header photo

Monday, October 26, 2009

ஞானும்.. பின்னே ஞானும்.. நடுவே ஞானமும்..

அமெரிக்க நாட்டவன்..
அந்தமான்..
எகிப்து..
ஐரோப்பா..
அறிமுகங்களிடையே..

யார் நீ..
இதயத்தின்..
ஆழத்திலிருந்து..
அடையாளப் படுத்திச் சொல்..
என்றார்கள்..

சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்..

நீ காயப் பட்டிருக்கிறாய்..
நாட்டைத் தவிர்க்கிறாய்..

இல்லை...
என்ன இல்லை எனக்கு..
ஐரோப்பாவின் அழகு தேசம்..
எனை அங்கீகரித்திருக்கிறது..

பிரஜா உரிமை..
அடையாள அட்டை..
கடவுச் சீட்டு..
இங்கே பிறந்தாயா..
மற்றவர் தடுமாறும்..
மொழித் திறன்...

ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..

என்...
தந்தையும் தாயும்..
மகிழ்ந்து குலவிய..
மண்..
நான் பிறந்த மண்..
தவழ்ந்த மண்..
தழும்பேறி..
அடையாளம்..
அற்றிருக்கையில்..

என்..
உடன் பிறப்பின்..
எஞ்சிய எலும்புகள்..
சிதைந்து..
சுண்ணாம்புப்..
பாறையாகி...
அதுவும்..
உதிர்க்கப்பட்டு..
அதை வைத்தே..
துருப்பிடித்திருக்கும்..
தூண்களுக்கு...
வெள்ளை பூசி...

ஓ.. !
மறந்து விட்டேன்..
சில...
நேரங்களில் நீவிரும்..
நியாயம் பேசுகிறீர்..
ஆம்.. நான்..
காயப் பட்டிருக்கிறேன்..
தயவு செய்து..
மன்னிக்கவும்..

வெண் சுண்ணாம்பு..
நானென்று..
என்னை நான்..
அடையாளம் காட்ட..
என்னால் இயலாது..
சுட்ட மண்..
ஒட்டாது...

என்..
தோற்றம்..
நிகழ்ந்து விட்டது..
வசிப்பிடம்..
பதிவு செய்யப்பட்டது..
மறைவு..
நிச்சயிக்கப்பட்டது..
நீறாக்கும் இடம் கூட..
ஆனால் அஃதை..
அறிந்து கொள்ளும்..
ஆற்றல் எனக்கில்லை..

நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..

___/\___

61 ஊக்கம்::

vasu balaji said...

/சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்../

அருமை.

/ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று../

அலாதி.

/வெண் சுண்ணாம்பு..
நானென்று..
என்னை நான்..
அடையாளம் காட்ட..
என்னால் இயலாது..
சுட்ட மண்..
ஒட்டாது.../

அற்புதம்.

/என்..
தோற்றம்..
நிகழ்ந்து விட்டது..
வசிப்பிடம்..
பதிவு செய்யப்பட்டது..
மறைவு..
நிச்சயிக்கப்பட்டது..
நீறாக்கும் இடம் கூட
ஆனால் அஃதை..
அறிந்து கொள்ளும்..
ஆற்றல் எனக்கில்லை./

எப்படிப் பாராட்ட

/நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்../

சத்தியமான, யாராலும் அழிக்கவோ மாற்றவோ முடியாத பெருமை.

ம்ம்ம். இடுகைக்கு இடுகை தரம் ஏறிண்டே போகுது.

ஆ.ஞானசேகரன் said...

//நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..//

உண்மை!, வார்த்தைகளில் சொல்லமுடியாத உண்மை.... சரியாக சொல்லியுள்ளீர்கள் ப்ரியா

அது சரி(18185106603874041862) said...

உணர்வுகளின் வேகம்...இது வரை எழுதியதில்..உங்களின் மிகச்சிறப்பான எழுத்து....

பிரபாகர் said...

//நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..//

அற்புதமான வரிகள் ப்ரியா.. அந்த உணர்வின்றி திரியும் அரசியால் அநாகரிகர்களை எண்ணித்தான் மனம் வெதும்புகிறது.

பிரபாகர்.

velji said...

i am recently visiting you.like a disaster management staff you are keen to hear a child's voice in debris.the brave thing is you are the loser.

yes.your identity as a tamilian is everlasting.

velji said...

i am recently visiting you.like a disaster management staff you are keen to hear a child's voice in debris.the brave thing is you are the loser.

yes.your identity as a tamilian is everlasting.

