header photo

Sunday, September 5, 2010

மனிதம் என்று சொல்லிக் கொள்பவையும்... மாற்றுக் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் லட்சணமும்...

லெட்சணம் நம்.1

தேவையோ, தேவையில்லையோ பெரும்பாலானவர்கள் இன்று குர்ரான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவிற்சர்லாந்தில் ஓரிரு மாநிலங்களில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த குழந்தைகள் முக்காடிட்டு பள்ளிக்குச் செல்வது சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதை மீறி முக்காடிட்டுச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் மணிக்கணக்கில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். 

ஒரு பாடசாலையில் ஒரு அம்மணி மிக மிகப் புத்திசாலித்தனமான ஒரு நிபந்தனையை முன் மொழிந்திருக்கிறார். அதாவது, முக்காடிட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தை, இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஐந்து தடவை தொழுகை செய்ய வேண்டும், வகுப்பு நேரத்திலும். அதற்கான அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். 

பலே! பிரமாதமான விடயம் என்பது போல் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்குப் புரியவில்லை!!! 

அதை எப்படி நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமென்று நான் கேட்டால், “இது கட்டாயப்படுத்தல் அல்ல, அவர்கள் விரும்பாததைச் செய்யச் சொல்லவில்லை, அவர்கள் விரும்புவதைச் செய்யச் சொல்கிறோம்” என்கிறார் ஒருவர் மிக மிகப் புத்திசாலித்தனமாக. எதேச்சையாகப் பார்த்தால் அவர் கையில் ஒரு குர்ரான் இருந்தது.  

கழுத்தில் சிலுவை சுமந்திருக்கும் எல்லாரும் ஞாயிறு தோறும் தேவாலயம் செல்ல வேண்டும். முட்டுக்காலில் உட்கார்ந்து சிலுவையிட்டுத் தொழுகை செய்தல் வேண்டுமென்றால், அதுவும் கட்டாயப்படுத்தல் இல்லையா?!

நான் வருடத்தில் ஓரிரு முறை, (முழுநிலவுக் காலங்களில் மட்டுமாக இருக்கலாம்) காதணி அணிந்து கொள்கிறேன். தலைமுடியை விரித்தே விட்டிருக்கிறேன். ஆனால் பொட்டு மட்டும் அணிந்திருப்பேன். ஏதோ ஒரு அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும் நோக்கமோ... ஆரம்பத்திலிருந்தே... பொட்டில்லாது என்னை நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதிருப்பதோ காரணமாக இருக்கலாம். சில காலங்களில் நேரமின்மை காரணமாகவோ என்னவோ பொட்டின் தேவை இல்லாது போகலாம். ஆனால் யாராவது என்னிடம் வந்து, பொட்டணிந்து கொள்வதானால், அலுவலகத்திற்கு ஜீன்ஸ் தவிர்த்துப் புடவையில் வர வேண்டும், காதணி வேண்டும், குண்டலம் வேண்டும், மூக்குத்தியும், காது மாட்டியும் வேண்டும், இந்துமதச் சடங்குகள் எல்லாம் பின்பற்ற வேண்டுமென்றால், சின்னாபின்னமாகக் கடித்துக் குதறிவிடும் அபாயம் இருக்கிறது. 

அணுகுமுறை... அணுகுமுறை என்று ஒரு இளவு இருக்கிறதென்கிறார்கள்.... ”இளவு” என்ற சொல்லைப் பயன்படுத்தாதே என்று அம்மா சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் என் வசதிக்குச் சொல்லிக்கொள்ள வேற வார்த்தை கிடைக்கவில்லை. என்ன இளவு இது...?!

___________________________________________________________________________

லெட். நம்.2

எரிட்ரியாவிலிருந்து வந்த மூன்று குழந்தைகள் அடங்கிய குடும்பமொன்றிற்கு வசதியான ஒரு நகரசபை வழங்கிய வீட்டில் இரண்டு அறைகள். அதில் ஒரு அறையை எத்தியோப்பியர் ஒருவருக்குக் கொடுத்திருந்தார்கள். அவர் சென்றதும் அந்த அறையை ஆறு மாத காலமாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். வைக்கோற் போர் நாய்கள் எங்கெல்லாம் இருக்கின்றன. இதற்கும் போய் என்ன இளவு இது என்று கேட்டால் ”ஆப்பிரிக்காவில் அடுக்கடுக்காய்ப் படுத்திருப்பது வழக்கம்தானே என்கிறார்கள்” அடடா... மாற்றுக் கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வை மெச்சாதிருக்க முடியவில்லை... 

