header photo

Monday, September 14, 2009

சின்னச் சின்ன சிந்தனைத் துளிகள்...

மெச்சூரிட்டி.. மெச்சூரிட்டின்னு சொல்றாங்களே.. அது என்ன?

சின்னஞ் சிறு வயதில்.. "எங்க வீட்ல ஒரு குட்டி ஏரோப்ளேன் இருக்கு... ஸ்விட்ச் போட்டா... ரொம்ப தூரம் பறந்து போயிட்டு என் கிட்டயே வந்துடும்" போன்ற குழந்தைப் பிள்ளைத் தனமான அண்டப் புளுகுகளை மூட்டை கட்டி வைத்த போது கொஞ்சம் பெரிய மனுஷித் தன்மையை உணர்ந்தேன்.

பற்பசையின் டியூப்பை கவனமாகக் கையாளும் என் தாத்தா, பாட்டியின் டெக்னிக் அறியாது, தாறுமாறாகப் பிதுக்கிச் சாப்பிட்டு, பற்பசை வாசனை வாயில் இருக்கும் போதே "பற்பசை டியூப்பை அடியிலிருந்து பிதுக்க வேண்டும்" என்று ஒன்றும் தெரியாதது போல் விஷமமாகச் சொன்ன தாத்தாவின் குரலில், மகா தப்பு பண்ணி விட்டோம், இனிமே பண்றதில்லை என்று சபதம் பண்ணி, திருட்டுத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்த போது இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டதாக நினைப்பு வந்தது.

கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம், கொழுக்கட்டைக்கு பிசைந்த மாவில் ஒரு உருண்டையை நீட்டி, சரியாக இருக்கிறதா பார் என்று கேட்ட பாட்டியிடம், திகைப்பை மறைத்து பெரிய மனுஷி தோரணையில், 'சரியா இருக்கு' என்று பெருமையாகச் சொன்ன போது நிறைய பொறுப்பு வந்து விட்டதாக ஒரு பிரமை தோன்றியது.

ஊர்ல பசங்க ஏதேதோ சினிமாப் பாட்டை விசில் அடித்தபடி சுற்றி வந்தபோது, 'நம்ம கிட்டயேவா.. காதல் எவ்ளோ கொடுமையானதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்கல்லன்னு' இருந்த போதும், காதலில் விழுந்தவர்களுக்கு பாட்டியாகி, 'வேணாம்டி'ன்னு இலவச ஆலோசனை வழங்கிய போதும், ரொம்ப ரொம்ப மெச்சூரிட்டி வந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.

பட்டி மன்றங்களில் மேற்கத்தயர்கள் நாகரிங்கள் கிழிபடும் போதும், நம் நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவு மேலானது என்று கேட்கும் பொழுதும், மேற்கை நோக்கி முகம் சுழித்து, காலடி மண்ணை பெருமையுடன் பார்த்த போதும், கையில்லா சட்டையுடன் செல்லும் அடுத்த தெரு அக்காவை வேற்றுக் கிரகத்து வெங்காயம் மாதிரிப் பார்த்த போதும், பெரிய மனுஷித்துவம் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது.

பார்வை வட்டம் சற்று அகலத் தொடங்கிய போது, பார்வைக் கோணமும் பாரிய விகிதத்தில் மாறத் தொடங்கியது. காதல் ஒன்றும் கெட்ட வார்த்தையல்ல என்று வலிக்க வலிக்க அனுபவம் கற்றுத் தந்தது. எல்லாருக்கும் தனி மனித சுதந்திரம் உண்டு, அவரவரின் நடை, உடை, பாவனையை மாற்ற நாம் யார் என்ற கேள்வி வந்தது. என் விருப்பத்துக்கு ஏற்றபடி மற்றவர்கள் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று தோன்றியது.

மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில், அவரவர் வாழ்க்கையை 'உண்மையாக' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்தது. அவர்களின் வாழ்க்கையை 'சின்னஞ் சிறிய' ப்ரியா பார்வையில் மற்றவர்கள், 'ச்சீ ச்சீ' என்று விமர்சனம் செய்யும் பொழுது, அவர்களின் பார்வைக் கோணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆணுக்கும் ஆணுக்குமான காதலையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது. பின் லேடனின் எண்ண ஓட்டங்கள் என்ன என்று யோசனை வருகிறது. இதையெல்லாம் தாண்டி, கோபம், கவலை, சிரிப்பு, வெறுப்பு எல்லாமே வந்து வந்து போகிறது. இந்த அண்ட சராசரத்தில் பூமிப் பந்தே ஒரு புள்ளியாம், நாம் எங்கே? என்ற உண்மை தெரிகிறது.