Anonymous said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்..

அன்பேசிவம் said...

வாழ்த்துகள் கலகலப்ரியா, :-)

V.N.Thangamani said...

சபாஷ்.
என்னை மெய்சிலிர்க்க வைத்தீர்கள்.
உங்களுக்குள்ளே நெருப்பிருக்கிறது. ஆனாலும்
உங்களால் ரௌத்திரம் பழகமுடியாது.
ஒவ்வொரு அடியையும் அடைகாத்து
ஒரு சிப்பியாய் இருந்து முத்தாக்கி விடுவீர்கள்.
உள்ளத்தின் அடியாழத்தில் எம் மொழியும் கலாச்சாரமும்
இனியது உயர்ந்தது என்பவரை, எதுவும் எவரும் என்றும் வீழ்த்த முடியாது.
அற்புதமான பதிவு,எம் தமிழை போற்றும் நீர் வாழ்க வளமுடன்
நன்றி பிரியா

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க..

பித்தனின் வாக்கு said...

அட்டகாசம் பிரியா, ஆனால் இதுபோல இரணங்களுக்கு ஊடாக உமக்கு இருக்கும் தமிழ்ப்பற்று நன்று. நானாக இருந்தால் நான் தமிழன் என்றும் தமிழ்மொழி என்றும் கண்டிப்பாய்ச் சொல்லியிருக்க மாட்டேன். பிறக்க ஓர் இடம், பிழைக்க ஓர் இடம், இறக்க ஓர் இடம் என்றும் வாழச் சபித்த இறைவனையும் சபித்துருப்பேன். தொப்புள்கொடி உறவு என்று கூறி எழுதி ஈன வயிற்றுப் பிழைப்பு நடத்தும் நாங்கள் கூட தமிழ் நாட்டில் அவர்கள் தனித்து வாழ அனுமதித்தது இல்லை என்பது வெக்கம். இங்கும் அகதி முகாம்தான் அவர்களுக்கு என்று நினைக்கையில் வேதனை. தமிழ்னாட்டு மக்களுக்கு அவர்கள் புலம் பெயர்ந்தாலும், விருப்பப்பட்டால் தமிழ் நாட்டிலும் வாழலாம் என்ற இரட்டைக் குடியுரிமை கொணர ஆவன செய்யவேண்டும். நீங்கள், ஹேமா இருவரிடமும் தமிழ் கவிதையாக விளையாடுகின்றது. என்ன பண்ணுவது இதையாவது கொடுத்தானே என்று நன்றி சொல்லுவதைத் தவிர. வாழ்க உன் தமிழ்ப் பற்று. எனக்கும் ஒரு அல்ப சந்தோசம் இன்று மீ த பர்ஸ்ட் என்று.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said... //

ரொம்ப
ரொம்ப
ரொம்ப
ரொம்ப
நன்றிங்க..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..//

உண்மை!, வார்த்தைகளில் சொல்லமுடியாத உண்மை.... சரியாக சொல்லியுள்ளீர்கள் ப்ரியா//


நன்றி ஞானசேகரன்.. :-)

கலகலப்ரியா said...

//அது சரி said...

உணர்வுகளின் வேகம்...இது வரை எழுதியதில்..உங்களின் மிகச்சிறப்பான எழுத்து....//

ஆஹா.. ரொம்ப நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..//

அற்புதமான வரிகள் ப்ரியா.. அந்த உணர்வின்றி திரியும் அரசியால் அநாகரிகர்களை எண்ணித்தான் மனம் வெதும்புகிறது.

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்..

கலகலப்ரியா said...

//velji said...

i am recently visiting you.like a disaster management staff you are keen to hear a child's voice in debris.the brave thing is you are the loser.

yes.your identity as a tamilian is everlasting.//

yes..! ty.. velji.. :)

கலகலப்ரியா said...

//anbudan-mani said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்..//

நன்றி மணிகண்டன்.. !

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள் கலகலப்ரியா, :-)//

நன்றி முரளி.. :)

கலகலப்ரியா said...

//VN.THANGAMANI said...