___________________________________________________________________________

லெட். நம். 3

ஒரு சூடான் நாட்டவர் வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமா இருக்கிறதென்று, வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கூறினால், ஆப்பிரிக்காவில் கரப்பான்பூச்சியுடன் வாழ்ந்த உங்களுக்கு இதிலென்ன கஷ்டம்?! என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்கள்.

___________________________________________________________________________

அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள்ள விழுறது இந்த இளவுதானோ.... 

எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. 

__________________________________________________________________________

57 ஊக்கம்::

vasu balaji said...

லெ.நம்.1:
/இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஐந்து தடவை தொழுகை செய்ய வேண்டும், வகுப்பு நேரத்திலும். அதற்கான அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். /

இங்கயே மத்ரஸா பள்ளிகளில் இருக்குமோ தெரியாது. மற்ற பள்ளிகளில் இல்லையே.

மதம் எதுவாயினும் உடையில், தோற்றத்தில் நிர்ப்பந்தம் சரிவராது. அணுகுமுறை தனக்கு வரும்போது வேறாயிருப்பதே கலாச்சாரம்:o)//

லெ.ந.2 & 3: அடப்பாவிகளா. எல்லா இடத்துலயும் இப்படி இருப்பாங்களோ? இது என்ன விதமா பரவுது?

/அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள்ள விழுறது இந்த இளவுதானோ....
எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

இருக்கிற டென்ஷன்ல இதுவும்தான். ட்ரெய்ன்ல சுண்டல் தின்னுட்டு, வேர்கடலை தோலிய போடுறவங்கள சொல்லாம இருக்க முடியல. அதுவும் ஓரக் கண்ணுல பார்த்துகிட்டு ஸீட் கீழ நைசா போடுறவங்க கூட குறைந்த பட்சம் முறைக்கவாவது சொல்லுது.

vasu balaji said...

மேலதிகத் தகவலுக்கு: அரசு ஊழியர்களுக்கான ட்ரெஸ் கோட் இது: ஆண்கள்: வேட்டி,முழுக்கால் சட்டை முழுக்கை சட்டை, டை(விருப்பப்படி)கோட்(விருப்பப்படி),தலைப்பாகை அல்லது தொப்பி(விருப்பப்படி).

பெண்கள்:புடவை, அல்லது சூடிதார்.

ஜீன்ஸ், டி ஷர்ட் எல்லாம் போட்டுகிட்டு வராங்கதான். ஆனா ஒரு கோக்கு மாக்கு ஆசாமி ட்ரெஸ்கோட் சரியில்லைன்னு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்:o)

Jey said...

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது.//

சித்திரை பொறந்ததும்...எங்கூர் வந்து சேருங்க...மஞ்சத் தண்ணி ஊத்தி பூக்குழி இரங்கி, அப்படியே கொஞ்சம் மந்திரிச்சி விட்டா சாந்தியாயிடுவீங்க...:)

Ahamed irshad said...

தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது///

எங்களுக்கெல்லாம் அதெல்லாம் போயிருச்சு.. இப்போதைக்கு ஓட்டுப் போட பணம் வந்தா போதும். ரத்தக் கொதிப்புக்கு மாத்திரை வாங்கவாவது பயன்படும்..

Ahamed irshad said...

கொலை செய்யும் வெறி///

இனிமே நீங்க 'கொல கொலப் பிரியா'

sakthi said...

எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது.

எப்போ இந்தியா வருவீங்கன்னு ஆவலோடு காத்திருக்கின்றாம் இந்தியன் தாத்தா

பவள சங்கரி said...

விரும்புவது எதை வேண்டுமானால் செய்ய்லாம் என்றால் அது எப்படி பள்ளியாகும்?.........பள்ளிவாசலாகவல்லவா இருக்கும்...... அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள்ள விழுறது இந்த இளவுதானோ....
எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. .....ரௌத்திரம் பழக வேண்டிய, அவசியமான கால கட்டம் தான்.......நானும் ஆமோதிக்கிறேன் ப்ரியா.....

a said...

//
எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

ஐய்யய்யோ...

ஆனா உங்கள இந்தியன்பாட்டினு கூப்பிட முடியாதே.....

ருத்ர வீணை® said...

