header photo
Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

Wednesday, June 9, 2010

எது நடந்ததோ... அது...

வினவு விடுத்த அறிக்கை.. அதனைத் தொடர்ந்து நான் அவர்களுக்கு அனுப்பிய மடல்.. கீழே.. ________________________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:

'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||

வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).

மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.

மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!

____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம். 
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்! 
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... 
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.. 
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்.. 
______________________________________________________________________________

Monday, June 7, 2010

தினவெடுத்த வினவும்.. வஞ்சினமும்.. அதுகள் தோழர்'காள்' செஞ்சினமும்..



பொல்லுக் கொடுத்துப் பல்லை உடைப்பித்து அதிற் கசியும் உதிரத்தின் ருசி கண்ட பேய்கள்.. மற்றவரைச் சுரண்டிச் சுரண்டி அவரின் திசுக்களின் இரத்தத்தை யாருமறியாது நக்கும் நாககரிகம் கற்ற தோழர்காளிவர்.. இரத்தச் சோகை கண்டு அந்த உயிர் மடிந்தால்.. மெதுவாக உதறி விட்டு.. வேறு திசு தேடிச்செல்லும் தினவு... அதுவே இறந்து மடியும் தருணத்தில்.. என் உதிரம் உறிஞ்சிய ஊளைநரி நீயெனக் கத்த எத்தனித்தால் போதும்... பாய்ந்து கழுத்தில் பல் பொருத்தி உறிஞ்சி எடுத்து விடும்..  எஞ்சிய உதிரத்துடன் அதன் உயிரையும்.. 


அதன் பிற்பாடு அவை எழுப்பும் ஊளைகளில் அந்தக் கொலைகள் மறைக்கப்பட்டுப்... புதுத் திசுக்கள் சுரண்டப்படும்.. 

இந்துப் பெண்பதிவர் என்ற ஊளையில் ஆரம்பித்த இரத்தக் கறை படிந்த அந்த அகோர நகங்கள் என்னை நோக்கி நீண்ட போது.. சற்றல்ல.. காத தூரம் விலகிப் போனேன்.. 

பார்ப்பனிய ஆதிக்கம் என்று தொடரும் ஊளையில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது சுரண்டல்.. அதன் அகோரக் கரங்கள் பரவியிருக்கும் திசைகள் தெரியாது... ஐயோ என்றதானதொரு பரிதாபத்தைக் என் குருதிச் சிந்தலின் வழியே கசிய விட்டிருக்கிறேன்.. 

விலகிப் போ என்கின்றன சில ஆதரவுக் கரங்கள்... இரும்பாகு என்கின்றன சில... கண்ணை மூடிக்கொண்டு உறங்கி விடு அல்லது உறங்குவது போன்றிரு என்கின்றன சில... 

யோசித்தேன்.. அடக்குமுறை.. அடக்குமுறை.. அடக்குமுறை.. இதன் மடியிலேயே பிறந்து.. இதன் மடியிலேயே புரண்டு அனுபவித்தது கொஞ்சம் நஞ்சமா.. வீதிகளில் பிச்சைக் காரர்கள் போன்று... காப்பாற்று... காப்பாற்று... என் இரத்த சொந்தங்களைக் காப்பாற்று.. என்று ஓலமிட்டு ஓய்ந்த போது.. அங்கு சிந்தி விட்டிருந்த இரத்தத்தை வைத்து ஐந்தாறு கிரகங்களைக் கழுவி விடலாம். 

இனியும் என்ன இருக்கிறது இழப்பதற்கு? என் உயிர் தங்கப் போகும் காலங்களின் சராசரி அளவு எனக்குத் தெரியும். அது வரைக்கும் இந்த ஊளைகளுக்குப் பயந்து.. பயந்தே சாவதுதான் விதியா? 

"இந்துப்பெண்" என்றதும்... "மரணமொக்கை" என்றதும்.. "வேசி" என்ற சொல்லுக்கு ஈடாகுமா என்பது இந்த ஊளைகளின் வலுவான வாதம். 

ஆனால்.. அதன் தொடராக.. இந்த ஊளைகளைக் கேட்டுவிட்டு வந்து.. குருட்டுத்தனமாகக் குதறிச்சென்ற ஓநாய்களைக் கேட்பது யார்? அது வினவுவாகக் கூட இருக்கலாம். அல்லது தினவெடுத்து எழுதியனுப்பும் தோழர் குழாமாகவும் இருக்கலாம். ஊகங்கள் வினவின் தினவுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தன்றே.  பாவம் அவர்களின் பின்னூட்டத்தின் பின் ஒளிந்திருக்கும் வேட்கை... அகோரத்தின் உச்சம். 