சபாஷ்.
என்னை மெய்சிலிர்க்க வைத்தீர்கள்.
உங்களுக்குள்ளே நெருப்பிருக்கிறது. ஆனாலும்
உங்களால் ரௌத்திரம் பழகமுடியாது.
ஒவ்வொரு அடியையும் அடைகாத்து
ஒரு சிப்பியாய் இருந்து முத்தாக்கி விடுவீர்கள்.
உள்ளத்தின் அடியாழத்தில் எம் மொழியும் கலாச்சாரமும்
இனியது உயர்ந்தது என்பவரை, எதுவும் எவரும் என்றும் வீழ்த்த முடியாது.
அற்புதமான பதிவு,எம் தமிழை போற்றும் நீர் வாழ்க வளமுடன்
நன்றி பிரியா//

ரொம்ப நன்றிங்க...! உங்க ஆசீர்வாதம்..!

கலகலப்ரியா said...

//சென்ஷி said...

நல்லாயிருக்குங்க..//

வாங்க சென்ஷி.. முதல் வருகைக்கு நன்றி மற்றும் மகிழ்ச்சி...!

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

அட்டகாசம் பிரியா, ஆனால் இதுபோல இரணங்களுக்கு ஊடாக உமக்கு இருக்கும் தமிழ்ப்பற்று நன்று.//

நன்றிங்க..

////தொப்புள்கொடி உறவு என்று கூறி எழுதி ஈன வயிற்றுப் பிழைப்பு நடத்தும் நாங்கள் கூட தமிழ் நாட்டில் அவர்கள் தனித்து வாழ அனுமதித்தது இல்லை என்பது வெக்கம்//

ம்ம்ம்.. :)

//வாழ்க உன் தமிழ்ப் பற்று. எனக்கும் ஒரு அல்ப சந்தோசம் இன்று மீ த பர்ஸ்ட் என்று//

மீண்டும் நன்றி.. (மாடரேஷன் போட்டதால.. மீ த பர்ஸ்ட் குழப்பம்.. மன்னிச்சிடுங்க..)

வாசகன் said...

நெஞ்சம் கனக்க வைக்கும் உண்மை.

ஆனால் இதை நீங்கள் உரைநடையிலேயே எழுதியிருக்கலாம்;கவிதை பழகிவிட்டு எழுதுங்கள்..நன்றி

கலகலப்ரியா said...

//வாசகன் said...

நெஞ்சம் கனக்க வைக்கும் உண்மை.

ஆனால் இதை நீங்கள் உரைநடையிலேயே எழுதியிருக்கலாம்;கவிதை பழகிவிட்டு எழுதுங்கள்..நன்றி//

நன்றிங்க..! அதுதான் பழகிக் கொண்டிருக்கிறேன்..!

ஈரோடு கதிர் said...

//அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..//

உண்மைதான் பிரியா

தமிழ்நாட்டில் பவானிசாகர் முகாமிலிருந்து 18 பேர் இலங்கை திரும்ப விரும்புவதாக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..//

உண்மைதான் பிரியா

தமிழ்நாட்டில் பவானிசாகர் முகாமிலிருந்து 18 பேர் இலங்கை திரும்ப விரும்புவதாக விண்ணப்பித்திருக்கிறார்கள்.//

ம்ம்.. அடிமை வாழ்க்கை.. எங்கு வாழ்ந்தால் என்ன...

ஈ ரா said...

//
ஓ.. !
மறந்து விட்டேன்..
சில...
நேரங்களில் நீவிரும்..
நியாயம் பேசுகிறீர்..
ஆம்.. நான்..
காயப் பட்டிருக்கிறேன்..
தயவு செய்து..
மன்னிக்கவும்..//

இம்முறை

எளிய தமிழனுக்கும்
வேதனையை
எளிதில் புரிய வைத்த
வரிகள்...

புரிந்து கொண்டோம்...

கலகலப்ரியா said...

//ஈ ரா said... //


ரொம்ப நன்றி ஈ ரா..

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை ப்ரியா...........


வரிகள் மீண்டும் மீண்டும் நிழலாடுகின்றன.....


மொழியை, அதுவும் தமிழைப் பற்றி படிப்பதும், எழுதுவதும், பேசுவதும்....... சலிப்பதில்லை...


/சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்../


.......பெண்ணாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வருகிறது.


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

கலகலப்ரியா said...

// ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை ப்ரியா...........


வரிகள் மீண்டும் மீண்டும் நிழலாடுகின்றன.....


மொழியை, அதுவும் தமிழைப் பற்றி படிப்பதும், எழுதுவதும், பேசுவதும்....... சலிப்பதில்லை...


/சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்../


.......பெண்ணாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வருகிறது.


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்//


நன்றி ஆரூரன்.. .

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

மிக அருமை.
தரமான எழுத்துக்கள் நோக்கி நோக்கி நகர்கிறது உங்கள் வரிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றிக்கா..

