header photo

Monday, January 18, 2010

வந்துட்டம்ல... வந்துட்டம்ல..

சர்ர்ர்ர்..... ம்ம்.. எனக்கு ஃப்ளுங்க.. எனக்கு ஃப்ளு... ஆக்சு'வலி'.. இந்தத் 'தலைவலி' நியூ இயர் அன்னிக்கே வரும்... திஸ் இயர் தப்பிச்சதுன்னு நினைச்சேன்... (என்னது தப்பிச்சதுன்னு சொல்றேன்னு பார்க்கறீங்களா... நம்ம கிட்ட ஃப்ளு மாட்டினாலும் அதுக்குதான் திண்டாட்டமுங்கோ..).. ஆனா அது சொந்த செலவில சூனியம் வச்சுக்கிட்டு அடுத்த ட்ரெயின் புடிச்சு நேரா இங்க வந்துடிச்சு... இதுவே ஸ்வைன் ஃப்ளுன்னா இன்ஜெக்ஷன் ஏதும் போடாமலேயே வக்சினேட் பண்ணிடலாமேன்னு பார்த்தா... அபசகுனமா பேசறேன்னு நட்பு வட்டாரம் துப்புது... ஃப்ளு மேல அவ்ளோ அக்கறை.. ஹும்...

புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. யாரு? எல்லாம் நம்ம தொண்டப் பெருமக்கள்தான்.. (நம்பலைனா நானா பொறுப்பு... ) .. அதான் ஃப்ளு மொக்கை ஆரம்பிச்சிட்டேன்..

முதல்ல தமிழ்மணம் அவார்ட் கிடைச்ச எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்... நாம பத்துக்குள்ள வந்ததே பெரிய மேட்டருபா... அதுக்கே எத்தன வாழ்த்து.. ஸ்ஸ்ஸ்ஸபா.. =)) முடியல... உங்களுக்கும் முடியலையா... அப்பச்செரி...

நம்ம கதிரு நட்சத்திர பதிவரானது ரொம்ப ஹாப்பியா கீதுபா.... நட்சத்திரம் பத்தி என்ன போட்டிருக்குன்னு.. க்ளிக் பண்றப்பவே கண்ணு பத்தி வரும்னு நினைச்சேன்... அப்டியே வந்திச்சி.. இன்னொண்ணு அவங்க ப்ளட் டொனேட் பண்ற மேட்டரு.. சிம்ப்ளி கிரேட்பா.. ஒரு வேளை தப்பித்தவறி நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க.. (ம்க்கும் ஆயிட்டாலும்) இது எனக்கு ரொம்ப  ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்பா... எப்டின்னு கேட்டீங்கன்னா... என்னது கேக்க மாட்டீங்களா... நாம சொல்லுவோமில்ல...

முதல் வாட்டி ப்ளட் கொடுக்க போனேன்... யோசிச்சு யோசிச்சு எடுத்தாங்க... அப்புறம் மூணு மாசம் கழிச்சு போனேன்... ஆர் யூ வெஜிடேரியன்..? இன்னும் மூணு மாசம் கழிச்சு வான்னாங்க... திரும்பவும் டயரில டேட் குறிச்சு வச்சுக்கிட்டு போனேனுங்க... உதட்டைப் பிதுக்கி.. நோ வே உனக்குத்தான் நாம ப்ளட் கொடுக்கணும் அப்டின்னுட்டாங்க... வாட் அன் இன்சல்ட்... போங்கடா வெவரங்கெட்ட பயலுவளா... நான் கொசுவுக்கே கொடுக்கறேன் ப்ளட்ன்னு சொல்லிட்டு.. வெறுத்துப் போய் வந்துட்டேன்.. பின்னே என்னங்க.. இன்ஜெக்ஷன் பார்த்தாலே அலர்ற பார்ட்டி நாம... இவ்ளோ பண்ணது எவ்ளோ பெரிய மகத்தான சாதனைன்னு யாருக்காவது புரியுமா... அவ்வ்வ்வ்...

அப்புறம் கண்ணு பத்தி சொல்லணும்னா... நான் நிறையப் பேரு கண்ணை நோண்டணும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்... முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... ரொம்ப ராசியான கண்ணு அப்டின்னு..  எனக்கு ரொம்பப் புடிச்ச புத்தரு சொல்லி இருக்காரு..  என்னது உங்க பேரு அந்த லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கணுமா..? எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?