என்னை வக்கிரத்துடன் சொறிய வந்த ஒரு நரியின் ஊளையில்... சில திங்களுக்கு முன் இறந்த என் தாயாரும் அகப்பட்ட கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. தொண்டைக்கும், கண்களுக்குமிடையில் சில இழுபறிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்... எனக்குத் தெரியும்.. என் அன்னை அந்த நரியை மன்னித்து விட்டிருப்பார்... 

எந்த ஒரு காரணமுமன்றி என் பெயரை இழுத்ததன் பின்னால்... எனக்கு வந்த ஓரிரு பின்னூட்டங்களின் வக்கிரங்களுக்கு... அதன் பின்னால் விளைந்த வெட்டித் தம்பட்டங்களின் எதிர்வினைகளுக்கு... யார் பொறுப்பு..? என் பெயரை எழுதி வைத்து விட்டு... அதன்பால் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது... பார்ப்பனத் திமிர் என்றெழுதும்... தினவெடுத்த திமிருக்கு என்ன பெயர்? சகோதரம்... மாமன்.. மச்சான்... உறவுகளின் பெயரில் கண்டனமெழுப்புவோர்... மிக மிகக் கவனமாக என் பெயர் தவிர்த்து விட்டு... மற்றவை தவிர்க்கலாமென்று சொல்வதன் பின்னணியிலிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் நியாயமான காரணம் என்ன? 

அனுதாபம் தேடிக் கொள்வதாகவும்.. கள்ள மௌனம் சாதிப்பதாகவும்.. சந்திக்குச் சந்தி சாதித்தவர்களின் ஃப்ளெக்ஸிப்ளிட்டி.. இப்பொழுது எந்த நிலையில் உள்ளது? 

இந்துவாகப் பிறந்தது தவிர.. நான் ஜாதியற்றவள்... ஜாதி.. மதங்களுக்கு அப்பாற்பட்டவள்... என்பதைப் புரிந்து கொண்டால்.. இவ்வளவு நாள் எழுதினவையெல்லாம் சப்பையென்றாகி விடுமே... அதைத் தினவுக்கூட்டம் செய்ய முடியுமா... ஒருக்காலும் முடியாது... யாருடைய இரத்தத்தையோ உறிஞ்சிச் சாப்பிட்டு வயிறு வளர்க்கும் இவை சுரண்டுவதற்கு ஏதுவாக... நான் அதன் அழுக்கேறிய கோர நகங்களைச் சீவி விடுகிறேனென்று அறிந்தே இதை எழுதுகிறேன்... 

ஏனென்றால்.. என்னிடம் எஞ்சியிருப்பது என் உயிர் மட்டுமே... சதைப் பிண்டங்களாகக் குவிக்கப்பட்ட என் இரத்த சொந்தங்கள் போன்று.. எனது இரத்தச் சோகையின் கடைசிக் கட்டத்தில் நான் வாய் திறக்கச் சந்தர்ப்பம் இல்லாமலே போகலாம்... அதனால் இப்பொழுதே எழுதி வைத்து விடுகிறேன்..  

இன்னும் எத்தனை விளம்பரங்கள் வேண்டுமானாலும் வரலாம்.. எத்தனை கோர நகங்கள் வேண்டுமானாலும் நீளலாம்... கீழே உள்ள பட்டியல் தவிர்ந்த இன்னும் நூறாயிரம் இணைப்புகள் உருவாகலாம்.. என் பணி அல்லது கடமை நிமித்தம் இங்கு இது வரைக்கும் உள்ளது போன்ற தேக்கங்கள் வரலாம்... ஆனால்... புறமுதுகிட மாட்டேன். 

சில (அ)சிங்கங்கள் தங்கள் முகங்களை மறைப்பதற்கென்றே... என்னைப் போன்றவர்களின் குருதியை வாரி அவற்றின் முகங்களில் பூசிக் கொள்வதால் ஆங்காங்கு வடியும் அவற்றின் சீழ்களை மூடி விடலாமென்ற சின்னத்தனம்... அந்தச் சீழ்களின் துர்நாற்றத்தில் தெரிந்துவிடாதா? 