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

மிக அருமை.
தரமான எழுத்துக்கள் நோக்கி நோக்கி நகர்கிறது உங்கள் வரிகள்//


ரொம்ப நன்றி நேசமித்ரன்.. !

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

நன்றிக்கா..//

வா வசந்து.. ரொம்ப நாளா ஆளையே காணோம்.. எதுக்கு நன்றி..?

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ நன்றிக்கா../

அட ஒரு வார்த்த சொல்லிட்டாரா? , :( நு போவாரே.இப்போ கண்ணு நல்லா தெரியுது போல அதுக்குதான் நன்றி. இல்ல வசந்து?

முனைவர் இரா.குணசீலன் said...

உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை

"உழவன்" "Uzhavan" said...

உணர்வுபூர்வமான எழுத்தும் கருத்தும்.

நாளும் நலமே விளையட்டும் said...

இந்தியாவில் பிறந்த நாங்களே இன்னமும் பிறர்க்கு அடிமையா தான் வாழறோம்!

தமிழ் ! தமிழ்!
எத்தனை காலம்?
வந்து கேளுங்க எங்கள் பிள்ளைகள் பேசும் தமிழை!

சத்ரியன் said...

//என்...
தந்தையும் தாயும்
மகிழ்ந்து குலவிய மண்
நான் பிறந்துத் தவழ்ந்த மண்
தழும்பேறி
அடையாளமற்றிருக்கையில்..
..........
..........
வெண் சுண்ணாம்பு
நானென்று
என்னை நான்
அடையாளம் காட்ட
என்னால் இயலாது.//

இந்த இடத்திற்கு வந்துச் சேர்ந்ததும் "கலகலப்ரியா"-வைக் காணவில்லை.

"தமிழச்சி"-யைக் கண்டேன். நன்று!

thiyaa said...

என்ன சொல்வதென்றே புரியவில்லை
அருமை

கலகலப்ரியா said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

// " உழவன் " " Uzhavan " said...

உணர்வுபூர்வமான எழுத்தும் கருத்தும்.//

நன்றி உழவன்..

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

இந்தியாவில் பிறந்த நாங்களே இன்னமும் பிறர்க்கு அடிமையா தான் வாழறோம்!

தமிழ் ! தமிழ்!
எத்தனை காலம்?
வந்து கேளுங்க எங்கள் பிள்ளைகள் பேசும் தமிழை!//

????!!!!... ம்ம்.. நியாயம்தானுங்க.. வீட்ல வளவளன்னு தமிழ் பேசிக்கிட்டு.. வெளில கால் எடுத்து வச்சதும்.. இங்கிலிஷு பேசுற நாம.. குழந்தைங்கள சொல்லி என்ன பண்ணுறது... ஆனாலும்.. இந்த கம்ப்யூட்டர் யுகத்ல.. இன்டர்நெட் யுகத்ல... தமிழ்.. எவ்ளோ தூரம் வியாபித்திருக்குன்னு பார்க்கறப்போ... எத்தன நாளைக்குன்னு கேக்க தோணல..

பின்னூட்டத்துக்கு நன்றிங்க..

கலகலப்ரியா said...

//சத்ரியன் said...

//என்...
தந்தையும் தாயும்
மகிழ்ந்து குலவிய மண்
நான் பிறந்துத் தவழ்ந்த மண்
தழும்பேறி
அடையாளமற்றிருக்கையில்..
..........
..........
வெண் சுண்ணாம்பு
நானென்று
என்னை நான்
அடையாளம் காட்ட
என்னால் இயலாது.//

இந்த இடத்திற்கு வந்துச் சேர்ந்ததும் "கலகலப்ரியா"-வைக் காணவில்லை.

"தமிழச்சி"-யைக் கண்டேன். நன்று!//

நன்றிங்கண்ணே.. வருகைக்கும்.. பின்னூட்டத்துக்கும்..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

என்ன சொல்வதென்றே புரியவில்லை
அருமை//

நன்றிங்க தியா..

துபாய் ராஜா said...

ஒப்பில்லாத் தமிழால்
உப்புணர்வு கூடி
உடன்பிறப்பானோம்.

எகிப்து வாழ் தமிழனின் இனிய வாழ்த்துக்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்னைப் போன்ற எளியவர்களுக்கும் புரியும் நடையில் ஆழம்மிகுந்த கருத்துக்கள்!! அருமை ப்ரியா.. கண்கள் கலங்கிவிட்டன.. உங்களின் தொடரையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. மவுனமாக...