அப்புறம் ஒரு சீரியஸ் மேட்டர்... அது என்னன்னா "நோ" சொல்லக் கத்துக்கணும்... நாம ஃப்ளு கூட மொக்கை போட்டுக்கிட்டிருக்கிறப்போ.. யாராவது ஃபோன் பண்ணி.. எனக்கு விரல் சுளுக்கிடிச்சு.. வீட்டுக்கதவு திறக்க முடியல.. நீ கொஞ்சம் வந்து சன்னல உடைச்சு உள்ள பாய்ஞ்சு கதவில கீ கொடுத்துட்டு.. எனக்கு வெந்நீர் வச்சு கொடுக்கிறியான்னு கேட்டா... த்தோ வந்துட்டே இருக்கேன்னு போகாம... ஐ வில் கால் த போலீஸ் அப்டின்னாவது சொல்ல தெரியணும்.. இல்லைன்னாக்க நோ... ஐ ஆம் வெரி பிஸி வித் மை ஃப்ளுன்னு சொல்லணும்.. என்ன ஓக்கேயா? அட நீங்க வேற.. நான் என்னைச் சொன்னேன்..... ம்ம்... அப்புறம் ஃப்ளு இருக்கிற வரைக்கும் பெரிய பதிவுக்கெல்லாம் ஒரு பெரிய "நோ."...ஐ ஆம் வெரி ஸாரி... அவ்வ்வ்வ்.. அப்ப வர்ட்டா...குட்டு நைட்டு..

70 ஊக்கம்::

vasu balaji said...

மொதல்ல ஃப்ளூக்கு ஒரு டாங்ஸ் சொல்லிக்கிறேன். அப்பாடா. இப்பதான் கள கட்டுச்சி கலகலா:)). ஆரம்பமே டரியலா.

குடுகுடுப்பை said...

பொங்கல்னாலே எதுவும் ஆகலியே?

vasu balaji said...

/சர்ர்ர்ர்..... ம்ம்.. எனக்கு ஃப்ளுங்க../

எப்போம்மா. அட சை. சர்ர்ர்ர்ர்ர்ர்னு சிந்தினதா. நான் சார்னு சொல்றன்னு பார்த்தன்.

/புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. /

நானு நானு:))

//நாம பத்துக்குள்ள வந்ததே பெரிய மேட்டருபா... அதுக்கே எத்தன வாழ்த்து.. ஸ்ஸ்ஸ்ஸபா.. =)) முடியல... //

தோடா. ஹால் ஆஃப் ஃபேம்ல வரதுன்னா பெரிய விஷயமில்லையா.

/முதல் வாட்டி ப்ளட் கொடுக்க போனேன்... யோசிச்சு யோசிச்சு எடுத்தாங்க... /

இது எப்ப..

/வாட் அன் இன்சல்ட்... போங்கடா வெவரங்கெட்ட பயலுவளா... நான் கொசுவுக்கே கொடுக்கறேன் ப்ளட்ன்னு சொல்லிட்டு.. வெறுத்துப் போய் வந்துட்டேன்.. பின்னே என்னங்க.. இன்ஜெக்ஷன் பார்த்தாலே அலர்ற பார்ட்டி நாம... இவ்ளோ பண்ணது எவ்ளோ பெரிய மகத்தான சாதனைன்னு யாருக்காவது புரியுமா... அவ்வ்வ்வ்.../

=)). இதெல்லாம் ரொம்ப ஓவர் கலக்கல். யம்மாடி முடியல.

துபாய் ராஜா said...

வந்துட்டியளா...வந்துட்டியளா..

vasu balaji said...

/முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... ரொம்ப ராசியான கண்ணு அப்டின்னு.. //

லோகத்துல எந்த கண்ணு வேணா தானத்துக்கு எடுக்கலாம் இவன் கண்ணு காக்காய்க்குதான். தப்பில்ல.

/எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?/

ங்கொய்யால. டீலா. இல்லாட்டி அடுத்த நாள் பார்க்க கண்ணிருக்காதே.

/அது என்னன்னா "நோ" சொல்லக் கத்துக்கணும்.../

அதுக்குன்னு இடுகை போடுன்னா நோ சொன்னா நடக்கறது வேற.