கேளும் தோழர்காள்... அதற்கு இதுவல்ல வழி..! சீழ்வடியுமிடங்களை வெண்பஞ்சு வைத்துத் துடைத்து.. மருந்திட... மேலும் பல வழிகளிருக்கின்றன... அதை நானும் கூடச் செய்ய முடியும்.. என் திசுக்களில் இரத்தம் உறிஞ்சப்படும் பொழுதும் கூட..! 






இன்னும் எத்தனை எத்தனை விளம்பரங்களோ... அறிந்தவர் தெரிந்தவர்... அவற்றையும் கொடுத்து உதவுங்கள்.. 

Monday, May 31, 2010

நான் ரொம்ப்ப்ப்ப டீசண்டுங்க...

என் டயரி

(இன்று நான் வினவு என்ற தளத்தில் இயங்குபவர்களைக் கிழிக்கப் போகிறேன். அதில் மதிப்புக்குரியவர்களும் இருக்கலாம்... ஏக வசனத்தில் பேசப் போகிறேன்... டா போட்டுப் பேசப் போகிறேன்... ஏன்... வினவு என்ற ஒன்றை... நான் ஒரு பொருளாகவே பார்க்கிறேன்... தேவையில்லாத சொறியல்கள் வேண்டாமென்று தடுக்க அவர்களுக்கு அருகதை இல்லாத பட்சத்தில்... எனக்கு வேறு வழி இல்லை...)

முக்கிய குறிப்பு: நான் நர்சிம் பற்றியோ... முல்லை பற்றியோ... அது சம்மந்தமாகவோ... எதுவும் எழுதுவதாக இல்லை...! அதைப் பற்றி எழுதுவதில்லை என்றிருக்கிறேன்...! அவர்கள் இருவர் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது...! இந்த மரண மொக்கைக்கு நர்சிம்-இன் எழுத்துகள் பல பிடித்திருக்கின்றன. முல்லையை நான் அறிந்திராததால் படித்ததில்லை. அவ்ளவுதான்..!

என்னைப் பொறுத்த வரைக்கும் ப்ளாக் என்பதை என்னுடைய பப்ளிக் டயரி என்றுதான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் எழுதுபவை மொக்கையோ, மரண மொக்கையோ, ஒன்றுமே இல்லையோ அதைப் படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பின் பேரிலேயே இருக்கிறது. விமர்சனமும் அவ்வகையே. என்னுடைய டயரியில் எத்தகைய விமர்சனங்களை அனுமதிப்பது என்பது என்னுடைய முடிவாக இருக்கிறது.

நாளாந்தம் நான் பார்க்கும் விடயங்களில் எனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை பற்றி எனக்குத் தெரிந்த மொழியில்... அல்லது பிடித்த மொழியில் எழுதி வைப்பதும்.. விமர்சிப்பதும் என்னுடைய சுதந்திரம்.

எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு, எந்த வித ஆதாரமும் இல்லாது ஒரு விடயத்தை விமர்சிப்பதோ, தனி மனிதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் குதறுவதோ என்னால் முடியாது. அது என் கடமையென்று யாராவது சொல்வார்களானால், மன்னிக்கவும் நான் பத்திரிகை கூட நடத்தவில்லை. (நான் பிறந்த என் ஈழ மண்ணில், கவனிக்க, என் மண்ணில் லட்சம் லட்சமாகக் கொள்ளிக்குக் கொடுத்தபோது பத்திரிகைகள் கூட ஒன்றும் புடுங்கவில்லை)

சென்ற வருடக் கடைசியில் என்னுடைய பெயர் குறிப்பிட்டு எழுதிய வினவு என்ற தளம் எனக்கு அறிமுகமானது. சென்று பார்த்தேன். "இந்துப் பெண்" கலகலப்ரியாவிற்கு.. என்று இருந்தது பார்த்துவிட்டுத் திரும்பி விட்டேன். என்னுடைய அந்தக் கவிதை என்னுடன் மிக நெருங்கிய நட்புடன் பழகும் பர்தா அணியாத முஸ்லிம் தோழிகளுக்காக என்று சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறார்களா வினவு மற்றும் அதன் ஆதரவாளர்கள்... ஹும்..