பித்தனின் வாக்கு said...

தோழி எங்களின் பதிவுகளை பார்க்கவே அல்லது படிக்கவே மாட்டீர்களா.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

ஒப்பில்லாத் தமிழால்
உப்புணர்வு கூடி
உடன்பிறப்பானோம்.

எகிப்து வாழ் தமிழனின் இனிய வாழ்த்துக்கள்.//

வாங்க ராஜா.. நன்றி...!

கலகலப்ரியா said...

//Chandhana said...

என்னைப் போன்ற எளியவர்களுக்கும் புரியும் நடையில் ஆழம்மிகுந்த கருத்துக்கள்!! அருமை ப்ரியா.. கண்கள் கலங்கிவிட்டன.. உங்களின் தொடரையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. மவுனமாக...//

ரொம்ப நன்றி சந்தனா :-)

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

தோழி எங்களின் பதிவுகளை பார்க்கவே அல்லது படிக்கவே மாட்டீர்களா.//

:O பார்க்கறேன்...ippo office la.. so.. appuram parkkaren..

எதிர்கட்சி..! said...

தொடர் தாக்குதல்
உங்கள் கவிதைகளால்
பலர்
மனங்களில்...

மறதி கொண்ட மனிதனுக்கு
கடிகார அலாரம் உங்கள் வேதனை..

கலகலப்ரியா said...

//எதிர்கட்சி..! said...

தொடர் தாக்குதல்
உங்கள் கவிதைகளால்
பலர்
மனங்களில்...

மறதி கொண்ட மனிதனுக்கு
கடிகார அலாரம் உங்கள் வேதனை..//

நன்றிங்க..

Sanjai Gandhi said...

டெம்ப்ளெட் சூப்பர்..

Sanjai Gandhi said...

என்னது கவிதை பத்தி எதும் சொல்லனுமா?

இருங்க அது எங்க இருக்குனு தேடிட்டு வரேன்..
(இயலாமையை வேற எப்டி தான் காமிக்கிறது? ) :)

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

டெம்ப்ளெட் சூப்பர்..//

நன்றிங்கோ... ரசன ரசன..

//என்னது கவிதை பத்தி எதும் சொல்லனுமா?//

அப்டி யாரும் சொல்லலீங்க... கொஞ்சம் கனவு லோகத்ல இருந்து வெளில வாங்க..

//இருங்க அது எங்க இருக்குனு தேடிட்டு வரேன்..//

ம்ம்.. தேட வேண்டிய இடத்ல தேடுங்னா..

//(இயலாமையை வேற எப்டி தான் காமிக்கிறது? ) :)//


இப்டித்தானா... சர்தானுங்கோ..

Admin said...

/ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று../



நல்ல வரிகள். அனைத்து வரிகளுமே அருமை

கலகலப்ரியா said...

//சந்ரு said...

/ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று../



நல்ல வரிகள். அனைத்து வரிகளுமே அருமை//

நன்றி சந்ரு..

அன்பேசிவம் said...

aamaa neenga eththana naalaa vimarsanam eluthittirukkeenga..:-? நன்றி கலகலப்ரியா, ஒரு சின்ன திருத்தம், நான் விமர்சனம் செய்வதில்லை, அறிமுகம் மட்டுமே. எனக்கு தெரிந்த புத்தகங்களை, படங்களை அறிமுகம் செயவதோடு சரி.

அதிகம் அறியப்படாத படங்களை சொல்லவேண்டுமென்பதே ஆசை. அவசியம் பாருங்கள்.

பார்த்தபின் தொடர்பு கொள்ளுங்கள், murli03@gmail.com

vanathy said...

மனத்தின் ஏக்கங்களும் வலிகளும் கவிதை வரிகளாக வெளிப்பட்டுள்ளன .
ஈழ மக்களின் குரலாக நீங்கள் ஒலிக்கிறீர்கள் .
அழகான வரிகள் ,ஆழமான உணர்வுகள்
வாழ்த்துக்கள்.

--வானதி

கலகலப்ரியா said...

//vanathy said...

மனத்தின் ஏக்கங்களும் வலிகளும் கவிதை வரிகளாக வெளிப்பட்டுள்ளன .
ஈழ மக்களின் குரலாக நீங்கள் ஒலிக்கிறீர்கள் .
அழகான வரிகள் ,ஆழமான உணர்வுகள்
வாழ்த்துக்கள்.

--வானதி//

நன்றி வானதி..

கலகலப்ரியா said...

:-) nanri