/அப்புறம் ஃப்ளு இருக்கிற வரைக்கும் பெரிய பதிவுக்கெல்லாம் ஒரு பெரிய "நோ."...ஐ ஆம் வெரி ஸாரி... அவ்வ்வ்வ்.. அப்ப வர்ட்டா...குட்டு நைட்டு../

கலகலா பேக் டு ஃபார்ம்:)) குட்டு நைட்டு.

பாலா said...

///நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க.. (ம்க்கும் ஆயிட்டாலும்)///

இன்னாக்கா.. நீ...!! வினவு கூடவே மோதுன வீரத்திருமகள் ஆச்சே..!! நீதான்க்கா.., அடுத்த முதலமைச்சரு.

நேசமித்ரன் said...

கொசுவுக்கே ரத்தம் குடுத்துக்குறேன்
:))

சீக்கிரம் குணம் ஆகட்டும் ஃப்ளூ
ஓ! சாரி தப்பிக்கட்டும் ஃப்ளூ உங்ககிட்ட இருந்து

நிலாமதி said...

எங்களை....மிகவும் கல கலப்பாக் வைத்திருக்கும் .....உங்களை ..பாராடுகிறேன்

jothi said...

//உங்களுக்கும் முடியலையா... அப்பச்செரி... //

எப்புடி எப்புடி??

jothi said...

பாவம் ப்ளூ,.. ரௌத்ரம் தாங்காம ஓடிருக்கும்,உங்க பாலிவுட் பிரியையை பத்திரமா இருக்கச்சொல்லுங்க,..

jothi said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல நகைச்சுவை. இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்காக இந்த பதிவா??

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரொம்ப கலகலப்பாக இருக்கு பிரியா. இப்படி மொக்கைப் பதிவைப் போடச் சொன்ன பதிவர் யார் அம்மா? கை எடுத்துக் கும்பிடத்தான். கவிஜை எழுத கன பேர் இருக்காங்க. நம்மை இப்பிடிச் சிரிக்க வைக்க நீ இருக்கே.

jothi said...

//கவிஜை எழுத கன பேர் இருக்காங்க.//

புரியாத மாதிரி எழுதறதுக்கு ஒருத்தர் மட்டுமே இருக்காங்க

thamizhkudi said...

எப்பா சாமி இது தமிழா தமிங்கிலிசா? சகோதரி..ஏற்கெனவே பாதிபேர் இங்கு... லெப்டுல திரும்பு.. அங்க வெள்ளை கலர் சுடிதார் போட்ட பிகர் ஒன்று நிற்கும் என்று கொல்லுகிறார்கள்.. தாங்கள் புது மொழியை ஏதாவது கிளப்பிட்டு கிளம்பவேண்டாம்....

நசரேயன் said...

//ஒரு வேளை தப்பித்தவறி நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க//

கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் அதிலே சந்தேக படவே வேண்டாம்

Anonymous said...

//இன்னாக்கா.. நீ...!! வினவு கூடவே மோதுன வீரத்திருமகள் ஆச்சே..!! நீதான்க்கா.., அடுத்த முதலமைச்சரு.//

அதானே :)

அது சரி(18185106603874041862) said...

Get well soon....

Chitra said...

அக்கோவ், உங்களுக்கு காய்ச்சல் அடிக்காது. காய்ச்சலை நீங்க அடிக்கிறீங்க னு பதிவை பாத்து தெரிஞ்சிகிட்டேன். இப்போ, காய்ச்சல் எப்படி இருக்கு?

cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா - நோ சொல்லக் கத்துக்காணும் - ஆமா - அது தேவையான ஒன்று

நல்லாவே இருக்கு ப்ஃளூ மொக்கை

நல்வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா.....வந்துட்டாய்யா.....

கலக்கறதுக்குன்னே வந்திட்டீங்க....ம்ம்

கலக்குங்க.....

Paleo God said...

வாங்க...::)
கொசு சுகம்தானே..:)

சைவகொத்துப்பரோட்டா said...

சரியான லக...லக...
தங்கள் வருகைக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

//புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. யாரு?//

மெரட்டுன வீரன்.... நான் தானுங்கோ!!!

ஈரோடு கதிர் said...

//நான் நிறையப் பேரு கண்ணை நோண்டணும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்... முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... //

இது ஏன்....!!!

ஆனால் அதிகமான கண்கள் தானம் பெறப்படுவது இலங்கையில்தான்

Unknown said...