ஏன் இந்த ரத்த வெறி.. (வடிவேல் தொணியில் சொல்லிக்கொள்ளவும்) :-)

அது சரி(18185106603874041862) said...

//
முக்காடிட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தை, இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஐந்து தடவை தொழுகை செய்ய வேண்டும், வகுப்பு நேரத்திலும். அதற்கான அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
//

அப்போ பாடம் என்னாகறது? அது நாசமா போனா பரவாயில்லையா இல்லை இவங்களுக்காக எல்லாரும் எல்லாத்தையும் நிறுத்திட்டு வெயிட் பண்ணனுமா?

அது சரி(18185106603874041862) said...

//
அதை எப்படி நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமென்று நான் கேட்டால், “இது கட்டாயப்படுத்தல் அல்ல, அவர்கள் விரும்பாததைச் செய்யச் சொல்லவில்லை, அவர்கள் விரும்புவதைச் செய்யச் சொல்கிறோம்” என்கிறார் ஒருவர் மிக மிகப் புத்திசாலித்தனமாக. எதேச்சையாகப் பார்த்தால் அவர் கையில் ஒரு குர்ரான் இருந்தது.
//

விரும்புகிறோம்னு இவர் கிட்ட கையெழுத்து போட்டு கொடுத்தாங்களா?

ஆ.ஞானசேகரன் said...

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

எல்லோருக்கும் வந்து போகும் ஒன்றுதான் ப்ரியா...

vinthaimanithan said...

அப்படியே சரஸ்வதி வந்தனம் பாடச்சொன்ன மேட்டரையும் தொட்டிருக்கலாமே சகோதரி?!

இனிய தமிழ் said...

நியாயமான கோபம் தான்...

Anonymous said...

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

ஹஹ்ஹஹா ஏன் ஏன் இப்படி நல்லாத் தானா போய்கிட்டு இருக்கு...சமயத்தில் தோன்றுகிறது தூரோகிகள் எண்ணிக்கை எல்லா உறவுகளிலும் அதிகமா இருப்பதால் யோசிக்கிறேன்....

Anonymous said...

//தலைமுடியை விரித்தே விட்டிருக்கிறேன். ஆனால் பொட்டு மட்டும் அணிந்திருப்பேன். ஏதோ ஒரு அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும் நோக்கமோ... ஆரம்பத்திலிருந்தே... பொட்டில்லாது என்னை நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதிருப்பதோ காரணமாக இருக்கலாம். சில காலங்களில் நேரமின்மை காரணமாகவோ என்னவோ பொட்டின் தேவை இல்லாது போகலாம். ஆனால் யாராவது என்னிடம் வந்து, பொட்டணிந்து கொள்வதானால், அலுவலகத்திற்கு ஜீன்ஸ் தவிர்த்துப் புடவையில் வர வேண்டும், காதணி வேண்டும், குண்டலம் வேண்டும், மூக்குத்தியும், காது மாட்டியும் வேண்டும், இந்துமதச் சடங்குகள் எல்லாம் பின்பற்ற வேண்டுமென்றால், சின்னாபின்னமாகக் கடித்துக் குதறிவிடும் அபாயம் இருக்கிறது.
அணுகுமுறை... அணுகுமுறை என்று ஒரு இளவு இருக்கிறதென்கிறார்கள்....//

ஆமாம் தேவையான இடங்களில் இந்த பழாய் போன அணுகு முறையை யாரும் அணுகுவதில்லை...எங்க வூட்டுகாரரும் அப்படித்தான் ஒரு நொடி நெத்தியில் பொட்டு இல்லைன்னா எனக்கு மட்டுமல்ல என் மகளுக்கும் அப்படியே மிரட்டி உருட்டி எடுக்கிறார்...என்னமோ அதோட பொறந்த மாதிரி இல்லை இவரை பார்த்த உடன் தான் பொட்டிட்ட மாதிரி....கடித்து குதறினால் போதாது...

ஆரூரன் விசுவநாதன் said...

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

ரொளத்திரம் இன்னும் கொஞ்சம் பழக வேண்டுமோ?????????????

Anonymous said...

