header photo

Sunday, October 11, 2009

திக்குத் தெரியாத காட்டில் ஈ தேடி இளைத்தேன்..

ஆபீஈஸ்ல ஈ விரட்ட ட்ரை பண்ணி.. கடைசில ஈ என்னை விரட்டி வீட்டுக்கு வந்து உக்காந்து ஒரு ஈ .. ச்சே.. காப்பிஈ சாப்டலாம்னு பார்த்தா போன் டிரீஈங் டிரீஈங்-னு ரீங்காரிக்குது. இதுக்கு ஈயே ஓட்டி இருக்கலாம்னு சலிச்சுக்கிட்டு போன் எடுத்து.. யா ப்ரியா அப்டின்னா.. எதிர்ல.. ஒரு அம்முனி ஜெர்மன்ல பதட்டமா பேசுதுங்க.

போன்ல அசால்டா ஹல்லோ சொல்லி எதிர்ல திடீர்னு டமில் தவிர்ந்த வேற பாஷை கேட்டிச்சின்னா நாம உஷாராகி ஃபுல் அட்டென்சன்ல பேசுவோம்ல.

சொல்லுங்கம்முனி..

நான் மனோதத்துவ நிபுணிஈ.. இங்க ஒரு பிரச்சன.. ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஈஸ்..

சொல்லுங்க.. என்ன..?

இல்ல ஒரு டமில் ஃபமிலீஈ.. (என் காதில ப்ரூஸ் லீஈ ன்னு கேக்குது).. கொஞ்சம் பிரச்சன.. நேர வர முடியுமா ப்ளீஸ்..

(கராத்தே தெரியலைனாலும் கைய மடக்கிக்கிட்டு..) எப்போ.. இப்போவா?

ஹிஹி.. ஆமாம் ப்ளீஸ்.. சாரிஈ.. இட்ஸ் அன் எமெர்ஜென்சிஈ..

ஹ்ம்ம்.. உங்க அட்ரஸ்? ............ ஓகே.. ஆம் ஆன் த வே..

தாங்க் யூ.. தாங்க் யூ.. இட்ஸ் வெரி நைஸ் ஆஃப் யூ..

ஹிஹி.. நோ ப்ராப்ளம்..

காப்பீஈ மேக்கர சோகமா பார்த்து.. ஒரு கைல ஹான்ட்பாக் எடுத்துக்கிட்டு.. மத்த கைல ஷூ எடுத்து கால்ல மாட்டிக்கிட்டு.. கார் கீஈய வாயால கவ்விக்கிட்டு கார் வரைக்கும் தத்தி தத்தி ஷூ மாட்டி முடிச்சு.. கார கிளப்பி.. டிராபிக் ஜாம்ல அவிஞ்சு அங்க போனா..

ஒரு அம்முனி வாசல்லையே கைய பிசைஞ்சுக்கிட்டு நிக்குது.. என்னிய பார்த்ததும் ஈஈன்னு இருக்கிற பல்லு ஃபுல்லா காண்பிச்சு சந்தோஷமா சிரிக்குது... அட அட.. காப்பியாவது ஈயாவது.. இந்த ஈஈ டானிக் போதும்..

பதிலுக்கு ஒரே ஒரு ஈய திருப்பி.. அறிமுகம் பண்ணிக்கிட்டு.. இன்னா மாட்டருன்னா.. கிட்ட கிட்ட அழுதுடிச்சி அந்தம்முனி..

மெதுவா கைய குலுக்குற சாக்கில ஆறுதலா கைய தட்டிக் கொடுத்து.. என்னங்கம்முனின்னு இதமா கேட்டா..

இல்ல.. ஒரு டமில் ஃபாமிலீஈ.. அஞ்சு மணிக்கு வச்ச அப்பாயின்ட்மென்ட்.. இப்போ ஆறு மணி ஆச்சு.. இன்னும் வரலை.. எனக்கு ஆறரைக்கு அடுத்த அப்பாயின்ட்மென்ட் இருக்கு.. இவங்க இப்போ போன் பண்ணி.. அட்ரஸ் தெரியாம கிழக்கால வர்றதுக்கு மேற்கால போய்ட்டாங்களாம்.. அவங்களுக்கு புரிய வைக்கிறதும் கஷ்டமா இருக்கு.. நான் போன்ல அப்டி இப்புடின்னு கொஞ்சம் கோபமா பேசிப்புட்டேன்.. தப்பா.. அப்டின்னு அழுவுது..

