header photo
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, June 22, 2010

தொட்டாச்சிணுங்கி..

சிணுங்குமெனத் தெரிந்திராத 
சீண்டலிலில்லை நஞ்சம்
மலருமெனத் தொடரும் 
மழலைத் தீண்டலுக்கும்
தெரிவதில்லை மூலம் 

நிலத்திற் புரளும் சிறு
நாலுமணிப் பூவிடம்
தலை சாய்த்து 
நலம் கேட்கும்
நந்தியாவட்டையின் 
நிட்களங்கம் 
அறிவீரா..  

ஏறி நின்று
கீறி விடுதலல்ல 
செறி நட்பு
சிணுங்கியது 
மலரும்வரை 
புலனடக்கிப் 
புலர்ந்திருப்பது
நட்பூ... 

_______________________________

Wednesday, June 9, 2010

எது நடந்ததோ... அது...

வினவு விடுத்த அறிக்கை.. அதனைத் தொடர்ந்து நான் அவர்களுக்கு அனுப்பிய மடல்.. கீழே.. ________________________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:

'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||

வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).

மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.

மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!

____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம். 
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்! 
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... 
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.. 
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்.. 
______________________________________________________________________________

Sunday, November 15, 2009

நட்புக் காலத்தில் நானும்...




ஆச்சு முக்கால் வருஷம்... அட வேற ஒண்ணுமில்லீங்க.. இடுகை எழுத வந்து முக்கால் வருஷம் ஆச்சு.. ஹிஹி..

நம்ம இடுகைய.. நம்ம பர்மிஷன் இல்லாம விகடனுக்கு அனுப்பற வானம்பாடிய வச்சுதான்.. வடிவேலு படத்துக்கு... இம்சை அரசன்னு பேரு வச்சிருப்பாங்கன்னு தோணுது... அவங்கள வச்சுதான் என்னோட இந்த இடுகை... ம்ம்.. நூறாவது இடுகை...

யூத்ஃபுல் விகடன்ல உன்னோட இடுகை வந்திருக்கு... இடுகைல போடு...

'ம்ம்.. ஓகே... '

ரெண்டு நாள் கழித்து... திரும்ப வந்திருக்கு.. இடுகைல போடு...

'பார்க்கலாம்...'

மூணு நாள் கழித்து... விகடன் முகப்பில வந்திருக்கு... இடுகைல போடு...

'ஆ..! ஆள விடுங்க சார்... என்னால முடியாது..!'

'ஏன் உனக்கு இதில என்ன கஷ்டம்?'.. எப்பொழுதெல்லாம் விகடனில் வெளியிடப்படுகிறதோ... அப்பொழுதெல்லாம்.. கன அக்கறையா வந்து... பின்னூட்டத்ல 'வாழ்த்துக்கள் ப்ரியா... விகடன் முகப்பில உன்னோட கவிதை..' ... ஸ்ஸ்ஸப்பா முடியல... (ராகவன் சார் கோச்சுக்குவார்... எவ்ளோ அக்கறையா பண்ணா இப்டியான்னு... =))..

சார்... விகடன்ல இருந்து கவிதை கேட்டு எழுதி இருக்காங்க.. மின்னிதழ் வெளியிட போறாங்களாம்...

வாவ்.. வெரி குட்... எழுது எழுது..

பார்க்கலாம்...

எழுதினியா... எழுதினியா... எழுதினியா... எழுதினியா...

இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல... இல்ல....

நாளைக்குள்ள அனுப்பணுமே... இன்னிக்கு எழுது... ப்ளீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்..

பார்க்கலாம்...

எழுதி அனுப்பிச்சதும்... எங்க மின்னிதழ் காணோம்... எப்போ வருது.. எங்க காணோம்... எப்போ வருது... எப்போ வருது...

தெரியாது சார்... தெரியாது.... தெரியாஆஆது....!

அன்று காலையில்... விகடன் எனக்கு மெயில் அனுப்ப முன்னாடி... மின்னிதழ் வந்துடுத்து... உன்னோட கவிதை வந்திருக்கு... அழகா இருக்கு... காங்கிராட்ஸ்...

சரி பார்க்கறேன்.. தாங்க்ஸ் சார்...

இன்னைக்கு... ஒரு இடுகை போடு.. நூறாவது இடுகை...

'சார்... இதுக்காக எல்லாம் இடுகை போட முடியாது.. ஏதாவது தோணிச்சுன்னா பார்க்கலாம்..'..

ஏன்... இதுக்கு என்ன கஷ்டம்... ஒரு இடுகை போடு...

ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்...

ரெண்டு மணி நேரம் கழித்து.. 'என்ன இடுகை போடுறியா..?'...

ஐயோ இல்ல சார்...

அப்போ என்ன பண்ணுறா..

ஒண்ணுமில்ல சார்...

ஸ்டார்ட்டிங் ட்ரபிள்... ஆரம்பிச்சான்னா எழுதிடுவா... ஒரு இடுகை போடு...

ம்ம்.. பார்க்கலாம் சார்...

மூணு மணி நேரம் கழிச்சு... நான் நூறு இடுகைக்கும்.. நூத்தி இருபத்தைஞ்சு ஃபலோவர்ஸ்க்கும் சேர்த்து விஷ் பண்ணலாம்னு நினைச்சேன்... இப்போ பாரு.. நூத்தி இருபத்தியாறு பேரு ஆய்ட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்... இடுகை போடு...

இது பப்ளிஷ் பண்ண ரெண்டு நிமிஷம் முன்னாடி.. 'இடுகை போட்டுட்டியா..?'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்...

_________________________________

இன்று போல் நாளை இருப்பதில்லை...
உன் பேரப்பிள்ளைகளுடன் நீயும்..
என் பிள்ளைகளுடன் நானும்...
இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...
திசையிலும் வரையப்படவில்லை...
பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது..
இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?!

_________________________________

இந்த இடுகையில் என்னுடன் எப்பவும் ஒட்டிக் கொண்டே இருக்கும்... என் ஆத்ம ஸ்நேகம்.. என்னுடைய டெடியையும் அறிமுகப்படுத்தலாம்... டெடி வச்சிருக்கா... குழந்தையா... இல்ல லூஸா (அது எல்லாரும்தானே.. ஹிஹி) என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேணாம்... =))


_________________________________


எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்.. பதிவுலகத்தில் கிடைத்த சொந்தங்கள் மற்றும் நட்புகள் பற்றி... இன்னொரு நாள் விரிவாக எழுத வேண்டும்.. எழுதுவேன்..



___/\___