//இது கட்டாயப்படுத்தல் அல்ல, அவர்கள் விரும்பாததைச் செய்யச் சொல்லவில்லை, அவர்கள் விரும்புவதைச் செய்யச் சொல்கிறோம்” என்கிறார் ஒருவர் மிக மிகப் புத்திசாலித்தனமாக//
அவன் அவனுக்கு என்ன தோணுதோ அத பண்ண விட மாட்டானுக இந்த மாதிரி பரதேசிங்க...இந்த மாதிரி மூதேவிகள போட்டு தள்ளுறது தான் சரின்னு தோணுது.....
//கழுத்தில் சிலுவை சுமந்திருக்கும் எல்லாரும் ஞாயிறு தோறும் தேவாலயம் செல்ல வேண்டும். முட்டுக்காலில் உட்கார்ந்து சிலுவையிட்டுத் தொழுகை செய்தல் வேண்டுமென்றால், அதுவும் கட்டாயப்படுத்தல் இல்லையா?!//
யார் அங்கே....இந்த அக்காவை வாரம் 7 முறை (.....)கைக்கு அனுப்புங்கள்... கடவுள் இவருக்கு நல்ல புத்தி மதி கொடுக்கட்டும்... (அக்கா:-இத நான் சொல்லல.. இது மாதிரி உங்களுக்கு மிரட்டல் வந்தாலும் வரலாம்...)

// ”இளவு” என்ற சொல்லைப் பயன்படுத்தாதே என்று அம்மா சொல்லிக் கொடுத்தார்கள்.//
நீங்களா சொல்ல வந்தது இந்த "இழவு" என்று நினைக்கிறேன்.... பிழை இருந்தால் மன்னிக்கவும்...

//லெட். நம்.2 & லெட். நம்.3 //
போங்கடா சாவு கிராக்கி நாயிகளா...வந்துட்டானுக மெத்த படிச்சு கிழிச்ச மேதாவிக....

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

கொஞ்ச நாள் யோகா போங்க.....

டிஸ்கி:- உங்களோட கவிதை ஒரு மண்ணும் புரிய மாடேங்குது.. அதுனால வானம்பாடி ஐயா/ அப்புறம் அது சரி அண்ணன் இந்த மாதிரி பலருடைய பின்னூட்டத்திலிருந்து நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரிய வேண்டியது இருக்கு... :)

ராஜ நடராஜன் said...

பிரச்சினையே இந்திய தா(தா)க்கள்தான்:)

மணிகண்டன் said...

எனக்கு எரித்ரியா மற்றும் எதியோப்பிய சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் இந்த பின்னூட்டத்தில் பதிவு செய்துக்கொள்கிறேன். #comment like ramjiyahoo

கலகலப்ரியா said...

நன்றி பாலா சார்..
||
லெ.ந.2 & 3: அடப்பாவிகளா. எல்லா இடத்துலயும் இப்படி இருப்பாங்களோ? இது என்ன விதமா பரவுது?||

ம்ம்... கொஞ்சமே கொஞ்சம் தலைய நீட்டுது... கவலை + எரிச்சல்..

கலகலப்ரியா said...

||அஹமது இர்ஷாத் said...||

நன்றி அஹமது இர்ஷாத்..

கலகலப்ரியா said...

|| Jey said...||

ஹும்... என்ன கொடுமை சார் இது..

கலகலப்ரியா said...

||sakthi said...||

சக்தி... வர்றப்போ சொல்றேன்... ஆளுயர ரோஜா மாலை எல்லாம் ரெடி பண்றதுக்கு பணம் வசூல் பண்ண ஆரம்பிங்க...

கலகலப்ரியா said...

|| நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
விரும்புவது எதை வேண்டுமானால் செய்ய்லாம் என்றால் அது எப்படி பள்ளியாகும்?...||

ம்ம்... அவங்க ஒரு கான்செப்ட்ன்னு யோசிக்கிறாங்க.. பின்விளைவு தெரியாம... எடுத்துச் சொன்னா சரி ஆயிடும்...

கலகலப்ரியா said...

||வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஐய்யய்யோ...

ஆனா உங்கள இந்தியன்பாட்டினு கூப்பிட முடியாதே.....||

ஆகா... மக்கள் உஷாராதான்யா இருக்காய்ங்க... கூப்பிட முடியாதுதான்.. :o)

கலகலப்ரியா said...

||ருத்ர வீணை® said...
ஏன் இந்த ரத்த வெறி.. (வடிவேல் தொணியில் சொல்லிக்கொள்ளவும்) :-)||

அதுதான் சொல்லிட்டீங்களே... நான் வேற சொல்லணுமா...