தற்சமயம், இதுதான் மெச்சூரிட்டியா? சிறு வட்டத்திலிருந்து, பெரிய வட்டத்திற்குள் நுழைந்து இருப்பிடம் தொலைப்பதை விட, சிறு வட்டத்திலேயே உழண்டு கொண்டிருந்து விட்டு, இறந்து போவது மேலோ என்று யோசனை ஓடுகிறது. இன்னும் ஐந்தோ, பத்தோ வருடம் கழித்து இது எல்லாமும் கூட சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடும், அப்போ எப்படி இருப்போம் என்று பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி? இது படித்து முடிக்கிறதுக்கு முன்னாடியே வாழ்க்கை வெறுத்திருக்குமே..!

வாசகப் பெருமக்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். நான் இன்னும் சந்நியாசினி ஆகி விடவில்லை. ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது. =)

______

61 ஊக்கம்::

ஆரூரன் விசுவநாதன் said...

//மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில், அவரவர் வாழ்க்கையை 'உண்மையாக' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்தது.//

தன் "நிலை உயர்த்தும்" முயற்சியில் இறங்குவதும் அதன்பின் உயர்ந்துவிட்டதாக நினைத்து நினைத்து, பின், உயர்ந்து விடுதலும் இயல்பே.

"இன்னும் ஐந்தோ, பத்தோ வருடம் கழித்து இது எல்லாமும் கூட சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடும்"
this would be extreme maturity


anbudan
aruran.

ஆயில்யன் said...

//கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம், கொழுக்கட்டைக்கு பிசைந்த மாவில் ஒரு உருண்டையை நீட்டி, சரியாக இருக்கிறதா பார் என்று கேட்ட பாட்டியிடம், திகைப்பை மறைத்து பெரிய மனுஷி தோரணையில், 'சரியா இருக்கு' என்று பெருமையாகச் சொன்ன போது நிறைய பொறுப்பு வந்து விட்டதாக ஒரு பிரமை தோன்றியது.//

ரசித்தேன்! அருமை!

vasu balaji said...

கலகலாவா இது? என்ன பெரிய மனுஷித்தனம்? நிறைய புரியறது. புரிஞ்சிக்க வேண்டி இருக்கு. நீயான்னு பார்க்கா ஆச்சரியமா இருக்கு. பிரமாதம். பாராட்டுக்கள்.

இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான சிந்தனைகள். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

//வேற்றுக் கிரகத்து வெங்காயம் //

அக்கா சின்ன வெங்காயாமா பெரிய வெங்காயமா?

//ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

நீங்க அக்காவா? இல்லை தங்கச்சியா?

இடுகை அருமை

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில், அவரவர் வாழ்க்கையை 'உண்மையாக' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்தது.//

தன் "நிலை உயர்த்தும்" முயற்சியில் இறங்குவதும் அதன்பின் உயர்ந்துவிட்டதாக நினைத்து நினைத்து, பின், உயர்ந்து விடுதலும் இயல்பே.

"இன்னும் ஐந்தோ, பத்தோ வருடம் கழித்து இது எல்லாமும் கூட சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடும்"
this would be extreme maturity


anbudan
aruran.//

நன்றி ஆரூரன்...!

கலகலப்ரியா said...

//ஆயில்யன் said...

//கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம், கொழுக்கட்டைக்கு பிசைந்த மாவில் ஒரு உருண்டையை நீட்டி, சரியாக இருக்கிறதா பார் என்று கேட்ட பாட்டியிடம், திகைப்பை மறைத்து பெரிய மனுஷி தோரணையில், 'சரியா இருக்கு' என்று பெருமையாகச் சொன்ன போது நிறைய பொறுப்பு வந்து விட்டதாக ஒரு பிரமை தோன்றியது.//

ரசித்தேன்! அருமை!//

நன்றி ஆயில்யன்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலாவா இது? என்ன பெரிய மனுஷித்தனம்? நிறைய புரியறது. புரிஞ்சிக்க வேண்டி இருக்கு. நீயான்னு பார்க்கா ஆச்சரியமா இருக்கு. பிரமாதம். பாராட்டுக்கள்.//

ம்ம்... நன்றிங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

வித்யாசமான சிந்தனைகள். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்//

நன்றி ராகவன்..!