என்னுடைய ஒரு வருட நடவடிக்கையில், எத்தனை எத்தனை இஸ்லாம் நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன், கலந்துரையாடி இருக்கிறேன், சேர்ந்து பேசி உண்டு மகிழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் புரியுமா? என்னுடைய பணி, நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு எதையாவது எழுதிக் கொண்டே இருப்பதில்லை என்பது புரியுமா? அதை விடுத்து தினம் தினம், பல பல விதமான மக்களுடன், அவர்களின் பிரச்சனைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் புரியுமா...? புத்தகத்தில் அரையும் குறையுமாக எதையாவது படித்து விட்டு, அதைக் கொள்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு நடைமுறையில் நத்தைகள் மாதிரி இருப்பவர்களுக்கு இது புரியுமா. வெத்து வேட்டுக் கூட்டத்திற்கு என்னிடம் கேள்வி கேட்கும் அருகதை எங்கிருந்து வந்தது?

என்னை ஒழுங்காக இருக்கச் சொல்லும்போதே தெரியவில்லையா... நீங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை. தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதும் நீங்கள் எழுதித் தாக்காத தனி மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதுவதற்கு கூச்ச நாச்சமில்லையா. நீங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி "GANG RAPE" செய்வதுதான் மிக உத்தமமான காரியமா.

இன்று நர்சிம் இடுகைக்கு, இந்த மரண மொக்கைக்காரி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கன அக்கறையுடன் கேள்வி எழுப்பும் வினவு (ஏன் ஐயா உங்கள் புனிதப் பத்திரிகையில் எல்லாம் எங்களைப் போன்றவர்கள் பெயர் எல்லாம்... பத்திரிகை நாறி விடாதா...), என்னுடைய பெயர் போட்டு வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா என்று எழுதியபோது, நான் வாய் பொத்தி மெளனமாக இருந்தபோது கேட்கத் தெரியவில்லையா இந்தக் கேள்வியை. எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத இந்தப் பூச்சியைப் பார்த்து (சாக்கடைப் புழுக்களைப் பார்த்து நகர்ந்து விடுகிறேன் என்று நான் காரணம் சொன்னாலும்) சொல்கிறது ஒரு முகமூடி புரர்ர்ச்சி தலைவியாம். இன்னொன்று சொல்கிறது நான் ஒழுங்கா இருக்கணுமாம். இதை என்னோட பாட்டனே என் கிட்ட சொன்னதில்லைடா புறம்போக்கு.

வினவுக் குழு மற்றவர்கள் பற்றித் தெரியாது, கண்ட மேனிக்கு எழுதித் தள்ளுவது போன்று, வினவு என்ற போர்வையில் ஒளிந்திருக்கும், அசிங்க முகங்கள் பற்றியும் எழுத முடியும்.

எப்டி..?

அவன் இந்து. அவன் முஸ்லிம். அவன் கிறிஸ்தவன். அவன் பொறுக்கி. அவன் புறம்போக்கு. அவன் மொள்ளமாரி. அவன் பேமானி. அவன் பள்ளிக் கூடமே போனதில்லையாம். அவன் மூணு வயசானப்பவே பக்கத்து வீட்டு பொம்பளைய கக்கூஸில எட்டிப் பார்த்த பயல். அந்தப் புத்திதான் இந்த அளவுக்கு மத்தவங்க தனி வாழ்க்கை பற்றிக் கேட்டுக் கேட்டு எழுதச் சொல்கிறது. அவன் ஒழுங்கா இருந்தா எதுக்கு முகம் மூடி போட்டுக்கிட்டு எழுதுறான். அசிங்கம் புடிச்சவைங்க. கூடிக் கூத்தடிச்சு, பார்-ல படுத்துக்கிட்டே பதிவு எழுதுவாங்களாம்ல. யாராவது இவனுங்களுக்கு எதிரா எழுதினா ஆட்டோ அனுப்புவாங்களாமில்ல. அட இவ்ளோ ஏனப்பா, இவனுங்களுக்குன்னே ஒரு ரவுடி கும்பலே வச்சிருக்கிறானுன்களாமில்ல.

