்க பெரிய ரவுடியா இருப்பீங்க போலருக்கே...கடைப் பக்கம் எதுனா ஆட்டோ அனுப்பிடாதீங்க :0))))

சிங்கக்குட்டி said...

நல்லாயிருக்குங்க :-)) தொடர்ந்து கலக்குங்க .

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
"படிப்பு விஷயத்தில அடி வாங்காத உனக்கு, விதி நக ரூபத்தில வருதேடி".
//

//
///
மூன்றாம் வகுப்பில், முதல் வரிசையில் நின்று சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் கண்கள், குவித்திருந்த அவள் கரங்களை நோக்கின
//

இப்ப எந்த க்ளாஸ்???//

LKG..
//

ஆஹா....க்ளாஸ்ல டாப் இஸ்டூடண்ட் போலருக்கே....நெம்ப நல்லா படிச்சிருக்கீங்க ப்ரியா :0)))))//

நீங்கதான் சொல்லாம இருந்திச்சு.. இப்போ நீங்களும் சொல்லிட்டீங்க..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
வானம்பாடிகள் said...
:D. இதுவும் யூத்ஃபுல் விகடன்ல தேர்வாகி இருக்கு. பாராட்டுகள்.

September 22, 2009 8:04 PM
//

நான் இன்னும் விகடன் படிக்கலை....வாழ்த்துக்கள் ப்ரியா...

நான் பாட்டுக்கு சும்மா கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா, நீங்க பெரிய ரவுடியா இருப்பீங்க போலருக்கே...கடைப் பக்கம் எதுனா ஆட்டோ அனுப்பிடாதீங்க :0))))//

என்னது.. ஆட்டோ இன்னும் வரலையா.. ஆஹா.. அது சரி கடைக்கு போக சொன்னா.. அல்வா கடைக்கு போய்ட்டான் போலயே..

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

நல்லாயிருக்குங்க :-)) தொடர்ந்து கலக்குங்க .//

நன்றிங்க.. மூளை (அது இருக்குதுங்க ) கொஞ்சம் ஸ்டிரைக் பண்ணுதுங்க.. பார்க்கலாம்..

Mark K Maity said...

ஐயா. சுப்பர். I am crazy over u. ur really nice. very creative. why dont u post ur blog in tamilmanam.net. more hits. keep it. up.

கலகலப்ரியா said...

//Mark K Maity said...

ஐயா. சுப்பர். I am crazy over u. ur really nice. very creative. why dont u post ur blog in tamilmanam.net. more hits. keep it. up.//

ty sooo much.. well.. my posts 'do' exist in Tamilmanam & vice versa.. ya might've missed it.. it's on da top of da post.. thx again..

Radhakrishnan said...

நகைச்சுவையுடன் மிகவும் அழகாக எழுதப்பட்டு இருக்கிறது. சிவபுராணம் மூன்றாம் வகுப்பில் படித்தபோதே சொல்லித்தரப்பட்டதா? அட! அற்புதமான எழுத்து.

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

நகைச்சுவையுடன் மிகவும் அழகாக எழுதப்பட்டு இருக்கிறது. சிவபுராணம் மூன்றாம் வகுப்பில் படித்தபோதே சொல்லித்தரப்பட்டதா? அட! அற்புதமான எழுத்து.//

முதலாம் வகுப்பிலிருந்தே வெள்ளிக் கிழமை தோறும்.. சிவபுராணம்.. மூன்றாம் வகுப்பில் தண்ணி பட்ட பாடமுங்க..

ரொம்ப நன்றிங்க..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

நான் பாட்டுக்கு சும்மா கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா, நீங்க பெரிய ரவுடியா இருப்பீங்க போலருக்கே...கடைப் பக்கம் எதுனா ஆட்டோ அனுப்பிடாதீங்க :0))))//

என்னது.. ஆட்டோ இன்னும் வரலையா.. ஆஹா.. அது சரி கடைக்கு போக சொன்னா.. அல்வா கடைக்கு போய்ட்டான் போலயே..

September 24, 2009 9:25 PM
//

ஆஹா...மீ த எஸ்கேப்பு....

(ஆமா...நீங்க பழைய பாக்கியே ரொம்ப தரணுமாமே....ஆட்டோக்காரன் என்கிட்ட பொலம்புனான்....)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

நீங்கதான் சொல்லாம இருந்திச்சு.. இப்போ நீங்களும் சொல்லிட்டீங்க..

September 24, 2009 9:23 PM
//

உயிரை பணயம் வச்சாலும் உண்மையை மட்டும் பேசறதுங்கிறது என்னோட கொள்கை முடிவு :0)))

அது சரி(18185106603874041862) said...

ஆமா...மூணு நாளா லாங் ஹாலிடேவா? உங்களை மூணு நாளா காணோமே??

கலகலப்ரியா said...

//அது சரி said...

ஆமா...மூணு நாளா லாங் ஹாலிடேவா? உங்களை மூணு நாளா காணோமே??//

நீங்க வேற... ! ஹாலிடேன்னா கும்மி அடிக்க மாட்டோமா.. அவ்வ்வ்வ்வ்வ்..

கலகலப்ரியா said...

//அது சரி said...

உயிரை பணயம் வச்சாலும் உண்மையை மட்டும் பேசறதுங்கிறது என்னோட கொள்கை முடிவு :0)))//

நல்ல பாலிசிங்க.. கான்டினியூ... .. கான்டினியூ...

கலகலப்ரியா said...

//அது சரி said...

ஆஹா...மீ த எஸ்கேப்பு....

(ஆமா...நீங்க பழைய பாக்கியே ரொம்ப தரணுமாமே....ஆட்டோக்காரன் என்கிட்ட பொலம்புனான்....)//

அப்டியா சொன்னான்.. ஆ..! ஆட்டோவுக்கே ஆட்டோ அனுப்ப வைக்கிறானே..!

தமிழ் அஞ்சல் said...

)):!


):~!

கலகலப்ரியா said...

azhuvaatheenga pls..

நான் said...

எனக்கு புரியல..

கலகலப்ரியா said...

//ராம் குமார் said...

எனக்கு புரியல../

பரவால்ல விடுங்க... =)