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//வேற்றுக் கிரகத்து வெங்காயம் //

அக்கா சின்ன வெங்காயாமா பெரிய வெங்காயமா?

//ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

நீங்க அக்காவா? இல்லை தங்கச்சியா?

இடுகை அருமை//

தம்பி கதிர்.. உங்கள் ப்ரோபைல் பிரகாரமும்.. என்னுடைய வயதுப் பிரகாரமும்... நான் உங்களுக்கு தங்கச்சிதான்.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//
அக்கா சின்ன வெங்காயாமா பெரிய வெங்காயமா?//

ஓ..! இந்தக் கேள்வி விட்டுப் போயிற்று.. சாரிங்க.. அது உங்களை விடச் சற்றுப் பெரிய வெங்காயமுங்க!

இராகவன் நைஜிரியா said...

//கதிர் - ஈரோடு said...

ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

நீங்க அக்காவா? இல்லை தங்கச்சியா? //

அக்கா, அண்ணன்களுக்கு எல்லாம் தங்கச்சி, தம்பி, தங்கைகளுக்கு எல்லாம் அக்கா...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

//கதிர் - ஈரோடு said...

ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

நீங்க அக்காவா? இல்லை தங்கச்சியா? //

அக்கா, அண்ணன்களுக்கு எல்லாம் தங்கச்சி, தம்பி, தங்கைகளுக்கு எல்லாம் அக்கா...//

யாரோட அண்ணா, அக்காக்களுக்கு.. அண்ட் யாரோட தம்பி தங்கச்சிங்களுக்கு...? அதையும் சொல்ல வேணாமா ராகவாச்சார்யா...?

vasu balaji said...

ஆஹா. திருநெல்வேலிக்கே அல்வாவாங்கறது போய் இனிமே ஈரோடுக்கே வெங்காயமான்னு மாத்தணும் போல இருக்கே.

Unknown said...

it is superp

jaikumar kuwait

துபாய் ராஜா said...

சின்னச் சின்ன சிந்தனைத் துளிகள் அருமை.

தொடர்ந்து சிந்தியுங்கள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

ஆஹா. திருநெல்வேலிக்கே அல்வாவாங்கறது போய் இனிமே ஈரோடுக்கே வெங்காயமான்னு மாத்தணும் போல இருக்கே//

ஐயயோ... நல்ல வேளை.. ஈரோடுக்கே கதிர் சாரான்னு கேக்காம விட்டீங்களே..

கலகலப்ரியா said...

//jaye said...

it is superb//

ty..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

சின்னச் சின்ன சிந்தனைத் துளிகள் அருமை.

தொடர்ந்து சிந்தியுங்கள்.//

நன்றிங்க... (முடிந்தால் பார்க்கலாம்...)

Radhakrishnan said...

வெகு பிரமாதம் கலகலப்ரியா அவர்களே. ந்மது பார்வைகளும், நடப்பு விசயங்களும் கால மாற்றத்திற்கு உட்பட்டவையே. ஆனால் நமது படைப்புகள் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு இருப்பது வெகு சிறப்பாக கருதப்படுகிறது.

//சிறு வட்டத்திலிருந்து, பெரிய வட்டத்திற்குள் நுழைந்து இருப்பிடம் தொலைப்பதை விட, சிறு வட்டத்திலேயே உழண்டு கொண்டிருந்து விட்டு, இறந்து போவது மேலோ என்று யோசனை ஓடுகிறது.//

தோன்றின் புகழொடு தோன்றுக! இவ்வுலகில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளம் எந்த தலைமுறைக்கும் தெரியும்படி செய்தல் நன்று. நமது முப்பாட்டனார் யார் என நமக்குத் தெரியாமல் இருப்பது போல் இல்லாமலிருப்பதேச் சிறப்பு.