கலகலப்ரியா said...

||அது சரி said...
அப்போ பாடம் என்னாகறது? அது நாசமா போனா பரவாயில்லையா இல்லை இவங்களுக்காக எல்லாரும் எல்லாத்தையும் நிறுத்திட்டு வெயிட் பண்ணனுமா?||

பாடம் நடக்கும்... குழந்தைக்குச் சங்கடம்... நோக்கம் அதுதான்... விளைவு விபரீதமா இருக்கலாம்...

கலகலப்ரியா said...

||அது சரி said...

விரும்புகிறோம்னு இவர் கிட்ட கையெழுத்து போட்டு கொடுத்தாங்களா?||

குர்ரான் சுருக்கம் படிச்சுட்டு இப்டி அதிகப்பிரசங்கித்தனமா உளர்றாங்க...

கலகலப்ரியா said...

||ஆ.ஞானசேகரன் said...||

அது சரி...

கலகலப்ரியா said...

|| விந்தைமனிதன் said...
அப்படியே சரஸ்வதி வந்தனம் பாடச்சொன்ன மேட்டரையும் தொட்டிருக்கலாமே சகோதரி?!||

அது என்னதுங்க?! ... எனக்குத் தெரியாத மேட்டர்ன்னு நினைக்கிறேன்..

கலகலப்ரியா said...

||இனிய தமிழ் said...
நியாயமான கோபம் தான்...||

நன்றி தமிழ்..

கலகலப்ரியா said...

||தமிழரசி said..

ஆமாம் தேவையான இடங்களில் இந்த பழாய் போன அணுகு முறையை யாரும் அணுகுவதில்லை...எங்க வூட்டுகாரரும் அப்படித்தான் ஒரு நொடி நெத்தியில் பொட்டு இல்லைன்னா எனக்கு மட்டுமல்ல என் மகளுக்கும் அப்படியே மிரட்டி உருட்டி எடுக்கிறார்...என்னமோ அதோட பொறந்த மாதிரி இல்லை இவரை பார்த்த உடன் தான் பொட்டிட்ட மாதிரி....கடித்து குதறினால் போதாது...||

நன்றி தமிழரசி... ஓ!!! ... இது வேறைங்க... என்னோட விருப்பத்தின் பேரில் பொட்டு அணிந்து கொள்கிறேன்... வீட்ல யாரும் எதும் சொல்றதில்ல...

உங்கள மாதிரி மிரட்டினா... அதுக்காகவே பிடிச்சாலும் பொட்டுப் போடாம ஸ்ட்ரைக் பண்ணுவேன்... ரொம்ப வீம்புங்க...

(மொக்கை போடுறன்னு கத்தினா... டபுள் மொக்கை போடற மாதிரிங்க..)

கலகலப்ரியா said...

||ஆரூரன் விசுவநாதன் said...
ரொளத்திரம் இன்னும் கொஞ்சம் பழக வேண்டுமோ?????????????||

நீங்க வேற... எனக்குப் பயம்மாருக்கு...

கலகலப்ரியா said...

||நல்லவன் கருப்பு... said...||

நன்றிங்க கருப்பு... நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க...

புரியற மாதிரிக் கவிதை எழுத எனக்குத் தெரியலை.. :(

கலகலப்ரியா said...

|| ராஜ நடராஜன் said...
பிரச்சினையே இந்திய தா(தா)க்கள்தான்:)||

இப்போ என்ன... என்னை ரவுடின்னு நேரா சொல்ல வேண்டியதுதானே..

கலகலப்ரியா said...

||மணிகண்டன் said...
எனக்கு எரித்ரியா மற்றும் எதியோப்பிய சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் இந்த பின்னூட்டத்தில் பதிவு செய்துக்கொள்கிறேன். #comment like ramjiyahoo||

எனக்குச் சூடான் மரவள்ளிக்கிழங்குப் பொரியல் மிக மிகப் பிடிக்குமென்று கூறிக் கொள்கிறேன்.. (காமெண்ட் லைக் மணிகண்டன்..)

ஆட்டையாம்பட்டி அம்பி said...

கலாச்சாரம் என்றால் என்ன? அதற்க்கு விளக்கம் எனக்கு இது வரை புரியவில்லை. அறிஞர்கள் விளக்குவார்களா?

1925, 1950. 1975, 2000, வந்த பழைய பத்திரிக்கைகளை புரட்டிப் பார்க்கும் பொழுது அப்பொழுதும் இதே புலம்பல் --- நம்ம கலாச்சாரம் அழிந்து விட்டது அழிகிறது என்று?