இப்டி... எல்லாம்... என்னாலயும் சொல்ல முடியும். ஏன்னா.. என்னோட பேரு வினவு பக்கத்தில வந்ததுமே, அடிச்சு புடிச்சு எனக்கு ஆறுதல் சொல்ற அப்பாவிங்க சொல்றதெல்லாம், "அந்த நாயிங்க ரொம்ப மோசமானவங்க, ச்சீ... அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டியை எல்லாம் வீட்டில வச்சு பூட்டிட்டு வந்து வாயால மட்டும் கிழிச்சுக்கிட்டிருக்காங்க, அவங்களுக்கு பதில் போடாத, போட்டா உன்னை எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா சொல்லுவாங்க. இதை வச்சே வருஷக் கணக்கில, ஆயுள் கணக்கில இடுகை போட்டு, எல்லா இடுகைளையும் உன்னோட பேர இழுத்து ஏதோ ஒரு முட்டையில மயிர் புடுங்குவாங்க"

இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு, இவனுங்க என்னோட பெயரை இழுத்து கன்னா பின்னான்னு எல்லா இடத்திலயும் போஸ்டர் அடிச்சு ஓட்டுவாங்க. எல்லாம் பார்த்துக்கிட்டு நான் பொத்திக்கிட்டு இருக்கணும். ஏன்னா நான் ஒரு பெண். மொக்கை மட்டுமே எழுதத் தெரிஞ்ச புறம்போக்கு.

இப்போ என்னைப் provoke பண்ணி என்ன சாதிக்கப் போறாங்க. என்னையும் பதிவுலகத்தை விட்டு தொரத்தலாம். ஒரு நூறு நூற்றைம்பது மைனஸ் ஓட்டு குத்தலாம். இருநூற்றியம்பது எதிர்ப்பதிவு வரலாம்.

ஒன்னு இவங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற புறம்போக்கு நிலத்தில்தான் நான் இந்த ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்.

ரெண்டு... எனக்கு இந்த பதிவுலகம்தான் சோறு போடுது. மத்தவங்கள வம்புக்கு இழுத்துதான் நான் சாப்டுக்கிட்டிருக்கேன்.

__________________________________________________________________________________________

ஜாதி, மதம், புண்ணாக்கு, புளியங்கொட்டை இந்த வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடுங்க மாதிரி உழண்டு கொண்டிருக்கிறவங்க கேட்டுக்குங்க... உங்க மசிர் வட்டத்தை எல்லாம் நான் தாண்டி பல வருஷமாச்சு...

கவுண்டமணி அங்கிள்.. ஆப்பிரிக்கா தலையான்னு செந்தில திட்டினா பார்த்து சிரிக்கிறவங்க எழுதுறதுக்கெல்லாம் நான் என்ன புடுங்க முடியும்.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே... ஏன் தெரியுமா... உங்களால அவ்ளோதான்யா சிந்திக்க முடியும்... மேல முடியாது...

இந்த மசித்துக்கு மேலயும்... என்னை இந்து... மசிரு என்ற ஒரு வரையறைக்குள் வைத்து என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க...

அப்புறம்... எனக்கு பட்டமெல்லாம் கொடுத்தாங்க... எனக்கு நானே பட்டம் கொடுக்கிறேன்னு சொன்னாங்க... ஒரு விஷயம்... செக்ஸ் தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது... அவர்கள் பிழைப்புக்காகச் செய்கிறார்கள்... மிகவும் கவுரவமானவர்கள்.... அவர்கள் கூடப் படுத்தவர்களை... வினவு மாதிரி வீதி வீதியாகக் கூவிச் சொல்லும் நாகரிகம் கற்றிராதவர்கள்... அவர்களை நான் மிக மிக மதிக்கிறேன்...

ஸோ... பட்டம் கொடுக்க வேண்டியவர்கள்... எனக்கு தாராளமா கொடுத்துக்கலாம்... உங்க பட்டத்தையெல்லாம் வச்சுதான்... நான் மேல என்னோட எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்கணும்...

கொடுத்துக்குங்கடா... எனக்கும் நிறைய மொழில... விதம் விதமா எப்டி திட்டுறது... என்ன என்ன கெட்ட வார்த்தை இருக்கோ... எல்லாம் தெரியும்... என்ன்ன்ன வேணா சொல்லி திட்டிக்குங்கடா... இப்டி பொம்பளைங்களயும், மத்தவங்களையும் ப்ளாக் மெயில் பண்ணி எத்தன நாளைக்குடா குப்பை கொட்டுவீங்க... நான் குப்பம்ன்னா குப்பம்.... சிட்டின்னா சிட்டி..... மசிரே போச்சு... அவ்ளோ உசிரே போச்சு... என்னோடது ஒரே ஒரு நாத்தம்புடிச்ச உசிர்தாண்டா...

_____________________________________________________________________________________________