இதுக்கெல்லாம் வாழ்க்கையை வெறுத்தா அப்புறம் எப்படி?!

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said... //

என்ன சொல்லுதீக..? நீங்க சொல்றது புரியற மாதிரி இருக்கு... ஆனா நான் சொன்ன வட்டம் வேற மாதிரி....neway.. ty soo much.. :)

Radhakrishnan said...

:) நீங்கள் சொல்லும் வட்டமும் புரிந்தது.

சொல்லுதீக... ஆஹா செங்கோட்டையைச் சேர்ந்த எனது நண்பனை நினைவுக்கு கொண்டு வந்தது இந்த வார்த்தை. மிக்க நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

//கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம், கொழுக்கட்டைக்கு பிசைந்த மாவில் ஒரு உருண்டையை நீட்டி, சரியாக இருக்கிறதா பார் என்று கேட்ட பாட்டியிடம், திகைப்பை மறைத்து பெரிய மனுஷி தோரணையில், 'சரியா இருக்கு' என்று பெருமையாகச் சொன்ன போது நிறைய பொறுப்பு வந்து விட்டதாக ஒரு பிரமை தோன்றியது.//

அப்பிடியில்லீங்

நல்லா சாப்புடுற அதாவது தின்னிபண்டாரம்ன்னு சொல்லுவாங்களே அவங்க கிட்டத்தானே கேக்க முடியும்

அய்யோ அடிக்க வராதீங்

இங்கிலாந்துல கொழுக்கட்டை கிடைக்குதா?

அது சரி(18185106603874041862) said...

//
இந்த அண்ட சராசரத்தில் பூமிப் பந்தே ஒரு புள்ளியாம், நாம் எங்கே? என்ற உண்மை தெரிகிறது.
//

உலகத்தின் வயதுகள் ஒரு கோடி
இதில் உருண்டவர் புரண்டவர் பல கோடி...
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி...
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி....

ஒரு பழைய கண்ணதாசன் பாட்டு ஞாபகத்துக்கு வருது...

அதுக்காக நான் சன்னியாசின்னு நினைச்சிக்காதீங்க...எந்த இளைஞர் அணியிலயும் சேர்றதுக்கு எனக்கு இன்னும் வயசு வரல....சிறுவர் அணில தான் இருக்கேன்...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம்
//

அப்பிடின்னா இப்ப நிஜமாவே கொழுக்கட்டை செய்யத் தெரியுமாக்கும்??? :0))

Jackiesekar said...

அன்பின் கலகலப்பு பிரியாவுக்கு,உங்கள் பதிவுகள் ஒரு சிலதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது..நன்றாகவே கலகலப்பாய் எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்
அன்புடன் ஜாக்கி

ஈ ரா said...

//மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில் //

////ஆணுக்கும் ஆணுக்குமான காதலையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது//

இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

//பின் லேடனின் எண்ண ஓட்டங்கள் என்ன என்று யோசனை வருகிறது//

யக்கோவ் பார்த்துக்கோவ் !

//காதலில் விழுந்தவர்களுக்கு பாட்டியாகி 'வேணாம்டி'//

அப்பவே விவரமாதான் இருந்துஇருக்கீங்க.... பாட்டியாகி வேணாம்டி இப்பவே பண்ணுன்னு உங்களை அறியாம சொல்லி இருக்கீங்க.....

..ரொம்ப நல்லா எழுதுறீங்க....வாழ்த்துக்கள்..

அன்பேசிவம் said...

வணக்கம் கலகலப்ரியா, மொதல்ல நன்றி, என்னையும் தொடர்ந்தற்க்கு. கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் உங்கள் பதிவுகளை முழுமையாக படித்துவிட்டு வருகிறேன். (ஆமா, எப்ப்டிங்க தினமும் எழுதுறிங்க?)

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

:) நீங்கள் சொல்லும் வட்டமும் புரிந்தது.

சொல்லுதீக... ஆஹா செங்கோட்டையைச் சேர்ந்த எனது நண்பனை நினைவுக்கு கொண்டு வந்தது இந்த வார்த்தை. மிக்க நன்றி.//

ஆஹா.. செங்கோட்டை இனி எனக்கும் கவனம் வரும்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...