எனது கேள்விகள்?

1). நமது கலாச்சாரம் அழிந்துவிட்டதா?
2). அல்லது எது நமது கலாச்சாரம்?

1925-ல் அனுசரித்தா?
1950-ல் அனுசரித்தா?
1975-ல் அனுசரித்தா?
2000-ல் அனுசரித்தா?
அல்லது இப்ப உள்ள கலாச்சாரமா?

மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் மாறாதது என்று ஒரு அறிஞன் சொன்னான்!

கலகலப்ரியா said...

||ஆட்டையாம்பட்டி அம்பி said...

மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் மாறாதது என்று ஒரு அறிஞன் சொன்னான்!||

வாங்கோ அம்பி... நமஸ்காரம்..

||கலாச்சாரம் என்றால் என்ன? அதற்க்கு விளக்கம் எனக்கு இது வரை புரியவில்லை. அறிஞர்கள் விளக்குவார்களா? ||

அறிஞர்கள் விளக்கினா இந்த அறிவிலிக்கும் எடுத்துரைத்தருளுமாறு வேண்டப்படுகிறீர்கள்...

||1925, 1950. 1975, 2000, வந்த பழைய பத்திரிக்கைகளை புரட்டிப் பார்க்கும் பொழுது அப்பொழுதும் இதே புலம்பல் --- நம்ம கலாச்சாரம் அழிந்து விட்டது அழிகிறது என்று?||

இதே புலம்பல்?! இங்கு யாரும் கலாச்சாரம் அழிகிறதுன்னு புலம்பின மாதிரி எனக்குத் தெரியலையே..

||எனது கேள்விகள்?||

ஓ... இனிமேதான் கேள்வியா... அப்போ இவ்ளோ நேரம் கேட்டதென்ன...

||1). நமது கலாச்சாரம் அழிந்துவிட்டதா?
2). அல்லது எது நமது கலாச்சாரம்?||

கலாச்சாரம்னாலே என்னன்னு தெரியல... இதில இப்டி ஒரு கேள்வி... என்னத்த சொல்றது... எனக்குத் தெரியாதுங்க... என்னைப் பொறுத்தவரைக்கும்... கலாச்சாரமோ கருமாந்திரமோ... நாசமாப் போனா சந்தோஷப்படுவேன்... நாடு கொஞ்சம் முன்னேறும்..


||1925-ல் அனுசரித்தா?
1950-ல் அனுசரித்தா?
1975-ல் அனுசரித்தா?
2000-ல் அனுசரித்தா?
அல்லது இப்ப உள்ள கலாச்சாரமா?||

நாசமாப் போச்சு...

ஈரோடு கதிர் said...

||கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று||

ஊருக்கு வரப் போறீங்களா

அதுக்கான ”பில்டப்”போ

ஆட்டையாம்பட்டி அம்பி said...

My apologies for writing with out a rider such as "இது இந்தப் பதிவைப் பற்றியது அல்ல. போதுவாக கலாசாரத்திற்கு கும்மி அடிக்கும் கிழட்ஸ்களுக்கும் இலசுகளுக்கும்."

அவர்கள் அந்த காலத்தில் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபர்த்க்கு எழுதினேன்.

கலாசாரத்திற்கு கும்மி அடிக்கும் நண்பர்களுக்கு தான் அந்த கேள்வி
கலாசாரம் என்றால் என்ன என்று.

ஏன் என்றால் கல்சாரத்திற்கு என்ன அர்த்தம என்று இது வரை எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் கூறலாம்.

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
||கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று||

ஊருக்கு வரப் போறீங்களா

அதுக்கான ”பில்டப்”போ||

ஒன்னியும் பயப்டாதீங்க... அதெல்லாம் நிதானமா வருவோம்...:))

கலகலப்ரியா said...

||ஆட்டையாம்பட்டி அம்பி said...
My apologies for writing with out a rider such as "இது இந்தப் பதிவைப் பற்றியது அல்ல. போதுவாக கலாசாரத்திற்கு கும்மி அடிக்கும் கிழட்ஸ்களுக்கும் இலசுகளுக்கும்."||