ஃப்ளூவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்..

// எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?//

எங்க வீட்டுக்கு எப்ப லிஸ்ட் வரும்னு மட்டும் சொல்லுங்க..

நல்லா ரெஸ்ட் எடுங்க. லிக்யுட் (சரக்கு இல்ல) நெறைய சேத்துக்குங்க..டீஹைட்ரேட் ஆகாமப் பாத்துக்குங்க..டேக் கேர்.

பித்தனின் வாக்கு said...

ஆகா என் மொக்க ஜோக் படிச்சதுக்கே புளூவா? தாங்காதும்மா சாமி. இரண்டாம் பாகம் போட்டாச்சு. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும். நன்றி.

சிங்கக்குட்டி said...

//நோ வே உனக்குத்தான் நாம ப்ளட் கொடுக்கணும் அப்டின்னுட்டாங்க... //

ஹ ஹ ஹா... தொப்பி தொப்பி....(சந்திரமுகி சிரிப்பு)

Jerry Eshananda said...

கலக்கல் பிரியா,

பிரபாகர் said...

காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்து கழண்டு ஓடிடுச்சி போலிருக்கு... வாங்க சகோதரி, இடுகை இன்னும் கலகலன்னு இருக்கு...

பிரபாகர்.

sathishsangkavi.blogspot.com said...

/சர்ர்ர்ர்..... ம்ம்.. எனக்கு ஃப்ளுங்க../

என்னங்க ப்ளு போயிருச்சா...

பதிவப் பார்த்த இன்னும் இருக்கற மாதிரி இருக்கு...

மணிஜி said...

:))(sirikkiromle)

மணிப்பக்கம் said...

I love k k p .... ;)

(கவிதை எழுதாத வரைக்கும்! )

புலவன் புலிகேசி said...

ஃப்லுவ கேட்டேன்னு சொல்லுங்க. அப்பறம் கதிருக்கு வாழ்த்துக்கள்.

balavasakan said...

அக்கா விரைவில் உங்களுக்கு ஒரு ஷாக் ரீட்மென்ட இருக்கு எதிர்பாருங்கள்

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...//

நன்றி ஸார்... இதுக்கு போய் இவ்ளோ காமெண்டா முடியல...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

பொங்கல்னாலே எதுவும் ஆகலியே?//

அவ்வ்வ்வ்... அந்தக் கொடுமைய என் வாயால எப்டி சொல்லுவேன்.. =))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

வந்துட்டியளா...வந்துட்டியளா..//

வாங்க ராஜா... :)

கலகலப்ரியா said...

//ஹாலிவுட் பாலா said...

///நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க.. (ம்க்கும் ஆயிட்டாலும்)///

இன்னாக்கா.. நீ...!! வினவு கூடவே மோதுன வீரத்திருமகள் ஆச்சே..!! நீதான்க்கா.., அடுத்த முதலமைச்சரு.//

சாமீ... என்னது தெரியாத பேரெல்லாம் சொல்றீங்க... மோதுறேனா..? எண்ட குருவாயூரப்பா... இப்டி எத்தன பேரு கெளம்பி இருக்காய்ங்க...

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

கொசுவுக்கே ரத்தம் குடுத்துக்குறேன்
:))

சீக்கிரம் குணம் ஆகட்டும் ஃப்ளூ
ஓ! சாரி தப்பிக்கட்டும் ஃப்ளூ உங்ககிட்ட இருந்து//

ஹிஹி... நன்றி நேசமித்ரன்...

கலகலப்ரியா said...

//நிலாமதி said...

எங்களை....மிகவும் கல கலப்பாக் வைத்திருக்கும் .....உங்களை ..பாராடுகிறேன்//

நன்றி நிலாமதி...

கலகலப்ரியா said...

//jothi said...//

நன்றி ஜோதி... பாவம் கவுஜ போட்டு இவ்ளோ தூரம் வெறுப்பேத்திட்டேனா ரொம்ப சாரி...

கலகலப்ரியா said...

//ஊர்சுற்றி said...

:)//

:)

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

ரொம்ப கலகலப்பாக இருக்கு பிரியா. இப்படி மொக்கைப் பதிவைப் போடச் சொன்ன பதிவர் யார் அம்மா? கை எடுத்துக் கும்பிடத்தான். கவிஜை எழுத கன பேர் இருக்காங்க. நம்மை இப்பிடிச் சிரிக்க வைக்க நீ இருக்கே.//

ஐயோ ஜெஸ்வந்தி.. உங்க கால் எங்கே... ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//thamizhkudi said...