அப்பிடியில்லீங்

நல்லா சாப்புடுற அதாவது தின்னிபண்டாரம்ன்னு சொல்லுவாங்களே அவங்க கிட்டத்தானே கேக்க முடியும்

அய்யோ அடிக்க வராதீங்

இங்கிலாந்துல கொழுக்கட்டை கிடைக்குதா?//

ஏன் வசந்து.. நான் சீரியஸா பதிவு போட்டாலும் ஜோக்காதான் தெரியுதில்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....:((..

என்னது தின்னிப்பண்டாரமா? நம்ம கிட்ட அவங்க எல்லாம் போட்டி போட முடியாதுங்க.. ஹெஹெ...

இங்கிலாந்துக்கு நிறைய வாட்டி போயிருக்கேன்.. ஆனா கொழுக்கட்டை சாப்டலையே.. கிடைக்குமான்னும் தெரியலையே.. ஆஹா... யோசிக்க வச்சிட்டீங்களே வசந்து.. நெக்ஸ்ட் டைம் போறப்போ விசாரிச்சு சொல்றேன்..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கொழுக்கட்டையை சாப்பிட மட்டுமே தெரிந்திருந்த என்னிடம்
//

அப்பிடின்னா இப்ப நிஜமாவே கொழுக்கட்டை செய்யத் தெரியுமாக்கும்??? :0))//

அட.. நீங்க வேற... ஊர்ல கொழுக்கட்டை இல்லைனா கண்டு புடிச்சிடுவாங்க.. இங்க நாம கொத்தவரங்காய கட் பண்ணி.. மாவில தோய்ச்சி கொழுக்கட்ட இதுதான்னு சொன்னாலும் யார் கேக்க போறா... ஹிஹி..

கலகலப்ரியா said...

//jackiesekar said...

அன்பின் கலகலப்பு பிரியாவுக்கு,உங்கள் பதிவுகள் ஒரு சிலதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது..நன்றாகவே கலகலப்பாய் எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்
அன்புடன் ஜாக்கி//

நன்றிங்க ஜாக்கி..

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

//மேலைத்தேயர்கள் நாகரிகம் ஒன்றும் நாறிக் கொண்டிருக்கவில்லை, உன்னதமான ஒரு புரிதலில் //

////ஆணுக்கும் ஆணுக்குமான காதலையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது//

இதுல ஏதும் உள்குத்து இருக்கா?///

ஆ..! என்னுடைய மெச்சூரிட்டிய தவறா மதிச்சிட்டீங்களே ஐயா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...:(

//பின் லேடனின் எண்ண ஓட்டங்கள் என்ன என்று யோசனை வருகிறது//

யக்கோவ் பார்த்துக்கோவ் !///

நோ ப்ராப்ளம்...ஹிஹி..

//காதலில் விழுந்தவர்களுக்கு பாட்டியாகி 'வேணாம்டி'//

அப்பவே விவரமாதான் இருந்துஇருக்கீங்க.... பாட்டியாகி வேணாம்டி இப்பவே பண்ணுன்னு உங்களை அறியாம சொல்லி இருக்கீங்க.....///

நம்ம கிட்டயேவா ஈ.ரா... ம்ம்.. நடக்கறது நடக்கட்டு...

// ..ரொம்ப நல்லா எழுதுறீங்க....வாழ்த்துக்கள்..///

ரொம்ப நன்றிங்க..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கலகலப்ரியா, மொதல்ல நன்றி, என்னையும் தொடர்ந்தற்க்கு. கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் உங்கள் பதிவுகளை முழுமையாக படித்துவிட்டு வருகிறேன். (ஆமா, எப்ப்டிங்க தினமும் எழுதுறிங்க?)//

நன்றிங்க... ! இப்போதானே வந்திருக்கீங்க.. முழுமையா படிச்சீங்கன்னா தெரியும்... நாம தினம் எழுதுறோமா என்னன்னு.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
இந்த அண்ட சராசரத்தில் பூமிப் பந்தே ஒரு புள்ளியாம், நாம் எங்கே? என்ற உண்மை தெரிகிறது.
//

உலகத்தின் வயதுகள் ஒரு கோடி
இதில் உருண்டவர் புரண்டவர் பல கோடி...
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி...
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி....