அர்ர்ர்ரே... அட்ரா சக்க... அட்ரா சக்க... ஆட்டையாம்பட்டி அம்பி எனும் பெயரை இயக்கப் பெயராகத் தாங்கிய என் தம்பி... அல்லது தங்கை... கிழடுக்கும் இளசுக்கும் நடுவில் இரண்டுங்கெட்டானாக நிரந்தரமாகத் தங்கிவிடப்போகும் தும்பி... நோக்கம் ஒன்றும் புரியாமலில்லை... அதே ... த ஸேம்.. பொல்லுக் கொடுத்துப் பல்லு உடைப்பிக்க முயலும் செயல்... ஏன் அம்பி... எல்லாரும் களைச்சுப் போய் இப்போ உன் கிட்ட பணியைக் கொடுத்துட்டாய்ங்களா....

kalakalapriya extinguisher... =)))).. my foot...

கலகலப்ரியா said...

||அவர்கள் அந்த காலத்தில் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபர்த்க்கு எழுதினேன்.||

நீங்களெல்லாம் சொல்லி... மற்றவர்கள் தெரிந்து கொண்டு... உர்ர்ர்ர்ருப்பட்ட மாதிரிதாண்டியோ... எத்தன பேரு இப்டி கெளம்பி இருக்கீங்க... சமுதாயத்தில.. முதியவன்... இளையவன்... இவனுக்கெல்லாம் இடமில்லைன்னு நினைச்சு... எக்காளம் செய்யக்கூடிய ஒரு இரண்டும் கெட்டானாகிய நீரெல்லாம்... மற்றவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்ர்ர்ர்ர்ர்ரா....

வெளங்க்க்கீரும்ம்ம்ம்ம்....

கலகலப்ரியா said...

||கலாசாரத்திற்கு கும்மி அடிக்கும் நண்பர்களுக்கு தான் அந்த கேள்வி
கலாசாரம் என்றால் என்ன என்று.||

கலாச்சாரத்துக்கு யாரு எங்க எப்டி கும்மி அடிச்சாங்கன்னு எல்லாம் கேக்க போறதில்ல... யார் யார் எதுக்கு கும்மி அடிச்சா நமக்கென்னப்பு... நீங்க சாராயத்துக்குக் கூடத்தான் கும்மி அடிக்கிறீங்க... நான் கேட்டேனா சாராயம் என்னன்னு...

இன்னும் உலகத்தில நிறைய வார்த்தைகள் இருக்குமே... எல்லாத்தையும் என் கிட்ட கேட்டுப் படிச்சுக்கிடலாமின்னு தோழர்வாள் சொன்னாளோ... ஓசில தோழருக்கு ட்யூஷன் எடுக்கதான் நான் அவதாரம் எடுத்திருக்கேனாக்கூ...

கலகலப்ரியா said...

||
ஏன் என்றால் கல்சாரத்திற்கு என்ன அர்த்தம என்று இது வரை எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் கூறலாம்.||

இந்த வெளம்பரத்துக்கு என்னோட இடுகைதான் கெடச்சுதாக்கு... இருக்கிற ஆயிரத்தித் தொள்ளாயிரத்து தொண்ணூத்தொம்பதரைத் தோழர்கள் (உருப்படி கணக்கு வேணுமின்னாக்க இரண்டால் பெருக்கவும்..) ... ம்ம் என்ன சொன்னேன்... ஆமா அவங்க பக்கத்தில இடம் கெடைக்கலாயாக்கூ... இல்லின்னா குவார்ட்டர் இல்லாம கும்மி அடிக்க விட மாட்டேன்னு சொல்லிட்டாய்ங்களாக்கூ...

அப்புறம்ம்ம்...

jothi said...

பதிவு நல்லாயிருக்கு,..

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

அப்ப ஹிட்டாயிருவீங்க,...

கலகலப்ரியா said...

||jothi said...
பதிவு நல்லாயிருக்கு,..

//எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. //

அப்ப ஹிட்டாயிருவீங்க,...||

வாங்க ஜோதி... நன்றி...

ஹிட்டா... ஆஹா.. ஒரு வார்த்த சொன்னாலும் திரு வார்த்த சொன்னீங்க... ஆன மாதிரித்தான் தோணுது... :o).. கேட்ச் த பாயிண்டு...

jothi said...

இப்பதான் எல்லா பின்னூட்டத்தையும் பார்த்தேன். எல்லாரும் இதே வரியைதான் அடிக்கோடிட்டிருக்காங்க,.. எல்லாருக்கும் நீங்க இந்தியன் தாத்தா ஆவதில்தான் சந்தோஷம் போல இருக்கு,..