(அட ச்சை.. சப்ப மாட்டரு.. இதுக்கு போய்.. ஒரு காப்பிய மிஸ் பண்ண வச்சுட்டியளே அவ்வ்வ்வ்வ்வ்.. ச்சே நானும் அழலாமா..) ச்சே ச்சே.. நீங்க வேறைங்கம்முனி.. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் உறைக்காது.. நீங்க திட்டினதெல்லாம் திட்டே இல்லிங்கம்முனி.. நம்ம ஊர்ல சூப்பரா திட்டுவாங்கம்முனி.. பார்த்துக்கலாம் உக்காருங்க..

ஈஈ.. தாங்க் யூ.. டீஈ.. காப்பீஈ..?

ஹிஹி.. டீஈ ப்ளீஸ்... (இது போடுற கஷ்டத்திலதானே காப்பீஈ மேக்கர நாடினோம்.. நம்ம இஷ்டக் கடவுள் முருகன் எப்டி எல்லாம் நமக்கு ஹெல்ப் பண்றாரு.. தாங்க்ஸ்பா..)

சரியா டீஈ.. சாப்ட்டு முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு.. (இதில நம்மாளுங்க ரொம்ப கரீஈட்டா இருப்பாய்ங்க..)

மணிச் சத்தத்தில.. முத்தாக இருந்த அம்முனியின் மூஞ்சி சிவந்து ரூபியாகி ஜொலித்தது... மெய்யாலுமே திட்டலாம்கிறியா அப்டின்னு இன்னொரு வாட்டி உறுதிப்படுத்தி.. நான் திட்டுறத நீ அப்டியே உன்னோட பாஷைல திட்டணும் செரியான்னு.. கேட்டுக்கொண்டு.. கதவைத் திறந்தது..

அந்த மூஞ்சிங்கள பார்த்ததும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. கைல எம்ப்டியா இருந்த டீஈ கப் தூக்கி சாப்டுற மாதிரி சிரிப்ப மறைச்சு.. சமாளிச்சுக்கிட்டு பார்த்தா.. அந்த மூஞ்சிங்க என் மூஞ்சிய அங்க எதிர் பார்க்காததால விதிர்விதிர்த்து போய் நிக்குதுங்க..

வேற ஒண்ணுமில்லீங்க.. செரியா ரெண்டு நாள் முன்னாடி.. ஒரு மீட்டிங்ல.. இதே மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்து.. அட்ரஸ் மாறிப் போயிட்டோம்னு சொன்ன அதே மூஞ்சிங்க.. அவங்க நேரம்.. அங்கயும் நான்தான் குடுமி பிரிக்க போயிருந்தேன்.. ( அட.. குடுமி பிடி சண்டைன்னா.. விளக்கி/விலக்கி விடுறதுதானுங்கோ.. இவங்கள எல்லாம் திருத்த போயீ முடியுற காரியமா ஸ்ஸ்ஸப்பா..)

இந்த அம்முனி அவங்களுக்கு என்னிய அறிமுகப் படுத்த.. அவங்க ஈஈஈன்னு.. எனக்கு கும்பிடு போட.. அப்போதான் பார்க்கறாப்ல ஹல்லோ சொல்லி உள்ளார கூப்பிட்டு.. ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..) அனுப்பிச்சு.. அம்முனிட தாங்க்ஸ் அண்ட் ஈஈ.. வாங்கிக்கிட்டு திரும்பி வர்றப்போ.. சிடி ப்ளேயர்ல சஞ்சய் சுப்ரமணியம் "திக்குத் தெரியாத காட்டில்.. தேடி தேடி......ஈஈ இளைத்தேன்" (அட இங்கயும் நம்ம பாரதி..) பாடிக் கொண்டிருந்தது கோ-இன்சியா தெரியலீங்க.

(சில பேரு நான் தமிழினத் துரோகின்னு நினைக்கிறதுக்கும் இப்படியான நிகழ்வுகள் வழி வகுத்ததுண்டு.. அதுவும் எப்போவாவது சொல்லுவோமில்ல..)

.....

34 ஊக்கம்::

vasu balaji said...

/மெய்யாலுமே திட்டலாம்கிறியா அப்டின்னு இன்னொரு வாட்டி உறுதிப் படுத்தி.. நான் திட்டுறத நீ அப்டியே உன்னோட பாஷைல திட்டணும் செரியான்னு.. கேட்டுக் கொண்டு.. கதவை திறந்தது../

எப்புடீஈ இப்புடீஈ:)))))

vasu balaji said...

/இதே மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்து.. அட்ரஸ் மாறிப் போயிட்டோம்னு சொன்ன அதே மூஞ்சிங்க.. அவங்க நேரம்.. அங்கயும் நான்தான் குடுமி பிரிக்க போயிருந்தேன்../

சொல்லுறப்பவே சிரிப்பு தாங்கலயே. திட்டுறப்ப சிரிப்பு வராதா. இன்னுமில்ல பிச்சிக்கும்.

vasu balaji said...

/ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..) /

விளங்குச்சா? எதுக்கும் இன்னொரு வாட்டி நல்லா கேட்டுக்கோங்கன்னு சொல்லாமலாம்மா இருந்திருப்ப:))

ப்ரியமுடன் வசந்த் said...

ஆகா உங்க ஆங்கிலப்பற்றுக்கு ஒரு அளவில்லாமே போச்சே புக் செல்ஃபெல்லாம் இங்கன கொண்டுவந்து வச்சுருக்கீகளே..

நாங்கெல்லாம் எங்கிலீசு ஈயடிச்சான் காபி அடிச்சி பாஸ் பண்ணுனவிங்க எனக்கும் எங்கிலிசுக்கும் ரொம்ப தூரம்....

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

சொல்லுறப்பவே சிரிப்பு தாங்கலயே. திட்டுறப்ப சிரிப்பு வராதா. இன்னுமில்ல பிச்சிக்கும்.//

இல்லீங்க.. ரொம்ப அரிதா எப்போவாவது எச்சுஸ்மீஈ சொல்லிட்டு.. ரொம்ப லேசா சிரிச்சிட்டு சாரி கேட்டதுண்டு...

//
விளங்குச்சா? எதுக்கும் இன்னொரு வாட்டி நல்லா கேட்டுக்கோங்கன்னு சொல்லாமலாம்மா இருந்திருப்ப:))//

நீங்க வேற சார்.. திட்டு கேக்கறத விட திட்டுறதுதான் கஷ்டம்...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஆகா உங்க ஆங்கிலப்பற்றுக்கு ஒரு அளவில்லாமே போச்சே புக் செல்ஃபெல்லாம் இங்கன கொண்டுவந்து வச்சுருக்கீகளே..//

வீட்ல இருக்கிற புக் ஷெல்ஃப்ல தமிழ்தான் நிறைய இருக்கு வசந்து.. இங்க இந்த புத்தகம் மட்டும்தான் வைக்க முடியுது.. வாட் டு டூ.. வாட் டு டூ..

//நாங்கெல்லாம் எங்கிலீசு ஈயடிச்சான் காபி அடிச்சி//
ஆஹா.. இங்கயும் ஈ.. அண்ட் காபீ.. எனக்கு இஞ்சி எல்லாம் ஐ மீன் இன்சி எல்லாம் கோ இன்சி ஆவுதுபா..

//பாஸ் பண்ணுனவிங்க//

பாரு காப்பி அடிச்சு ஃபெயில் பண்ணவங்க நிறைய பேரு.. ஆனா நீ பாஸ் பண்ணி இருக்கா.. இதுவும் ஒரு கோ இன்சிதான்..

//எனக்கும் எங்கிலிசுக்கும் ரொம்ப தூரம்....//
அதான் இப்போ பக்கத்ல கொண்டு வந்து வச்சிட்டேன்ல.. இது கூட.. ச்சே வேணாம் நொந்துடுவா..

Anonymous said...

ஷப்பா.....

ஹேமா said...

ப்ரியா,வெட்கமா இருக்கு நம்ம மனுஷங்க பண்ற அட்டகாசத்தை நினைச்சா.மாறவே மாட்டோம்ன்னு அட்டகாசம் ப்ண்றாங்கப்பா.

கலகலப்ரியா said...

//Ammu Madhu said...

ஷப்பா.....//

என்னாச்சுங்க மது..

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா,வெட்கமா இருக்கு நம்ம மனுஷங்க பண்ற அட்டகாசத்தை நினைச்சா.மாறவே மாட்டோம்ன்னு அட்டகாசம் ப்ண்றாங்கப்பா.//

ஹிஹி.. இதெல்லாம் நம்ம பண்பாட்டுச் சின்னங்கள் / அடையாளங்கள்.. விட மாட்டோம்ல..

அது சரி(18185106603874041862) said...

//
(கராத்தே தெரியலைனாலும் கைய மடக்கிக்கிட்டு..)
//

நல்ல வேளை...தப்பிச்சாங்க அந்த அம்முனீயும் அந்த ஃபேமிலீயும்....இல்லாட்டி கும்மிருப்பீங்க போலருக்கே....

அது சரி(18185106603874041862) said...

//
ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..)
//

ஆஹா...நல்ல வேலை...ம்ம்ம்....இப்படியெல்லாம் திட்ட கொடுத்து வச்சிருக்கணும்...