ஒரு பழைய கண்ணதாசன் பாட்டு ஞாபகத்துக்கு வருது...

அதுக்காக நான் சன்னியாசின்னு நினைச்சிக்காதீங்க...எந்த இளைஞர் அணியிலயும் சேர்றதுக்கு எனக்கு இன்னும் வயசு வரல....சிறுவர் அணில தான் இருக்கேன்...:0)))//

play schoolla serthuttaangalaadaa kozhantha? entha anila irukka.. socceraa? cricketaa..?

மணிப்பக்கம் said...

Oh, antha maathiri aalaa neengaa.......... !

;)

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

Oh, antha maathiri aalaa neengaa.......... !

;)//

ஐயோ.. என்னய்யா சொல்லுதீக.. ? வயித்ல புளிய கரைக்கிராங்களே.. இது மிஸ்லீட் பண்ணாதா ஐயா... பார்த்துப்பா.. ராசா..

தினேஷ் said...

ஆத்தாடி நல்லாத்தானே போச்சு .. கடைசில என்ன சொன்னிகனு படிக்குறதுக்குள்ள தல சுத்தி மயக்கமாயிட்டேன்

மணிப்பக்கம் said...

// ஐயோ.. என்னய்யா சொல்லுதீக.. ? வயித்ல புளிய கரைக்கிராங்களே.. இது மிஸ்லீட் பண்ணாதா ஐயா... பார்த்துப்பா.. ராசா.. //

Chae ... chae ... naan "antha" 'antha maathiri' ya sollaleenga .... Neenga vera ...... ithu saathaarana "antha maathiri" (sathyaraj, "antha maathiri" maathiri) oru maathiri purinchirukkumnu nianikkiraen, naan ninaicha maathiri....

☀நான் ஆதவன்☀ said...

ஒத்துக்கிறேன். நீங்க பெரிய மனுஷி தான் :)

sarath said...

நீங்க பின்னூட்டத்துக்கு பதில் எழுதுற அழகே தனி.
இதைப் படித்து சிரித்தே வயிறு புண்ணு ஆச்சு.

இங்க இருக்குற அழகான பெண்கள் ஆடைகள் மிக நேர்த்தியா இருக்கு.

ஆனா அவங்க புகைப்பதை மட்டும் என்னால் சகிக்கவே முடியல.

ரோஜா மலரில் இருந்து புகை வந்தால் சகிக்குமா?

இவர்களுக்கு இதனை யார் சொல்வது?

கலகலப்ரியா said...

//சூரியன் said...

ஆத்தாடி நல்லாத்தானே போச்சு .. கடைசில என்ன சொன்னிகனு படிக்குறதுக்குள்ள தல சுத்தி மயக்கமாயிட்டேன்//

அதனால என்ன இப்போ..? மயக்கத்தில நல்லா பின்னூட்டம் போட வருதில்ல.. அப்புறம் என்ன..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

// ஐயோ.. என்னய்யா சொல்லுதீக.. ? வயித்ல புளிய கரைக்கிராங்களே.. இது மிஸ்லீட் பண்ணாதா ஐயா... பார்த்துப்பா.. ராசா.. //

Chae ... chae ... naan "antha" 'antha maathiri' ya sollaleenga .... Neenga vera ...... ithu saathaarana "antha maathiri" (sathyaraj, "antha maathiri" maathiri) oru maathiri purinchirukkumnu nianikkiraen, naan ninaicha maathiri....//

oh.. neenga antha maathiri solreengalaa.. ennamonga oru mathiriyave pesareenga..

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

ஒத்துக்கிறேன். நீங்க பெரிய மனுஷி தான் :)//

aahaa.. recognition kidaichiduthubaa...!

கலகலப்ரியா said...

//sarath said...

நீங்க பின்னூட்டத்துக்கு பதில் எழுதுற அழகே தனி.
இதைப் படித்து சிரித்தே வயிறு புண்ணு ஆச்சு.//

ரொம்ப நன்றிங்க..

//இங்க இருக்குற அழகான பெண்கள் ஆடைகள் மிக நேர்த்தியா இருக்கு.//

ஆஹா அப்டியாங்க..

//ஆனா அவங்க புகைப்பதை மட்டும் என்னால் சகிக்கவே முடியல.

