header photo

Friday, November 27, 2009

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12


இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...

கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...

ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!

தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!

எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?

உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?

திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!

உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!

(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)


(தொடரும்..)

Tuesday, November 24, 2009

சமுதாய விளக்குமாறுகள்...

பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சிலரால் எதிர்மறையான கோணத்தில் விமர்சிக்கப்படும் பல 'அதி நவீன' சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நான் 'பிறந்து வளர்ந்த' பின்னணியிலிருந்து வந்த 'நம்மவர்'களிடம் நிமிட நேரம் பேசுவது கூட எனக்கு மிகச் சிரமமாக இருக்கிறது.

நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள். செயற்கைத்தனமான, நடை, உடை, பாவனைகளுக்கு மட்டும் 'மாடர்ன்' என்ற வார்த்தையைப் பொருத்துகிறார்கள். இங்கு நான் அணியும் மிகச் சாதாரண ஜீன்ஸ், ஷர்ட்டுக்கும், மாடர்ன் என்ற வார்த்தைக்கும் எனக்கு எந்த சம்மந்தமும் தெரியவில்லை.

ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல). வேலை நிமித்தம் சந்திக்கும் தமிழ் உள்ளங்களிடம் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்குவதும், ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும், மற்ற எந்த நாட்டவர் எனிலும் கை குலுக்குவதும் என்னுடைய வழக்கம்.

எப்போதாவது வீதியில் எதிர்ப்படும்போது, தொலைவிலிருந்தபடியே கையை நீட்டிக் கொண்டு வந்து கட்டிக் கொள்ளும் ஜேர்மன் ஆசானும், கல்லூரியை முடித்துக் கொண்ட கடைசி நாளில் 'give me your cheek' என்று கன்னத்துடன் கன்னம் வைத்து விடைபெற்றுக் கொண்ட ஆங்கில ஆசானும் விதிவிலக்கு. விகல்பத்திற்கு வழியேதுமில்லை.

சொல்ல வந்த விடயம் விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன். 'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி, 'யாரென்றாலும் வாஞ்சையுடன் அணைத்து முத்தமிட்டுக் கொ(ல்லு)ள்ளும் ஒரு அம்மையார், அலுவலக நேரத்தில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஹல்லோ சொல்ல முதல் வந்த வார்த்தை "do you knw, what has that BIT** done?"

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாது.. திகைத்து ஏன் இந்த வார்த்தை... யார்? என்ன?

ஒரு பதினெட்டு வயது இளம்பெண்ணின் பெயர் சொல்லி... அவள் 'வெள்ளைக்காரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்... இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன.

அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து, ஒரு மாதம் ஹனி மூன் செல்லும் ஜோடிக்கும், நம்மவர்களின் பெயர், வயது, ஜாதி சொல்லித் தேடிக் கொள்ளும் ஜோடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஒரு மாதம் ஹனிமூன் சென்ற ஜோடி, சரி வரவில்லை என்று டாட்டா காண்பித்து சுமுகமாகப் பிரிந்து சென்று விடலாம். ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? 'ஆயிரம் காலத்துப் ..........பயிர்' (நல்லா கண்டு பிடிக்கிறாங்கடா) என்று பெயர் சொல்லி... பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்".

(இந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..=)))


________________________________________________________________

எடுத்தியம்பியமைக்கு நன்றி நேசமித்ரன்...
எனது சப்பைக்கட்டு விளக்கமாக இத யூஸ் பண்ணிக்கறேன்... =))

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)//


நன்றி நேசமித்ரன்... ரொம்ப வாஸ்தவம்... எனக்கே அப்டித்தான் இருந்தது... இருக்கு... புத்தகமாகவோ... தொடர் இடுகையாகவோ போட வேண்டியது... எங்கயோ ஆரம்பித்து... சட்டுன்னு எங்கயோ முடிக்கிறப்போ... இந்த உணர்வு தவிர்க்க முடியாதது... பூச்சுக்களற்ற விமர்சனங்கள் என்னால் நேசிக்கப்படுகின்றன.. ரொம்ப நன்றி..!