:0)))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
(கராத்தே தெரியலைனாலும் கைய மடக்கிக்கிட்டு..)
//

நல்ல வேளை...தப்பிச்சாங்க அந்த அம்முனீயும் அந்த ஃபேமிலீயும்....இல்லாட்டி கும்மிருப்பீங்க போலருக்கே....//

ச்சே ச்சே.. சந்திரமுகி இப்டி தெரியாத ஆளுங்க கிட்ட எல்லாம் தன்னோட வேலைய காண்பிக்க மாட்டா.. ஹிஹி..

//அது சரி said...

//
ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..)
//

ஆஹா...நல்ல வேலை...ம்ம்ம்....இப்படியெல்லாம் திட்ட கொடுத்து வச்சிருக்கணும்...

:0)))//

நீங்க வேற.. கன்னாபின்னான்னு திட்டுறதுன்னா ஈஸி.. இது ஈஈன்னு மூஞ்சி வச்சிக்கிட்டு டீசண்டா திட்டுற வேலை.. எம்பூட்டு கஷ்டம்.. :((

பிரபாகர் said...

ஈ ஈ ... ரொம்ப நல்லருக்கு. நகைச்சுவையா அருமையா எழுதறீங்க....கல....கல...கலக்குங்க ப்ரியா....

பிரபாகர்.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

ஈ ஈ ... ரொம்ப நல்லருக்கு. நகைச்சுவையா அருமையா எழுதறீங்க....கல....கல...கலக்குங்க ப்ரியா....

பிரபாகர்.//

வாங்க பிரபாகர்.. ஹிஹி.. நன்றீஈஈ ..:D

ஆ.ஞானசேகரன் said...

//சரியா டீஈ.. சாப்ட்டு முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு.. (இதில நம்மாளுங்க ரொம்ப கரீஈட்டா இருப்பாய்ங்க..)//

அதுவும் சரிதான்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல முயற்சி

பித்தனின் வாக்கு said...

என்ன நியிஈஈ, இப்படிஈஈ எல்லாம் பதிவு போட்டு கலாய்யிஈஈக்கிறிங்க.

ஈரோடு கதிர் said...

திஈஈக்குத் தெரிஈஈயாத காட்டிஈஈல் ஈ தேடிஈஈ இஈஈளைத்தேன்..

நல்லாயிஈஈருந்திச்சிஈஈ

R.Gopi said...

திக்கு தெரீஈயாத‌ காட்டி(ஈ)ல் ஈ தேடி இளைத்தேன்...

ஆஹா... டைட்டிலே ஒரு தினுசால்ல‌டா இருக்கு...

//இதுக்கு ஈயே ஓட்டி இருக்கலாம்னு சலிச்சுக்கிட்டு போன் எடுத்து.. யா ப்ரியா அப்டின்னா.. எதிர்ல.. ஒரு அம்முனி ஜெர்மன்ல பதட்டமா பேசுதுங்க.//

யா ப்ரீஈயா...

//போன்ல அசால்டா ஹல்லோ சொல்லி எதிர்ல திடீர்னு டமில் தவிர்ந்த வேற பாஷை கேட்டிச்சின்னா நாம உஷாராகி ஃபுல் அட்டென்சன்ல பேசுவோம்ல.//

ஆஹா... உசாராயிட்டாய்ங்க‌ய்யா...

//இல்ல ஒரு டமில் ஃபமிலீஈ.. (என் காதில ப்ரூஸ் லீஈ ன்னு கேக்குது).. கொஞ்சம் பிரச்சன.. நேர வர முடியுமா ப்ளீஸ்..//

என் காதுல‌ கூட‌ நீங்க‌ ஜெட்லின்னு சொன்ன‌ மாதிரி இருந்த‌து...ரெண்டு பேரும் சேர்ந்து ENT Specialist பார்க்க‌ போவோம்...

//கார் கீஈய வாயால கவ்விக்கிட்டு கார் வரைக்கும் தத்தி தத்தி ஷூ மாட்டி முடிச்சு.. //

ஹா...ஹா...ஹீஈ...ஹீஈ.ஈ..ஈ....

//அம்முனி வாசல்லையே கைய பிசைஞ்சுக்கிட்டு நிக்குது.. என்னிய பார்த்ததும் ஈஈன்னு இருக்கிற பல்லு ஃபுல்லா காண்பிச்சு சந்தோஷமா சிரிக்குது//

ஹீஈ......ஹீஈ....