ரோஜா மலரில் இருந்து புகை வந்தால் சகிக்குமா?//

அது கள்ளிச்செடில இருந்து வந்தாலும்தான் சகிக்காது..

//இவர்களுக்கு இதனை யார் சொல்வது?//

நான் சொன்னா.. போடி ய்யே எனக்கு அம்மா இருக்காங்கன்னு சொல்லுவாளுங்க..

என்னோட அலுவலகத் தோழிங்க சில பேரு டீசண்டா பர்மிசன் கேப்பாங்க.. நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டு, அவங்க புகைக்க ஆரம்பிச்சதும் லொக்கு லொக்குன்னு லேசா இருமினேன்னா... ஓ சாரின்னு கொஞ்சம் அந்த பக்கம் பார்த்து ஊதுவாங்க.. மனசுக்குள்ள 'அது'ன்னு தட்டிக் கொடுத்து.. நிமிர்ந்து உக்காந்தா பக்கத்து மேஜைல இருந்து யாரோ ஊதுறது மூஞ்சில வந்து மோதும்.. அவ்வ்வ்வ்வ்... (ஒரு இடுகை போட வேண்டிய மாட்டரு)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லா கலகலப்பா இருக்கு "அக்கா" !

சிங்கக்குட்டி said...

கலகலப்ரியான்னு பாத்தா நீங்க கலக்கல் ப்ரியாவா இருக்கீங்க! அருமை.

கலகலப்ரியா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லா கலகலப்பா இருக்கு "அக்கா" !//

இதுவா தம்பி..? ரொம்ப நல்லது..

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

கலகலப்ரியான்னு பாத்தா நீங்க கலக்கல் ப்ரியாவா இருக்கீங்க! அருமை.//

நன்றிங்க..

R.Gopi said...

டெம்ப்ளேட் சேஞ்ச் ஜூப்பருங்கோ....

லகலக இப்போ கலக்கற....

கொஞ்சம் இல்ல... ரொம்ப மெச்சூரிட்டி.... தெரியுது லகலக...

கலகலப்ரியா said...

//R.Gopi said...

டெம்ப்ளேட் சேஞ்ச் ஜூப்பருங்கோ....

லகலக இப்போ கலக்கற....

கொஞ்சம் இல்ல... ரொம்ப மெச்சூரிட்டி.... தெரியுது லகலக..//

ரொம்ப ரொம்ப நன்றி..

thiyaa said...

துளிகள் அருமை.

Unknown said...

//ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

த‌குதி இருக்க‌ட்டும்.. தொகுதி இருக்குமா?.. கோஷ்டி ச‌ண்ட‌ மிகுதியா இருக்குமே..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

துளிகள் அருமை.
//

நன்றி தியா

கலகலப்ரியா said...

//rajesh said...

//ராகுல் காந்தியின் இளைஞரணியில் சேர எனக்கு இன்னும் வயதுத் தகுதி இருக்கிறது//

த‌குதி இருக்க‌ட்டும்.. தொகுதி இருக்குமா?.. கோஷ்டி ச‌ண்ட‌ மிகுதியா இருக்குமே..//

நீங்க வேற ஐயா... நான் ரொம்ப ஜாக்கிரதையா "வயதுத் தகுதி"ன்னு சொன்னேன்... மத்தபடி நான் நிற்கறதுக்கு அவங்க தொகுதி தகுதி இல்ல சாமி.. :s ஓ...! மாத்தி சொல்லிட்டேனோ..! அரசியல்னாலே பயமாகீதுபா...!

அது சரி(18185106603874041862) said...

//
நிமிர்ந்து உக்காந்தா பக்கத்து மேஜைல இருந்து யாரோ ஊதுறது மூஞ்சில வந்து மோதும்.. அவ்வ்வ்வ்வ்... (ஒரு இடுகை போட வேண்டிய மாட்டரு)
//

சீக்கிரம் செய்யுங்க ப்ரியா....தம்மடிக்கிறது பத்தி கும்மி அடிச்சி நெம்ப நாளாச்சி :0))))

(பி.கு. புகை எனக்கு பகையல்ல!)

