Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...
இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...
பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....
டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....
வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...
இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...
கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!
உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..
(தொடரும்...)