//(சில பேரு நான் தமிழினத் துரோகின்னு நினைக்கிறதுக்கும் இப்படியான நிகழ்வுகள் வழி வகுத்ததுண்டு.. அதுவும் எப்போவாவது சொல்லுவோமில்ல..)//

ய‌ப்பா... எங்களை இந்த‌ "டெர்ர‌ர்"ல‌ இருந்து காப்பாற்றுவாய் "திருச்சிற்றம்பலம்"

துபாய் ராஜா said...

எரிஈஈச்சலான சங்கதிஈஈயை சிரிஈஈப்பாக எழுதிஈஈ ஈஈருந்தாலும் நமது மக்களிஈஈன் பொறுப்பிஈஈல்லாத நடவடிஈஈக்கை வெட்கத்திஈஈனையும் , வெறுப்பிஈஈன் வேகத்திஈஈனையும் கூட்டுகிஈஈறது....

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//சரியா டீஈ.. சாப்ட்டு முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு.. (இதில நம்மாளுங்க ரொம்ப கரீஈட்டா இருப்பாய்ங்க..)//

அதுவும் சரிதான்...//

அப்டின்னா செரி..

கலகலப்ரியா said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்ல முயற்சி//

நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

என்ன நியிஈஈ, இப்படிஈஈ எல்லாம் பதிவு போட்டு கலாய்யிஈஈக்கிறிங்க.//

சாரிஈ.. வேற சரக்கு மாட்டல.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

திஈஈக்குத் தெரிஈஈயாத காட்டிஈஈல் ஈ தேடிஈஈ இஈஈளைத்தேன்..

நல்லாயிஈஈருந்திச்சிஈஈ//

நன்றி கதிர்..

கலகலப்ரியா said...

//என் காதுல‌ கூட‌ நீங்க‌ ஜெட்லின்னு சொன்ன‌ மாதிரி இருந்த‌து...ரெண்டு பேரும் சேர்ந்து ENT Specialist பார்க்க‌ போவோம்...//

ஆங்... என்னோட காது எனக்கு மொழிபெயர்த்து சரியான அர்த்தம் சொல்லும் கோபி.. இதுக்கு எதுக்கு ஈ என் டீஈ... அப்டி போறதுன்னாலும் நான் தனியாவே போய்க்கிறேன்.. lol..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

எரிஈஈச்சலான சங்கதிஈஈயை சிரிஈஈப்பாக எழுதிஈஈ ஈஈருந்தாலும் நமது மக்களிஈஈன் பொறுப்பிஈஈல்லாத நடவடிஈஈக்கை வெட்கத்திஈஈனையும் , வெறுப்பிஈஈன் வேகத்திஈஈனையும் கூட்டுகிஈஈறது....//

அத ஏன் கேக்குறீங்க.. ஒண்ணா ரெண்டா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Prapa said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தல் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

கலகலப்ரியா said...

//பிரபா said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தல் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..//

அட வாங்க.. இப்போ என்ன ஆச்சுன்னு இப்டி சொல்லிப்ட்டீய.. இதோ வரோம்ல..

ப்ரியமுடன் வசந்த் said...

////பித்தனின் வாக்கு said...

என்ன நியிஈஈ, இப்படிஈஈ எல்லாம் பதிவு போட்டு கலாய்யிஈஈக்கிறிங்க.//

ஹ ஹ ஹா

ஒருவேளை பிஈஈஈ.......படிச்சுருப்பாங்களோ....

கலகலப்ரியா said...

இல்ல ஈ புடிச்சிருப்பாங்களோ.. :> நல்லா ஆராய்ச்சி பண்ணப்பு..

Radhakrishnan said...

கலகலப்பாக இருந்தது.

நாரத முனிவரின் சிஷ்யையாக இல்லாமல் பாரதியின் சிஷ்யையாக இருப்பது மிகவும் சிறப்பு.

பிரச்சினையீய பெரிசாக்கமா பிரிச்சதே சாமர்த்தியம்.

ஈ ...........

கலகலப்ரியா said...

//Rads said...

கலகலப்பாக இருந்தது.

நாரத முனிவரின் சிஷ்யையாக இல்லாமல் பாரதியின் சிஷ்யையாக இருப்பது மிகவும் சிறப்பு.

பிரச்சினையீய பெரிசாக்கமா பிரிச்சதே சாமர்த்தியம்.

ஈ ...........//

ஹிஹி.. நீங்க வேறைங்க.. இதில நாம பண்ணது ஒண்ணுமே இல்லீங்க.. ரொம்ப நன்றிங்க..

கண்ணகி said...

அவிங்க உங்களைப்பார்த்ததும் இஞ்கி தின்ற குரங்கு போல் சிரிதிருப்பர்களே? ஆமா உங்கநட்புதொடர்பு எங்கே இருக்குது. என்னயும் சேர்த்துக்கோங்கோ??