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
நிமிர்ந்து உக்காந்தா பக்கத்து மேஜைல இருந்து யாரோ ஊதுறது மூஞ்சில வந்து மோதும்.. அவ்வ்வ்வ்வ்... (ஒரு இடுகை போட வேண்டிய மாட்டரு)
//

சீக்கிரம் செய்யுங்க ப்ரியா....தம்மடிக்கிறது பத்தி கும்மி அடிச்சி நெம்ப நாளாச்சி :0))))

(பி.கு. புகை எனக்கு பகையல்ல!)//

ஆஹா.. smoker <> antismoker protest ஒண்ணு எதிரும் புதிருமா கண் முன்னாடி தோன்றுதே.. தேவையான முன்னேற்பாடு எல்லாம் செய்துட்டு.. இது பத்தி எழுதுறது பெட்டர்னு நினைக்கிறேன்..

உங்களுக்கு புகை பகையில்லைன்னு அந்த ரிவால்வர் பார்க்கவே தெரியுது.. (அதுதான் லைட்டரோ..)

மு.கு. (முக்கியமான குறிப்பு): "பகை எனக்குப் புகை.."

vasu balaji said...

புதிய யூத்ஃபுல் விகடனின் முதல் பதிப்பில் சின்ன சின்ன சிந்தனைத் துளிகள். பாராட்டுகள் ப்ரியா

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

புதிய யூத்ஃபுல் விகடனின் முதல் பதிப்பில் சின்ன சின்ன சிந்தனைத் துளிகள். பாராட்டுகள் ப்ரியா//

ந.. ந.. ந.. நன்றிங்க.. அப்டியே விகடனுக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்கோ.. விகடன்ல பிரியா பதிவுன்னா விகடனுக்கு பெருமைதானே.. ஹிஹி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதெப்படி... நானும் இதே மாதிரி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. அமெரிக்கா வந்து என்னோட பார்வைகள் விசாலமான மாதிரி.. உண்மை தான் - அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பம் போல வாழ ஒவ்வொருவருக்கும் இங்கு உரிமை இருக்கு.. இதெல்லாம் இந்த ஊர்ல உட்காந்து யோசிச்சா சரியா தான் தோணும்.. நம்மூருக்கு போயிட்டா அப்புறம் பழைய குருடி கதவ திறடி தான்.. அடுத்த வீட்டு பொண்ணு எதிர்த்த வீட்டு பையன் காலேஜ் போற நேரமா பாத்து வெளிய வந்து நிக்கிறா ன்றதுல ஆரம்பிச்சு இதர வம்பு தும்புகளும் பொழுது போகாத நேரத்துல பேசிட்டு தான் இருப்போம்.. :)) வாழ்த்துக்கள்.. நல்ல படைப்பு...

கலகலப்ரியா said...

//Chandhana said...

அதெப்படி... நானும் இதே மாதிரி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. அமெரிக்கா வந்து என்னோட பார்வைகள் விசாலமான மாதிரி.. உண்மை தான் - அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பம் போல வாழ ஒவ்வொருவருக்கும் இங்கு உரிமை இருக்கு.. இதெல்லாம் இந்த ஊர்ல உட்காந்து யோசிச்சா சரியா தான் தோணும்.. நம்மூருக்கு போயிட்டா அப்புறம் பழைய குருடி கதவ திறடி தான்.. அடுத்த வீட்டு பொண்ணு எதிர்த்த வீட்டு பையன் காலேஜ் போற நேரமா பாத்து வெளிய வந்து நிக்கிறா ன்றதுல ஆரம்பிச்சு இதர வம்பு தும்புகளும் பொழுது போகாத நேரத்துல பேசிட்டு தான் இருப்போம்.. :)) வாழ்த்துக்கள்.. நல்ல படைப்பு...//

நன்றி சந்தனா..! ஊர்ல உள்ளவங்க கிட்டயும் கேனத்தனமா நம்ம பார்வைய சொல்ல போயீ.. ஏண்டா ஆரம்பிச்சோம்னு ஆயிடும்..:(.. அவங்க மேற்கே மேற்கேன்னு போயட்டிருப்பாங்க.. நான் கிழக்கே கிழக்கேன்னு போயிட்டிருப்பேன்.. அதனால பேசாம இருப்பதே மேல்னு பெரும்பாலும்.. ஊமை பாஷைதான்..