//ஆன மாதிரித்தான் தோணுது..//

ஆனா ஊரே ஒன்னு கூடி மொத்து மொத்துன்னு மொத்தும்போது (ஒரே ஆள்,.வெவ்வேற பெயர்களில்தான்,..) யாரும் வர மாட்டாங்க,..இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடமப ரணகளமா ஆக்கிப்புடுவாங்க,.. எச்சரிக்கையா இருங்க,..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

௧. ரெம்பவே நல்ல மனசுக்காரங்களா இருக்காங்க சொன்னவங்க.. என்னா அக்கற என்னா அக்கற!!

௨. அண்ட் ௩. அங்க இருக்கற மாதிரியே இங்கயும் இருக்கறதுக்கு உங்க ஊருக்கு எதுக்குடா வந்தோம்ன்னு திருப்பிக் கேக்க முடிஞ்சா நல்லாத் தானிருக்கும்.. :((

jothi said...

ஓஓ,..

இதே வேளையாத்தான் இருக்காங்களா,..

கலகலப்ரியா said...

||jothi said...
இப்பதான் எல்லா பின்னூட்டத்தையும் பார்த்தேன். எல்லாரும் இதே வரியைதான் அடிக்கோடிட்டிருக்காங்க,.. எல்லாருக்கும் நீங்க இந்தியன் தாத்தா ஆவதில்தான் சந்தோஷம் போல இருக்கு,..

//ஆன மாதிரித்தான் தோணுது..//

ஆனா ஊரே ஒன்னு கூடி மொத்து மொத்துன்னு மொத்தும்போது (ஒரே ஆள்,.வெவ்வேற பெயர்களில்தான்,..) யாரும் வர மாட்டாங்க,..இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடமப ரணகளமா ஆக்கிப்புடுவாங்க,.. எச்சரிக்கையா இருங்க,..||

அவ்வ்... அந்த கடைசி வரி ஏன் எழுதினேன்னு எனக்குக் கூட ஃபீலிங்காயிடுத்து...

அப்புறம் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவங்க உடம்பத்தானே ரணகளமாக்கிக்கிறாய்ங்கன்னு சொன்னீங்க...

எனக்கு செமையா போர் அடிக்கிறப்போ... இந்தத் தருணங்கள் வாய்ப்பது வரம்... பயங்கர எனர்ஜிட்டிக் ஆயிடுவேன்... ஹிஹி..

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
௧. ரெம்பவே நல்ல மனசுக்காரங்களா இருக்காங்க சொன்னவங்க.. என்னா அக்கற என்னா அக்கற!!

௨. அண்ட் ௩. அங்க இருக்கற மாதிரியே இங்கயும் இருக்கறதுக்கு உங்க ஊருக்கு எதுக்குடா வந்தோம்ன்னு திருப்பிக் கேக்க முடிஞ்சா நல்லாத் தானிருக்கும்.. :((
||

ம்ம்... நன்றி சந்தனா.. அவங்க ஊர்ன்னு ஒரு மெதப்ஸ்தேன்...

ஆமா அது என்ன உ. அண்ட் ௩..

கலகலப்ரியா said...

|| jothi said...
ஓஓ,..

இதே வேளையாத்தான் இருக்காங்களா,..||

அத ஏன் கேக்கறீங்க ஜோதி... ட்ரெயினிங் பீரியட்ல... கலகலப்ரியாவைக் கலாய்ப்பது எப்படின்னு ட்ரெய்னிங் கூடக் கொடுக்கறாய்ங்களாமில்ல...

லேட்டஸ்ட் நூஸு..

கலகலப்ரியா said...

மாறாகக் கத்துக்குட்டிகளுக்குப் பாடம் சொல்றப்போ... அந்தப் பக்கம் போயிடாதீங்கடின்னு சொல்லி வச்சா... உடம்புக்கு நல்லதுன்னு யாருக்கும் புரிய மாட்டேங்குது...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

புது தமிழ் தட்டச்சுல (கூகிள்) ஒன்னு ரெண்டு மூணுன்னு அடிச்சா அதையும் தமிழ்ல காட்டுது :)))

கலகலப்ரியா said...

ம்க்கும்... ச்செரி ச்செரி... இப்டியாவது நாமளும் தமிழ் இலக்கம் கத்துக்கலாம்... :D... டாங்க்ஸு...