எப்பா சாமி இது தமிழா தமிங்கிலிசா? சகோதரி..ஏற்கெனவே பாதிபேர் இங்கு... லெப்டுல திரும்பு.. அங்க வெள்ளை கலர் சுடிதார் போட்ட பிகர் ஒன்று நிற்கும் என்று கொல்லுகிறார்கள்.. தாங்கள் புது மொழியை ஏதாவது கிளப்பிட்டு கிளம்பவேண்டாம்....//

வாங்க வாங்க... வரணும்... இப்டி இருந்துட்டு எப்போவாவது தங்கிலிஷ் ஓர் இன்க்டமில் போட்டுக்கிறதுதானுங்க... ஊர்ல உள்ளவங்களுக்கு புரியுதில்ல... ஹிஹி... "தமிழ்க்குடி" இங்கிலீஷ் ல போட்டு வச்சிருக்கீங்களே... பாருங்களேன்...

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

//ஒரு வேளை தப்பித்தவறி நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க//

கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் அதிலே சந்தேக படவே வேண்டாம்//

=)) நன்றி நசரேயன்...

கலகலப்ரியா said...

//சின்ன அம்மிணி said...

//இன்னாக்கா.. நீ...!! வினவு கூடவே மோதுன வீரத்திருமகள் ஆச்சே..!! நீதான்க்கா.., அடுத்த முதலமைச்சரு.//

அதானே :)//

அம்மிணி இல்லாத ஊருக்கு வழி காட்டுறீங்களே.. இது நியாயமா... =))

கலகலப்ரியா said...

//அது சரி said...

Get well soon....//

ty..:)

கலகலப்ரியா said...

//Chitra said...

அக்கோவ், உங்களுக்கு காய்ச்சல் அடிக்காது. காய்ச்சலை நீங்க அடிக்கிறீங்க னு பதிவை பாத்து தெரிஞ்சிகிட்டேன். இப்போ, காய்ச்சல் எப்படி இருக்கு?//

அடி தாங்காம நைஞ்சு நாரா போய் பினாத்திக்கிட்டிருக்கு... நாளைக்கு ஓடியே போய்டும்... =))

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா - நோ சொல்லக் கத்துக்காணும் - ஆமா - அது தேவையான ஒன்று

நல்லாவே இருக்கு ப்ஃளூ மொக்கை

நல்வாழ்த்துகள்//

வாங்க சீனா... நன்றி..:)

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா.....வந்துட்டாய்யா.....

கலக்கறதுக்குன்னே வந்திட்டீங்க....ம்ம்

கலக்குங்க.....//

நன்றி ஆரூர்...

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...

வாங்க...::)
கொசு சுகம்தானே..:)//

வாங்க பலா... அப்டித்தான் நினைக்கிறேன்... =))

கலகலப்ரியா said...

// சைவகொத்துப்பரோட்டா said...

சரியான லக...லக...
தங்கள் வருகைக்கு நன்றி.//

உங்களுக்கும் நன்றி சைவகொத்து...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. யாரு?//

மெரட்டுன வீரன்.... நான் தானுங்கோ!!!//

அப்பாடா ரெண்டாவது தொண்டரும் நான் சொன்னது நிஜம்ன்னு சொல்லிட்டாருங்கோ...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//நான் நிறையப் பேரு கண்ணை நோண்டணும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்... முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... //

இது ஏன்....!!!

ஆனால் அதிகமான கண்கள் தானம் பெறப்படுவது இலங்கையில்தான்//

அப்டியா.... புதுத் தகவலுக்கு நன்றி...! (ஆமா நான் கோத்தபாய கண்ணு நோண்டுறதில உங்களுக்கு என்ன பிரச்சன..)

கலகலப்ரியா said...

// முகிலன் said...

ஃப்ளூவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்..

// எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?//

எங்க வீட்டுக்கு எப்ப லிஸ்ட் வரும்னு மட்டும் சொல்லுங்க..

நல்லா ரெஸ்ட் எடுங்க. லிக்யுட் (சரக்கு இல்ல) நெறைய சேத்துக்குங்க..டீஹைட்ரேட் ஆகாமப் பாத்துக்குங்க..டேக் கேர்.//

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி முகிலன்..... ம்ம்... இருக்கட்டு இருக்கட்டு... மைண்ட்ல ரெகார்ட் பண்ணிக்கறேன்..

கலகலப்ரியா said...

// பித்தனின் வாக்கு said...

ஆகா என் மொக்க ஜோக் படிச்சதுக்கே புளூவா? தாங்காதும்மா சாமி. இரண்டாம் பாகம் போட்டாச்சு. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும். நன்றி.//

ஆ...! நான் இங்க இல்ல.... நான் இங்க இல்ல... (ஏன் இந்தக் கொலைவெறி...)

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

//நோ வே உனக்குத்தான் நாம ப்ளட் கொடுக்கணும் அப்டின்னுட்டாங்க... //

ஹ ஹ ஹா... தொப்பி தொப்பி....(சந்திரமுகி சிரிப்பு)//

ஹிஹி... அந்த தொப்பிக்கு அர்த்தம் புரியல... ஹிஹி...

கலகலப்ரியா said...

//ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல் பிரியா,//

நன்றி ஜெரி... :D

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்து கழண்டு ஓடிடுச்சி போலிருக்கு... வாங்க சகோதரி, இடுகை இன்னும் கலகலன்னு இருக்கு...

பிரபாகர்.//

நன்றிண்ணா... அது ஓடிடும்...

கலகலப்ரியா said...

//Sangkavi said...

/சர்ர்ர்ர்..... ம்ம்.. எனக்கு ஃப்ளுங்க../

என்னங்க ப்ளு போயிருச்சா...

பதிவப் பார்த்த இன்னும் இருக்கற மாதிரி இருக்கு...//

அவ்வ்வ்வ்..... வாட் அன் இன்சல்ட்..

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

:))(sirikkiromle)//

ஏன் மணிஜி.. நீங்க நேர்ல சிரிக்கிறப்போதான் சொல்லிட்டு சிரிக்கிறீங்க அல்லது சிரிச்சிட்டு சொல்லுறீங்கன்னு கேள்வி.... ஆனா அந்த பழக்கதோஷத்தில இப்டி அடைப்புக்குறிக்குள்ள போடணுமா... ஸ்மைலி போட்டா புரிஞ்சுக்குவோம்ல..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

I love k k p .... ;)

(கவிதை எழுதாத வரைக்கும்! )//

ty mani :D.. lemme write a poem.. right now... mudiyala.. avvv..

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

ஃப்லுவ கேட்டேன்னு சொல்லுங்க. அப்பறம் கதிருக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி புலிகேசி... கண்டிப்பா சொல்றேன்... ஃப்ளு மற்றும் கதிரு கிட்ட.. =))

கலகலப்ரியா said...

//Balavasakan said...

அக்கா விரைவில் உங்களுக்கு ஒரு ஷாக் ரீட்மென்ட இருக்கு எதிர்பாருங்கள்//

ஷாக் ஆய்ட்டேன்... இனிமே யாராவது சோடா கொடுத்து எழுப்பி விட்டாதான் உண்டு..

பா.ராஜாராம் said...

பத்ரம்டா.

Sateesh said...

mokkai

கலகலப்ரியா said...

நன்றி பா.ரா.. :)

சதீஷ்.. அதான் நான் லேபல்ல போட்டிருக்கேனே... அப்புறம் என்ன கான்பர்மேஷனு

Sanjai Gandhi said...

சொந்த சமையல சாப்ட வேணாம்னா யார் கேக்கறாங்க?

கலகலப்ரியா said...

// SanjaiGandhi™ said...

சொந்த சமையல சாப்ட வேணாம்னா யார் கேக்கறாங்க?//

கேட்டுக்கிடுங்க மக்கா... சஞ்சய் சொந்த சமையல் சாப்டறப்போ மட்டும்தான் இடுகை போடுவாகளாம்... வருஷத்ல மொத்தம் எத்தன இடுகைன்னு எண்ணிக்கோங்கோ..(செரிதானே அப்பு...)

Sathik Ali said...

//அது என்னன்னா "நோ" சொல்லக் கத்துக்கணும்//
சாரி ஐ யாம் பிஸி நோ இதுக்கெல்லாம் பின்னூட்டமிட நேரமில்ல.